*
நான் தூங்காத இரவுகளில்
தூக்கம் தருவதும்
நான் தூங்கும் இரவுகளில்
தூக்கம் பறிப்பதும
ஒரே விசயம்தான்
அது நீதான்...
*
நான் தனியாக நடக்கிறேன்
எனக்கு இரண்டு நிழல்கள்
நாம் சேர்ந்து நடக்கிறோம்
நம் இருவருக்கும் ஒரே நிழல்...
*
நான் உன்னை அழைத்துப்போகிறேன் என்றால்
நீ வரும்வரை அழைத்துப்போகிறேன்- பின்னர்
உன் நினைவுகளோடு போவேன்
நான் உன்னோடு வருகிறேன் என்றால்
நீ சொல்லும்வரை வருகிறேன்- பின்னர்
உன் சுவடுகளில் நடப்பேன்
நாம் சேர்ந்தே போகலாம் என்றால்
வா முடிவிலி வரைக்கும் போவோம்...
3 comments:
\\நான் தூங்காத இரவுகளில்
தூக்கம் தருவதும்
நான் தூங்கும் இரவுகளில்
தூக்கம் பறிப்பதும
ஒரே விசயம்தான்
அது நீதான்...\\
சூப்பராயிருக்கு இவ்வரிகள்!
நன்றி திவ்யா என்ன இருந்தாலும் உங்களுடைய நளிளமான உரையாடல்கள் போல வருமா
//நான் தனியாக நடக்கிறேன்
எனக்கு இரண்டு நிழல்கள்
நாம் சேர்ந்து நடக்கிறோம்
நம் இருவருக்கும் ஒரே நிழல்...//
நச் :)
Post a Comment