Sunday, February 17, 2008

காதல் வாரம்...




*உன்னுடைய
உடைகள் காய்கிற
கொடியைச்சுற்றி
பட்டாம்பூச்சிகளுக்கு என்ன வேலை...

*உனக்கு
ஓட்டம் காட்டுகிற
ஆட்டுக்குட்டியை ரசிக்கிறாய் நீ
ஆட்டுக்குட்டியை விரட்டும்
மான்குட்டியை ரசிக்கிறேன் நான்

*நீ
முத்தம் கொடுத்துப்போன
சோளக்கொல்லை பொம்மையை
காவல் காக்கிறேன்நான்...

*எதை பார்க்கையில்
உன் ஞாபகம் வருமென்கிறாய்
எதுவுமே உன்னைப்போல இல்லை
என் காதலைத்தவிர...

*உன்னைப்பார்க்கும்வரையில்
நான் உயிரோடிருந்தேன்
இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...




6 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//உன்னுடைய
உடைகள் காய்கிற
கொடியைச்சுற்றி
பட்டாம்பூச்சிகளுக்கு என்ன வேலை...//

//உன்னைப்பார்க்கும்வரையில்
நான் உயிரோடிருந்தேன்
இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...//

அருமை..ரசிச்சுப் படிச்சேன்..

தமிழன்-கறுப்பி... said...

நன்றி ரவிசங்கர்
உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...

Divya said...

\*உன்னைப்பார்க்கும்வரையில்
நான் உயிரோடிருந்தேன்
இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...\

சும்மா நச்சுன்னு இருக்குது இந்த வரிகள்!!
பாராட்டுக்கள்!

நளாயினி said...

காதல் வாரத்தை நன்றாகவே கொண்டாடி இருக்கிறீர்கள். இன்று தான் இக் கவிதைகளை பார்க்க முடிந்தது. . நிறைய முன்னேற்றம் கவிதைகளில் தெரிகிறது. பொறாமையாக இருக்கிறது.

நளாயினிக்கு பொறாமை வருமா. நம்ப முடியேலை .

தமிழன்-கறுப்பி... said...

நன்றி நளாயினி நன்றி...


"நளாயினிக்கு பொறாமை வருமா. நம்ப முடியேலை"

அந்த அளவுக்கெல்லாம் எனக்கு எழுத வராதுங்கோ....

தமிழன்-கறுப்பி... said...

நன்றி திவ்யா உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...