Thursday, March 5, 2009

தலைப்புகளற்ற குறிப்புகள் - 05-03-09.

பல நாட்களுக்கு என்ன சில மாதங்களுக்கு பிறகு காலை நேரப்பணிக்கு தற்செயலாய் வந்திருக்கிறேன் உண்மைதான் உற்சாகமாய்தான் இருக்கிறது காலை நேரத்து பொழுதுகளும், அலுவலகமும், பணிகளும், ஏன் தமிழ் மணமும் பதிவுகளும் கூட நான் பதிவுகளை தவறவிடுவதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்; எப்பொழுதும் இரவுப்பணியில் இருப்பது! ஆனாலும் இரவுப்பணி எனக்கு வேறொரு உலகம் போல இருக்கிற காரணத்தில் நெருக்கமாய் இருக்கிறது. தொடர்ச்சியாய் நின்ற நிலையிலேயே இணையத்தில் மேய்வதில் முதுகு வலியும் கால்வலியும் தாங்களும் இருக்கிறோம் என்று அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்கிறன. இருந்தால் என்ன வாசிக்காமல் இருக்க முடிவதில்லை,
இணையம் இல்லாமல் இனிமேல் முடியாது.

______________________________________________________________________________

வோல்ட்டர் வெற்றி வேல் படத்தை பார்க்கிற சந்தர்ப்பம் மற்றுமொரு முறையாக கடந்த இரவில் அறையிலிருப்பவர்கள் மூலம் கிடைத்தது(இந்தப்படத்தை ஊரில் முதலில் எங்கே பார்த்தேன் என்பது நினைவில் இல்லை ஆனால் நிச்சயமாய் இரவு பதினொரு மணிக்கு பின்னர் என்றுதான் நினைக்கிறேன்). அட தமிழ் சினிமா எவ்வளவு தூரம் வளந்திருக்கிறது இப்பொழுது. ஆனால் என்ன பி.வாசு இன்னும் அப்படியேதான் இருக்கிறார்.
சுகன்யா! ம்ம்ம்... மனதுக்குள் இருக்கிற பதின்மங்களின் ஆரம்பங்களில் பதிந்த உருவங்களில் சுகன்யாவினதும் ஒன்று.


ஒரு பாவாடை சூடும் பூந்தேரு
இது பூவாடை வீசும் பாலாறு!

________________________________________________________________________________

இப்பொழுது கணினியில் இருக்கிற படங்களில் அல்லது (f)பிகர்களில் ஒன்று...





கார்த்திகா என்னை கவர்ந்ததற்கு
காரணங்கள் வேறு சொல்ல வேண்டுமா?

கார்திகா என்கிற பெயரும்,பால்யங்களில் கார்த்திகா என்கிற ஒரு பெண் என் வீட்டுக்கெதிரில் இருந்ததும் மட்டுமல்ல.

_____________________________________________________________________________________


இப்பொழுது கேட்டக்கொண்டிருக்கிற அல்லது பார்த்துக்கொண்டிருக்கிற பாடல் காதல் வைபோகமே சுவரில்லாத சித்திரங்கள் படத்திலிருந்து. யாரு அந்த (f)பிகர் அல்லது யாரந்த நடிகை- இந்த கேள்வி வடகரை வேலன் அண்ணாச்சிக்கு.



__________________________________________________________________________


இந்த பதிவுக்கு என்ன தலைப்பு வைப்பதென்று தெரியாமல் ரொம்ப நேரம் குழம்பிக்கொண்டிருந்தேன் அதால் தலைப்புகளற்ற குறிப்புகள் என்று பெயர் வைத்திருக்கிறேன். தொடர்ந்தும் இப்படி கிறுக்குகிற ஆசை இருக்கிறது.
பொறுத்துக்கொள்க வலையுலகமே.

19 comments:

Thamiz Priyan said...

தலைப்பு கூடவா கிடைக்கல.. என்ன கொடும இதெல்லாம்.. ;-)

Thamiz Priyan said...

தல... பழையதில் நமக்கு கெளதமி பேவரைட்டாகும்...ஹிஹிஹி

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\\
தலைப்பு கூடவா கிடைக்கல.. என்ன கொடும இதெல்லாம்.. ;-)
\\

:)
ஆமா தல கதம்பம் அவியல் காக்டெயில் கூட்டாஞ்சோறு அப்படின்னு நிறைய தலைப்புகள் வந்துடிச்சு அதனால நம்ம ஸ்டைல்ல இது ஒரு தலைப்பு...

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\\
தல... பழையதில் நமக்கு கெளதமி பேவரைட்டாகும்...ஹிஹிஹி
\\
ஒரு உருவம்தான் சுகன்யா அனா அது பெரிய பட்டியல் தல நம்ம லிஸ்டுல கொளதமியும் இருக்காங்க...
;)

நசரேயன் said...

சரி நிறைய எழுதுங்க காத்து இருக்கிறோம்

ஹேமா said...

ம்ம்ம்.....தெரில.

மணிகண்டன் said...

:)-

தமிழ் மதுரம் said...

இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்; எப்பொழுதும் இரவுப்பணியில் இருப்பது! ஆனாலும் இரவுப்பணி எனக்கு வேறொரு உலகம் போல இருக்கிற காரணத்தில் நெருக்கமாய் இருக்கிறது. //

நானும் இதனை ஆமோதிக்கிறேன்....

நானும் இங்கை பெட்றோல் ஸ்ரேசனிலை இரவினில் ஆட்டம் பககினில் தூக்கம் தான்?????????????

தமிழ் மதுரம் said...

கார்த்திகா என்னை கவர்ந்ததற்கு
காரணங்கள் வேறு சொல்ல வேண்டுமா?

கார்திகா என்கிற பெயரும்,பால்யங்களில் கார்த்திகா என்கிற ஒரு பெண் என் வீட்டுக்கெதிரில் இருந்ததும் மட்டுமல்ல.//

ம்...........சரி சரி நடக்கட்டும்.............

சந்தனமுல்லை said...

:-) நல்லாருக்கு இந்த தலைப்பு!
குறிப்புகளில் சினிமா ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது...உங்க கிட்டேயிருந்து நாங்க இன்னும் எதிர்பார்க்கிறோம்! :-)

சந்தனமுல்லை said...

//கார்திகா என்கிற பெயரும்,பால்யங்களில் கார்த்திகா என்கிற ஒரு பெண் என் வீட்டுக்கெதிரில் இருந்ததும் மட்டுமல்ல.//

ஏதோ சொல்ல வர்றீங்க..சொல்லி முடிங்க..சீக்கிரம்! :-)

தமிழன்-கறுப்பி... said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே...

Anonymous said...

ஹாய் ,

i noticed lots of ur encouraging comments to one of ur friend திவ்யா
for the novel "என்வசம்..... நானில்லை!!!" in her blog space
http://manasukulmaththaapu.blogspot.com/2009/03/6.html

actually she stole one of my friend's novel and did slight changes
(changed the title, characters name thats it) and posted that as if
she is writing that novel& getting credit from u guys. My friend's
novel came in the website "http://amutha.wordpress.com/"

Please make ur friend Divya stop steeling others novels & please
please dont encourage her for such a kind of things.

thank u so much

Suresh said...

nalla pathivu nanba, nanum pathivu potu ullan ungala mathiri makkalin asirvathathudan, padithu pidithal potunga vote :-)

Unknown said...

:)))

Thamiz Priyan said...

யோவ்.. எங்கய்யா? அந்த பேரின்பக் காதல்?/??

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\\
யோவ்.. எங்கய்யா? அந்த பேரின்பக் காதல்?/??

\\
தல கொஞ்சம் பொறுங்க இன்னும் சில வேலைகள் இருக்கிறது...
:)

முரளிகண்ணன் said...

சுவையாக இர்ந்தது உங்கள் குறிப்புகள்.

SouthernHummingbird said...

Nandraaha iruku!