முன் குறிப்பு:
எழுதுவதற்கு...
எதுவும் தோன்றவில்லை
அவள் நினைவுகளைத்தவிர!
உன் கண்களிரண்டில்
துடிக்கிறதெனது உயிர்...
உன் பார்வைகள் போதுமெனக்கு!
நீ காத்திருக்கிறாய் என்றால்
எனக்கு முன்னால்
என் உயிரை அனுப்புகிறேன்
உன் நலம் விசாரிக்க!
உன்னைச்சுமந்து வருகிற கர்வத்தில்
அழகாகிற்று இதுவும்!
அப்படி பார்க்காதே...
இப்படி சித்திர வதை செய்யாதே...
என் இதயம் பலவீனமானது!
அழகு என்பதற்கு
உன் சிரிப்பென்ற...
மறுபெயரும் உண்டு!
ஏற்கனவே சொல்லி விட்டேன்
என் இதயம் பலவீனமானது என்பதை!
உன்னைச்சொல்லி குற்றமில்லை
உன்னை அழகாய் அனுப்பி,
என்னை சாகடிக்கிற...
பிரம்மனுடன் இருக்கிறது வழக்கு!
ஏனடி ஒளிகிறாய்...
நான் உனக்குள்தானே இருக்கிறேன்!
முக்கிய குறிப்பு:
படங்கள் பதிவுக்கு
வார்த்தைகள் எல்லாம் தேவதைக்கு...!
59 comments:
//உன் கண்களிரண்டில்
துடிக்கிறதெனது உயிர்...
உன் பார்வைகள் போதுமெனக்கு!//
அற்புதம்.
//ஏனடி ஒளிகிறாய்...
நான் உனக்குள்தானே இருக்கிறேன்!//
இதுவும்.
//முக்கிய குறிப்பு:
படங்கள் பதிவுக்கு
வார்த்தைகள் எல்லாம் தேவதைக்கு...!//
சொல்லாமலே புரிந்தது :)
//உன் கண்களிரண்டில்
துடிக்கிறதெனது உயிர்...
உன் பார்வைகள் போதுமெனக்கு!//
superp!
//எழுதுவதற்கு...
எதுவும் தோன்றவில்லை
அவள் நினைவுகளைத்தவிர!//
:)
ரொம்ப நல்லா எழுதுறீங்க!
\\ஏனடி ஒளிகிறாய்...
நான் உனக்குள்தானே இருக்கிறேன்!\\
அழகு வரிகள்:))
பொருத்தமான படங்களுடன்.....முத்தான வரிகளுடன்.....கவிதை மிக மிக அழகு!!
\உன் கண்களிரண்டில்
துடிக்கிறதெனது உயிர்...
உன் பார்வைகள் போதுமெனக்கு!\\
இந்த வரிகள் ரொம்ப நல்லாயிருக்கு தமிழன்!!
\\எழுதுவதற்கு...
எதுவும் தோன்றவில்லை
அவள் நினைவுகளைத்தவிர!\\
நீங்கள் சுமக்கும் 'நினைவுகள்' பிறப்பித்த கவிதை வரிகள் அனைத்தும் மிக அற்புதம்!
கலக்கீடீங்க போங்க..
சுவாதி போட்டோவா??
கவிதைகளெல்லாம் அருமை.. காதல் மயம்..
//உன் கண்களிரண்டில்
துடிக்கிறதெனது உயிர்...
உன் பார்வைகள் போதுமெனக்கு!//
அருமை..
//உன்னைச்சொல்லி குற்றமில்லை
உன்னை அழகாய் அனுப்பி,
என்னை சாகடிக்கிற...
பிரம்மனுடன் இருக்கிறது வழக்கு!//
கலக்கல்..
:)))
கவுஜ... கவுஜ... கவுஜ.... கலக்கலா இருக்குது....
:-(
கவிதைகள் அருமை!
இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான கவிதைகளுக்கு நடிகையின் படம் தேவையற்ற ஒன்றுதான்.
ஆனாலும் அந்தப் படங்களை தேர்வு செய்ததில் ரசனையிருக்கிறது!
//உன் கண்களிரண்டில்
துடிக்கிறதெனது உயிர்...
உன் பார்வைகள் போதுமெனக்கு!//
வரிகள் புகைப்படம் இரண்டையும் ரசித்தேன் நண்பா!
உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது எனக்குள் மீதி இருக்கும் காதல் விழித்துக்கொள்கிறது.
//நீ காத்திருக்கிறாய் என்றால்
எனக்கு முன்னால்
என் உயிரை அனுப்புகிறேன்
உன் நலம் விசாரிக்க! //
அருமை :)
ஆமாம் தமிழன் இந்த டெலுகு பிகரு அவ்ளோ நல்லாவா இருக்கு!
ச்சே ச்சே எனக்கு புடிக்கலை!
கவிதைகள் எல்லாம் அருமை, அதை விட இந்த கடைசி டிஸ்கி நச்
//படங்கள் பதிவுக்கு
வார்த்தைகள் எல்லாம் தேவதைக்கு...!//
கலக்குங்க :-))
கவிநயா said...
\
//உன் கண்களிரண்டில்
துடிக்கிறதெனது உயிர்...
உன் பார்வைகள் போதுமெனக்கு!//
அற்புதம்.
//ஏனடி ஒளிகிறாய்...
நான் உனக்குள்தானே இருக்கிறேன்!//
இதுவும்.
//முக்கிய குறிப்பு:
படங்கள் பதிவுக்கு
வார்த்தைகள் எல்லாம் தேவதைக்கு...!//
சொல்லாமலே புரிந்தது :)
\\\
வாங்க கவிநயா நன்றி...
kumar said...
\
//உன் கண்களிரண்டில்
துடிக்கிறதெனது உயிர்...
உன் பார்வைகள் போதுமெனக்கு!//
superp!
\
நன்றி...
@ வாழ்க்கை said...
:)
நன்றி...
Divya said...
\\ஏனடி ஒளிகிறாய்...
நான் உனக்குள்தானே இருக்கிறேன்!\\
அழகு வரிகள்:))
பொருத்தமான படங்களுடன்.....முத்தான வரிகளுடன்.....கவிதை மிக மிக அழகு!!
\
நன்றி மாஸ்டர்...:)
Divya said...
\உன் கண்களிரண்டில்
துடிக்கிறதெனது உயிர்...
உன் பார்வைகள் போதுமெனக்கு!\\
இந்த வரிகள் ரொம்ப நல்லாயிருக்கு தமிழன்!!
\\\
காதல் கண்கள் அப்படித்தானே இருக்கின்றன...திவ்யா...
(நான் சுவாதியின் கண்களை சொல்லவில்லை)
Divya said...
\
\\எழுதுவதற்கு...
எதுவும் தோன்றவில்லை
அவள் நினைவுகளைத்தவிர!\\
நீங்கள் சுமக்கும் 'நினைவுகள்' பிறப்பித்த கவிதை வரிகள் அனைத்தும் மிக அற்புதம்!
\
ஏதோ நினைவுகளில் சும்மா தமிழில் தட்டச்சிக்கொண்டிருந்தேன் ஒரு பதிவு போடலாம்னா என்ன எழுதறதுன்னு தெரியலை அப்பதான் சுவாதியோட படங்கள் சேவ் பண்ணி இருந்தது ஞாபகம் வந்திச்சு டைப்பண்ணி இருந்த வரிகளை பாத்தேன் அதுல பொருந்தறமாதிரி இருந்த வரிகளை
படங்களோடு சேர்த்து போட்டுருக்கேன்...
@ சரவணகுமார்...
இது சும்மா ஏதோ நினைவுகளில் எழுதியது...:)
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்...
ஜி said...
\
:)))
கவுஜ... கவுஜ... கவுஜ.... கலக்கலா இருக்குது....
\
வாங்க ஜி...
கவுஜ அதான் உண்மை..
நன்றி...:)
@பரிசல்காரன்...
என்ன சிரிப்பு...:)
\
கவிதைகள் அருமை!
இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான கவிதைகளுக்கு நடிகையின் படம் தேவையற்ற ஒன்றுதான்.
ஆனாலும் அந்தப் படங்களை தேர்வு செய்ததில் ரசனையிருக்கிறது!
\
திவ்யாக்கு சொன்ன பதில்தான் பரிசல் அண்ணே...
படங்கள் வெறும் பதிவுக்காகவும் குறிப்பாக மங்களூர் சிவாவுக்காகவும் மட்டுமே...:)
r.selvakkumar said...
\
உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது எனக்குள் மீதி இருக்கும் காதல் விழித்துக்கொள்கிறது.
\
நன்றி செல்வக்குமார்..
காதல் எல்லோருக்கும் இருப்பதுதானே...!
ஆயில்யன் said...
//நீ காத்திருக்கிறாய் என்றால்
எனக்கு முன்னால்
என் உயிரை அனுப்புகிறேன்
உன் நலம் விசாரிக்க! //
அருமை :)
\
நன்றி அண்ணன்...:)
ஆயில்யன் said...
\
ஆமாம் தமிழன் இந்த டெலுகு பிகரு அவ்ளோ நல்லாவா இருக்கு!
ச்சே ச்சே எனக்கு புடிக்கலை!
\
யாரங்கே ஆயில்யனை சிறையிலடையுங்கள் !!!
:)
(படங்கள் எல்லாம் பதிவுக்குன்னு போட்டிருக்கேனே அது சிவாவுக்காக போட்டது அண்ணே...)
Divyapriya said...
\
கவிதைகள் எல்லாம் அருமை, அதை விட இந்த கடைசி டிஸ்கி நச்
//படங்கள் பதிவுக்கு
வார்த்தைகள் எல்லாம் தேவதைக்கு...!//
கலக்குங்க :-))
\
நன்றி திவ்யப்பிரியா...
ஆமா வார்த்தைகள் எல்லாம் ஒரு தேவதைக்குத்தான் எழுதினேன் அது யாருன்னுதான் இன்னும் தெரியலை
பிரமாதம்.
http://redsunrays.blogspot.com/
//முக்கிய குறிப்பு:
படங்கள் பதிவுக்கு
வார்த்தைகள் எல்லாம் தேவதைக்கு...!//
ஆகட்டும் ஆகட்டும். வரிகளை வாசிக்கும்போதே புரிகிறது.
Superb post thamilan:)
நல்லா இருக்கு தமிழன்...
எல்லா வரிகளும்.. வரிகளுக்குரிய படங்களும்....
எப்டி தான் யோசிக்கிறாங்களோ.. எல்லா வரிகளும் அருமை தமிழன்.
//ஏனடி ஒளிகிறாய்...
நான் உனக்குள்தானே இருக்கிறேன்!//
இது டாப்பு.. :)
கவிதை சூப்பர்
படங்கள் சூப்பரோ சூப்பர்
/
எழுதுவதற்கு...
எதுவும் தோன்றவில்லை
அவள் நினைவுகளைத்தவிர!
/
அதை எழுதுப்பா போதும்
:))
/
உன் கண்களிரண்டில்
துடிக்கிறதெனது உயிர்...
உன் பார்வைகள் போதுமெனக்கு!
/
இப்பிடி இளிச்ச வா பயலா இருந்திடாதப்பு!!!
:)))
/
நீ காத்திருக்கிறாய் என்றால்
எனக்கு முன்னால்
என் உயிரை அனுப்புகிறேன்
உன் நலம் விசாரிக்க!
/
கொய்யாஆஆஆலே
உயிரை விட்டு அனுப்பிபுட்டா வேற எவனாச்சும் பிக்கப் பண்ணிகிட்டு போயிடுவான்யா
:))
/
அப்படி பார்க்காதே...
இப்படி சித்திர வதை செய்யாதே...
என் இதயம் பலவீனமானது!
/
இதே டயலாக்க எந்த புள்ளைய பாத்தாலும் சொல்லுதியே மக்கா நீ ரொம்ப நல்லவந்தான்யா
:))))))))
/
அழகு என்பதற்கு
உன் சிரிப்பென்ற...
மறுபெயரும் உண்டு!
/
இப்பிடியே ஏத்தி விட்டு ஏத்தி விட்டு உடம்ப ரணகளமாக்கிக்காத மக்கா அப்பிறம் அவ சொல்லுவா
லூசுப்பய என்பதற்கு
உன்பெயரும்
மறு பெயர்தான்
அப்படின்னு!! சூதனமா இருந்துக்க ராசா!!
:)))))
/
உன்னைச்சொல்லி குற்றமில்லை
உன்னை அழகாய் அனுப்பி,
என்னை சாகடிக்கிற...
பிரம்மனுடன் இருக்கிறது வழக்கு!
/
அதுக்கு பேசாம அவகூடவே மல்லுகட்டலாம்
என்ன பையனோ நீ போய்யா
:))))))))))))
'முக்கி'ய குறிப்புகள் ஜூப்பர்
//அப்படி பார்க்காதே...
இப்படி சித்திர வதை செய்யாதே...
என் இதயம் பலவீனமானது//
இப்படி கவிதை கூறியே எல்லோரையும் கவர்ந்து விடுறீங்க :-)
ஆகா..ஆகா... :P
முதன் முறையாக வந்தேன்... என்னால் முட்டையிட முடியாது ஆனால் முட்டையை ருசிக்கத் தெரியும்... அது போல கவிதை எழுத தெரியாது ஆனால் ...
மிக அருமையாக உள்ளது! வாழ்த்துக்கள்! :)
சார் நீங்க எழுதின கவிதை வரிகளா என் நண்பன் என்னிடம் பகிர்ந்துக் கொண்டது???கவிதை முழுவதுமே ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க :-)
உங்க வலைதள முகவரி சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
50.. :-)
//எழுதுவதற்கு...
எதுவும் தோன்றவில்லை
அவள் நினைவுகளைத்தவிர!//
நோ ஃபீலிங்ஸ் ஆப் இந்தியா. என்னை நெனச்சு எழுதுங்கோ. :-P
//உன் கண்களிரண்டில்
துடிக்கிறதெனது உயிர்...
உன் பார்வைகள் போதுமெனக்கு!//
என் கண்களுக்கு அவ்வளோ பவரா? ;-)
//நீ காத்திருக்கிறாய் என்றால்
எனக்கு முன்னால்
என் உயிரை அனுப்புகிறேன்
உன் நலம் விசாரிக்க! //
address நோட் பண்ணிக்கோங்க..
துபாய் பஸ் ஸ்டாண்டு,
துபாய் குறுக்கு சந்து,
துபாய் மெயின் ரோடு,
துபாய்..
எப்போ வருவீங்க? :-)
//உன்னைச்சுமந்து வருகிற கர்வத்தில்
அழகாகிற்று இதுவும்!/
எதுவும்?
//அப்படி பார்க்காதே...
இப்படி சித்திர வதை செய்யாதே...
என் இதயம் பலவீனமானது!
//
ஆம்புலண்ஸுக்கு கால் பண்ணவா? :-)
//அழகு என்பதற்கு
உன் சிரிப்பென்ற...
மறுபெயரும் உண்டு!//
அதுக்குதான் அப்பவே தாமரை உன் சிரிப்புக்கும்ன்னு பாட்டு எழுதுனாங்களோ? :-)
//ஏற்கனவே சொல்லி விட்டேன்
என் இதயம் பலவீனமானது என்பதை!//
கண்ஃபார்ம்ட்.. இப்பவே 999க்கு கால் பண்றேன். :-)
//உன்னைச்சொல்லி குற்றமில்லை
உன்னை அழகாய் அனுப்பி,
என்னை சாகடிக்கிற...
பிரம்மனுடன் இருக்கிறது வழக்கு!//
எத்தனை வருட வாய்தா? :-)
//ஏனடி ஒளிகிறாய்...
நான் உனக்குள்தானே இருக்கிறேன்!//
ஆஹா... அவ்வ்வ்வ்வ்....
Post a Comment