
உன்
பார்வை பட்டதும் கரைகிறேனே
ஸ்பரிசம் பட்டதும் காற்றாகிறேனே
இதுற்கு பெயர்தான்
காதல் ரசாயனமோ...
என்னைப்பார்க்க வரும்பொழுது
உன் கண்களுக்கு சொல்லிவை
எதுவும் பேசக்கூடாதென்று - அவை
உன்னைப்பேச விடுவதேயில்லை...
உன்னைப்பார்க்க வரும்பொழுது
நான் எவ்வளவு சொன்னாலும்
கேட்பதில்லை என் உதடுகள் - அவை
என்னை பேச விடுவதேயில்லை...
எத்தனை முறைதான் சொல்வீர்கள்
இன்னும் கொஞ்ச நேரம் என்று - நீயும்தான்
எத்தனை முறை சொல்லிவிட்டாய்
நான் போகவேண்டும் நேரமாகிறது என்று...
வந்ததிலிருந்து இது
எத்தனையாவது முத்தம் என்று
சினுங்கலாக மறுக்கிறாய்
நான் முத்தம் கேட்பதே
இந்த சினுங்கல் கேட்கத்தானே...
எவ்வளவு காதலித்துவிட்டோம்
இந்த கொஞ்ச நாட்களில்
கொஞ்சம் மெதுவாக காதலிக்கலாம் என்கிறாய்
அது சரி நீ சொல்வது
அடுத்த பிறவியில்தானே...
(சரியான நேரத்திற்குள் இந்தப் பதிவை போட முடியவில்லை காதல் எப்பொழுதும் என்னோடு இப்படித்தான் இருக்கிறது இருந்தாலும் காதல் கொண்ட எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்...)
4 comments:
//என்னைப்பார்க்க வரும்பொழுது
உன் கண்களுக்கு சொல்லிவை
எதுவும் பேசக்கூடாதென்று - அவை
உன்னைப்பேச விடுவதேயில்லை...
உன்னைப்பார்க்க வரும்பொழுது
நான் எவ்வளவு சொன்னாலும்
கேட்பதில்லை என் உதடுகள் - அவை
என்னை பேச விடுவதேயில்லை...
//
அது... :) நல்லா எழுதி இருக்கீங்க..
"அது... :) நல்லா எழுதி இருக்கீங்க"
தெரியாதா Ravi அது... நல்லாத்தான் இருக்கும்...
Whole kavithaiyum super! eppidi ippidi nalla eluthiringa?
///Whole kavithaiyum super! eppidi ippidi nalla eluthiringa?///
நன்றி குமித்தா உங்கள் பாராட்டுக்களுக்கு
அது எல்லாம் அவள்
கொடுத்த காதல்...:)
Post a Comment