Thursday, April 10, 2008

வந்திருந்தவை...


*
ராஜா...
எனக்கு நிறைய கோபம்
வருதே என்ன செய்ய
பொறுத்து கொள்ளுங்கள் தயவு செய்து
என்ன உறவு என்று
சொல்ல கூடாது என்றில்லை
சொல்ல முடியவில்லை
தாலி கட்டி
பக்கத்தில் வைத்து கேட்டாலும்...


*
அப்படியா...
கேட்கவே தாங்க முடியவில்லை
கொஞ்சம் கிட்ட வாங்களேன் ஆனால்
ஒன்றுதான் தருவேன் மிகுதி நேரில்
இப்ப நான்
சேலை மாற்றிக்கொண்டிருக்கிறேன்...




*
ராஜா...
அடுத்த வாரம் தான் ஊருக்கு போவேன்
நாளை பிள்ளையார் சுழி போட்டு கடிதம்
எழுத தொடங்குகிறேன்
எழுதி முடிய ஒரு மாதம் எடுக்கும்
கிழவிக்கும் மாமனைப்பார்க்க ஆசைதான்
முடியலையே...
*
என்னடா...
காலை வணக்கங்கள்
இன்று பன்னிரண்டு மணிவரை வேலை இருக்கு
சிகரெட்டை என்ன செய்வதாக உத்தேசம்
குறையுங்களேன்
நிறைய படிக்க இருக்கப்பா
கொஞ்சம் படித்து தருகிறீர்களா...
*
காலை நேர வாழ்த்துக்கள் ராஜா...
இன்று வேலை இல்லை
விடுதி வேலை கொஞ்சம் இருந்தது
நாலரை மணிக்குப்பதிலாக
ஐந்தரை மணிக்கு எழும்பினேன் படுத்தாலும்
நித்திரை வராது
நிறைய வேர்க்கிறது
ஒரே சினமாயிருக்கு...
*
என்னடா...
இனிமேல்தான் சாப்பாடு அதன்
பிறகுதான் சீருடைக்கு மாறுவேன்
எனக்கு எங்கே அனுப்புவீர்கள் கடிதம்
வேண்டாமே..தயவுசெய்து...நாளை
ஏப்ரல் முதல்திகதி
தயாராக இருக்கவும்...

10 comments:

நிஜமா நல்லவன் said...

இன்னும் கொஞ்சம் வந்திருக்கலாம்:)

தமிழன்... said...

நிஜமா நல்லவன் சொன்னது...

///இன்னும் கொஞ்சம் வந்திருக்கலாம்:)///


சொல்லிப்பாக்கறேன்:)))


(அனுப்பினதும் வந்ததும் நிறை இருந்திச்சுப்பா நாந்தான் பதியலை...)

Praveena Jennifer Jacob said...

அழகான குறுந்தகவல்கள்:-)

கிடைத்த அனைத்தையும் பதிவிடலாமே தமிழன்??

மங்களூர் சிவா said...

மொத ரெண்டு படமும் நல்லா இருக்கு.

தமிழன்... said...

வாங்க ஜெனி...

பதிவு பெருசாகிடுமேன்னு பார்த்தேன்,இனி முயற்சிக்கிறேன்...

நன்றி தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...

தமிழன்... said...

தல சிவா சொன்னது...

///மொத ரெண்டு படமும் நல்லா இருக்கு.///


நீங்க பதிவு பாக்கிறதில்லைன்றத நிரூபிச்சிட்டிங்களே தல...

மங்களூர் சிவா said...

அப்பிடி இல்லைங்க அண்ணாச்சி கவுஜ எல்லாம் படிச்சி கமெண்டு போடற அளவுக்கு கிட்னி பத்தாது நமக்கு!!!!!!

Divya said...

நல்லாயிருக்கு தமிழன்!

இன்னும் இது மாதிரி தகவல் இருந்தா பதிவுல போடுங்க, நாங்களும் படிச்சுக்குவோமில்ல!!

தமிழன்... said...

siva said...

///அப்பிடி இல்லைங்க அண்ணாச்சி கவுஜ எல்லாம் படிச்சி கமெண்டு போடற அளவுக்கு கிட்னி பத்தாது நமக்கு!!!!!!///


தல வேண்டாம் இந்த வெறி...

(கவுத்துட்டிங்களே தல:(((

தமிழன்... said...

வாங்க திவ்யா...

////நல்லாயிருக்கு தமிழன்!

இன்னும் இது மாதிரி தகவல் இருந்தா பதிவுல போடுங்க, நாங்களும் படிச்சுக்குவோமில்ல!!///

போட்டுருவோம்...