Friday, July 18, 2008

அவளும் அவள் சார்ந்த நினைவுகளும்...!சில மாதங்களுக்குப் பிறகு கிடைத்த ஒரு விடுமுறை நாளின் அறையில் யாருமற்றதாகிய தனிமையில் தூக்கம் கலைந்து விழிக்கையில் கண்களுக்கெதிரே அறையின் வலது பக்க மென் பலகைச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த வினாடிகளின் முள்ளற்ற கடிகாரம் பத்து மணியை கடந்து இருபத்தாறாவது நிமிடத்தின் புள்ளியை எட்டியிருந்தது. எழுந்து உட்கார்ந்து உள்ளங்கைகளை உரசி அந்த மெல்லிய வெப்பத்தோடு கண்களை கசக்கி பார்வைய சரிசெய்து கொண்டேன். மீதமிருந்த தூக்கத்தை விரட்டுவதற்கு எனக்கு பிடித்தமான கறுப்புத் தேநீர் கட்டாயமாகப்பட்டது!அது இல்லாமல் என்னுடைய நாட்கள் தொடங்கியதுமில்லை முடிந்ததுமில்லை!இதைப்பற்றி அம்மா பதினோராவது முறையாக பேசியிருக்கிற பெண் என்ன நினைப்பாள்...!? படிப்பதற்கு எதுவும் இல்லாமல் எனக்கு தூக்கம் வராததும், படுக்கைக்கு போவற்கு முன்னரும் ஒரு தேநீர் பருகுவது என் வழக்கம் என்பதையும், படுக்கையில் உட்கார்ந்து நாளின் கடைசி சிகரெட்டோடு ஏதாவது வாசிப்பதும் என் நெடுநாளைய பழக்கம் என்பதையும் தெளிவு படுத்த வேண்டிய அவசியம் இருப்பது இந்த நேரத்தில் தோன்றியது....

இது தோன்றிய நேரத்தில் தமிழின் நினைவுகள் என் உறக்கம் கலையாத காலைப்பொழுதின் மூளை நரம்புகளுக்கும் வந்து போனதில் எந்தவித அசாதாரணமும் கிடையாது! ஏனெனில் அவள் என் செல்களில் எல்லாம் நிறைந்து போனவள் அவளுக்காக இல்லையில்லை அவள் என்னில் ஆக்கிரமிக்காத இடம் கிடையாது என் அந்தரங்கத்தோடு சேர்த்து. அப்படியிருக்க அவள் நினைவுகளுக்கு நேரமமென்ன! இடமென்ன! அவை எனக்கு வருவதும் போவதும் வெகுசாதாரணமான நிகழ்வுகள். இருந்தும் யாருமில்லாத தனிமையல் அதன் வலிகள் மிக வன்மையான ரணங்கள்!


காலம் அவளது பிரிவுவையும் நினைவுகளையும் தாங்குகிற சக்தியை கொடுத்திருந்தாலும் இந்த ஆறாவது வருடத்தில் மற்றய பொழுதுகளில் தெரியாத பிரிவின் வலி நான் தனித்திருக்கும் பொழுதுகளில் தனக்கான விசுவரூபத்தை முடிந்த வரை எனக்கு காட்டுவதும், எனக்குள் அதற்கிருந்த உரிமையை, தனது இன்னமுமான இருப்பை சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம் உறுதிப்படுத்திக்கொண்டிருப்பதும் நிகழத்தான் செய்கிறது, இப்பொழுதும் அப்படித்தான் ஆரம்பமாகியிருக்கிறது!

தமிழ்! அவளைப்பற்றி எனக்கு தெரிந்திருந்தாலும் அவள் சார்ந்த தெரியாதது பல இருக்கலாம் அவள் என்னை மனதார விரும்பினாள் என்கிறதோடு அவளுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை என்கிற ஒன்றைத்தவிர.


அது அவளது இயல்பு அவளைப்பற்றி அவள் அதிகம் என்னோடு பகிர்ந்து கொண்டது கிடையாது எண்ணிக்ககைளற்ற முத்தங்களை தவிர அனேகமான தருணங்களில் நாம் பேசுகிற வார்தைகளே வேற, சொல்லு, ம்ம்ம்... என்பவையாகத்தான் இருக்கும். மற்றபடி கடைசியாக பார்த்த, மற்றும் சில திரைப்படங்கள், முணுமுணுக்கிற பாடல், படித்துக்கொண்டிருக்கிற புத்தகம் இப்படியாகத்தன் இருந்திருக்கிறது; தவிர அவள் தன்னுடைய நாட்கள், அதன் நகர்வுகள், அவளது சூழல் மற்றும் அதன் பிரச்சனைகள் இவற்றையெல்லாம் என்னோடு பகிர்ந்து கொண்டது அரிது அல்லது அவள் அதனை தவிர்த்து வந்தாள். உனக்கிருக்கிற பொறுப்புக்களும் கஷ்டங்களும் போதுமானதாயிருக்கிறது நான் உனக்கிருப்பது உன்னுடைய சந்தோசத்துக்காகவே எனக்கான சந்தோசங்கள் உன்னிடம் இருப்பதும் நான் உன்னிடத்தில் நிறைவடைகிறேன் என்பதும் போல நீயும் இருக்கிறாய்!
நீ அழைக்கிற தருணங்களுக்காக காத்திருக்கிற ஒருத்தியன்றி என் சார்ந்த நம் எதிர்காலத்தின் வலிகளை நாம் சேர்ந்திருக்கிறதாகிய நிகழ்காலத்தில் எதற்காக அனுபவிக்க வேண்டும் இப்பொழுது இருக்கிற கணங்கள்தானே வாழ்க்கை என்கிற நான் அடிக்கடி அவளுக்கு சொல்கிற ஆறுதல் வர்த்தையையே நம் பிவரிவுக்கான ஆயத்தங்கள் தன்னைச் சுற்றி நிகழ்வதை அறிந்து கொள்ளாமல் இருந்ததற்கும் காரணமாக்கியிருந்தாள்!
தவிர்க்க முடியாமல் அந்த பிரிவும் நிகழ்துவிட்டிருந்தது.
நாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்று நமக்கு தெரிய வருகையில் அதுவரையில் இரண்டரை மணித்தியால நேர இடைவெளியிலும், சில அயிரம் கிலோமீற்றர்களையும், ஒரு கடலையும் தாண்டி மட்டுமே பிரிந்திருந்த நாம் நிரந்தரமானதொரு பிரிவின் எல்லைக்குள் தள்ளப்பட்டு அதன் காவல்கள் தீவிரமாக்கப்பட்டிருந்தது...!

சரி... இந்த நேரத்தில் பிரிவின் கதையை நிறுத்தி அவளது நினைவின் ஆரம்பத்துக்கு வரலாம் எனக்கு பற்பசை நுரை கீழுதடுகளிற்கு வெளியே வராமல் பல்துலக்கத் தெரியாது என்பதிலிருந்து நான் லுங்கி கட்டும் பொழுது அதன் முடிச்சை எப்படி போட்டிருப்பேன் என்பதும், நான் செய்கிற வேலையை பற்றியும் அதில் எனக்கு மறந்து போகிற சில விடயங்களை அவளிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவுக்கு தெரிந்து வைத்திருந்தாள் என்பதோடு என்னுடைய நாளின் ஆரம்பம் முதல் கடைசி வினாடி வரை அவளுக்கு கிழமை வாரியாக அத்துப்படியாயிருந்தது! அது எனக்கு ஆச்சரியமானதும் கூட ! என் இரண்டாவது அக்காவின் முன்றாவது குழந்தையின் பிறந்த நாளைக்கூட நினைவு வைத்திருந்தாள்,கடைசியாக நான் எப்பொழுது ஏற்பூசி போட்டுக்கொண்டேன் என்பதையும் எந்த வித குறிப்புகளும் இல்லாமல் சட்டென்று சொன்னதும், அம்மாவின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அவள் தெரிந்து வைத்திருந்ததும் அவற்றுக்கான தனியான சான்றுகள்.என் குடும்பம் மற்றும் அது சார்பாக நான் மறந்தாலும் சில விசயங்களை அவளாக நினைவூட்டுகிற சந்தர்ப்பங்கள் பல நடந்திருக்கிறது.

அவளை நான் இழந்திருக்கிறேனா? அல்லது அவள் என்னை இழந்திருக்கிறாளா? என்றால் அதற்கான விளக்கம் எனக்கு தர முடியவில்லை! அப்படி ஒரு எதிர்பார்ப்புகளின் மத்தியில் அவளுக்கும் எனக்குமான உறவு முறை இருந்ததுமில்லை எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எதிர் பாராத பொழுதொன்றில் வண்ணத்தப்பூச்சி காவிய பூக்களின் சூல்களினால் நிகழ்து விடுகிற மகரந்த சேர்க்கை போல! அது நமக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது.

எனக்கு ஏதோ தேவைப்படுகிறது; அவளுடனான உரையாடலோ அல்லது அவள் கறுத்த உதடுகளின் ஈர முத்தங்களோ இன்னும் அவள் வலது கையின் சுட்டு விரல் நகங்களின் சுகமான கீறல்கள் பட என் இடது மார்பு ஆசைப்படுகிறது என்றோ (அவள் அனேகமாய் என் வலது பக்கத்து நெஞசில் கன்னங்களை வைத்து சாய்ந்து கொண்டு மருதாணி பூசிய நகங்களின் முனைகளில் தனக்கு தோன்றுகிற இடங்களில் எல்லாம் தன் பெயரையும் என் பெயரையும் எழுதுவது அவள் என்னைப் பார்க்க வருகிற நாட்களில் நிச்சயமாய் நிகழ்கிற நிகழ்வு! அது அவளுக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது என்பதும் அந்த தருணத்தில் தான் தானாக இருப்பதாகவும் அவள் பின்பொரு முறை சொல்லியிருக்கிறாள்.) என்று அவள் உணர்வதும் எனக்கான தேவையை அவளாகவே அழைத்து நிறைவு செய்வதும்

அல்லது

அவள் என்னோடு ஒரு தேநீர் பருக ஆசைப்படுகிறாள் என்றோ ஸபரிஸங்களுக்கு அவள் காத்திருக்கிறாள் என்றோ இன்னும் அவள் ஆடை மறைக்கிற பிரதேசத்தில் என் விரல்களுக்காய் இளஞ்சந்தன நிறத்திலான அவள் பூனை முடிகள் காத்திருக்கின்றன என்றோ நான் அறிந்து கொள்வதும் ஒரு நெடந்துர பயணத்துக்கான வேளையில துணையாக அவள் கேட்காமலே அவளோடு கலந்துகொள்வதும்

ஆகியவைகளால் ஆன

எதுவும் யாவும் இயல்பாக நடந்தேறுகிற மிகத்தெளிவான தன்முனைப்பற்ற இரு உயிர்களின் இருத்தலாக இருந்தது அவளையும் என்னையும் மட்டுமே சார்ந்த பொழுதுகள்...

அல்லது

தங்கியிருத்தல்கள் அற்ற ஒரு ஆணும் பெண்ணுமாகிய இரு உயிர்களின் நிகழ்வு அதற்கான தருணம் வருகையில் நிகழ்கிறதென்பதைப்போன்றோ நிகழ்ந்திருந்தது அவை...


அதனாலேயோ என்னவோ அந்த பிரிவும் நிகழ்துவிட்டிருந்தது அதற்கான சந்தர்ப்பத்தில்!

இப்பொழுது அவள் எங்கிருக்கிறாள் என்பது எனக்கு தெரியாமல் இருக்கலாம் முன்போல நான் எங்கே எப்படி இருக்கிறேன் என்பது அவளுக்கு தெரிந்திருக்கலாம் ஏன் எனக்கு பெண்பார்த்திருப்பதும் அது என்கைமீறி நிகழ்ந்திருப்பதும் கூட தெரிந்திருக்கலாம்...


ஆகையின்;
உயிரில் நிகழ்கிறதாகிய அந்த நிகழ்வு இன்றய பின்னிரவிலோ அல்லது கல்யாணத்துக்கு நான்கு நாட்கள் முன்னதாக வரும் ஞாயிற்றுக்கிழைமையின் நண்பகலுக்கு பின்னர் நான் தேநீர் பருகும் தருணத்திலோ அவளது அழைப்பொன்றின் மூலம் மீண்டும் ஒரு முறை நிகழலாம்.


இனி தொடர்வதற்காக மட்டும்!

54 comments:

va loans said...
This comment has been removed by a blog administrator.
தமிழ் பிரியன் said...

நெஞ்சோடு நினைவுகளாய்.... அழகாய் இருக்கு தமிழன்... :)

தமிழ் பிரியன் said...

///ஆகையின் உயிரில் நிகழ்கிறதாகிய அந்த நிகழ்வு இன்றய பின்னிரவிலோ அல்லது கல்யாணத்துக்கு நான்கு நாட்கள் முன்னதாக வரும் ஞாயிற்றுக்கிழைமையின் நண்பகலுக்கு பின்னர் நான் தேநீர் பருகும் தருணத்திலோ முன்னதாக அவளது அழைப்பொன்றின் மூலம் மீண்டும் ஒரு முறை நிகழலாம்.///
நிகழ்வுகள் நிகழ்வதற்கே.... :)

தமிழ் பிரியன் said...

All the Best.... கலக்கலா இருக்குப்பா... :)

கவிநயா said...

நல்லா எழுதறீங்க. படிக்கையில் வலித்தது...

Divya said...

நெஞ்சின் நினைவுகளை மிக மிக அருமையாக பதிவிட்டிருக்கிறீர்கள்,
உங்கள் அழகான எழுத்தும், உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளும் பதிவோடு ஒன்றிப்போக வைத்தது தமிழன்.......இதற்கு மேல் சொல்லிட வார்த்தைகள் இல்லை என்னிடம்:(

மங்களூர் சிவா said...

/
அவள் நினைவுகளுக்கு நேரமமென்ன! இடமென்ன! அவை எனக்கு வருவதும் போவதும் வெகுசாதாரணமான நிகழ்வுகள். இருந்தும் யாருமில்லாத தனிமையல் அதன் வலிகள் மிக வன்மையான ரணங்கள்!
/

கைய கால வெச்சிகிட்டு சும்மா இரும்யா!
:)))

மங்களூர் சிவா said...

நல்லா இருக்கு,

ஆனா இன்னும் இன்னும் நிறைய எதிர்பாக்கிறோம் உங்ககிட்ட

சென்ஷி said...

//இப்பொழுது அவள் எங்கிருக்கிறாள் என்பது எனக்கு தெரியாமல் இருக்கலாம். முன்போல நான் எங்கே எப்படி இருக்கிறேன் என்பது அவளுக்கு தெரிந்திருக்கலாம்//

same blood :((

வழிப்போக்கன் said...

//எழுந்து உட்கார்ந்து உள்ளங்கைகளை உரசி அந்த மெல்லிய வெப்பத்தோடு கண்களை கசக்கி பார்வைய சரிசெய்து கொண்டேன்.//

அழகான வர்ணனை..:)

வழிப்போக்கன் said...

//என் சார்ந்த நம் எதிர்காலத்தின் வலிகளை நாம் சேர்ந்திருக்கிறதாகிய நிகழ்காலத்தில் எதற்காக அனுபவிக்க வேண்டும் //

:)

வழிப்போக்கன் said...

உங்க க(வி)தைகள் உணர்வுகளை மிக ஆளமாக சொல்கிறது.

தொடரட்டும்....

இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மலர்ந்தாலும் உங்கள் பதிவுகள் முழுநிலவை போல் உள்ளது..

:))

(ஆனா இதெல்லாம் கற்பனைனு சொல்றது மட்டும் எற்றுக்கொள்ள முடியவில்லை).

ஹேமா said...

வணக்கம் தமிழன்.கற்பனையோ உண்மையோ அழகா எழுதுறிங்க.
ரசிப்பும் கற்பனையும் நிறைவான அழகு.ஏக்கம் நிரம்பி வழிகிறது.
அடிக்கடி எழுதுங்கள் தமிழன்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

எனக்கு சற்று பொறாமையாய் கூட இருக்கிறது...இப்படி எல்லாம் நமக்கு எழுத வரவில்லையே என்று!

தமிழ்ப்பறவை said...

பிரிவு ரணங்கள், நினைவுக்குச்சியால் கிழிபடும்போது மிஞ்சும் வேதனைச்சுகங்களை ஆழப்பதிந்துள்ளீர்கள் தமிழன்.. நன்று...

தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள்...

Mathu said...

Really nice thamizhan! Nallaa eluthi irukinga :)

Sri said...

Superb post..!! :-)
Really nice anna..!! :-)

பரிசல்காரன் said...

//சில மாதங்களுக்குப் பிறகு கிடைத்த ஒரு விடுமுறை நாளின் அறையில் யாருமற்றதாகிய தனிமையில் தூக்கம் கலைந்து விழிக்கையில் கண்களுக்கெதிரே அறையின் வலது பக்க மென் பலகைச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த வினாடிகளின் முள்ளற்ற கடிகாரம் பத்து மணியை கடந்து இருபத்தாறாவது நிமிடத்தின் புள்ளியை எட்டியிருந்தது//

இந்த முதல் வரியை மட்டும் மூன்று முறை படித்தேன்!

ரொம்ப ரசிச்சு ரசிச்சு எழுதியிருக்கீங்க தமிழன்!

கிரி said...

அருமையா எழுதி இருக்கீங்க..உங்களோட இயல்பான எழுத்து நடையே உங்களின் பலமா? :-)

நீங்க சொல்வதெல்லாம் சரி தான்..கதைனு சொல்வது தான்................

கயல்விழி said...

மென் சோக காதலை இத்தனை கவிநயத்துடன் இதுவரை படித்ததாக நினைவில்லை. ரொம்ப நன்றாக இருக்கிறது, தயவு செய்து நிறைய எழுதவும்.

கயல்விழி said...

மென் சோக காதலை இத்தனை கவிநயத்துடன் இதுவரை படித்ததாக நினைவில்லை. ரொம்ப நன்றாக இருக்கிறது, தயவு செய்து நிறைய எழுதவும்.

Kumiththa said...

Its really nice and i have no words to describe it...keep writing!

நவீன் ப்ரகாஷ் said...

தமிழன்...
அழகான நினைவுகள்...
மேன்மேலும் அழகாக
உங்களின் நடையில்....

கொள்ளை கொண்டது
மனதை...:)))

நவீன் ப்ரகாஷ் said...

//அவளைப்பற்றி அவள் அதிகம் என்னோடு பகிர்ந்து கொண்டது கிடையாது எண்ணிக்ககைளற்ற முத்தங்களை தவிர அனேகமான தருணங்களில் நாம் பேசுகிற வார்தைகளே வேற, சொல்லு, ம்ம்ம்... என்பவையாகத்தான் இருக்கும்//

ம்ம்ம்ம்ம்....

:))))

நவீன் ப்ரகாஷ் said...

//நீ அழைக்கிற தருணங்களுக்காக காத்திருக்கிற ஒருத்தியன்றி என் சார்ந்த நம் எதிர்காலத்தின் வலிகளை நாம் சேர்ந்திருக்கிறதாகிய நிகழ்காலத்தில் எதற்காக அனுபவிக்க வேண்டும் இப்பொழுது இருக்கிற கணங்கள்தானே வாழ்க்கை என்கிற நான்//

தமிழன்...
இப்பொழுதுதான் வயதுக்கு வந்தது போல்
வார்த்தைகள்... மேலும் மேலும் என்
வாசிப்பைத் திருடுகின்றன... :)))

நவீன் ப்ரகாஷ் said...

//அப்படி ஒரு எதிர்பார்ப்புகளின் மத்தியில் அவளுக்கும் எனக்குமான உறவு முறை இருந்ததுமில்லை எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எதிர் பாராத பொழுதொன்றில் வண்ணத்தப்பூச்சி காவிய பூக்களின் சூல்களினால் நிகழ்து விடுகிற மகரந்த சேர்க்கை போல! அது நமக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது.//

சூழ் கொண்ட உணர்வுகள்
ஆட்கொள்கின்றன இக்கணத்தின்
எண்ணங்களை....

நவீன் ப்ரகாஷ் said...

//அனேகமாய் என் வலது பக்கத்து நெஞசில் கன்னங்களை வைத்து சாய்ந்து கொண்டு மருதாணி பூசிய நகங்களின் முனைகளில் தனக்கு தோன்றுகிற இடங்களில் எல்லாம் தன் பெயரையும் என் பெயரையும் எழுதுவது அவள் என்னைப் பார்க்க வருகிற நாட்களில் நிச்சயமாய் நிகழ்கிற நிகழ்வு //

தமிழன்....
மலரினும் மெல்லிய உணர்வுகளை
மலரினும் மென்மையாக
மிக அழகாக வெளிப்படுத்தும்
வரம் கைவரப்பெற்றிருக்கிறீர்கள்...


அழகோ அழகு....:))))

கோவை விஜய் said...

சோகமான நினவுகளை

கவி நடையில் அருமை

வாழ்த்துக்கள்

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

தமிழன்... said...

\\\
நெஞ்சோடு நினைவுகளாய்.... அழகாய் இருக்கு தமிழன்... :)
\\\
நன்றி தமிழ் பிரியன்...
///
ஆகையின் உயிரில் நிகழ்கிறதாகிய அந்த நிகழ்வு இன்றய பின்னிரவிலோ அல்லது கல்யாணத்துக்கு நான்கு நாட்கள் முன்னதாக வரும் ஞாயிற்றுக்கிழைமையின் நண்பகலுக்கு பின்னர் நான் தேநீர் பருகும் தருணத்திலோ முன்னதாக அவளது அழைப்பொன்றின் மூலம் மீண்டும் ஒரு முறை நிகழலாம்.///
நிகழ்வுகள் நிகழ்வதற்கே.... :)
///

நல்ல நிகழ்வுகள் நிகழ்ந்துவிட வேண்டும்...:)

தமிழன்... said...

@தமிழ் பிரியன்...
\\\
All the Best.... கலக்கலா இருக்குப்பா... :)
\\\
நன்றி வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும்:)

தமிழன்... said...

கவிநயா said...
\\
நல்லா எழுதறீங்க. படிக்கையில் வலித்தது...
\\

நன்றி கவிநயா வருகைக்ககும் பகிர்வுக்கும்...

தமிழன்... said...

Divya said...
\\
நெஞ்சின் நினைவுகளை மிக மிக அருமையாக பதிவிட்டிருக்கிறீர்கள்,
உங்கள் அழகான எழுத்தும், உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளும் பதிவோடு ஒன்றிப்போக வைத்தது தமிழன்.......இதற்கு மேல் சொல்லிட வார்த்தைகள் இல்லை என்னிடம்:(
\\

உங்களிடமே வார்த்தைகள் இல்லையா!? :) காதல் கதை மாஸ்டர்....
நன்றி வருகைக்கும் மனம் நிறைந்த பகிர்வுக்கும்..

தமிழன்... said...

மங்களூர் சிவா said...
/
அவள் நினைவுகளுக்கு நேரமமென்ன! இடமென்ன! அவை எனக்கு வருவதும் போவதும் வெகுசாதாரணமான நிகழ்வுகள். இருந்தும் யாருமில்லாத தனிமையல் அதன் வலிகள் மிக வன்மையான ரணங்கள்!
/
கைய கால வெச்சிகிட்டு சும்மா இரும்யா!
:)))
\\

அட பாவி மனுஷா :)

தமிழன்... said...

மங்களூர் சிவா said...
\\
நல்லா இருக்கு,

ஆனா இன்னும் இன்னும் நிறைய எதிர்பாக்கிறோம் உங்ககிட்ட
\\

அவ்வ்வ்வ்வ்வ்....
அதுக்கு வேற ஆளைப்பாருங்க...:)

தமிழன்... said...

சென்ஷி said...
\\
//இப்பொழுது அவள் எங்கிருக்கிறாள் என்பது எனக்கு தெரியாமல் இருக்கலாம். முன்போல நான் எங்கே எப்படி இருக்கிறேன் என்பது அவளுக்கு தெரிந்திருக்கலாம்//

same blood :((
\\

அதே அதே...:)

தமிழன்... said...

வழிப்போக்கன் said...
\
//எழுந்து உட்கார்ந்து உள்ளங்கைகளை உரசி அந்த மெல்லிய வெப்பத்தோடு கண்களை கசக்கி பார்வைய சரிசெய்து கொண்டேன்.//

அழகான வர்ணனை..:)
\
/
//என் சார்ந்த நம் எதிர்காலத்தின் வலிகளை நாம் சேர்ந்திருக்கிறதாகிய நிகழ்காலத்தில் எதற்காக அனுபவிக்க வேண்டும் //

:)
/

உங்க க(வி)தைகள் உணர்வுகளை மிக ஆளமாக சொல்கிறது.

தொடரட்டும்....

இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மலர்ந்தாலும் உங்கள் பதிவுகள் முழுநிலவை போல் உள்ளது..

:))

(ஆனா இதெல்லாம் கற்பனைனு சொல்றது மட்டும் எற்றுக்கொள்ள முடியவில்லை).
///

நன்றி வழிப்போக்கன் ரசனையான வெளிப்பாடுகளுக்கு...:)

புனைவோ நிஜமோ அனுபவங்களின் சாயலில் தானே வெளிப்படுகிறது...

தமிழன்... said...

ஹேமா said...
\
வணக்கம் தமிழன்.கற்பனையோ உண்மையோ அழகா எழுதுறிங்க.
ரசிப்பும் கற்பனையும் நிறைவான அழகு.ஏக்கம் நிரம்பி வழிகிறது.
அடிக்கடி எழுதுங்கள் தமிழன்.
\
நன்றி ஹேமா தொடர் வருகைக்கும் மனமறிந்த பகிர்வுக்கும்... முடிந்தவரை எழுத வேண்டும் என்பதுதான் என் எண்ணமும்! அதற்கான சூழ்நிலை தவறிக்கொண்டிருக்கிறது...

தமிழன்... said...

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
\\
எனக்கு சற்று பொறாமையாய் கூட இருக்கிறது...இப்படி எல்லாம் நமக்கு எழுத வரவில்லையே என்று!
\\

என்ன அண்ணன் இப்படி சொல்றிங்க நீங்கள்லாம் கலக்கலா எழுதறிங்க...

நன்றி...

தமிழன்... said...

தமிழ்ப்பறவை said...

\\
பிரிவு ரணங்கள், நினைவுக்குச்சியால் கிழிபடும்போது மிஞ்சும் வேதனைச்சுகங்களை ஆழப்பதிந்துள்ளீர்கள் தமிழன்.. நன்று...
\\\
\
வாழ்த்துக்கள்...
\

நன்றி தமிழ் பறவை முதல் வருகைக்கம் வாழ்த்துக்கும்...:)

தமிழன்... said...

Mathu said...
\\
Really nice thamizhan! Nallaa eluthi irukinga :)
\\

நன்றி...வருகைக்கும் கருத்துக்கும் மது முதல் வருகைதானே...

தமிழன்... said...

Sri said...
\\
Superb post..!! :-)
Really nice anna..!! :-)
\\
நன்றி ஸ்ரீ முதல் வருகைக்கும் கருத்துக்கும்...

தமிழன்... said...

பரிசல்காரன் said...
\\
//சில மாதங்களுக்குப் பிறகு கிடைத்த ஒரு விடுமுறை நாளின் அறையில் யாருமற்றதாகிய தனிமையில் தூக்கம் கலைந்து விழிக்கையில் கண்களுக்கெதிரே அறையின் வலது பக்க மென் பலகைச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த வினாடிகளின் முள்ளற்ற கடிகாரம் பத்து மணியை கடந்து இருபத்தாறாவது நிமிடத்தின் புள்ளியை எட்டியிருந்தது//

இந்த முதல் வரியை மட்டும் மூன்று முறை படித்தேன்!

ரொம்ப ரசிச்சு ரசிச்சு எழுதியிருக்கீங்க தமிழன்!
///
நன்றி பரிசல் அண்ணே ரசனைக்கும் கருத்துக்கும்...:)

தமிழன்... said...

கிரி said...

\\
அருமையா எழுதி இருக்கீங்க..உங்களோட இயல்பான எழுத்து நடையே உங்களின் பலமா? :-)

நீங்க சொல்வதெல்லாம் சரி தான்..கதைனு சொல்வது தான்................
\\

ஏதோ நம்மால முடிஞ்சத எழுதறோம் அண்ணன்...
அடச்சே!! கிரி நம்புங்கப்பா வழிப்போக்கனுக்கு சொன்ன பதில்தான்...:)

தமிழன்... said...

கயல்விழி said...
\
மென் சோக காதலை இத்தனை கவிநயத்துடன் இதுவரை படித்ததாக நினைவில்லை. ரொம்ப நன்றாக இருக்கிறது, தயவு செய்து நிறைய எழுதவும்.
\

நன்றி கயல் விழி...
நிறையப்பேர் நிறைய மாதிரி அழகழகா சொல்லியிருக்காங்க நான் ஏதோ அன்றய பொழுதில் மனதில் வந்ததை எழுதினென் இதை நான் எழுதியது ஒரு மதிய வேளையில்....
நன்றி...
அடிக்கடி எழுதுவோம் முடிந்தவரை...

(கொடுமை தொடரும்...;)

தமிழன்... said...

Kumiththa said...
\\\
Its really nice and i have no words to describe it...keep writing
\\\

நன்றி குமித்தா...
வருகைக்கும் கருத்துக்கும்...:)

தமிழன்... said...

நவீன் ப்ரகாஷ் said...
\\
தமிழன்...
அழகான நினைவுகள்...
மேன்மேலும் அழகாக
உங்களின் நடையில்....

கொள்ளை கொண்டது
மனதை...:)))
\\\

நன்றி நவீன் அண்ணன்...:)

தமிழன்... said...

நவீன் ப்ரகாஷ் said...

\
//அவளைப்பற்றி அவள் அதிகம் என்னோடு பகிர்ந்து கொண்டது கிடையாது எண்ணிக்ககைளற்ற முத்தங்களை தவிர அனேகமான தருணங்களில் நாம் பேசுகிற வார்தைகளே வேற, சொல்லு, ம்ம்ம்... என்பவையாகத்தான் இருக்கும்//

ம்ம்ம்ம்ம்....

:))))
\
\\
தமிழன்...
இப்பொழுதுதான் வயதுக்கு வந்தது போல்
வார்த்தைகள்... மேலும் மேலும் என்
வாசிப்பைத் திருடுகின்றன... :)))
\\

உங்கள் வாசிப்பைத் திருடியதில் மகிழ்ச்சி...:)

தமிழன்... said...

\\
சூழ் கொண்ட உணர்வுகள்
ஆட்கொள்கின்றன இக்கணத்தின்
எண்ணங்களை....
\\
அதெல்லாம் இல்லை அண்ணன் அவள் தநத அன்பின் வெளிப்பாடுகள்தான் அவை...;)

\\
தமிழன்....
மலரினும் மெல்லிய உணர்வுகளை
மலரினும் மென்மையாக
மிக அழகாக வெளிப்படுத்தும்
வரம் கைவரப்பெற்றிருக்கிறீர்கள்...

அழகோ அழகு....:))))
\\
நன்றி அண்ணன் வாசிப்பும் அன்பு நெஞசங்கள் தருகின்ற ஆதரவும், தமிழ் தந்த வரமும் ஏதொ கொஞ்சமாவது எழுத முடிகிறது என்னாலும்...

தமிழன்... said...

@ நவீன் ப்ரகாஷ்...

நன்றி வருகைக்கும் அழகான தருகைகளுக்கும்...

தமிழன்... said...

கோவை விஜய் said...
\\
சோகமான நினவுகளை

கவி நடையில் அருமை

வாழ்த்துக்கள்

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
\\

நன்றி விஜய் நேரமிருக்கையில் வருகிறேன்...

ஜி said...

கலக்கிட்டீங்க தமிழன்... வார்த்தைகளயெல்லாம் எங்க இருந்துதான் புடிக்கிறீங்களோ?? :))

அங்கங்க கொஞ்சம் அரைப்புள்ளி, கால் புள்ளிலாம் வச்சா படிக்க கொஞ்சம் எளிதா இருக்கும்ல?? :)))

Anonymous said...

Ummudaiya varthaigal emmai pinnokkia alathuchelkindrathu nanbane!!!!!!!!!!!!!!!!!

Anonymous said...

Ummudaiya varthaigal emmai pinnokkia alathuchelkindrathu nanbane!!!!!!!!!!!!!!!!!