Thursday, March 27, 2008

தாவணி கட்டிய தேவதை...


உன் தாவணிகள்


ஏன் இவ்வளவு அழகாயிருக்கிறது தெரியுமா


நீ எந்த வண்ணத்தில் உடுத்திருந்தாலும்


நீ பூசுகிற வெட்கத்தின் வண்ணத்தை


அணிந்து கொள்கின்றன


உன் தாவணிகள்...


என்னது உனக்கு சேலை கட்டத்தெரியாதா


சரி நீ கஷ்டப்பட வேண்டாம்
ஏதாவது ஒரு சேலையை


எடுத்து உன்னை சுற்றிக்கொள்


அதுவாகவே உன்னை கட்டிக்கொள்ளும்...


இறுகக் கட்டியிருக்கிறாய் என்பதால் மடடுமல்ல


உன்னை கட்டியிருக்கிறோம்


என்கிற கர்வத்தில்


அழகாயிருக்கிறது தாவணி...





பாவாடை தாவணியில் வெளியே வரும்பொழுதில்


அவிழ்ந்து விடுமோ என்று பயப்படுகிறாயா


கவலையை விடு


உன்னை தழுவுகிற சுகத்தை விட்டு


அவை நழுவி விடமாட்டா...






உன் தோட்டத்து மல்லிகைப் பூக்களிடமிருந்து

எனக்கொரு முறைப்பாடு

நீ புடைவை கட்டினால் மட்டும்தான்

தங்களைக் கண்டுகொள்கிறாயாம் அதனால்

உன்னை இனி ஒவ்வொரு நாளும்

புடைவை கட்டும்படிக்கு சொல்ல வேண்டுமாம் நான்..

உன் புடைவைகளும் இதைத்தான் சொல்கின்றன எனக்கு...




உன்னைத் தீண்ட முடியாத கோபத்தில்


காற்று தாவணியோடு மல்லுக்கட்டுவதைப்பார்த்து


புன்னகைக்கிறது உன் கூந்தல் பூக்கள்


அவையிரண்டையும் பார்க்கையில்


தவிக்கும் என்னைப்பார்த்து


குறும்பாக சிரிக்கிறது


என் காதல்...







காற்றில் அசைகின்ற தாவணிக்கு


அப்படி என்ன மயக்கமோ


ஒரு வேளை உன்னை தழுவிக்கொண்ட


மயக்கம் தருகிற போதையோ


இப்படி தழைகிறது...


மாமாவின் மனசுல தொடர் புகழ் திவ்யா(பாவனா தொடர்)
http://manasukulmaththaapu.blogspot.com/2008/03/4.html
நளினமான காதல் உரையாடல்கள் மூலம் வலையுலக இளம் நெஞசங்களை கொள்ளை கொண்டிருக்கும் திவ்யா விடம் பாவனா படங்கள் கேட்டிருந்தேன் அவர் இதுக்கு மிஞ்சி என்னால தொடரை இழுக்க முடியாது நான் என்ன நெடுந்தொடரா எழுதுகிறேன், கூகிளில் தேடினால் கிடைக்கும் என்றார் அவருக்காக சில பாவனா படங்கள், படம் மட்டும் போட்டால் நல்லாயிருக்காது என்பதால் சில வார்த்தைகளும் எழுதியிருக்கிறேன்...
படங்கள் எல்லாம் திவ்யாவுக்கு
வார்த்தைகள் எல்லாம் தேவதைக்கு...

25 comments:

நிவிஷா..... said...

warey wowwwwwwwwwww,
super 'thaavani' kavithaigal,

சும்மா நச்சு நச்சுன்னு இருக்கு ஒவ்வொரு வரிகளும்!!

நிவிஷா..... said...

\\என்னது உனக்கு சேலை கட்டத்தெரியாதா

சரி நீ கஷ்டப்பட வேண்டாம் ஏதாவது ஒரு சேலையை

எடுத்து உன்னை சுற்றிக்கொள்

அதுவாகவே உன்னை கட்டிக்கொள்ளும்...\\

Ultimate.......wonderful tamilan,

romba rombaaaaaaa rasithein!

நிவிஷா..... said...

\\பாவாடை தாவணியில் வெளியே வரும்பொழுதில்

அவிழ்ந்து விடுமோ என்று பயப்படுகிறாயா

கவலையை விடு

உன்னை தழுவுகிற சுகத்தை விட்டு

அவை நழுவி விடமாட்டா...\\


aahaaaaaaa aahaaaaaaa, kalakiteenga Tamilan!!

நிவிஷா..... said...

\\உன்னைத் தீண்ட முடியாத கோபத்தில்

காற்று தாவணியோடு மல்லுக்கட்டுவதைப்பார்த்து

புன்னகைக்கிறது உன் கூந்தல் பூக்கள்

அவையிரண்டையும் பார்க்கையில்

தவிக்கும் என்னைப்பார்த்து

குறும்பாக சிரிக்கிறது

என் காதல்...\\

அழகோ அழகு:)))

நிவிஷா..... said...

\\படங்கள் எல்லாம் திவ்யாவுக்குவார்த்தைகள் எல்லாம் அத்தை தேவதைக்கு...\\

திவ்யாக்கா பாவனா படம் போட்டு உங்களை கவிதை எழுத வைச்சுட்டாங்களா??

படங்களும், கவிதையும் சூப்பர்:)))

நட்போடு
நிவிஷா.

தமிழன்-கறுப்பி... said...

//warey wowwwwwwwwwww,
super 'thaavani' kavithaigal,

சும்மா நச்சு நச்சுன்னு இருக்கு ஒவ்வொரு வரிகளும்!!//

வாங்க நிவிஷா நன்றி நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

\என்னது உனக்கு சேலை கட்டத்தெரியாதா

சரி நீ கஷ்டப்பட வேண்டாம் ஏதாவது ஒரு சேலையை

எடுத்து உன்னை சுற்றிக்கொள்

அதுவாகவே உன்னை கட்டிக்கொள்ளும்...\\

//Ultimate.......wonderful tamilan,

romba rombaaaaaaa rasithein!//

அவ்வளவு நல்லாவா இருக்கு...:))))))

என்ன இருந்தாலும் புடைவையில் பெண்மை ஒரு தனி அழகுதான் இல்லையா, அதுவும் மனதுக்கு நெருக்கமான பெண்மை என்றால் அவள் தேவதை தானே...

தமிழன்-கறுப்பி... said...

நிவிஷா சொன்னது...

//திவ்யாக்கா பாவனா படம் போட்டு உங்களை கவிதை எழுத வைச்சுட்டாங்களா??

படங்களும், கவிதையும் சூப்பர்:)))//

திவ்யா அக்காவா; கவிஞர், காதல் தொடர் புகழ் திவ்யான்னு சொல்லுங்க
(நிஜமாவே கலக்குறாங்க)

தமிழன்-கறுப்பி... said...

//aahaaaaaaa aahaaaaaaa, kalakiteenga Tamilan!!//

//அழகோ அழகு:)))//


நன்றி நிவிஷா உங்கள் தாராளமான பாராட்டுகளுக்கும் உற்சாகத்துக்கும்...

Divya said...

கவிதைக்காக பாவனா படங்களா??
பாவனாவின் படங்களுக்காக ...கவிதையா??

கவிதை நல்லாயிருக்குதுங்க தமிழன்!!


\\திவ்யா விடம் பாவனா படங்கள் கேட்டிருந்தேன் அவர் இதுக்கு மிஞ்சி என்னால தொடரை இழுக்க முடியாது நான் என்ன நெடுந்தொடரா எழுதுகிறேன், கூகிளில் தேடினால் கிடைக்கும் என்றார் அவருக்காக சில பாவனா படங்கள்\\

[பாவனா படம் எப்போ என்கிட்ட கேட்டு , நான் கூகிளில் தேட சொன்னேன்???......ஸாரி எனக்கு ஞாபகம் இல்லீங்க தமிழன்....anyways, கவிதை ரொம்ப அழகா இருக்குதுங்க, என் வலைதளம் லிங்க் கொடுத்து ஒரு விளம்பரம் கொடுத்துட்டீங்க நன்றி]

நிஜமா நல்லவன் said...

செம கலக்கலா இருக்கு.

தமிழன்-கறுப்பி... said...

காதல் கவிதாயினி திவ்யா சொன்னது...

//[பாவனா படம் எப்போ என்கிட்ட கேட்டு , நான் கூகிளில் தேட சொன்னேன்???......ஸாரி எனக்கு ஞாபகம் இல்லீங்க தமிழன்....anyways, கவிதை ரொம்ப அழகா இருக்குதுங்க, என் வலைதளம் லிங்க் கொடுத்து ஒரு விளம்பரம் கொடுத்துட்டீங்க நன்றி]//

மாமாவின் மனசுல- 4 இல் என்னோட பின்னூட்டம், உங்க பதில் பாருங்க...

நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

நிஜமாநல்லவன் சொன்னது...

//செம கலக்கலா இருக்கு.//

பாவனா படங்களா:))))?

(நன்றிங்க...)

நவீன் ப்ரகாஷ் said...

தமிழன்....
தாவணியும்... கட்டிய தேவதையும் அவளுக்கு நீங்கள் கட்டிய தாவணிக்கவிதைகளும்... மனதைத் தழுவிக்கொள்கின்றன... :)))

நிஜமா நல்லவன் said...

////தமிழன்... said...
நிஜமாநல்லவன் சொன்னது...

//செம கலக்கலா இருக்கு.//

பாவனா படங்களா:))))?////


:))

தமிழன்-கறுப்பி... said...

நவீன் அண்ணன் சொன்னது...

///தமிழன்....
தாவணியும்... கட்டிய தேவதையும் அவளுக்கு நீங்கள் கட்டிய தாவணிக்கவிதைகளும்... மனதைத் தழுவிக்கொள்கின்றன... :)))///


வாங்க அண்ணன் உங்க பின்னூட்டமும் ரொம்ப அழகு...

தமிழன்-கறுப்பி... said...

நிஜமாநல்லவன் சொன்னது...

////தமிழன்... said...
நிஜமாநல்லவன் சொன்னது...

//செம கலக்கலா இருக்கு.//

பாவனா படங்களா:))))?////


:))///

எதுக்குப்பா சிரிக்கிற உண்மையைத்தான சொல்லியிருக்க:)))

மங்களூர் சிவா said...

/
படம் மட்டும் போட்டால் நல்லாயிருக்காது என்பதால் சில வார்த்தைகளும் எழுதியிருக்கிறேன்...
/

சூப்பர் கலக்குங்க


/
படங்கள் எல்லாம் திவ்யாவுக்கு
வார்த்தைகள் எல்லாம் தேவதைக்கு...
/
வார்த்தைகளா முக்கியம்???

தமிழன்-கறுப்பி... said...

siva said...

////
படம் மட்டும் போட்டால் நல்லாயிருக்காது என்பதால் சில வார்த்தைகளும் எழுதியிருக்கிறேன்...
/

சூப்பர் கலக்குங்க///

நன்றி நன்றி...

/
படங்கள் எல்லாம் திவ்யாவுக்கு
வார்த்தைகள் எல்லாம் தேவதைக்கு...
/
வார்த்தைகளா முக்கியம்???///

அட தல தலதான்...

ஆயில்யன் said...

ஒரு தாவணி கட்டிய கவிதையைப் பற்றி உங்களின் கவிதைகள் கலக்கல்தான் :)))

மங்களூர் சிவா said...

//
படம் மட்டும் போட்டால் நல்லாயிருக்காது என்பதால் சில வார்த்தைகளும் எழுதியிருக்கிறேன்...
//

லே மக்கா இது ஓவர் தன்னடக்கம்!!!

மங்களூர் சிவா said...

இந்த லிங்க் ஆயில்யன் பதிவுல புடிச்சி வந்து பாத்தா என்னடா படிச்சா மாதிரியே இருக்குன்னு நினைச்சேன்!!

மார்ச்ல போட்ட பதிவா??

இப்ப படிச்சாலும் ஜிவ்வ்வ்வ்வ்வுனு இருக்கு!!

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன்...சொன்னது....

///ஒரு தாவணி கட்டிய கவிதையைப் பற்றி உங்களின் கவிதைகள் கலக்கல்தான் :)))////

நன்றி ஆயில்யன் உங்கள் முதல்வருகைக்கும் கருத்துக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா...சொன்னது...

//
படம் மட்டும் போட்டால் நல்லாயிருக்காது என்பதால் சில வார்த்தைகளும் எழுதியிருக்கிறேன்...
//

லே மக்கா இது ஓவர் தன்னடக்கம்!!!
//

:)

///இந்த லிங்க் ஆயில்யன் பதிவுல புடிச்சி வந்து பாத்தா என்னடா படிச்சா மாதிரியே இருக்குன்னு நினைச்சேன்!!

மார்ச்ல போட்ட பதிவா??

இப்ப படிச்சாலும் ஜிவ்வ்வ்வ்வ்வுனு இருக்கு!!///

தல தாவணி கட்டின தேவதைகள் ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வுனுதானே இருக்கும்...

சீமாச்சு.. said...

தமிழன், கவிதைகள் அருமை.. உங்களுக்காக இன்னொரு பாவனா படம்.

http://seemachu.blogspot.com/2008/06/61.html