Tuesday, March 31, 2009

பூனைகள் பற்றிய...



கவிழ்ந்திருக்கிற இரவு விளக்கின் வெளிச்சத்தில்
கலைந்திருருக்கிற அழகுகளோடு உறங்குகிற
அவளுக்கு தெரியது இரவுகளில் பூனையாகுகிற என்னை,
வெளவால்கள் வழித்திருக்கிற இரவுகளில்
வெளிச்சமற்ற திசைகளில் இருந்து
இரை தேடிப்பாய்கிற பூனைகளின் லாவகம்
பகல் முழுதும் பரவசமூட்டுகிற பறவைகளுக்கு
தெரிவதில் நியாயங்கள் இருப்தாய் தெரியவில்லை,
இடை வெளிகளுக்கு அவசியமில்லாத
இரவுகள் வரும் வரையும்,
பகல்களில் நானாக இருக்கிற பூனையை
அறிந்து கொள்ளாமல் இருப்பதுதான் முறை
அவளும் அவளை அறிந்த நீங்களும்,
யாருமற்ற பகல்களில் நான் பூனையாகுவது குறித்து
இப்பொழுதே எழுதி விடுகிறேன்,
பூனைகளின் உலகம் என்னை ஏற்றுக்கொள்கையில்
என்னை ஒரு பூனையாகவே ஏற்றுக்கொள்ளகூடும்...
அவளும் நீங்களும்!

__________________________________________


புதிர் நிறைந்த பழைய பூனைகள்
அங்கீகாரங்களற்று மாண்டு போக,
ஆளுமைகள் கொண்ட பூனைகள்
அடையாளமிழக்கத் தொடங்கியிருக்கிறது,
சிக்கல்கள் நிறைந்ததாய் இருக்கிற பூனைகளின் உலகில்
வீரியமுள்ளவைகளாய் அறிமுகமாகியிருக்கின்றன
சில புதிய பூனைகள்,
அவைகளோடு பழகுதல்
அற்புதமான அனுபவமாய் இருக்கிறது,

இன்னொன்று...

உலகின் மிக அழகான பூனைகளின் சாயல்களில் இருக்கிற
அவளை பிரிந்ததிலிருந்து,
நானொரு பூனையாகிக் கொண்டிருப்பதாய் நான் சொல்வதை
நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்றாலும்
நானொரு பூனையாகுவதென்கிற முடிவில் இருக்கிறேன்,
ஏனெனில் பூனைகளின் ஊலகம் விசித்திரங்களால்
ஆனதென்றாலும் புரிதல்கள் நிறைந்தது,
பூனையாகுதல் ஒரு வரம்
பூனைகளை அறிதல் ஒரு தவம்!



பின்குறிப்பு:

\\
பூனைகள் பற்றி குறிப்புகள் எழுதப்போனால் இது நீங்கள் படிக்க முடியாத அளவுக்கு நீளமான பதிவாகக்கூடிய பிரச்சனை இருப்பதால்,அவற்றை இயன்றவரை சுருக்கி எழுதக்கூடியதாய் என் மனோநிலை இருக்கையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

\\
தொடரும்...

Saturday, March 28, 2009

காதல் சுமந்த தெரு...

அதிகம் பயன் படுத்தியிராத அந்த தெருவுக்கு வருகையில்
புதியதாயிருந்தது அந்த தெருவும் எல்லை வேலிகளும்

நெருக்கமானதும் சீரானதுமான
கிளிசறியாக் கதியால்கள்...
வளவுக்குள்ளேயே மரமிருந்தால்
இவை கிடைப்பது கொஞ்சம் இலகு,
அங்கங்கே பூவரசங்கதியால்கள்...
இவை சீரானதாய் கிடைப்பது அரிதென்றாலும்
வேலிக்கு பலம் இவைகள்தான்,
இடைக்கு இடை வாதநாராணி வைத்து
அடுக்கி மட்டை வரியப்பட்ட வேலி
இதை தாங்கிக்கொண்டிருந்தது...
பழைய நுணாவொன்றும் பூவரசுகள இரண்டும்,
எதிரேயயிருந்தது சாயம்போன சுண்ணாம்பும்
காய்ந்து போன பாசித்திட்டுகளுமாய் முழுநீளச் சுவர்!


விரல் விட்டு எண்ணிவிடத்தக்க
எண்ணிக்கையில் பார்வைகள்,
மிக அரிதான மென் முறுவல்கள்,
மிக அவசரமாக மாறுகிற முகபவாங்களோடு
என்னைக்கடக்கிற தருணங்கள்,
இத்தனையோடும் நம்மிருவரையும்
சுமந்து கொண்டிருந்தது காதல்,
வேடிக்கை பார்த்தபடி
வளர்ந்து கொண்டிருந்தன கதியால்கள்,

மிக நெருக்கமான வாசனைகளோடிருந்தது
பழகிப்போன கலட்டி ஒழுங்கை!

சில வார்த்தைகள்,
சில நிமிட சந்திப்புகளுக்கான
சில மணிநேர காத்திருப்புகள்,
சில கடிதங்கள்,
ஒருவர் மற்றவருக்கென்றேயான புன்னகைகள்,
பழைய பூவரச மரங்களின் இருளில்
பொழுது படுகிற வேளையில் நிகழந்த
பரிமாறத்தெரியாத முத்தங்கள்,
மிகப்பிடித்தமான பூவரசம் பூக்கள்,
பகல் நேரத்து பறவைகள்,
நுணா மரத்து குயில்கள்,
காதல் தீராத....
..........
தீராத...?


இவைகளை இப்படியே விட்டுவிட்டு
எங்கே போனான் எழுதியவன் ?!

பச்சை நிறங்களில்
மேகங்களோடு கதை பேசுகிற
மரங்கள் காட்டுகிற ஜன்னல் கொண்டு
அறைகள் செய்த நுவரெலியா

இலங்கையின்
அழகான கடற்கரைகளும்
பழைய வரலாறுகளும்
அமைந்த திருகோணமலை..

அல்லது கடல் கடந்தானோ
ஒட்டகங்கள் கனவில் வருகிறதுதும்
மோசே நடக்க வழிவிட்டதுமான செங்கடலின்
அலைகளின் கரையில் இருக்கிற அரேபிய தேசம்


அவன் எங்கேயேனும் இருக்கட்டும்
அவன் இருக்கிறான் அது போதும்!

காலம் சில பருவ மாற்றங்களை கடந்திருக்கிறது
இப்பொழுது நாமந்த வீதிக்குள் நுழையலாம்...

பழைய நுணாவும் பூவரசும் அப்படியே இருக்க
அவற்றை உள்ளே வைத்து மறைத்திருந்தது
புதுசாய் கட்டி பூசப்படாமலிருந்த மதில்,

பூவரச மரங்களுக்கு என்ன தெரியும்
மரங்கொள்ளாமல் பூத்திருந்தன
வழக்கம்போல நுணா
குருவிச்சையாகிக்கொண்டிருந்தது...!


\\
இந்தக்கவிதை(கவிதைகள் இப்படியா இருக்கும்) நீளமாக இருப்பதனால் ஒரு கதையாகவும் இருக்கலாம்.

\\
ஒற்றைப் பூவரசம் பூவைச்சூடியவள் என்கிற கதையைப்பற்றி ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கக்கூடும் அந்தப்பெருங்கதையின் சிறுகுறிப்பாய் இது இருக்கலாம் அல்லது ஒரு பெருங்கதைக்கான மிகச்சுருங்கிய வடிவமாய் இது இருக்கலாம்.

\\
மூன்றாவது குறிப்பை எப்படி எழுதுவதென தெரியவில்லை.

Tuesday, March 24, 2009

தலைப்புகளற்ற குறிப்புகள் - 24-03-09

\\
இலங்கையும் அதன் நிஜங்களும் எதிரே இருக்கிறவர்களை கொலை செய்கிற வேகம் ஒன்றை கொடுத்திருந்தது கடந்த மாதத்தின் வாரங்களில். மிகக்கடினப்பட்டு அடக்கி க்கொண்டேன். இன்னும் சில காலம் வாழ வேண்டியிருக்கிறது. எந்த உணர்வுகளையும் கடந்து போக பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லையேல் சில இடங்களில் தேங்கி விடகக்கூடும் வாழ்ககை. இதே வரிகளை இதுவரை எழுதாத கடிதத்தில் வேறுவிதமாய் எழுதியதாக நினைவு.


\\
இந்த வருடம் ஊருக்கு போவதாக இருந்தேன் போகப்பிடிக்கவும் இல்லை, போக முடியவும் இல்லை. வருகிற வருடம் என்று முடிவாகி இருக்கிறது பார்க்கலாம். இரண்டாயிரத்துப்பத்தில் பெரிய மாற்றங்கள் அனேகம் நிகழக்கூடும்.


\\
பாடல்கள் பற்றிப்பேசுவது பேசுவது என்று ஒரு வருடமாக சொல்லிக்கொண்டிருக்கிறேன் பேசவே இல்லை. பாடல்களை பற்றி பேச ஆரம்பித்தால் நிறுத்திக்கொள்ள முடியாத அனளவுக்கு பேசலமோ என்பதுபோல விருப்பப் பட்டியலும் நினைவுகளும் தொடர்ச்சியான உரையாடலுக்கு வழி செய்யக்கூடும் இருந்தும் இன்னமும் எந்தப்பாடல் பற்றியும் எழுதவில்லை. ஒருவேளை அவற்றை கேட்டுணர மட்டும்தான் முடிகிறதோ என்னவோ.ஒரு சில பாடல்களையேனும் பாடிவிட வேண்டும் இல்லை பேசி விடவேண்டும்.


\\
தோழி ஒருத்திக்கு எழுதிய மின்னஞ்சல் ஒன்றிலிருந்து...

உன்
கலைந்த கூந்தல்களில்
கட்டுண்டு கிடக்கிறது மனம்
விடுதலை செய்தென்னை
சிறையெடுத்துக்கொள்...


\\
இப்பொழுது கணினியில் இருக்கிற படம் அல்லது ஒரு (f)பிகர்..




தமனாவை(படத்தை )தரவிறக்கி பல நாட்களாகிறது. சில எழுதப்படாத சொற்களுக்கு பொருத்தமாய் இருக்குமென்கிற யோசனையில் சேமித்த பல படங்களில் இதுவும் ஒன்று. அந்த சொற்கள் இன்னமும் எழுதப்படவில்லை இனிமேல் அவை எழுதப்படலாமா என்பதும் தெரியவில்லை.

\\
ஓரு கேள்வி;
பொம்மலாட்டம் படத்தில் அர்ஜீனின் காதலியாக வருகிற பெண் நானாபட்டேகரிடம் கொடுக்கிற கவிதைப் புத்தகத்துக்கு என்ன பெயர்.

Tuesday, March 17, 2009

நேரிலும் வரக்கூடும் தேவதைகள்...

திசைதெரியாத பயணமொன்றில்...
தனியாய் நடந்து கொண்டிருந்தேன்,
வாழ்க்கை கடினமானது என்கிற...
மாயை அலைக்கழித்த நாட்களில்,
வானம் பொழிவதற்கு தீர்மானித்த முன்பகலொன்றில்
வாசனைகளோடு நுழைந்தவள்,
பிரியங்கள் நிறைந்த சொற்களில் என்னை ஆக்கிரமித்தாள்!

மிக வெப்பமான பிற்பகல் ஒன்றில்...
என்னவென்று புரியாத சில காரணங்களை
சொன்னவள் என்னைவிட்டு வெளியேறினாள்,
வெளியேறிய தருணங்களில் அவள்...
வாழ்க்கை வசப்படுகிற அற்புதங்களை நிகழ்த்தியவள்!
இன்னொரு வகையாய் அழைக்கையில் தேவதை!


இதை இங்கே முடிக்கலாம் அல்லது,


கொண்டாடுவதற்கு எதுவுமேயில்லாத நாளொன்றின் கடைசியில்
செம்மஞ்சள் நிறத்தின் வானத்தை
மிகக்கசப்பான வெளிநாட்டு மதுவொன்றின்
துணையோடு சபித்துக்கொண்டிருந்தேன்,
இரவுக்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கையில்
அதே வாசனைகளோடு நுழைந்தவள்...
மறைக்கப்பட்ட மார்புகளின் மத்தியில் இருந்தொரு
மலரை பரிசு செய்தாள்!
எனக்கும் பிரியம் செய்யத்தெரியுமென உணர்த்துவதற்கு
விரல்களை துணைக்ழைக்வேண்டிய அவசியம்
அவளைப்போல பேசத்தெரியாததில் உண்டாகிற்று
ஆக்கிரமிப்பு செய்கிற விரல்களை சிறையெடுத்தவள்
மிக நீளமான முத்தங்களை பரிமாறுகிற
உன்னதங்களை செயலாற்றினாள்...

அற்புதமான இரவின் முடிவில் விழிக்கையில்
போர்வைகளை அணிந்திருந்தோம்!

இப்பொழுது அவளுடைய பெயர் கறுப்பி!





பின்குறிப்பு:

\\
இது நிச்சயமாய் புனைவுவென்று நான் சொல்வதை நம்புவதற்கு நீங்கள் என்னை தெரியாதவர்களாய் இருக்கவேண்டும்.

\\
இதனை அவள் வாசிக்கக்கூடாதென்பது தேவதைகளிடம் நான் வாங்கியிருக்கும் சாபம் ஏன் வரமாயும் இருக்கலாம்.

\\
இந்தக்கவிதையை படத்தோடு பதிவு செய்யாததற்கு காரணம் கறுப்பியின் புகைப்படங்கள் எதுவும் என்னிடமில்லை என்பதும் தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை அவை அதற்குள் அகப்படுவதுமில்லை என்பதுமே.

Friday, March 13, 2009

ரணகளக் குறிப்புகள்! அல்லது கொட்டாவிகள்...

\\
தன்மானத் தமிழன் நீ
சும்மா இருத்தல் தகுமோ
கட்டாயம் புலம்புதலுன் வீரம்!

\\
மாவீரன் யாரோ என்றால்
மரணத்தை வென்றுள்ளோர்கள் - இன்னமும்
உரிமையை அல்ல!

\\
எது உன் நாடு
ஈழம் என்திரு நாடு
உயிரை கையில் எடு
எந்த திக்கிலும் ஓடு
ஏந்திடு கையில் திருவோடு!

\\
இக்கணம் என்பது மெய்
செய் அல்லது பொய்.

\\
இனம் மதம் மொழி
விளங்காட்டி வரும் தலைவலி

\\
சுயம் நிர்ணயம் உரிமை
சமன் அடிமை!

\\
அதிகப்பிரசங்கி,
அமெரிக்க நாட்டு வங்கி,
ஆகிப்போச்சு ஆப்பிழுத்த மங்கி!

\\
கடமை நேர்மை உழைப்பு
கண் போல
காதல் அரசியல் இலக்கியம்-அதில்
மண்போல!


\\
இருட்டில் புணர்கிற பெண்
எந்த பாஷை பேசினால் என்ன
விடிந்ததும் நான் தமிழன்!

\\
ராஜ் மியூஸிக்ஸ பூர்ணி
இசையருவி நிஷா
இன்னும் பல பிகர்
நெக்ஸ்ட் ஸ்வீட் கோலர்
ஹலோ..ஹலோ...!
லோ..லோ..லோ...

\\
ஞானி சாரு ஜெமோ
கலைஞர் காமம் கடவுள்கள்
தமிழ்மணம் பதிவுகள் கொட்டாவிகள்...

\\
எழுதுவதெல்லாம் புனைவு
எழுதுபவன் செய்வது சுயபுணர்வு
எழுத்துக்கும் சுயத்துக்கும் வெகுதொலைவு!

\\
வயிற்றுப்பசிக்கு சோறு
வாழ்தல் என்பது வேறு
விடிகையிலும் வரும் சாவு!

\\
சிகரெட் வைன் செக்ஸ்
இவை மூன்றொடு செய் புனைவு
இதை எழுதுதல் ஒரு இசம்
எழுதியதை படிப்பது விசம்!

\\
எழுதுதல் என்பது கலை
என்னுடைய பதிவுகள் கொலை
எழுதியதை படித்தல் தற்கொலை!

Monday, March 9, 2009

பேரின்ப நாயகியும் போலியும்...




சந்தர்ப்பம் கிடைத்தும் தவிர்த்துக்கொண்ட
பறங்கிப்பெண்ணைப்பற்றிய கனவுகள்
தூக்கம் கலைக்கிறது
சொற்படி கேளாத உடலை
சுய பலாத்காரம் செய்வதில்
தவறேதும் இல்லையே!


இதற்கு முன்னொன்று,

வெளிர் நீல நிற ஆடையில்
ஈரத்திட்டுக்களோடு கதவுதிறந்தவள்
கச்சைகளணியாத மார்புகள் அதிர
ஆச்சரியங்களோடு புன்னகைத்து...
எதிர்பாராத வருகையை கொண்டாடினாள்
மிக மெல்லிய இடைவெளியில்
கூந்தலின் ஈரம் கன்னங்களில் தெறிக்க
கன்னம் உரசி வரவேற்றவள்
மோகனம் நிறைந்த குரலில் கிசுகிசுத்தாள்

“என்ன அப்படிப்பார்க்கிறாய்”

பதில் சொல்லத்தெரியாமல்
மிக வெப்பமான மூச்சை வெளிவிட்டதில்
கிளுக்கென்று சிரித்து சொன்னாள்

“இப்பொழுதுதான் குளித்திருக்கிறேன்...”

எதிரெதிரே அமர்ந்து பேசிய
மத்தியான வேளை ரணம்
மிக நீளம்...

விடபெறுகையில்
தெரு முனை வரை வந்தவள்
புறப்படும் தருணத்தில் நிகழ்ந்த
சம்பிரதாய? தழுவலில் சொன்னாள்
“அப்படியொரு சந்தர்ப்பம் இருந்தால்
உனக்கு மட்டும்தான்...”


வேறொன்று,

புனிதப்பிம்பங்களின்...
போலியாயிருந்த நாளொன்றில்,
பின்பொரு நாளில் அவளை இழந்துவிட்டோமே
என்கிற தாபம் வரக்கூடாது என்பதாகிய
நண்பனின் கூற்றையேனும் பொய்யாக்கிவிடலாம்...


இந்தக்கவிதை ஒரு உண்மை
நான் ஒரு hypocrite!


பின் குறிப்புகள்:

\\
பேரின்ப நாயகி என்கிற பெயர் காப்புரிமை எடுக்கப்பட்டிருக்கிறது அத்தோடு அவளைப்பற்றிய பிம்பங்களை கற்பனை செய்வதும் உங்கள் உயிருக்கு ஆபத்தை கொண்டுவரக்கூடும் என்பது உறுதிப்படுத்தப்பட தகவலாய் இருக்கிறது.

\\
ஏறக்குறைய பதினோராயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று சொற்களில் இவ்வளவும் மட்டுமே இப்போதைக்கு வாசிக்க கிடைத்திருக்கிற எனக்கு நான்கு நாட்கள் தூக்கம் காணாமல் போயிருப்பதில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.

\\

இரண்டு முடிவிடங்களை கொண்ட இந்தக்கவிதைக்கு ஆரம்பத்தில் எழுதப்பட்டிருந்த தலைப்பு நான் ஒரு hypocrite!

Thursday, March 5, 2009

தலைப்புகளற்ற குறிப்புகள் - 05-03-09.

பல நாட்களுக்கு என்ன சில மாதங்களுக்கு பிறகு காலை நேரப்பணிக்கு தற்செயலாய் வந்திருக்கிறேன் உண்மைதான் உற்சாகமாய்தான் இருக்கிறது காலை நேரத்து பொழுதுகளும், அலுவலகமும், பணிகளும், ஏன் தமிழ் மணமும் பதிவுகளும் கூட நான் பதிவுகளை தவறவிடுவதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்; எப்பொழுதும் இரவுப்பணியில் இருப்பது! ஆனாலும் இரவுப்பணி எனக்கு வேறொரு உலகம் போல இருக்கிற காரணத்தில் நெருக்கமாய் இருக்கிறது. தொடர்ச்சியாய் நின்ற நிலையிலேயே இணையத்தில் மேய்வதில் முதுகு வலியும் கால்வலியும் தாங்களும் இருக்கிறோம் என்று அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்கிறன. இருந்தால் என்ன வாசிக்காமல் இருக்க முடிவதில்லை,
இணையம் இல்லாமல் இனிமேல் முடியாது.

______________________________________________________________________________

வோல்ட்டர் வெற்றி வேல் படத்தை பார்க்கிற சந்தர்ப்பம் மற்றுமொரு முறையாக கடந்த இரவில் அறையிலிருப்பவர்கள் மூலம் கிடைத்தது(இந்தப்படத்தை ஊரில் முதலில் எங்கே பார்த்தேன் என்பது நினைவில் இல்லை ஆனால் நிச்சயமாய் இரவு பதினொரு மணிக்கு பின்னர் என்றுதான் நினைக்கிறேன்). அட தமிழ் சினிமா எவ்வளவு தூரம் வளந்திருக்கிறது இப்பொழுது. ஆனால் என்ன பி.வாசு இன்னும் அப்படியேதான் இருக்கிறார்.
சுகன்யா! ம்ம்ம்... மனதுக்குள் இருக்கிற பதின்மங்களின் ஆரம்பங்களில் பதிந்த உருவங்களில் சுகன்யாவினதும் ஒன்று.


ஒரு பாவாடை சூடும் பூந்தேரு
இது பூவாடை வீசும் பாலாறு!

________________________________________________________________________________

இப்பொழுது கணினியில் இருக்கிற படங்களில் அல்லது (f)பிகர்களில் ஒன்று...





கார்த்திகா என்னை கவர்ந்ததற்கு
காரணங்கள் வேறு சொல்ல வேண்டுமா?

கார்திகா என்கிற பெயரும்,பால்யங்களில் கார்த்திகா என்கிற ஒரு பெண் என் வீட்டுக்கெதிரில் இருந்ததும் மட்டுமல்ல.

_____________________________________________________________________________________


இப்பொழுது கேட்டக்கொண்டிருக்கிற அல்லது பார்த்துக்கொண்டிருக்கிற பாடல் காதல் வைபோகமே சுவரில்லாத சித்திரங்கள் படத்திலிருந்து. யாரு அந்த (f)பிகர் அல்லது யாரந்த நடிகை- இந்த கேள்வி வடகரை வேலன் அண்ணாச்சிக்கு.



__________________________________________________________________________


இந்த பதிவுக்கு என்ன தலைப்பு வைப்பதென்று தெரியாமல் ரொம்ப நேரம் குழம்பிக்கொண்டிருந்தேன் அதால் தலைப்புகளற்ற குறிப்புகள் என்று பெயர் வைத்திருக்கிறேன். தொடர்ந்தும் இப்படி கிறுக்குகிற ஆசை இருக்கிறது.
பொறுத்துக்கொள்க வலையுலகமே.