Thursday, July 2, 2009

நெற்றிக்கண்களும் குற்றங்களும்...!








*
செண்பகப்பாண்டியர்களும்
நக்கீரர்களும்
நெற்றிக்கண்களும்
இருந்து கொள்ள,
இருப்புக்கு அலைவது
தருமிகள்தான்.


*

அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி
சங்கதனை கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ
எம் கவியை ஆராய்ந்து சொல்லத்தக்கவன்?
_____________________

சங்கறுப்பது எங்கள் குலம்
சங்கரனார்க்கேது குலம் - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை!


பின்குறிப்பு:

1)
சண்டைகளும் சச்சரவுகளுமாய் இருக்கிறது இலக்கியச்சூழல்.இந்த 'சீனை" எந்தச்சண்டைக்கென்றாலும் பொருத்திப்பார்த்துக்கொள்க அது உங்கள் வாசிப்புக்கும் கற்பனைக்குமானது மற்றும்படி இது ஒரு இலக்கிய கும்மி.

6 comments:

தமிழன்-கறுப்பி... said...

மறக்க முடியுமா இந்த வசனங்களை...

கடந்த நாட்களில் நடந்த சர்ச்சைகளுக்கு இந்த சீனை கற்பன பண்ணிப்பார்த்தேன் செம காமெடி...

;)

மங்களூர் சிவா said...

/
மற்றும்படி இது ஒரு இலக்கிய கும்மி.
/

தவறான அட்ரஸ்க்கு வந்துட்டேனோ???
:))))))))))

ஆயில்யன் said...
This comment has been removed by the author.
ஆயில்யன் said...

இலக்கிய கும்மிக்கெல்லாம் ஸ்டடி பண்ண வேண்டியது நிறையா இருக்கு ஸோ மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்!

சென்ஷி said...

:))))))))))))))))

தமிழன்-கறுப்பி... said...

நன்றி நண்பர்களே..!