Tuesday, July 21, 2009
முடியாத கனவு...
மூச்சுவாங்கிய மார்புகள் அதிர
குதித்துக்கொண்டாடிய மலை முகடும்
காசியப்ப ராசனின் நீராடும் தடாகமும் என
முகில் தழுவிய மலை உச்சியில்
மஞ்சள் தேவதையாய்
உன்னை முத்தமிடத்தூண்டிய நீயும்
என்னை இயங்காது தகர்த்த சூழ்நிலையும்
நெடுநாட்களாய்
நீராடும் நீயும், மலையும், சில பறவைகளும்
என கனவில் விரட்டுவன...
அந்த இரவு முழுவதும் என்னோடே இருந்தாய்
உதடுகள் அடக்கிய வார்த்தைகள் முழுவதும்
வெப்பம் நிரம்பிய உள்ளங்ககைளிரண்டில் புரிவித்தாய்
அப்பொழுதில் உன் விரல்களும் நகங்களும் பேசின.
விடிகிறது என்கிற பொழுதுகளில் எழுப்பி
வளைவுகள் வரரை முன்னேறிய என்
கனவினை கலைத்தாய் அந்த
கனவு இன்னமும் முடியவேயில்லை...
பின்குறிப்புகள்:
\\
மலைகளில் காணாமல் போன தேவதைகள் எழுத காரணமாயிருந்தது இந்த வரிகள் மட்டுமே ஆனால் இந்த வரிகளுக்கு ஒரு சிறுகுறிப்பை எழுதலாம் என்று எழுதுகையில் அது ஒரு நீளமான கதையாகிற்று.
\\
அதில் இவள்தான் நிஜம்.
\\
நன்றி இங்கே பெயர் சொல்ல விரும்பாத குண்டம்மாவுக்கு.
Labels:
தேவதைகள்...,
மலைகள்...
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
தமிழன்,நினைவுகளை விடக் கனவுகள் எப்பவுமே நல்லாயிருக்கும்.சுகமாகவுமிருக்கும்.¨
யார் இந்தக் குண்டம்மா.கறுப்பி ஒருவேளை குண்டோ...
அருமை, மிகவும் பிடித்திருக்கிறது.
ம்
காதல் ததும்பும் சொற்கள்
இதம் வழியும் நினைவுகள் சாரத்தை அளித்துச் செல்கிறது..!
அருமை.. :)
@
நன்றி ஹேமா, ம்ம் சில விசயங்கள் கனவுகளாக இருப்பதும் பிடித்திருக்கிறது.
@
நன்றி யாத்ரா
@
என்ன சிவா மாம்ஸ், நன்றி
@
நன்றி நேசமித்திரன்
@
நன்றி ராம் அண்ணே..
ஆக்சுவலி பதிவுல இருக்குற படம் க்ளிக் பண்ணி பெருசா பாத்துட்டு போட்ட கமெண்ட் அது!
சூப்பர்!
Post a Comment