Tuesday, March 31, 2009

பூனைகள் பற்றிய...



கவிழ்ந்திருக்கிற இரவு விளக்கின் வெளிச்சத்தில்
கலைந்திருருக்கிற அழகுகளோடு உறங்குகிற
அவளுக்கு தெரியது இரவுகளில் பூனையாகுகிற என்னை,
வெளவால்கள் வழித்திருக்கிற இரவுகளில்
வெளிச்சமற்ற திசைகளில் இருந்து
இரை தேடிப்பாய்கிற பூனைகளின் லாவகம்
பகல் முழுதும் பரவசமூட்டுகிற பறவைகளுக்கு
தெரிவதில் நியாயங்கள் இருப்தாய் தெரியவில்லை,
இடை வெளிகளுக்கு அவசியமில்லாத
இரவுகள் வரும் வரையும்,
பகல்களில் நானாக இருக்கிற பூனையை
அறிந்து கொள்ளாமல் இருப்பதுதான் முறை
அவளும் அவளை அறிந்த நீங்களும்,
யாருமற்ற பகல்களில் நான் பூனையாகுவது குறித்து
இப்பொழுதே எழுதி விடுகிறேன்,
பூனைகளின் உலகம் என்னை ஏற்றுக்கொள்கையில்
என்னை ஒரு பூனையாகவே ஏற்றுக்கொள்ளகூடும்...
அவளும் நீங்களும்!

__________________________________________


புதிர் நிறைந்த பழைய பூனைகள்
அங்கீகாரங்களற்று மாண்டு போக,
ஆளுமைகள் கொண்ட பூனைகள்
அடையாளமிழக்கத் தொடங்கியிருக்கிறது,
சிக்கல்கள் நிறைந்ததாய் இருக்கிற பூனைகளின் உலகில்
வீரியமுள்ளவைகளாய் அறிமுகமாகியிருக்கின்றன
சில புதிய பூனைகள்,
அவைகளோடு பழகுதல்
அற்புதமான அனுபவமாய் இருக்கிறது,

இன்னொன்று...

உலகின் மிக அழகான பூனைகளின் சாயல்களில் இருக்கிற
அவளை பிரிந்ததிலிருந்து,
நானொரு பூனையாகிக் கொண்டிருப்பதாய் நான் சொல்வதை
நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்றாலும்
நானொரு பூனையாகுவதென்கிற முடிவில் இருக்கிறேன்,
ஏனெனில் பூனைகளின் ஊலகம் விசித்திரங்களால்
ஆனதென்றாலும் புரிதல்கள் நிறைந்தது,
பூனையாகுதல் ஒரு வரம்
பூனைகளை அறிதல் ஒரு தவம்!



பின்குறிப்பு:

\\
பூனைகள் பற்றி குறிப்புகள் எழுதப்போனால் இது நீங்கள் படிக்க முடியாத அளவுக்கு நீளமான பதிவாகக்கூடிய பிரச்சனை இருப்பதால்,அவற்றை இயன்றவரை சுருக்கி எழுதக்கூடியதாய் என் மனோநிலை இருக்கையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

\\
தொடரும்...

18 comments:

நட்புடன் ஜமால் said...

மியாவ்..........

நட்புடன் ஜமால் said...

\\உலகின் மிக அழகான பூனைகளின் சாயல்களில் இருக்கிற
அவளை பிரிந்ததிலிருந்து,
நானொரு பூனையாகிக் கொண்டிருப்பதாய் \\

அழகு ராஸா

நாங்க ஏத்துக்கிறோம்

யாத்ரா said...

நல்லா இருக்குங்க, தொடருங்க, பூனை படிமம் அற்புதமான பல சாத்தியங்களை நிகழ்த்தக்கூடியது.

சென்ஷி said...

டேய் மாப்ள...

ஒத்துக்கறேண்டா நீ இப்ப உண்மையிலேயே எளக்கியவாதிதான்.

Thamiz Priyan said...

நானும் ஒத்துக்கிறேன்.. நீ இலக்கியவியாதி தான்னு ஒத்துக்கிறேன்.. ;-)

தமிழன்-கறுப்பி... said...

நன்றி ஜமால்...

கிருஷ்ணா said...

நிறைய யோசிக்க வைக்கிறது

//சிக்கல்கள் நிறைந்ததாய் இருக்கிற பூனைகளின் உலகில்
வீரியமுள்ளவைகளாய் அறிமுகமாகியிருக்கின்றன
சில புதிய பூனைகள்,
அவைகளோடு பழகுதல்
அற்புதமான அனுபவமாய் இருக்கிறது,//

இந்தப் பூனைகளும் பழையதாகும்..

(இப்போதுதான் உங்கள் வலைப்பதிவுக்கு வர ஆரம்பித்திருக்கிறேன். இனி, தொடர்ந்து வருவேன்)

தமிழன்-கறுப்பி... said...

@ நன்றி யாத்ரா
ஆமா பூனைகள் பல சாத்தியங்களை கொண்ட படிமம்தான்...

@ சென்ஷி said...
டேய் மாப்ள...

ஒத்துக்கறேண்டா நீ இப்ப உண்மையிலேயே எளக்கியவாதிதான்.
\\
நன்றி மாப்பி இனி உதார் வுட்டுக்கலாம்கற ;)
அண்ணாச்சி கிட்ட கேட்டு உறுதிப்படுத்திக்கிட்டா செரிதான்.. :)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\\
நானும் ஒத்துக்கிறேன்.. நீ இலக்கியவியாதி தான்னு ஒத்துக்கிறேன்.. ;-)

\\

:))

தல இதுக்கு முன்னாடி ரணகளக்குறிப்பகள்னு ஒரு பதிவு போட்டனே அதுக்கு "இலக்கியநோய்" னுதான் லேபிள் வச்சிருந்தேன் அப்புறமா தூக்கிட்டேன்...

:)

ஹேமா said...

தமிழன் ,சரியாப்போச்சு.கறுப்பி உங்களைப் பூனையாக்கித் தானும் பூனையாகிட்டா.இனி எங்க போய் எங்கட தமிழனை நாங்கள் தேட..!

உண்மையில் பூனையை உருவகமாக்கி அழகான கற்பனையின் கவிதை.

சிந்தனைக் கடன் கொஞ்சம் கேட்கத்தான் வேணும் நான்.

Sanjai Gandhi said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

தமிழன்-கறுப்பி... said...

கிருஷ்ணா said...

நிறைய யோசிக்க வைக்கிறது

//சிக்கல்கள் நிறைந்ததாய் இருக்கிற பூனைகளின் உலகில்
வீரியமுள்ளவைகளாய் அறிமுகமாகியிருக்கின்றன
சில புதிய பூனைகள்,
அவைகளோடு பழகுதல்
அற்புதமான அனுபவமாய் இருக்கிறது,//

இந்தப் பூனைகளும் பழையதாகும்..

(இப்போதுதான் உங்கள் வலைப்பதிவுக்கு வர ஆரம்பித்திருக்கிறேன். இனி, தொடர்ந்து வருவேன்)
\\
நான் உங்களை இதற்கு முன்பே படித்திருக்கிறேன் கிருஷ்ணா
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி...

@ ஹேமா...
:)
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி ஹேமா...

தமிழன்-கறுப்பி... said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
\\
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
\\
மியாவ்வ்வ்வ்வ்வ்வ்...

:) என்ன மாம்ஸ்...?

top10shares said...
\\
தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி
\\

நன்றி...

தமிழ் மதுரம் said...

புதிர் நிறைந்த பழைய பூனைகள்
அங்கீகாரங்களற்று மாண்டு போக,
ஆளுமைகள் கொண்ட பூனைகள்
அடையாளமிழக்கத் தொடங்கியிருக்கிறது,
சிக்கல்கள் நிறைந்ததாய் இருக்கிற பூனைகளின் உலகில்
வீரியமுள்ளவைகளாய் அறிமுகமாகியிருக்கின்றன
சில புதிய பூனைகள்,
அவைகளோடு பழகுதல்
அற்புதமான அனுபவமாய் இருக்கிறது//


இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு தலை....


தொடருங்கோ...

தமிழ் மதுரம் said...

அரபு தேசத்திலை உள்ள பூனைகளும் இரண்டு மொழி பேசும் என்பது இப்போது தான் புரிகிறது:))

david santos said...

Wonderful!!!
Really beautiful posting!!!
Very nice picturs. Happy day!!!

யாழினி said...

:)கவிதை அழகு!