அதிகம் பயன் படுத்தியிராத அந்த தெருவுக்கு வருகையில்
புதியதாயிருந்தது அந்த தெருவும் எல்லை வேலிகளும்
நெருக்கமானதும் சீரானதுமான
கிளிசறியாக் கதியால்கள்...
வளவுக்குள்ளேயே மரமிருந்தால்
இவை கிடைப்பது கொஞ்சம் இலகு,
அங்கங்கே பூவரசங்கதியால்கள்...
இவை சீரானதாய் கிடைப்பது அரிதென்றாலும்
வேலிக்கு பலம் இவைகள்தான்,
இடைக்கு இடை வாதநாராணி வைத்து
அடுக்கி மட்டை வரியப்பட்ட வேலி
இதை தாங்கிக்கொண்டிருந்தது...
பழைய நுணாவொன்றும் பூவரசுகள இரண்டும்,
எதிரேயயிருந்தது சாயம்போன சுண்ணாம்பும்
காய்ந்து போன பாசித்திட்டுகளுமாய் முழுநீளச் சுவர்!
விரல் விட்டு எண்ணிவிடத்தக்க
எண்ணிக்கையில் பார்வைகள்,
மிக அரிதான மென் முறுவல்கள்,
மிக அவசரமாக மாறுகிற முகபவாங்களோடு
என்னைக்கடக்கிற தருணங்கள்,
இத்தனையோடும் நம்மிருவரையும்
சுமந்து கொண்டிருந்தது காதல்,
வேடிக்கை பார்த்தபடி
வளர்ந்து கொண்டிருந்தன கதியால்கள்,
மிக நெருக்கமான வாசனைகளோடிருந்தது
பழகிப்போன கலட்டி ஒழுங்கை!
சில வார்த்தைகள்,
சில நிமிட சந்திப்புகளுக்கான
சில மணிநேர காத்திருப்புகள்,
சில கடிதங்கள்,
ஒருவர் மற்றவருக்கென்றேயான புன்னகைகள்,
பழைய பூவரச மரங்களின் இருளில்
பொழுது படுகிற வேளையில் நிகழந்த
பரிமாறத்தெரியாத முத்தங்கள்,
மிகப்பிடித்தமான பூவரசம் பூக்கள்,
பகல் நேரத்து பறவைகள்,
நுணா மரத்து குயில்கள்,
காதல் தீராத....
..........
தீராத...?
இவைகளை இப்படியே விட்டுவிட்டு
எங்கே போனான் எழுதியவன் ?!
பச்சை நிறங்களில்
மேகங்களோடு கதை பேசுகிற
மரங்கள் காட்டுகிற ஜன்னல் கொண்டு
அறைகள் செய்த நுவரெலியா
இலங்கையின்
அழகான கடற்கரைகளும்
பழைய வரலாறுகளும்
அமைந்த திருகோணமலை..
அல்லது கடல் கடந்தானோ
ஒட்டகங்கள் கனவில் வருகிறதுதும்
மோசே நடக்க வழிவிட்டதுமான செங்கடலின்
அலைகளின் கரையில் இருக்கிற அரேபிய தேசம்
அவன் எங்கேயேனும் இருக்கட்டும்
அவன் இருக்கிறான் அது போதும்!
காலம் சில பருவ மாற்றங்களை கடந்திருக்கிறது
இப்பொழுது நாமந்த வீதிக்குள் நுழையலாம்...
பழைய நுணாவும் பூவரசும் அப்படியே இருக்க
அவற்றை உள்ளே வைத்து மறைத்திருந்தது
புதுசாய் கட்டி பூசப்படாமலிருந்த மதில்,
பூவரச மரங்களுக்கு என்ன தெரியும்
மரங்கொள்ளாமல் பூத்திருந்தன
வழக்கம்போல நுணா
குருவிச்சையாகிக்கொண்டிருந்தது...!
\\
இந்தக்கவிதை(கவிதைகள் இப்படியா இருக்கும்) நீளமாக இருப்பதனால் ஒரு கதையாகவும் இருக்கலாம்.
\\
ஒற்றைப் பூவரசம் பூவைச்சூடியவள் என்கிற கதையைப்பற்றி ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கக்கூடும் அந்தப்பெருங்கதையின் சிறுகுறிப்பாய் இது இருக்கலாம் அல்லது ஒரு பெருங்கதைக்கான மிகச்சுருங்கிய வடிவமாய் இது இருக்கலாம்.
\\
மூன்றாவது குறிப்பை எப்படி எழுதுவதென தெரியவில்லை.
19 comments:
தெருவேவா!
தெருவுக்குள்ளே
தேர் ஓட்டி வந்தாச்சு
ம்ம்ம்
கதையோ
க(வி)தையோ
பயணிக்க முடிந்தது.
தல யாழ்த்தமிழ் கொஞ்சம் கஷ்டமா இருக்கு தல.. :)
கதியால் என்றால் மரம் என்று புரிந்துக்கொள்கிறேன்..சரியா??
கவிதைக்கதை நல்லாருக்கு..பின்குறிப்புகள் சுவாரசியமூட்டுகின்றன!
நட்புடன் ஜமால் said...
தெருவேவா!
\\
தெருவுக்குள்ளே
தேர் ஓட்டி வந்தாச்சு
ம்ம்ம்
கதையோ
க(வி)தையோ
பயணிக்க முடிந்தது.
\\
என்ன ஜமால் எழுதி முடிக்க முன்னம் பின்னூட்டம் எழுதிவிட்டீர்கள் அன்பிற்கும் உற்சாகத்துக்கும் நன்றி..
தமிழ் பிரியன் said...
\\
தல யாழ்த்தமிழ் கொஞ்சம் கஷ்டமா இருக்கு தல.. :)
\\
இதை இப்படியே மதுரைத்தமிழில் எழுதி அனுப்பறேன்.. :)
என்னென்ன வார்த்தைகள்னு சொல்லுங்க கருத்தை சொல்றேன்..
சந்தனமுல்லை said...
\\
கதியால் என்றால் மரம் என்று புரிந்துக்கொள்கிறேன்..சரியா??
கவிதைக்கதை நல்லாருக்கு..பின்குறிப்புகள் சுவாரசியமூட்டுகின்றன!
\\
ஆமாங்க..
வேலி அடைப்பதற்கு பயன் படுத்தப்படும் கிளைத்தடிகள்...
சுமந்து கொண்டிருந்தது காதல்,
வேடிக்கை பார்த்தபடி
வளர்ந்து கொண்டிருந்தன கதியால்கள்,//
இன்றும் ஒட்டகங்களின் தேசத்தில் இருந்தும் ஊர் நினைவுகளுடன் கவிதையைப் படைக்கிறீர்கள் என்பது மிக்க மகிழ்ச்சியே....
கவிதை ஊர் நினைவு கலந்த ஞாபகச் சிதறல்...!
கவிதை அழகாய் தவிப்பாய் துடிப்புடனிருக்கிறது, அருமை,
//இவைகளை இப்படியே விட்டுவிட்டு
எங்கே போனான் எழுதியவன் ?!//
இம்மாதிரி கவிதையில் கையாளப்படும் உத்திகள் கவிதைகளை தத்துவத்தளத்திற்கு உயர்த்தி பன்முக தரிசனங்களையளிக்கிறது. வாசக சாத்தியங்களை அதிகப்படுத்துகிறது.
மிகநன்று.
தமிழன் அப்பிடியே கலட்டி ஒழுங்கைக்குக் கூட்டிக்கொண்டு போய்ட்டீங்கள்.பூவரசும்,
வாதநாராணியும்,குவிச்சையாகிக்
கொண்டிருக்கும் நுணாவுமாய்.ஊர் வாசம் வருது காத்தில.
பாலவனத்திலயும் கறுப்பி கலைச்சுக் கலைச்சு கவிதை எழுத வைக்கிறா உங்களை.பருவங்களாலும் தருணங்களாலும் காதலைத் தகர்த்துவிட முடியாதுதானே...!
கதையோ,கவிதையோ
நல்லாருக்கு:-)
@
நன்றி யாத்ரா சும்மா ஒரு முயற்சிதானே...
மூன்றாவதாக முன்னர் வேறு குறிப்பைத்தான் எழுதியிருந்தேன் பிறகு கடைசியில்தான் இப்படி எழுதினேன்...
@
நன்றி ஹேமா யாரது கறுப்பி ;)
@
நன்றி இயற்கை...
புரிந்தும் புரியாமலும், ஆனாலும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது...
உங்களின் எழுத்து நடை.
சில வார்த்தைகள்,
சில நிமிட சந்திப்புகளுக்கான
சில மணிநேர காத்திருப்புகள்,
சில கடிதங்கள்,
ஒருவர் மற்றவருக்கென்றேயான புன்னகைகள்,
பழைய பூவரச மரங்களின் இருளில்
பொழுது படுகிற வேளையில் நிகழந்த
பரிமாறத்தெரியாத முத்தங்கள்,
மிகப்பிடித்தமான பூவரசம் பூக்கள்,
பகல் நேரத்து பறவைகள்,
நுணா மரத்து குயில்கள்,
காதல் தீராத....
..........
தீராத...?/
மிக மிக பிடித்த வரிகள்
//சில வார்த்தைகள்,
சில நிமிட சந்திப்புகளுக்கான
சில மணிநேர காத்திருப்புகள்,
சில கடிதங்கள்,
ஒருவர் மற்றவருக்கென்றேயான புன்னகைகள்,
பழைய பூவரச மரங்களின் இருளில்
பொழுது படுகிற வேளையில் நிகழந்த
பரிமாறத்தெரியாத முத்தங்கள்,
மிகப்பிடித்தமான பூவரசம் பூக்கள்,
பகல் நேரத்து பறவைகள்,
நுணா மரத்து குயில்கள்,
காதல் தீராத....
..........
தீராத...?//
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
வரிகள்...அழகான பதிவு தமிழன்...
@ நன்றி அமித்து அம்மா
@ நன்றி புதியவன்...
பழைய நுணாவும் பூவரசும் அப்படியே இருக்க
அவற்றை உள்ளே வைத்து மறைத்திருந்தது
புதுசாய் கட்டி பூசப்படாமலிருந்த மதில்,
//
அழகுங்க!
சில வார்த்தைகள்,
சில நிமிட சந்திப்புகளுக்கான
சில மணிநேர காத்திருப்புகள்,
சில கடிதங்கள்,
ஒருவர் மற்றவருக்கென்றேயான புன்னகைகள்,
பழைய பூவரச மரங்களின் இருளில்
பொழுது படுகிற வேளையில் நிகழந்த
பரிமாறத்தெரியாத முத்தங்கள்,
மிகப்பிடித்தமான பூவரசம் பூக்கள்,
பகல் நேரத்து பறவைகள்,
நுணா மரத்து குயில்கள்,
காதல் தீராத....
..........
தீராத...?
//
அற்புதமான வரிகள்!!
காதல் க[வி]தை அருமையாக இருக்கிறது தமிழன்!!
தலைப்பு ரொம்ப பிடிச்சிருக்கு:))
தலைப்பு ரெம்ப அழகாக உள்ளது தமிழன்-கறுப்பி!
Post a Comment