Sunday, August 3, 2008

இரவுகளை எழுதுபவன்...!





எதையுமே எழுதத்தோன்றவில்லை எனக்கு!

ஏதோ ஒரு கலவையான மனோநிலையில் சுவாரஸ்யமற்ற விரக்கதியுற்ற பொழுதுகளாய் இருக்கிறது இப்போதைய நாட்கள். நிறைந்து விட்ட குப்பைக் கிடங்காய் இருக்கிறது மனம்! பூனைகள் தட்டி விழுத்திய குப்பைவாளியாய் பின்னிரவுகளில் விழித்திருக்கிறது குழம்பிக்கிடக்கிற மனம்...

எரிகின்ற மெழுகுதிரிக்கெங்கே தெரியும் வலிக்கின்ற மனதின் துயரம் அது பாட்டுக்கு உருகி வழிந்துகொண்டிருக்கிறது! எடுத்து வைத்த நாட்குறிப்பின் பக்கங்களில் வடிவங்களற்று கிறுக்கிக் கொண்டிருக்கிறது வலது கையில் இருக்கிற பேனை! எழுதப்படாத வார்த்தைகளை எரித்து சாம்பராக்ககும் முயற்சியில் தோற்றுக்கொண்டிருக்கிறது இடது கையில் இருக்ககிற மல்பறோ லைட்ஸ்! (சிகரெட்)

நேரம் நிமடங்களாக தூக்கத்தை விழுங்கிக்கொண்டு நகர்கிறது....எப்பொழுதோ வாசித்த வரிகளின் சாயல் அல்லது அடி மனதில் இருக்கிற சொற்களின் திமிறல் கோர்வையற்று சிதறி கறுப்பு நிறத்தில் விழுகிறது வெள்ளை நிறத்தாள்களின் மையத்தில்...

அப்படி சிதறி விழுந்த வார்த்தைகளை கோர்வையாக்க தெரியவில்லை எனக்கு.யாரோடும் பேசப்பிடிக்காத அல்லது பகிர்ந்துகொள்ள முடியாத சூழலில் எழுதுவதைத்தவிர வேறு வழியும் தெரியவில்லை எனக்கு!

உருகிக்கொண்டிருக்கிறது மெழுகுதிரி...
சாம்பலாகிக்கொண்டிருக்கிறது சிகரெட்...
எழுதிக்கொண்டிருக்கிறது பேனை...
சொற்களால் நிரம்பிக்கொண்டிருக்கிறது தாள்கள்...
நகர்ந்து கொண்டிருக்கிறது இரவு...
விழுந்து கிடக்கிறது குப்பை வாளி...

காலையில் மறுபடியும் சீர் செய்து வைக்க வேண்டும் குப்பை வாளியை!

22 comments:

sukan said...

//உருகிக்கொண்டிருக்கிறது மெழுகுதிரி...
சாம்பலாகிக்கொண்டிருக்கிறது சிகரெட்...
எழுதிக்கொண்டிருக்கிறது பேனை...
சொற்களால் நிரம்பிக்கொண்டிருக்கிறது தாள்கள்...
நகர்ந்து கொண்டிருக்கிறது இரவு...
விழுந்து கிடக்கிறது குப்பை வாளி...//

பதிவும் அதற்குள் அடங்கியிருக்கும் விசயங்களும் வெளிப்படையாய் இருக்கின்றது.

இரண்டு வண்ணங்களை அல்லது மூன்று வண்ணங்களை சரியான அளவாக சேர்க்கும் போது ஒரு அழகான புது வண்ணம் தோன்றும். அந்த வண்ணத்துக்கு ஒரு பெயர் இருக்கும் அல்லது புதிதாக பெயர் வைத்தக்கொள்ளலாம்.

வண்ணங்கள் இழந்த நிலையில் உள்ளவர்கள் அதிகம். வண்ணங்கள் அனுபவத்தின் பரிசுகள்.

இங்கு குப்பை என்பது வண்ணமே.

துயரங்கள் மிகப்பெரிய உந்துசக்தி. வெற்றிக்கும் சரி அமைதியான மனதுக்கும் சரி துயரங்கள் நல்ல ஆசான்.

இவ்வாறான சில சிந்தனைகளோடு எனது இரவுகளை கடந்து செல்ல முயற்சிக்கின்றேன்

உங்கள் பதிவிற்கும் இதை எழுத தோன்றியது

ஹேமா said...

தமிழன்,மனதின் வலிகள்
அழுத்தும் இரவுகள்.பகல்கலின் பொழுதையெல்லாம் விழுங்கிக் கொண்டு இரவுகளை நீளமாக்கும் வலிந்த நினைவுகள்.பகல்களை வென்றிட்டாலும் இரவுகளை வெல்வது கஸ்டமே!

தமிழ் said...

/உருகிக்கொண்டிருக்கிறது மெழுகுதிரி...
சாம்பலாகிக்கொண்டிருக்கிறது சிகரெட்...
எழுதிக்கொண்டிருக்கிறது பேனை...
சொற்களால் நிரம்பிக்கொண்டிருக்கிறது தாள்கள்...
நகர்ந்து கொண்டிருக்கிறது இரவு...
விழுந்து கிடக்கிறது குப்பை வாளி.../

/அப்படி சிதறி விழுந்த வார்த்தைகளை கோர்வையாக்க தெரியவில்லை எனக்கு.யாரோடும் பேசப்பிடிக்காத அல்லது பகிர்ந்துகொள்ள முடியாத சூழலில் எழுதுவதைத்தவிர வேறு வழியும் தெரியவில்லை எனக்கு!/
உண்மை தான்

Thamiz Priyan said...

ஒரு கருத்தை சொல்ல இயலாத நிலையைக் கூட இவ்வளவு அழகாக சொல்ல இயலுமா?.......... அற்புதமான எழுத்து... :)

Thamiz Priyan said...

///அப்படி சிதறி விழுந்த வார்த்தைகளை கோர்வையாக்க தெரியவில்லை எனக்கு.யாரோடும் பேசப்பிடிக்காத அல்லது பகிர்ந்துகொள்ள முடியாத சூழலில் எழுதுவதைத்தவிர வேறு வழியும் தெரியவில்லை எனக்கு!///
சூழல் மாறும் போது இதுவும் மாறும்.... எதுக்கும் சைக்கிள் பெல்லை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... :)

Thamiz Priyan said...

//காலையில் மறுபடியும் சீர் செய்து வைக்க வேண்டும் குப்பை வாளியை!///
சில நேரங்களில் இரவிலேயே குப்பைகளைக் கொட்டி விட்டு மீண்டும் காலையில் கொட்டும் நிலையும் வருகின்றது.... வீட்டு வீடு வாசப்படி... :)))

மங்களூர் சிவா said...

பேனாவ தூக்கி கடாசீட்டு ஒரு குவாட்டர் விட்டுக்கப்பா சரியாபுடும்.

மங்களூர் சிவா said...

எனி ப்ராப்ளம்???

கோவை விஜய் said...

//உருகிக்கொண்டிருக்கிறது மெழுகுதிரி...
சாம்பலாகிக்கொண்டிருக்கிறது சிகரெட்...
எழுதிக்கொண்டிருக்கிறது பேனை...
சொற்களால் நிரம்பிக்கொண்டிருக்கிறது தாள்கள்...
நகர்ந்து கொண்டிருக்கிறது இரவு...
விழுந்து கிடக்கிறது குப்பை வாளி//

தனிமையில் இரவின் கொடுமை

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Kavinaya said...

//யாரோடும் பேசப்பிடிக்காத அல்லது பகிர்ந்துகொள்ள முடியாத சூழலில் எழுதுவதைத்தவிர வேறு வழியும் தெரியவில்லை எனக்கு!//

அநேகமாக எழுத்தைக் காதலிக்கும் அனைவரின் அனுபவமும்தான் இது. வழக்கம் போல் உங்கள் அரிய நடையில் அருமையாய் பதிந்திருக்கிறீர்கள். எழுதுங்கள்.. எழுத எழுத தெளியும்; தெரியும்.

கயல்விழி said...

நல்ல எழுத்துநடை, எப்போதும் சோகம் இழைந்தோட எழுதுகிறீர்கள் போல தோன்றுகிறது, என்ன காரணம்?

MSK / Saravana said...

இந்த மாதிரி நானும் இருந்திருக்கிறேன்..

:(

தமிழன்-கறுப்பி... said...

@நர்மதா...

விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி...
இரவுகள் எனக்கு விருப்மானவையாகத்தான் இருக்கிறது நர்மதா நிறையப் பேசலாம்...!

தமிழன்-கறுப்பி... said...

@ ஹேமா....
இருந்தாலும் போலிகளற்ற இரவுகளைத்தான் மனம் விரும்புகிறது ஹேமா... நன்றி.

தமிழன்-கறுப்பி... said...

@ நிஜமா நல்லவன்

நன்றி நல்லவரே..:)


@ திகழ்மிளிர்
வாங்க திகழ்மிளிர் பல நாட்களுக்கு பிறகு நன்றி...:)

தமிழன்-கறுப்பி... said...

@ தமிழ் பிரியன்

தல ரொம்ப புகழ்றிங்க..;)நன்றி தல...

@ தமிழ் பிரியன்
அதை மறக்க மாட்டேங்கிறாய்ங்க;)

@ தமிழ் பிரியன்

இந்த பதிவுக்கு இன்னும் ஒரு இரவு என்றுதான் தலைப்பு வைக்கலாம் என்றிருந்தேன் அது இந்த பதிவுக்கான முலக்கட்டுரைக்கு வைக்கப்பட்டிருக்கிறது அது விரைவில் வலையேறும்...

நன்றி தமிழ் பிரியன் அன்புக்கு...

தமிழன்-கறுப்பி... said...

@ சிவா

குவாட்டர் இங்க கிடைக்காதே தல :)

@ சிவா

ஆமாப்பா மனசு சரியில்லை...:(
அன்புக்கு நன்றி தல...:)

தமிழன்-கறுப்பி... said...

நன்றி விஜய்...
இரவுகள் கொடுமையானதாய் எனக்கிருந்ததில்லை...


நன்றி கவிநயா...

தமிழன்-கறுப்பி... said...

@ கயல்விழி...

என் முந்தய பதிவுகளைப்பாருங்கள் இருந்தாலும் சோகம் குடுக்கிற சுகமே தனி அது அவள் சார்ந்ததாய் இருக்கும் பொழுது மட்டும்...

நன்றி...!

தமிழன்-கறுப்பி... said...

@ சரவணகுமார்

இது எல்லோருக்கும் இருக்கிற அனுபவம்தானே...?!

நன்றி..!

Kumiththa said...

நல்லா இருக்கு தமிழன். அழகான தலைப்பும். நிறைய கற்பனை பண்ணுவிங்க போல!

ரௌத்ரன் said...

ம்ம்ம்ம்ம்ம்...எழுத முடியாத தருணங்கள் எழுதுவோர்க்கு பொதுவானது நண்பா..அதையும் எழுத்தாக்கி இருக்கிறீகள்...நன்றாக இருக்கிறது....