Tuesday, March 17, 2009

நேரிலும் வரக்கூடும் தேவதைகள்...

திசைதெரியாத பயணமொன்றில்...
தனியாய் நடந்து கொண்டிருந்தேன்,
வாழ்க்கை கடினமானது என்கிற...
மாயை அலைக்கழித்த நாட்களில்,
வானம் பொழிவதற்கு தீர்மானித்த முன்பகலொன்றில்
வாசனைகளோடு நுழைந்தவள்,
பிரியங்கள் நிறைந்த சொற்களில் என்னை ஆக்கிரமித்தாள்!

மிக வெப்பமான பிற்பகல் ஒன்றில்...
என்னவென்று புரியாத சில காரணங்களை
சொன்னவள் என்னைவிட்டு வெளியேறினாள்,
வெளியேறிய தருணங்களில் அவள்...
வாழ்க்கை வசப்படுகிற அற்புதங்களை நிகழ்த்தியவள்!
இன்னொரு வகையாய் அழைக்கையில் தேவதை!


இதை இங்கே முடிக்கலாம் அல்லது,


கொண்டாடுவதற்கு எதுவுமேயில்லாத நாளொன்றின் கடைசியில்
செம்மஞ்சள் நிறத்தின் வானத்தை
மிகக்கசப்பான வெளிநாட்டு மதுவொன்றின்
துணையோடு சபித்துக்கொண்டிருந்தேன்,
இரவுக்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கையில்
அதே வாசனைகளோடு நுழைந்தவள்...
மறைக்கப்பட்ட மார்புகளின் மத்தியில் இருந்தொரு
மலரை பரிசு செய்தாள்!
எனக்கும் பிரியம் செய்யத்தெரியுமென உணர்த்துவதற்கு
விரல்களை துணைக்ழைக்வேண்டிய அவசியம்
அவளைப்போல பேசத்தெரியாததில் உண்டாகிற்று
ஆக்கிரமிப்பு செய்கிற விரல்களை சிறையெடுத்தவள்
மிக நீளமான முத்தங்களை பரிமாறுகிற
உன்னதங்களை செயலாற்றினாள்...

அற்புதமான இரவின் முடிவில் விழிக்கையில்
போர்வைகளை அணிந்திருந்தோம்!

இப்பொழுது அவளுடைய பெயர் கறுப்பி!





பின்குறிப்பு:

\\
இது நிச்சயமாய் புனைவுவென்று நான் சொல்வதை நம்புவதற்கு நீங்கள் என்னை தெரியாதவர்களாய் இருக்கவேண்டும்.

\\
இதனை அவள் வாசிக்கக்கூடாதென்பது தேவதைகளிடம் நான் வாங்கியிருக்கும் சாபம் ஏன் வரமாயும் இருக்கலாம்.

\\
இந்தக்கவிதையை படத்தோடு பதிவு செய்யாததற்கு காரணம் கறுப்பியின் புகைப்படங்கள் எதுவும் என்னிடமில்லை என்பதும் தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை அவை அதற்குள் அகப்படுவதுமில்லை என்பதுமே.

32 comments:

Thamiz Priyan said...

கலக்கல்!
///இந்தக்கவிதையை படத்தோடு பதிவு செய்யாததற்கு காரணம் கறுப்பியின் புகைப்படங்கள் எதுவும் என்னிடமில்லை என்பதும் தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை அவை அதற்குள் அகப்படுவதுமில்லை என்பதுமே.///
வித்தியாசமான சிந்தனை!

Divyapriya said...

கலக்கல் கவிதை..

//மிக வெப்பமான பிற்பகல் ஒன்றில்...
என்னவென்று புரியாத சில காரணங்களை
சொன்னவள் என்னைவிட்டு வெளியேறினாள், //

வித்யாசமா இருக்கு...

ரவி said...

சூப்பர்.

முதலில் ஆனந்தவிகடனுக்கு அனுப்பிட்டு கொஞ்சம் காத்திருந்தீங்க என்றால் புத்தகத்தில் வந்திருக்கும்.

அப்புறம் பதிவு போட்டிருக்கலாம்...

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை, பின் குறிப்புகளும் அழகு

ஆயில்யன் said...

மிக அருமை தமிழ்!

//தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை அவை அதற்குள் அகப்படுவதுமில்லை என்பதுமே///

கனவுகளிலும்,எண்ணங்களிலும் - மனதில் பதிந்துவிட்டவரின் படம் புகைப்படமாக தேவையே இல்லை !

ஹேமா said...

தமிழன்,தேவதைகள் என்றுமே புகைப்படங்களுக்குள் அகப்படுவதில்லைதானே !

எனக்கும் ஒரு ஆசை.உங்கள் கைவண்ண அமைப்பில் நானும் ஒரு கவிதை எழுதிப்பாக்கவேணும்.
பார்க்கலாம்.முயற்சி பண்ணுவேன்.

ஹேமா said...

//திசைதெரியாத பயணமொன்றில்...
தனியாய் நடந்து கொண்டிருந்தேன்,
வாழ்க்கை கடினமானது என்கிற...
மாயை அலைக்கழித்த நாட்களில்,
வானம் பொழிவதற்கு தீர்மானித்த முன்பகலொன்றில்
வாசனைகளோடு நுழைந்தவள்,
பிரியங்கள் நிறைந்த சொற்களில் என்னை ஆக்கிரமித்தாள்!//

நீஙகள் சொற்களைக் கோர்க்கும் விதம் ஒரு வித்தியாசம்.ஒரு அழகு.
ஒரு வேளை தேவதையின் ஆக்கிரமிப்பு அதிகம் உங்களோடு.

நட்புடன் ஜமால் said...

\\தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை அவை அதற்குள் அகப்படுவதுமில்லை என்பதுமே.\\

அருமை ஐயா!

நட்புடன் ஜமால் said...

வாசனைகளோடு நுழைந்தவள்,
பிரியங்கள் நிறைந்த சொற்களில் என்னை ஆக்கிரமித்தாள்!\\

அட்டகாசம் தமிழன்.

நட்புடன் ஜமால் said...

\\மிக நீளமான முத்தங்களை பரிமாறுகிற
உன்னதங்களை செயலாற்றினாள்...\\

இதனை அழகா சொல்லி இருக்கீங்க

முத்தங்களால்
உன்னதங்களை
உருவாக்கினாய்!

முத்தங்களை
உன்ன உன்ன ...

புதியவன் said...

//மிக வெப்பமான பிற்பகல் ஒன்றில்...
என்னவென்று புரியாத சில காரணங்களை
சொன்னவள் என்னைவிட்டு வெளியேறினாள்//

மிக அருமையான வரிகள் தமிழன்...

புதியவன் said...

//தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை அவை அதற்குள் அகப்படுவதுமில்லை என்பதுமே.//

ஹா...மிகவும் ரசித்தேன்...

முரளிகண்ணன் said...

\\முதலில் ஆனந்தவிகடனுக்கு அனுப்பிட்டு கொஞ்சம் காத்திருந்தீங்க என்றால் புத்தகத்தில் வந்திருக்கும்.

அப்புறம் பதிவு போட்டிருக்கலாம்\\

repeateee

Poornima Saravana kumar said...

இந்தக்கவிதையை படத்தோடு பதிவு செய்யாததற்கு காரணம் கறுப்பியின் புகைப்படங்கள் எதுவும் என்னிடமில்லை என்பதும் தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை அவை அதற்குள் அகப்படுவதுமில்லை என்பதுமே

அற்புதம்!

Poornima Saravana kumar said...

கவிதை அருமை:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதையை விட குறிப்புகள் என்னைக் கவர்ந்தன.

தமிழ் மதுரம் said...

நண்பரே! வணக்கம்! வழக்கொழிந்து வரும் சொற்களை வழக்கொழியாது பதிந்திட நான் இங்கே அழைப்பவர்களாக

*சூரியனின் நேற்றைய காற்றின் மூலமாகத் தாலாட்டி இன்றும் நேற்றைய காற்றின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் சக பதிவர் ’கிருஷ்ணா’ அவர்களையும்,



*அடுத்து கறுப்பியுடன் காதல் மயக்கத்தில் உலவுகின்ற நண்பர் ’தமிழனையும்,




*கடுப்பைக் கிளப்பும் குறிப்புக்களால் பெண்களிடம் அடி வாங்காது தப்பித்த நண்பர் ‘புல்லட்’ அவர்களையும் அன்போடு அழைக்கின்றேன்.

தமிழ் மதுரம் said...

மிக வெப்பமான பிற்பகல் ஒன்றில்...
என்னவென்று புரியாத சில காரணங்களை
சொன்னவள் என்னைவிட்டு வெளியேறினாள்//


தேவதையின் வர்ணணைகளுக்குள் இத்தனை சொல்லாடல்களா?? அருமையான சொல்லோவியங்கள்...

தமிழ் மதுரம் said...

கொண்டாடுவதற்கு எதுவுமேயில்லாத நாளொன்றின் கடைசியில்
செம்மஞ்சள் நிறத்தின் வானத்தை
மிகக்கசப்பான வெளிநாட்டு மதுவொன்றின்
துணையோடு சபித்துக்கொண்டிருந்தேன்//


கற்பனை உயர்வு நவிற்சி அணியினூடு அழகு பயக்கிறது...
எளிமையான யதார்த்தம் நிரம்பிய அனுபவித்த காதல் ஒன்றின் அழகிய சொல்லாடற் கவிதை....அருமை!

தமிழ் மதுரம் said...

இப்பொழுது அவளுடைய பெயர் கறுப்பி!//


யோ யாரப்பா அந்தக் கறுப்பி?
அது உங்கடை செல்லப் பேரெல்லோ???

Anonymous said...

இதனை அவள் வாசிக்கக்கூடாதென்பது தேவதைகளிடம் நான் வாங்கியிருக்கும் சாபம் ஏன் வரமாயும் இருக்கலாம்//


எனது நண்பி ஒருத்தி மூலம் நான் இப் பதிவைப் படித்தேன்...


என்னைப் பற்றிய கற்பனை கொஞ்சம் ஓவர் தான்? ஏன் நேரில் பார்க்கையில் இப்படி எல்லாம் பேசுவதில்லை?
கற்பனையில் மட்டும் எதேதோ உளறுகிறீர்கள் என்னைப் பற்றி?

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
கலக்கல்!
///இந்தக்கவிதையை படத்தோடு பதிவு செய்யாததற்கு காரணம் கறுப்பியின் புகைப்படங்கள் எதுவும் என்னிடமில்லை என்பதும் தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை அவை அதற்குள் அகப்படுவதுமில்லை என்பதுமே.///

வித்தியாசமான சிந்தனை!

நன்றி தல...

தமிழன்-கறுப்பி... said...

நன்றி திவ்யப்ரியா...

@ செந்தழல் ரவி

நன்றி தழல் அண்ணே...

@yathra
நன்றி யாத்ரா தொடர் வருகைக்கும் பகிர்வுக்கும்..

@ ஆயில்யன்
வாங்க ஆயில்யன் விடுமுறைக்கு பிறகு முதல் பின்னூட்டம்...

@ நன்றி நசயேரயன்..

தமிழன்-கறுப்பி... said...

@ ஹேமா
\\
நீஙகள் சொற்களைக் கோர்க்கும் விதம் ஒரு வித்தியாசம்.ஒரு அழகு.
ஒரு வேளை தேவதையின் ஆக்கிரமிப்பு அதிகம் உங்களோடு.
\\

நன்றி ஹேமா...
எல்லாம் அவள் கொடுத்தது -அதுதான் தமிழ் கொடுத்தது... :)

தமிழன்-கறுப்பி... said...

@ நன்றி ஜமால்...

@ நன்றி புதியவன்..

@ நன்றி முரளி கண்ணன் அண்ணன்.

@ நன்றி பூர்ணிமா பல நாட்களுக்கு பிறகு...

தமிழன்-கறுப்பி... said...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
\\
கவிதையை விட குறிப்புகள் என்னைக் கவர்ந்தன.
\\

நன்றி சுந்தர் அண்ணன் அடிக்கடி வாங்க...

எனக்கும்தான் அவளைப்பற்றிய குறிப்புகள் அழகாகத்தான் இருக்கிறது நானெழுதும் கவிதைகளைவிட...

தமிழன்-கறுப்பி... said...

@ கமல்

\\
*அடுத்து கறுப்பியுடன் காதல் மயக்கத்தில் உலவுகின்ற நண்பர் ’தமிழனையும்,
\\
நன்றி கமல் முயற்சிக்கிறேன்...

\\
யோ யாரப்பா அந்தக் கறுப்பி?
அது உங்கடை செல்லப் பேரெல்லோ???
\\

கறுப்பி!
அவள் அற்புதங்களால் நிறைந்தவள்..!
உம்... அது என்னுடைய செல்லப்பெயர்தான் ஆனால் எனக்கல்ல...

:)

தமிழன்-கறுப்பி... said...

கறுப்பி said...
இதனை அவள் வாசிக்கக்கூடாதென்பது தேவதைகளிடம் நான் வாங்கியிருக்கும் சாபம் ஏன் வரமாயும் இருக்கலாம்//


எனது நண்பி ஒருத்தி மூலம் நான் இப் பதிவைப் படித்தேன்...


என்னைப் பற்றிய கற்பனை கொஞ்சம் ஓவர் தான்? ஏன் நேரில் பார்க்கையில் இப்படி எல்லாம் பேசுவதில்லை?
கற்பனையில் மட்டும் எதேதோ உளறுகிறீர்கள் என்னைப் பற்றி?
\\

இது கறுப்பியின் மொழியல்ல இருந்தாலும் வா கறுப்பி நீ வருவாய் என்று எனக்கு தெரியும்...

இந்த பின்னூட்டம் எழுதியவருக்கு நன்றி...

சந்தனமுல்லை said...

மிக அருமையான அழகான கவிதை!
பி.கு கவிதைக்கு இன்னும் சுவாரசியமூட்டுகின்றன்!

சந்தனமுல்லை said...

//வெளியேறிய தருணங்களில் அவள்...
வாழ்க்கை வசப்படுகிற அற்புதங்களை நிகழ்த்தியவள்!
இன்னொரு வகையாய் அழைக்கையில் தேவதை!//

ரசித்தேன்!

பாலா said...

மறைக்கப்பட்ட மார்புகளின் மத்தியில் இருந்தொரு
மலரை பரிசு செய்தாள்!
எனக்கும் பிரியம் செய்யத்தெரியுமென உணர்த்துவதற்கு
விரல்களை துணைக்ழைக்வேண்டிய அவசியம்

rasithen anna

பாலா said...

ஆக்கிரமிப்பு செய்கிற விரல்களை சிறையெடுத்தவள்
மிக நீளமான முத்தங்களை பரிமாறுகிற
உன்னதங்களை செயலாற்றினாள்...

arputham