Friday, August 8, 2008

நானும் சில சொற்களும்...!

காலையில் கொஞ்ச நேரம் இணையத்துக்கு வந்திருந்தாலும் இப்பொழுது தமிழ் மணத்தை படித்துக்கொண்டிருந்த பொழுதுதான் தெரிந்தது இன்றைய திகதியின் தன்மை; திகதி,மாதம் வருடம் மூன்றுமே எட்டுகளால் ஆகியிருப்பது!இந்த கணினி வேறு அடிக்கடி வலைப்பூக்களை திறக்கமுடியாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. என்ன எழுதுவது என்று யோசிக்கையிலேயே எனக்குள் முட்டிக்கொண்டிருக்கிற எப்பொழுது புழுக்கம் தவிர்க்கலாம் என்கிற என் மனோ நிலையை ஒத்த சொற்கள் ஏக்கம் தணிக்கிற அவாவில் எகிறி குதிக்க தொடங்கியிருக்கிறது அவற்றின் வேகத்துக்கு என்னால் தட்டச்ச முடியவில்......

*
அம்மா அல்லது என் முதல் தோழி.

*
அவள் அல்லது காதல்.

*
கறுப்புத்தேநீர் அல்லது என்னை சரிபார்க்கிற தருணங்கள்.


*
புத்தகங்கள் அல்லது சொற்களால் ஆன நண்பர்கள்.


*
சொர்க்கம் அல்லது அவளும் நானும் பிறந்து வளர்ந்த ஊர்.


*
முத்தம் அல்லது அடிக்கடி எய்துகிற மோட்சம்.


*
இரவு அல்லது என்னை எழுதுகிற பொழுதுகள்.


*
மழை அல்லது நனைய விரும்புகிற பொழுதுகள்.



அட அதற்குள் எட்டு சொற்களை எழுதிவிட்டேனா வெறும் சொற்களை எழுதுவதாகத்தான் இருந்தது அவை வாக்கியங்களாகியிருக்கிறதோ என்னவோ?! ஆதலால் தமிழுக்கு இன்னமும் என்மேல் ஏதோ ஒரு பிடிப்பு இருக்கிறது!

அகப்பட்ட சொற்களை எழுதி விட்டேன் ஆனால் அவைசார்ந்த எனக்குள் இருக்கிற பிம்பங்களின் புறக்கோடுகளை மட்டுமே எழுத முடிந்திருக்கிறது மாதிரியான ஒரு திருப்தியின்மை நெருடிக்கொண்டிருக்கிறது.நான் எழுதுகிற சொற்கள் சார்ந்து இது எனக்கு எப்பொழுதும் இருப்பதுதான் என்றாலும் இன்று அதிமாயிருப்பது போல உணரச்செய்கிறது அகப்படாத சொற்களின் உழற்சி.


இனி...!

ஒரு முக்கிய குறிப்பு:

இவை எனக்கு பிடித்த விடயங்களை சுட்டுகிற சொற்களாகவும் இருக்கலாம்!

நான் எழுதிய சொற்களை மறு முறை படிக்காமல் உங்களிடம் விட்டிருக்கிறேன்!

இன்று எதையாவது எழுதி விட வேண்டும் என்கிற காரணத்துக்காக மட்டும்.

13 comments:

ஆயில்யன் said...

//சொற்களை எழுதுவதாகத்தான் இருந்தது அவை வாக்கியங்களாகியிருக்கிறதோ///

அட இதுதானே வாழ்க்கை!
:)

நாம் நினைப்பது ஒன்றாக இருந்தால் நடப்பது இரண்டாவதாகவும் இருக்ககூடும் ! :)))

(அட நானும் கூட இப்படி எட்டலாம் போல!)

Selva Kumar said...

உங்கள் சொற்கள் அனைத்தும் அருமை தமிழன்..

Mathu said...

மிகவும் நன்றாக இருக்கிறது தமிழன்!

சென்ஷி said...

அருமையான வார்த்தைப்பிரயோகங்கள்.. :)

வாழ்த்துக்கள்..

Divya said...

அருமை......அருமை வார்த்தைகள் அனைத்தும் அருமை:))

\\புத்தகங்கள் அல்லது சொற்களால் ஆன நண்பர்கள்.\\

சொற்களால் ஆன நண்பர்கள் னா யாரு??

Thamiz Priyan said...

ஏம்பா எங்க இம்புட்டு வார்த்தைகளை பிடிக்கிறீங்க..... நல்லா இருக்கு... :)
(ஏதாவது சாப்ட்வேரா)

நிஜமா நல்லவன் said...

ஆயில்யனில் ஆரம்பித்து தமிழ் பிரியன் வரைக்கும் எல்லோரும் சொன்னதை நானும் 'மறுக்கா சொல்லிக்கிறேன்'....:)

ஹேமா said...

தமிழன்,உங்கள் உயிரைத் தொட்டு உரசிக் கிடக்கும் எட்டுச் சொற்கள்.08.08.2008 ல் எட்டிப் பிடித்த எட்டுச் சொற்களும் அற்புதம்.

மங்களூர் சிவா said...

/
இன்று எதையாவது எழுதி விட வேண்டும் என்கிற காரணத்துக்காக மட்டும்.
/

சரி ரைட்டு

மங்களூர் சிவா said...

/
இன்று எதையாவது எழுதி விட வேண்டும் என்கிற காரணத்துக்காக மட்டும்.
/

அதுக்கு நாங்கதான் கிடைச்சமா???

மங்களூர் சிவா said...

/
இன்று எதையாவது எழுதி விட வேண்டும் என்கிற காரணத்துக்காக மட்டும்.
/

சரி சரி பொழைச்சி போ
:)

Anonymous said...

அருமையாக உள்ளது :)

(என் பதிவில் கருத்துக்களை அள்ளி தருவதற்கு நன்றிகள் )

Sanjai Gandhi said...

:))
(இன்று எதையாவது பின்னூட்டமிட வேண்டும் என்கிற காரணத்துக்காக மட்டும்.)