Friday, March 13, 2009

ரணகளக் குறிப்புகள்! அல்லது கொட்டாவிகள்...

\\
தன்மானத் தமிழன் நீ
சும்மா இருத்தல் தகுமோ
கட்டாயம் புலம்புதலுன் வீரம்!

\\
மாவீரன் யாரோ என்றால்
மரணத்தை வென்றுள்ளோர்கள் - இன்னமும்
உரிமையை அல்ல!

\\
எது உன் நாடு
ஈழம் என்திரு நாடு
உயிரை கையில் எடு
எந்த திக்கிலும் ஓடு
ஏந்திடு கையில் திருவோடு!

\\
இக்கணம் என்பது மெய்
செய் அல்லது பொய்.

\\
இனம் மதம் மொழி
விளங்காட்டி வரும் தலைவலி

\\
சுயம் நிர்ணயம் உரிமை
சமன் அடிமை!

\\
அதிகப்பிரசங்கி,
அமெரிக்க நாட்டு வங்கி,
ஆகிப்போச்சு ஆப்பிழுத்த மங்கி!

\\
கடமை நேர்மை உழைப்பு
கண் போல
காதல் அரசியல் இலக்கியம்-அதில்
மண்போல!


\\
இருட்டில் புணர்கிற பெண்
எந்த பாஷை பேசினால் என்ன
விடிந்ததும் நான் தமிழன்!

\\
ராஜ் மியூஸிக்ஸ பூர்ணி
இசையருவி நிஷா
இன்னும் பல பிகர்
நெக்ஸ்ட் ஸ்வீட் கோலர்
ஹலோ..ஹலோ...!
லோ..லோ..லோ...

\\
ஞானி சாரு ஜெமோ
கலைஞர் காமம் கடவுள்கள்
தமிழ்மணம் பதிவுகள் கொட்டாவிகள்...

\\
எழுதுவதெல்லாம் புனைவு
எழுதுபவன் செய்வது சுயபுணர்வு
எழுத்துக்கும் சுயத்துக்கும் வெகுதொலைவு!

\\
வயிற்றுப்பசிக்கு சோறு
வாழ்தல் என்பது வேறு
விடிகையிலும் வரும் சாவு!

\\
சிகரெட் வைன் செக்ஸ்
இவை மூன்றொடு செய் புனைவு
இதை எழுதுதல் ஒரு இசம்
எழுதியதை படிப்பது விசம்!

\\
எழுதுதல் என்பது கலை
என்னுடைய பதிவுகள் கொலை
எழுதியதை படித்தல் தற்கொலை!

21 comments:

Thamiz Priyan said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல..

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\\
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல..
\\
யோவ் இதுதான்யா இலக்கியம் முடியலங்கிற... :)

தமிழ் மதுரம் said...

இருட்டில் புணர்கிற பெண்
எந்த பாஷை பேசினால் என்ன
விடிந்ததும் நான் தமிழன்!//

நல்லாத் தானே இருந்தீங்கள்? என்ன திடீரென்று இப்படி ஆச்சு??

என்னமா யோசிக்கிறீங்கள்?
ஆங்,......குசும்பு....

தமிழன்-கறுப்பி... said...

கமல் said...
\
இருட்டில் புணர்கிற பெண்
எந்த பாஷை பேசினால் என்ன
விடிந்ததும் நான் தமிழன்!//

நல்லாத் தானே இருந்தீங்கள்? என்ன திடீரென்று இப்படி ஆச்சு??

என்னமா யோசிக்கிறீங்கள்?
ஆங்,......குசும்பு....
\\

கமல் இதை வேறுமாதிரியும் எழுதியருக்கிறேன் முதலில் தோன்றியது இதுதான் என்பதில் இதனை இப்பொழுது பதிவாக்கி இருக்கிறேன்..

சின்னச்சின்ன வார்த்தைகளில் அரசியல் செய்வதற்கு பழகிக்கொண்டிருக்கிறேன்...

;)..

Thamiz Priyan said...

ஆங்..இதுதான் இலக்கியமா? இம்புட்டு நாளா தெரியாம போய்டுச்சே.. ;-)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\\
ஆங்..இதுதான் இலக்கியமா? இம்புட்டு நாளா தெரியாம போய்டுச்சே.. ;-)
\\

;)
அடிச்சு வுடணும்யா அப்பதான் நம்மளுக்கும் தெரியும்னு நம்புவாய்ங்க...
கடை காத்து வாங்க கூடாதுல்ல :)

Sanjai Gandhi said...

என்ன அண்ணாத்த இது? பின்னூட்டத்துக்கு பதில் சொல்லி இருக்கிற மாதிரியே இருக்கு.. :))

ஹேமா said...

தமிழன் உலகத்தையே வெறுக்கிற மாதிரி.உலகம் அதன் செய்ற்பாடுகள் அத்தனையிலும் ஒரு வெறுப்பு-விரக்தி.என்ன செய்யலாம் தமிழன்.அப்படியாய் மாறி வரும் உலகில் எம் காலம் வரை காலத்தைக் கடத்தித்தானே ஆகவேணும்.

ஹேமா said...

தமிழன் உங்கள் எழுத்துக்கள் கொலை இல்லை.உற்று யோசிக்க வைக்கும் கலை.

யாத்ரா said...

இருட்டில் புணர்கிற பெண்
எந்த பாஷை பேசினால் என்ன
விடிந்ததும் நான் தமிழன்!

எழுதுவதெல்லாம் புனைவு
எழுதுபவன் செய்வது சுயபுணர்வு
எழுத்துக்கும் சுயத்துக்கும் வெகுதொலைவு

சிகரெட் வைன் செக்ஸ்
இவை மூன்றொடு செய் புனைவு
இதை எழுதுதல் ஒரு இசம்
எழுதியதை படிப்பது விசம்!

\\
எழுதுதல் என்பது கலை
என்னுடைய பதிவுகள் கொலை
எழுதியதை படித்தல் தற்கொலை!

மிகவும் ரசித்தேன், எல்லாவற்றையும் தான், குறிப்பாக மேற்கண்ட வரிகள் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டது.

Anonymous said...

சூப்பர்.. அடி பின்னியிருக்கீங்க. நிஜமாவே.. பிடிச்சிருந்திச்சு சில வரிகள்.. ம் ம் .. நடக்கட்டும் .

தமிழன்-கறுப்பி... said...

SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...
\\
என்ன அண்ணாத்த இது? பின்னூட்டத்துக்கு பதில் சொல்லி இருக்கிற மாதிரியே இருக்கு.. :))
\\

அப்படியும் வச்சுக்கலாம் மாம்ஸ்...

தமிழன்-கறுப்பி... said...

@ நன்றி ஹேமா...
@ நன்றி யாத்தரா...

வருகைக்கும் பகிர்வுக்கும்...!

தமிழன்-கறுப்பி... said...

த.அகிலன் said...
\\
சூப்பர்.. அடி பின்னியிருக்கீங்க. நிஜமாவே.. பிடிச்சிருந்திச்சு சில வரிகள்.. ம் ம் .. நடக்கட்டும் .
\\

வாங்கோ...வாங்கோ!!
முதல் பின்னூட்டம்...
சந்தோசம் அகிலன்!

சும்மா தெரியாதே உப்பிடித்தான்.. ;)

நன்றி வருகைக்ககும் பகிர்வுக்கும்..!

MSK / Saravana said...

தமிழன்..
செம.. செம..

மேவி... said...

"ஹேமா said...
தமிழன் உங்கள் எழுத்துக்கள் கொலை இல்லை.உற்று யோசிக்க வைக்கும் கலை."

oru periya repeat...
nalla ithu ppa

அருண்மொழிவர்மன் said...

அட்டகாசமான எழுத்து

வாழ்த்துக்கள்

யாழினி said...

கவிதை அட்டகாசம்!

சென்ஷி said...

கலக்குறடா மாப்பி :)))

சென்ஷி said...

//இருட்டில் புணர்கிற பெண்
எந்த பாஷை பேசினால் என்ன
விடிந்ததும் நான் தமிழன்!/

செருப்படி! :))

சென்ஷி said...

//கமல் இதை வேறுமாதிரியும் எழுதியருக்கிறேன் முதலில் தோன்றியது இதுதான் என்பதில் இதனை இப்பொழுது பதிவாக்கி இருக்கிறேன்..

சின்னச்சின்ன வார்த்தைகளில் அரசியல் செய்வதற்கு பழகிக்கொண்டிருக்கிறேன்...

;)..//

:-)))

டேய்...... இலக்கியவாதின்னாலே அரசியல்வாதி மாதிரி ஆகிப்போச்சுல்ல உனக்கு :-))