மிகுசலிப்பும்,
சொற்ப எதிர்பார்ப்புகளும்,
என கழிகிற நாட்கள் பழகிவிட்டது!
நடுஇரவின் தூக்கமின்மைகளையும்
குற்றவுணர்வுகளின் தடுமாற்றங்களையும்,
மற்றவைகளையும் தவிர்க்கத்தெரியவில்லை,
பொறுப்புகளும் நகர்கிற வயதும்
முரண்களில் இருப்பதை
நீங்கள் உணராமலிருப்தையும்,
என்மீதான அவர்கள் நம்பிக்கைளையும்,
தெறித்துக்கொண்டிருக்கிற என்
குறிமீதான சாபங்களையும் ஏற்றுக்கொள்கிறேன்
இல்லாத புனிதங்களின் துணையோடு,
அது வரையும் நீ என்னை சந்திக்காமலிரு!
9 comments:
;-)
/ஏற்றுக்கொள்கிறேன்
இல்லாத புனிதங்களின் துணையோடு/
ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த முரண்
:)
பாத்துடே இது பொல்லாத வயசு!
கவிதை நல்லா இருக்கு..
கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு தமிழ்.
நல்லா வந்திருக்கு இக்கவிதை.
உங்களுடன் உணர முடிகிறது.
//பொறுப்புகளும் நகர்கிற வயதும்
முரண்களில் இருப்பதை//
இந்த வரிகளை படிக்கையில், "வாவ்" என்றே வாய் விட்டே சொல்லிவிட்டேன்..
கலக்கலா இருக்கு தமிழன், அய்யனார் சொல்லிய வரிகளும்..
தமிழன்,வரிகளில் உஙகளின் மீதான உங்களுக்கே ஒரு சலிப்பு.
@
தமிழ் பிரியன்-
நன்றி தல
@
நன்றி அய்யனார்,
அதை 'இல்லாத புனிதங்களின் மீது ஆணையாக' என்றுதான் முதலில் எழுதியிருந்தேன்.
@
சரி சிவா மாம்ஸ்..
:)
@
நன்றி நாணல்,
@
நன்றி யாத்ரா..
@
நன்றி வேலன் அண்ணாச்சி என்னோடு உணர்றதா அது சரி,நான் சின்னப்பையன் அண்ணாச்சி.
@
நன்றி MSK,
@
நன்றி ஹேமா,
:)
Post a Comment