Monday, March 9, 2009

பேரின்ப நாயகியும் போலியும்...
சந்தர்ப்பம் கிடைத்தும் தவிர்த்துக்கொண்ட
பறங்கிப்பெண்ணைப்பற்றிய கனவுகள்
தூக்கம் கலைக்கிறது
சொற்படி கேளாத உடலை
சுய பலாத்காரம் செய்வதில்
தவறேதும் இல்லையே!


இதற்கு முன்னொன்று,

வெளிர் நீல நிற ஆடையில்
ஈரத்திட்டுக்களோடு கதவுதிறந்தவள்
கச்சைகளணியாத மார்புகள் அதிர
ஆச்சரியங்களோடு புன்னகைத்து...
எதிர்பாராத வருகையை கொண்டாடினாள்
மிக மெல்லிய இடைவெளியில்
கூந்தலின் ஈரம் கன்னங்களில் தெறிக்க
கன்னம் உரசி வரவேற்றவள்
மோகனம் நிறைந்த குரலில் கிசுகிசுத்தாள்

“என்ன அப்படிப்பார்க்கிறாய்”

பதில் சொல்லத்தெரியாமல்
மிக வெப்பமான மூச்சை வெளிவிட்டதில்
கிளுக்கென்று சிரித்து சொன்னாள்

“இப்பொழுதுதான் குளித்திருக்கிறேன்...”

எதிரெதிரே அமர்ந்து பேசிய
மத்தியான வேளை ரணம்
மிக நீளம்...

விடபெறுகையில்
தெரு முனை வரை வந்தவள்
புறப்படும் தருணத்தில் நிகழ்ந்த
சம்பிரதாய? தழுவலில் சொன்னாள்
“அப்படியொரு சந்தர்ப்பம் இருந்தால்
உனக்கு மட்டும்தான்...”


வேறொன்று,

புனிதப்பிம்பங்களின்...
போலியாயிருந்த நாளொன்றில்,
பின்பொரு நாளில் அவளை இழந்துவிட்டோமே
என்கிற தாபம் வரக்கூடாது என்பதாகிய
நண்பனின் கூற்றையேனும் பொய்யாக்கிவிடலாம்...


இந்தக்கவிதை ஒரு உண்மை
நான் ஒரு hypocrite!


பின் குறிப்புகள்:

\\
பேரின்ப நாயகி என்கிற பெயர் காப்புரிமை எடுக்கப்பட்டிருக்கிறது அத்தோடு அவளைப்பற்றிய பிம்பங்களை கற்பனை செய்வதும் உங்கள் உயிருக்கு ஆபத்தை கொண்டுவரக்கூடும் என்பது உறுதிப்படுத்தப்பட தகவலாய் இருக்கிறது.

\\
ஏறக்குறைய பதினோராயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று சொற்களில் இவ்வளவும் மட்டுமே இப்போதைக்கு வாசிக்க கிடைத்திருக்கிற எனக்கு நான்கு நாட்கள் தூக்கம் காணாமல் போயிருப்பதில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.

\\

இரண்டு முடிவிடங்களை கொண்ட இந்தக்கவிதைக்கு ஆரம்பத்தில் எழுதப்பட்டிருந்த தலைப்பு நான் ஒரு hypocrite!

16 comments:

Saravana Kumar MSK said...

நல்லா இருக்குங்க்னா..

Saravana Kumar MSK said...

ஆனாலும்

//புனிதப்பிம்பங்களின்...
போலியாயிருந்த நாளொன்றில்,//
இந்த வரிகள் அய்யனாரையும்

//பேரின்ப நாயகி என்கிற பெயர் காப்புரிமை எடுக்கப்பட்டிருக்கிறது அத்தோடு அவளைப்பற்றிய பிம்பங்களை கற்பனை செய்வதும்//
இந்த வரிகள் உரையாடலினியையும் நினைவுபடுத்தி செல்கிறது.
http://ayyanaarv.blogspot.com/2009/01/blog-post_07.html

yathra said...

நல்லா இருக்கு

தமிழன்-கறுப்பி... said...

Saravana Kumar MSK said...
ஆனாலும்

//புனிதப்பிம்பங்களின்...
போலியாயிருந்த நாளொன்றில்,//
இந்த வரிகள் அய்யனாரையும்

//பேரின்ப நாயகி என்கிற பெயர் காப்புரிமை எடுக்கப்பட்டிருக்கிறது அத்தோடு அவளைப்பற்றிய பிம்பங்களை கற்பனை செய்வதும்//
இந்த வரிகள் உரையாடலினியையும் நினைவுபடுத்தி செல்கிறது.
http://ayyanaarv.blogspot.com/2009/01/blog-post_07.html
\\

அய்யனாரின் சொற்கள் எனக்குள் இருக்கலாம்,நன்றி அய்யனார்.

இந்த சொற்களை நான் எழுதியது ஒரு சிறி குறிப்பிலிருந்து எழுதியதுதான். இதன் ஆரம்ப வடிவம் இப்படித்தான் இருந்தது கொஞ்சம் உக்கிரமா (புரிகிறது போல என்றால் சுகுணாதிவாகர் வாடை) இருக்கும்..

சந்தர்ப்பம் கிடைத்தும் தவறவிட்ட பறங்கிப்பெண்ணைப்பற்றிய சிந்தனைகளில் 'குறி'ப்பிட்ட இடங்களில் ரத்தம் குவிகிறது அப்படி ஆரம்பிக்கும்...

அத்தோடு இந்த "புனிதப்பம்பங்களின்" என்ற வரியையும் கடைசியாகத்தான் சேர்த்தேன் போலியாயிருந்த நாளொன்றில் என்றுதான் அந்தத வரிகளும் ஆரம்பித்திருக்கும்...

பேரின்ப நாயகி என்கிற பெயரை வேறொரு நளினமான பகிர்தலுக்கு வைக்கலாம் என்கிற எண்ணமே எனக்கிருந்தது பின்னர் இப்படி தவறவிட்ட அல்லது மறந்து போன சொற்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதாலும், அதனை மனதிற்குள் வந்து படித்தவர்களாய் எழுதிவிட நிறையப்பேர் இருப்பதாலும் எழுதிவிட்டேன்...


மற்றப்படி...
சும்மா ஒரு பில்டப்புக்குதானே பின்குறிப்புகள்... :)

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி MSK

அய்னாரிடம் பேச நிறைய இருக்கிறது அனால் அவர்தான் பிடிகுடுக்க மாட்டேங்கிறார்..

தமிழன்-கறுப்பி... said...

இன்னொன்றும் சொல்ல மறந்து விட்டேன்...

விஜயசாரதி said...

அற்புதமான சொல்லாடல். அசத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் பேரின்ப நாயகி தொடரட்டும்.

புதியவன் said...

கவிதை நல்லா இருக்கு தமிழன்...வார்த்தைப் பிரயோகங்கள் வியக்க வைக்கின்றன...

நட்புடன் ஜமால் said...

ஐயா! தமிழரே

முதன் முதல் வந்தேன்

கவிதை நல்லாயிருக்குன்னு மட்டும் இப்போ சொல்லிக்கிறேன்.

பேரின்ப நாயகி - யப்பா!

இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுகில்ல

அருண்மொழிவர்மன் said...

ஏற்கனவே உரையாடலினி மனசை அதிரவைத்துக்கொண்டிருக்க இப்ப புதிதாக பேரின்ப நாயகி வேறா??

கமல் said...

ம்...நல்லாத் தான் அனுபவிச்சு எழுதுறாங்கப்பா.....

ஹேமா said...

தமிழன் நான் முதல்நாளே கவிதையைப் பாத்திட்டேன்.(என் சித்தி பெயர் பேரின்பநாயகி.ஞாபகம் வந்திட்டுது.)ஆனா கவிதை விளங்கியும் விளங்காமலும்.
அதாலதான் ஒண்டும் சொல்லாம போய்ட்டேன்.இப்பவும் அப்பிடியேதான்!

தமிழன்-கறுப்பி... said...

நன்றி ஜமால்...
நன்றி அருண் - அப்படியும் இருக்கலாம்...:)

நன்றி கமல்-அனுபவிச்சு எழுதறதெண்டா என்ன ;)

வாங்கோ ஹேமா..
சொல்லுங்கோ பெயரை மாத்த சொல்லி :)

Saravana Kumar MSK said...

அட. எதுக்குப்பா இவ்ளோ பெரிய பின்னூட்டம் எனக்கு.

என் வாசிப்பு ரொம்ப குறைவு.. ரொம்ப பாதித்தது அய்யனார்.. இதுதான் காரணம் என் புரிதலுக்கு..

தமிழ்நதி said...

ம்... எனக்கும் அய்யனார் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு சாயலொற்றுமை இருவருக்கிடையிலும் இருக்கிறது. 'சாயலற்றதாக இருக்க கண்டுபிடிக்க வேண்டும் புதியதொரு மொழியை'என்று நான்தான் எழுதியிருக்கிறேன். கல்யாண்ஜியின் கவிதையை மீண்டுமொரு முறை ஞாபகப்படுத்துகிறேன். 'கைப்பிடி நீர்'என்று நினைக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கறுப்பியின் நினைவுகளோடு:)

தமிழன்-கறுப்பி... said...

@ சும்மாதான் MSK,

வாங்கோ தமிழ்நதி...

உங்ளோடும் நிறையக்கதைக்க இருக்கிறது சாயலற்றதாக இருக்க புதிய மொழியைத்தான் கண்டறிய வேண்டும். உண்மையில் எனக்குள் அலைகிற அல்லது உருவாகிற சொற்களை பதிவுகளில் படிக்கத்தொடங்கிய பின்னரே நானும் ஏதாவது சொல்லலாம் போல என்று ஆரம்பித்தேன்...

அய்யனாரின் சாயல், அதை நான் அய்யனாரிடமே சொல்லி யிருக்கிறேன் அவருக்கும் எனக்கும் பல விசயங்கள் ஒரே சாயல்களில் இருப்பதாக....

\\
தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கறுப்பியின் நினைவுகளோடு:)
\\

கறுப்பி...! ம்...

சிவா.. said...

மிக அருமையான கற்பனை....உண்மையிலேயே என்னை ரணகள படுத்திவிட்டது...