Friday, August 29, 2008

இரண்டு நாட்களும் சில குறிப்புகளும்...

*
நேற்றும் நேற்றைக்கு முந்தய புதன் கிழமையும் இணைய வசதி இல்லாமல் போயிற்று, ஏதோ நாளாந்த காரியங்களில் சிலதை செய்யாமல் இருந்துவிட்ட தவிப்பு இருந்துகொண்டே இருந்தது. நித்தம் பார்க்கிற நண்பர்களை இரண்டு நாட்களாக காணமுடியவில்லை எனில் ஒரு தாக்கம் இருக்கத்தானே செய்கிறது. ஊரை விட்டு வந்த நாட்களின் ஆரம்பத்தில் இருந்தது போல ஒரு உணர்வு இரண்டு நாட்களாக இருந்தது. இப்பொழுதும் மிக சிரமத்தின் மத்தியில் இணையத்துக்கு வந்திருக்கிறேன்...

*
கிட்டத்தட்ட இரண்டு மாத கால காத்திருப்புக்கு பிறகு கடந்த இருபத்தைந்தாம் திகதி வாங்கி வரச்சொன்ன புத்தகங்கள் சிலதில் சுயாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்களும் சாண்டில்யனின் கடல்புறாவும் கைக்கு வந்து சேந்திருந்தது. கடல்புறா நான் ஏற்கனவே படித்திருந்தாலும் சாண்டில்யன் வர்ணனைகளின் தாக்கம் என் பள்ளிக்கூட காலத்து கட்டுரைகளிலும் அத்தோடு அதற்கு பிந்தய புலம்பல்களிலும் இருந்ததை நான் மறக்கவில்லை ஆனால் அந்த கட்டுரைகள் புலம்பல்கள் பெரும்பாலும் என்னோடு இல்லாமல் போய்விட்டதில் இப்பொழுது வருத்தமிருக்கிறது.கடல்புறாவுக்கு நண்பர் ஒருவர் காத்திருப்பதினால் முதலாம் பாகம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் நேரமும் சூழலும் தொடர்ச்சியான வாசிப்புக்கு தடையாக இருக்ககிறது இருந்தாலும் விரைவில் முடித்துவிடுவேன்.


*
"ஒரே கடல்" மலையாளப்படம் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் கங்காரு நாட்டின் சிங்கம் க-பிரபா மற்றும் அமீரக இலக்கியவாதி தம்பி அண்ணன் விமர்சனங்கள் பாத்ததிலிருந்து இருந்தது. தெரிந்த ஒரு சேட்டனிடம் சொல்லி தேடி வாங்கி வந்து கொடுத்திருக்கிறார் படம் நாற்பத்தெட்டு நிமிடங்கள் பார்த்திருக்கிறேன் அறை நண்பர்களின் பலமான எதிர்ப்புகளுக்கிடையில்! மலையாளம் எனக்கு அவ்வளவாக புரிவதில்லை என்பதாலும் அறையில் இருந்த சத்தங்களாலும் படத்தை எவ்வளவு கண்ணைக்குடுத்து கவனித்தும் வசனங்களை சரியாக கேட்க முடியாமல் செய்துவிட்டார்கள் தனியாக இருக்கிற நேரத்தில் பார்த்துவிட வேண்டும்; ஆனால் பார்த்தவரையில் படம் நிறையப் பேசுகிறது அலட்டலான வசனங்கள் இல்லாமலே!

9 comments:

ஆயில்யன் said...

//நித்தம் பார்க்கிற நண்பர்களை இரண்டு நாட்களாக காணமுடியவில்லை எனில் ஒரு தாக்கம் இருக்கத்தானே செய்கிறது. //


கண்டிப்பாக எனக்கு அலுவலக நேரத்திலே அப்படி இருப்பதால்தான் நான் அலுவலகத்திலும் கூட சாட் விண்டோ ஒபன் செய்து வைத்திருக்கிறேன்!

இது புரியாத சிலர்தான் எனக்கு வேற வேலையே இல்ல போல என்று நினைக்கிறார்கள்!

மங்களூர் சிவா said...

//நித்தம் பார்க்கிற நண்பர்களை இரண்டு நாட்களாக காணமுடியவில்லை எனில் ஒரு தாக்கம் இருக்கத்தானே செய்கிறது. //

இவ்ளோ பாசக்கார பயலாய்யா நீ!?
:))))))

கிரி said...

//ஊரை விட்டு வந்த நாட்களின் ஆரம்பத்தில் இருந்தது போல ஒரு உணர்வு இரண்டு நாட்களாக இருந்தது.//

தமிழ் மணம் இல்லைனா அவ்வளோ தான் போல இருக்கு :-)))

ஹேமா said...

தமிழன் உண்மைதான்.ஒருநாள் ஒரு நேரமாவது ஒருமுறையாவது ஒரு சுற்று எல்லோரையும் பார்க்காவிட்டால் ஏதோ தனித்து விட்டது போல உணர்வு.

Kumiththa said...

internet ஒரு நாள் இல்லாட்டியும் கஷ்டம் தான். Net இல்லாத உலக யோசிக்கவே கஷ்டமா இருக்கு.

குடுகுடுப்பை said...

எனக்கும் அப்படித்தான் இருக்கு ஒரு நல்ல மருத்துவர் பார்த்து சொல்லுங்க

Unknown said...

எனக்கும் தான் அண்ணா..!! :((

கிரி said...

என் மின்னஞ்சல் உங்களுக்கு கிடைக்கவில்லையா? !!!

தமிழன்-கறுப்பி... said...

பதில்களுக்கு நன்றி நண்பர்களே...