Tuesday, March 24, 2009

தலைப்புகளற்ற குறிப்புகள் - 24-03-09

\\
இலங்கையும் அதன் நிஜங்களும் எதிரே இருக்கிறவர்களை கொலை செய்கிற வேகம் ஒன்றை கொடுத்திருந்தது கடந்த மாதத்தின் வாரங்களில். மிகக்கடினப்பட்டு அடக்கி க்கொண்டேன். இன்னும் சில காலம் வாழ வேண்டியிருக்கிறது. எந்த உணர்வுகளையும் கடந்து போக பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லையேல் சில இடங்களில் தேங்கி விடகக்கூடும் வாழ்ககை. இதே வரிகளை இதுவரை எழுதாத கடிதத்தில் வேறுவிதமாய் எழுதியதாக நினைவு.


\\
இந்த வருடம் ஊருக்கு போவதாக இருந்தேன் போகப்பிடிக்கவும் இல்லை, போக முடியவும் இல்லை. வருகிற வருடம் என்று முடிவாகி இருக்கிறது பார்க்கலாம். இரண்டாயிரத்துப்பத்தில் பெரிய மாற்றங்கள் அனேகம் நிகழக்கூடும்.


\\
பாடல்கள் பற்றிப்பேசுவது பேசுவது என்று ஒரு வருடமாக சொல்லிக்கொண்டிருக்கிறேன் பேசவே இல்லை. பாடல்களை பற்றி பேச ஆரம்பித்தால் நிறுத்திக்கொள்ள முடியாத அனளவுக்கு பேசலமோ என்பதுபோல விருப்பப் பட்டியலும் நினைவுகளும் தொடர்ச்சியான உரையாடலுக்கு வழி செய்யக்கூடும் இருந்தும் இன்னமும் எந்தப்பாடல் பற்றியும் எழுதவில்லை. ஒருவேளை அவற்றை கேட்டுணர மட்டும்தான் முடிகிறதோ என்னவோ.ஒரு சில பாடல்களையேனும் பாடிவிட வேண்டும் இல்லை பேசி விடவேண்டும்.


\\
தோழி ஒருத்திக்கு எழுதிய மின்னஞ்சல் ஒன்றிலிருந்து...

உன்
கலைந்த கூந்தல்களில்
கட்டுண்டு கிடக்கிறது மனம்
விடுதலை செய்தென்னை
சிறையெடுத்துக்கொள்...


\\
இப்பொழுது கணினியில் இருக்கிற படம் அல்லது ஒரு (f)பிகர்..
தமனாவை(படத்தை )தரவிறக்கி பல நாட்களாகிறது. சில எழுதப்படாத சொற்களுக்கு பொருத்தமாய் இருக்குமென்கிற யோசனையில் சேமித்த பல படங்களில் இதுவும் ஒன்று. அந்த சொற்கள் இன்னமும் எழுதப்படவில்லை இனிமேல் அவை எழுதப்படலாமா என்பதும் தெரியவில்லை.

\\
ஓரு கேள்வி;
பொம்மலாட்டம் படத்தில் அர்ஜீனின் காதலியாக வருகிற பெண் நானாபட்டேகரிடம் கொடுக்கிற கவிதைப் புத்தகத்துக்கு என்ன பெயர்.

11 comments:

நசரேயன் said...

//உன்
கலைந்த கூந்தல்களில்
கட்டுண்டு கிடக்கிறது மனம்
விடுதலை செய்தென்னை
சிறையெடுத்துக்கொள்...//

முதல் வகுப்பு கொடுப்பாங்களா?

ஆயில்யன் said...

வால் பேப்பர் விசயத்தில் நாம ரெண்டு பேருமே ஒரே எண்ண ஓட்டத்தில இருக்கோம் பாஸ்!

சூப்பர் ஃபிகர்!

சூப்பரூ :))))

தமிழ் பிரியன் said...

முத்திப் போன கேஸூங்க தான் இது மாதிரி வால் பேப்பர் எல்லாம் வச்சு இருப்பாங்களாம்..;-)

yathra said...

குறிப்புகள் நன்றாக இருக்கிறது, தொடருங்கள்.

ஹேமா said...

//இந்த வருடம் ஊருக்கு போவதாக இருந்தேன் போகப்பிடிக்கவும் இல்லை, போக முடியவும் இல்லை. வருகிற வருடம் என்று முடிவாகி இருக்கிறது பார்க்கலாம். இரண்டாயிரத்துப்பத்தில் பெரிய மாற்றங்கள் அனேகம் நிகழக்கூடும்.//

தமிழன் என் நிலைமையும் இதேதான்.பார்ப்போம்.மிஞ்சியிருக்கும் எம் சொந்தங்களை முடிந்தால்..!

கலை - இராகலை said...

//
இந்த வருடம் ஊருக்கு போவதாக இருந்தேன் போகப்பிடிக்கவும் இல்லை, போக முடியவும் இல்லை. வருகிற வருடம் என்று முடிவாகி இருக்கிறது பார்க்கலாம். இரண்டாயிரத்துப்பத்தில் பெரிய மாற்றங்கள் அனேகம் நிகழக்கூடும்.//

மாற்றம் நல்ல மாற்றமாக இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய அவா!

நட்புடன் ஜமால் said...

\\உன்
கலைந்த கூந்தல்களில்
கட்டுண்டு கிடக்கிறது மனம்
விடுதலை செய்தென்னை
சிறையெடுத்துக்கொள்..\\

இது ஜூப்பரு

கமல் said...

உன்
கலைந்த கூந்தல்களில்
கட்டுண்டு கிடக்கிறது மனம்
விடுதலை செய்தென்னை
சிறையெடுத்துக்கொள்...//

கவிதை மொழிகளின் வண்ண மயம்....குறிப்புக்கள் அனைத்தும் அருமை.....

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதல் இரண்டு குறிப்புகள் நெகிழ்த்தியது.

கவிதை நன்றாக இருந்தது.

கடைசிகள் :)-

தமிழன்-கறுப்பி... said...

@ நன்றி நசரேயன்

@ ஆயில்யன்-ஆமா பாஸீ

@ தமிழ் பிரியன்-தல இது நியாயமா?

@ நிஜமாவா யாத்தரா...நன்றி :)

@ நன்றி ஹேமா..

@ நன்றி கலை

எல்லோரும் இந்த மாற்றத்தை வேற விதமாத்தான் புரிஞ்சிருக்காங்க...

இலங்கையாவது திருந்தறதாவது...

@ நன்றி கமல்

@ நன்றி ஜமால்..

@ நன்றி அமித்து அம்மா

தமிழ்நெஞ்சம் said...

அந்த போட்டோ நல்லா இருக்கு.