Wednesday, April 23, 2008

இரண்டு வருடமாய் ஒரு பாடல்...

திகிரி ஒழுங்கையின் உறவுகள்

இடம்பெயர்ந்திருந்தாலும்

தில்லையம்பதி வீட்டடின் ஞாபகச்சுவர்களில்

நீயும் நானும் சந்தித்த நினைவுகளை

தீட்டிக்கொண்டிருக்கிறது காற்று...


நெருக்கமான தருணங்களின் சுகங்களை

தெரு முழுவதும் வாசங்களாய் வீசிக்கொண்டிருக்கிறது

முன் வாசல் மல்லிகைப்பந்தல்...


ஊடிக்கொண்டே கூடிய சந்தர்ப்பங்களையும்

சிலாகித்த சிருங்காரப்பொழுதுகளையும்

எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கிறது

நாம் நடந்து கொண்டே கதைத்த

ஒழுங்கை மணல்...


எதிர்பாராமல் உன்னை நான்

அடித்துவிட்ட அந்த

நெகிழ்ச்சியின் நெருக்கத்தில்

நீளமாய் விலகி விலகித் தழுவிய

நாளுக்காய் பூக்களை மறக்காமல் தருகிறது

வேலியோரத்து பூவரசுகள்...

சந்தித்த நாட்கள் எல்லாமே இருவரும்

சாய்ந்து நின்று இலைகள் பிய்துப்போட்ட

சுவரோரத்து மயிர்கொட்டி பழ மரம்

சாய்ந்து கொண்டிருக்கிறது

நம் பிரிவின் துயர் தாளாது...


இருந்தாலும்... இன்றோடு

இரண்டு வருடங்கள் கடந்து விட்டாலும்

கடைசியாய் கிடைத்த தகவலின் படி

காதல் இசைக்கிற ஒரு பாடல் காற்றில்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது

இன்னமும் ஈரமாய்...


நானும் நீயும் வாழ்ந்த ஊரில்

நம் வருகைக்காய்...

14 comments:

Praveena said...

அழகான உணர்வுகளின் வெளிப்பாடு ஏக்கங்களுடன் கவிதையாக வடித்திருக்கிறீர்கள், நன்றாக உள்ளது.

\மல்லகைப்பந்தல்...\

இது மல்லிகைப்பந்தலா??

ரசிகன் said...

//தில்லையம்பதி வீட்டடின் ஞாபகச்சுவர்களில்

நீயும் நானும் சந்தித்த நினைவுகளை

தீட்டிக்கொண்டிருக்கிறது காற்று...//


//
ஊடிக்கொண்டே கூடிய சந்தர்ப்பங்களையும்//

அருமை

ரசிகன் said...

//கடைசியாய் கிடைத்த தகவலின் படி

காதல் இசைக்கிற ஒரு பாடல் காற்றில்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது

இன்னமும் ஈரமாய்...//

கவிதை கலக்கலா இருக்கு மாமேய்:)

ரசிகன் said...

//சந்தித்த நாட்கள் எல்லாமே இருவரும்

சாய்ந்து நின்று இலைகள் பிய்துப்போட்ட

சுவரோரத்து மயிர்கொட்டி பழ மரம்//

அடடா...

கற்பனை செய்ய வைக்கும் வரிகள்.

தமிழன்-கறுப்பி... said...

///அழகான உணர்வுகளின் வெளிப்பாடு ஏக்கங்களுடன் கவிதையாக வடித்திருக்கிறீர்கள், நன்றாக உள்ளது.

\மல்லகைப்பந்தல்...\

இது மல்லிகைப்பந்தலா??///

வாங்க ஜெனி நன்றி தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்..

மல்லிகைப்பந்தல்தான் நன்றி சுட்டிக்காட்டியதற்கு மாற்றிவிட்டேன்...

தமிழன்-கறுப்பி... said...

ரசிகன்... said...

//தில்லையம்பதி வீட்டடின் ஞாபகச்சுவர்களில்

நீயும் நானும் சந்தித்த நினைவுகளை

தீட்டிக்கொண்டிருக்கிறது காற்று...//


//
ஊடிக்கொண்டே கூடிய சந்தர்ப்பங்களையும்//

அருமை///////

வாங்க ரசிகன் உங்க முகம் பார்த்தாலே ஒரு சந்தோசமுங்க...

தமிழன்-கறுப்பி... said...

ரசிகன்...said...

/////கடைசியாய் கிடைத்த தகவலின் படி

காதல் இசைக்கிற ஒரு பாடல் காற்றில்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது

இன்னமும் ஈரமாய்...//

கவிதை கலக்கலா இருக்கு மாமேய்:)///


நன்றி நன்றி தல..

நீங்க பாராட்ட நாங்க குடுத்து வைக்கணும்...

தமிழன்-கறுப்பி... said...

ரசிகன்...said...

\\\//சந்தித்த நாட்கள் எல்லாமே இருவரும்

சாய்ந்து நின்று இலைகள் பிய்துப்போட்ட

சுவரோரத்து மயிர்கொட்டி பழ மரம்//

அடடா...

கற்பனை செய்ய வைக்கும் வரிகள்///

நன்றி நன்றி... ரசிகன் உங்கள் வருகைக்கும் உற்சாகமான கருத்துக்களுக்கும்:)))

Kumiththa said...

Nice kavithai..keep up your good work!

Divya said...

Excuse me sir,sorry for my late attendence!

chumma kavithai full of feelings aa irukuthu tamilan, dhool!!

தமிழன்-கறுப்பி... said...

///Excuse me sir,sorry for my late attendence!

chumma kavithai full of feelings aa irukuthu tamilan, dhool!!///


வாங்க மேடம்:)
நன்றி நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

Kumiththa..Said...

///Nice kavithai..keep up your good work!///

thanksss

தமிழ்நதி said...

காதல் மனங்களை மலர்த்துகிறதோ... நெகிழ்த்துகிறதோ... கவிதை எழுதவைத்துவிடுகிறது:)

தமிழன்-கறுப்பி... said...

////காதல் மனங்களை மலர்த்துகிறதோ... நெகிழ்த்துகிறதோ... கவிதை எழுதவைத்துவிடுகிறது:)///


வாங்கோ தமிழ்நதி நீங்கள் என் பதிவுகளுக்கு வந்ததில் பெருமைப்படுகிறேன் நிறைய மகிழ்ச்சி நீங்க வந்ததற்கும் கருத்து சொன்னதற்கும்...