Tuesday, April 29, 2008

கொலுசுகளின் சில்மிஷம்...

*
நீ இல்லாத நாட்களில்
உன்னைப்பற்றி பேசுகின்றன
நீ இருக்கிற நாட்களில்
உனக்காக பேசுகின்றன
நாம் சேர்ந்திருக்கும் நாட்களில்
நம்மோடு பேசுகின்றன
என் கொலுசுகள்
எப்படி பிரிவேன்
நீ கொடுத்த கொலுசுகளை...

*
நாள் முழுவதும்
என்னோடு இருந்தாலும்
நீ வந்ததும் தான்
சத்தமிட தொடங்குகின்றன
என்கொலுசுகள் நான்
அது வரையும் சேர்த்து வைத்த
எல்லா மௌனங்களையும் சேர்த்து...

*
என் பாதங்களுக்கு என்னாயிற்று
ஒரு நிமிடம் இருப்பதில்லை
நீ கொடுத்த கொலுசுகளை பிரிந்து
கழுவுவதற்காக கழற்றினாலும்
குறு குறுத்துப்போகிறது
நீ என்னருகில் இல்லாத நாடகளில்...


*
எப்படித்தெரியும்
என்னுடைய கொலுசுகளின் சத்தம்
என்று கேட்டால்
உனக்கே உரிய சிரிப்போடு சொல்கிறாய்
"அவை சத்தமிடுவதும் பாடுவதும்
என் பெயர் சொல்லித்தானே"
போடா...
உனக்கும் தெரிந்துவிட்டதா
என்கொலுசுகளின் பாஷை...

Wednesday, April 23, 2008

இரண்டு வருடமாய் ஒரு பாடல்...

திகிரி ஒழுங்கையின் உறவுகள்

இடம்பெயர்ந்திருந்தாலும்

தில்லையம்பதி வீட்டடின் ஞாபகச்சுவர்களில்

நீயும் நானும் சந்தித்த நினைவுகளை

தீட்டிக்கொண்டிருக்கிறது காற்று...


நெருக்கமான தருணங்களின் சுகங்களை

தெரு முழுவதும் வாசங்களாய் வீசிக்கொண்டிருக்கிறது

முன் வாசல் மல்லிகைப்பந்தல்...


ஊடிக்கொண்டே கூடிய சந்தர்ப்பங்களையும்

சிலாகித்த சிருங்காரப்பொழுதுகளையும்

எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கிறது

நாம் நடந்து கொண்டே கதைத்த

ஒழுங்கை மணல்...


எதிர்பாராமல் உன்னை நான்

அடித்துவிட்ட அந்த

நெகிழ்ச்சியின் நெருக்கத்தில்

நீளமாய் விலகி விலகித் தழுவிய

நாளுக்காய் பூக்களை மறக்காமல் தருகிறது

வேலியோரத்து பூவரசுகள்...

சந்தித்த நாட்கள் எல்லாமே இருவரும்

சாய்ந்து நின்று இலைகள் பிய்துப்போட்ட

சுவரோரத்து மயிர்கொட்டி பழ மரம்

சாய்ந்து கொண்டிருக்கிறது

நம் பிரிவின் துயர் தாளாது...


இருந்தாலும்... இன்றோடு

இரண்டு வருடங்கள் கடந்து விட்டாலும்

கடைசியாய் கிடைத்த தகவலின் படி

காதல் இசைக்கிற ஒரு பாடல் காற்றில்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது

இன்னமும் ஈரமாய்...


நானும் நீயும் வாழ்ந்த ஊரில்

நம் வருகைக்காய்...

Wednesday, April 16, 2008

போதையில் உளறியது...

*
நேற்றய இரவில்
ஏற்றிய போதையின் தலைவலிக்கு
மாற்றாக இன்றய பகலில்
தேவைப்படுகிற போதை போல
உன் நினைவுகளுக்கும் மருந்தாக
மறுபடியும்
உன் நினைவுகள்...

*
மதவடிப்பனங்காணி
ஒற்றைப்பனைக்கள்ளின் போதை
எதுவுமில்லாமல் போயிற்று
உன்னை முதன்முதலாய்
சேலையில் பார்த்த
நாளில் இருந்து...


*
நாட்டுச்சரக்கு
"நச்"சென்று இருந்தது...
நீ சிரிக்கும் போது குழிகின்ற
கன்னங்களை பார்க்கும் வரை...


*
சொன்னால் கோபப்பட கூடாது
பனஞ்சாராயம் தருகிற
மயக்கமெல்லாம் சாதாரணம்
நீ "இஞ்சயப்பா..." என்று
சினுங்கும்பொழுது...


*
ஊற்றிவைத்த மதுவின் முதல்சொட்டும்
பற்ற வைத்த சிகரெட்டின் கடைசி "தம்மும்"
தருகிற சுகமே
தனி என்று சொல்வதை மறந்திருந்தேன்
உந்தன் முத்தங்களை பருகியதிலிருந்து...


*
"தண்ணி" அடிச்சா கவலை மறந்து
உறங்குவேனென்று நம்பியிருந்தேன்..
உன் மடியில் உறங்குகையில்
உலகையே மறந்து விடுகிறேன்...

Monday, April 14, 2008

கொடுத்து வைத்த பப்பி...

மங்களூர் சிவா, மங்களூர் சிவா...என்று ஒருத்தரு அடுத்த வார ஜொள்ளுக்காக சில படங்கள் தேடிக்கொண்டிருப்பதாக தெரிகிறது...அவருக்கு உதவும் நோக்கில் சில படங்கள்... (நம்ம மனசே அப்படித்தாங்க) இந்தப்பதிவு...படங்கள் எல்லாம் தல சிவாவுக்கு...கும்மி எல்லாம் பப்பிக்கு...










தல சிவா http://mangalore-siva.blogspot.com/2008/04/blog-post_12.html மட்டும் இந்த படங்களை பார்க்கலாம் மற்றவர்கள்...படம் பார்க்காமல் கருத்து மட்டும் சொல்லலாம்...

Thursday, April 10, 2008

வந்திருந்தவை...


*
ராஜா...
எனக்கு நிறைய கோபம்
வருதே என்ன செய்ய
பொறுத்து கொள்ளுங்கள் தயவு செய்து
என்ன உறவு என்று
சொல்ல கூடாது என்றில்லை
சொல்ல முடியவில்லை
தாலி கட்டி
பக்கத்தில் வைத்து கேட்டாலும்...


*
அப்படியா...
கேட்கவே தாங்க முடியவில்லை
கொஞ்சம் கிட்ட வாங்களேன் ஆனால்
ஒன்றுதான் தருவேன் மிகுதி நேரில்
இப்ப நான்
சேலை மாற்றிக்கொண்டிருக்கிறேன்...




*
ராஜா...
அடுத்த வாரம் தான் ஊருக்கு போவேன்
நாளை பிள்ளையார் சுழி போட்டு கடிதம்
எழுத தொடங்குகிறேன்
எழுதி முடிய ஒரு மாதம் எடுக்கும்
கிழவிக்கும் மாமனைப்பார்க்க ஆசைதான்
முடியலையே...
*
என்னடா...
காலை வணக்கங்கள்
இன்று பன்னிரண்டு மணிவரை வேலை இருக்கு
சிகரெட்டை என்ன செய்வதாக உத்தேசம்
குறையுங்களேன்
நிறைய படிக்க இருக்கப்பா
கொஞ்சம் படித்து தருகிறீர்களா...
*
காலை நேர வாழ்த்துக்கள் ராஜா...
இன்று வேலை இல்லை
விடுதி வேலை கொஞ்சம் இருந்தது
நாலரை மணிக்குப்பதிலாக
ஐந்தரை மணிக்கு எழும்பினேன் படுத்தாலும்
நித்திரை வராது
நிறைய வேர்க்கிறது
ஒரே சினமாயிருக்கு...
*
என்னடா...
இனிமேல்தான் சாப்பாடு அதன்
பிறகுதான் சீருடைக்கு மாறுவேன்
எனக்கு எங்கே அனுப்புவீர்கள் கடிதம்
வேண்டாமே..தயவுசெய்து...நாளை
ஏப்ரல் முதல்திகதி
தயாராக இருக்கவும்...

Tuesday, April 8, 2008

அனுப்பியிருந்தவை...


*
நீ சொல்ல மாட்டாய் என்று
எனக்கு தெரியும் தமிழ்
நீ காலை வணக்கம் சொல்லும்பொழுதே
உன்னை கட்டிக்கொண்டு
அழ வேண்டும் போலதான் இருந்தது
முழுக வேண்டும் என்று வேறு சொன்னாயா
கோபம் வேறு மாதிரி ஆகியிருந்தது.... ஆனால்
உன்னோடு உடனே கதைக்க வேண்டும்
என்று நினைத்தவற்றை கதைத்து முடித்தேன்
என் நம்பிக்கைகளை
நீயே இல்லாமல் செய்கிறாய்
சில நேரங்களில் அதனால்தான்
வார்த்தைகள் தடம்மாறி வெளிவந்தன...


*
என்னடா...
நானும் உன்னைதத்தான் அழைத்துக்கொண்டிருந்தேன்
என்ன செய்கிறாய் கடிதம் எழுது
வேறென்ன விஷேசம்
ராஜபார்வை என்றொருபடம் அதில்
மழையோடு தொடங்கும் ஒரு பாடல்...







*
என்னடா...
வீட்டுக்கு போகிறாயா
கடிதம் அனுப்படா குட்டி
மாமனுக்கு உன்னை
பார்க்க வேண்டும்
போல இருக்கடா...


*
அது சரி...
கொல்கிறாயே "கிழவி"
கொஞ்சம் பொறு வந்து விடுகிறேன்
காலம் முழுதும் உன்
கைகளுக்குள் வாழ்வதற்கு
கறுப்பி...
உன்னால் முடியும் தம்பி படம்
இதழில் கதையெழுதும் நேரம் பாடல்
கேட்டுப்பார்...


*
என்னடா...
வேலையா இல்லையென்றால்
நன்றாக நித்திரை கொண்டு எழும்பி
பிள்ளையார் சுழி போடுங்கோ
என...




*
ம்ம்ம்...
கன நேரம் வேலை செய்யாதே அதிலென்ன
எதுவுமே தெரியாமல் எனக்கு
இரசாயனவியல் பாடம் எழுதித்தந்து அதில்
என்னை அழவும் வைத்த
என் செல்லத்துக்கு உதவி செய்யாமல் இருப்பேனா
குறைத்திருக்கிறேன் கவலைப்படாதே...
நிறுத்தி விடுவேன்...


*
என்னம்மா...
மனதை லேசாக விடு...
காற்றாடி வேலை செய்யவில்லையா
ஜன்னலையும் மனதையும் திறந்துவைத்துக்கொள்..
தனியே இருக்கும் தருணங்கள்
சுமைகள்தான் பார்த்தாயா
அமைதியான இடத்தில் இருந்து
விருப்பமான எதையாவது செய்து கொள்...
என்ன புத்தகம் வைத்திருக்கிறாய்...


*
என்ன...
எப்படி இருக்கிறாய் அன்பே...
வேலைக்குப் போக தயாராகி விட்டாயா- நான்
உனக்கு கடிதம் அனுப்ப வேண்டும்
அதற்கொரு முகவரி கொடு
நீ எப்பொழுது அனுப்புகிறாய்...


*
ஹாஹா...
நான் முட்டாள்கள்
தினத்தைப்பற்றி யோசிக்கவேயில்லை....
முட்டாள்கள் மட்டுமே
தங்கள் நாளைப்பற்றி யோசிக்கிறார்கள் ஆகவே
நீ அவதானமாக இருக்க வேண்டும்...
அத்துடன் முன்கூட்டிய வாழ்த்துக்கள்
உன்னுடைய நாளுக்காக..
(நன்றி அன்பே ஞாபகப்படுத்தியதற்கு...)


*
என்னடா...
சாப்பிட்டு விட்டாயா
அவசரமாய் ஒரு
முத்தம் தந்து உதவ முடியுமா
இங்கே ஒரு ஜீவன்
சாகும் தருவாயில் இருக்கிறது...


Tuesday, April 1, 2008

இடம்மாறுகிறது தாஜ்மஹால்...


ஆக்ராவிலிருந்து புனேவுக்கு இடம் மாறுகிறது தாஜ்மஹால் நம்பவில்லையா விபரம் பாருங்கள் புரியும்...

தாஜ்மஹாலின் பளிங்குத்தன்மைக்கு ஏற்படுகிற பாதிப்பு காரணமாக அதனை இடம் மாற்றலாம் என்கிற யோசனை பலமாக எழுந்துள்ளது அதற்கான செயல்முறை விளக்கமும் படமும் வலையுலக விஞ்ஞானிகளால் தரப்பட்டிருக்கிறது...

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-