Sunday, February 8, 2009
காதல் வாரம் - 1
\\
அறுபத்தொன்பதே நாட்களில்
அடிமை செய்த உன்னிடம் இருக்கிறதென் மீதம்,
தவணை முறைகள் வேண்டாம்
முழுவதுமாய் எப்பொழுதும் எடுத்துக்கொள்
இதுவரையான வெற்றுநாட்களை
இப்பொழுதே வாழ்ந்துவிடுகிறேன்...
எந்த வினாடியும் ஆகலாம் தேவகணம்
கணங்கள் நீடித்தல் என்பது வரம்!
\\
கறுப்பும் அற்புதங்களுமாய் கலவைசெய்து
அவள் மிக அழகாய்
தீர்வுகள் தருகிற அவள் விழிகளில்
இயல்பாய் நிகழ்கிறது அற்புதங்கள்
மெல்லத்தொடங்குகிறது தொலைதல்
நான் அவளாகிப்போக!
\\
சொல்வதும் சொல்லக்கேட்பதும்
சொல்ல முடியாதவையென்றாகி
சொற்களை பேசாதிருத்தலில்
இரவுகள் கனவுகள் தின்னக்கொடுத்த
பொழுதுகளாக்கிப்போகும்
தவிப்புகள் நிறைந்த நாட்கள்!
\\
சொல்ல முடியாத பிரியங்களோடு
என்னனை கண்டெடுத்துக்கொண்டிருந்தேன்
அவளிடமிருந்து...
மெல்ல மெல்ல சேகரித்த என்னுள்
நிரம்புகிறதவள் நினைவு..
நான் அவளென்றாகியது காதல்!
\\
பேசுதல்,
பழகுதல்,
பின் காணாமல் போதல் என்றாகும்
நான் தொலைந்து போக
நீடிக்கிற உன் கணங்களில்!
\\
கன்னத்து குழிகளில் விழுந்து
உதட்டு படிக்கட்டுகளில் கரையேறி
முத்தக்கடலில் விழுந்திட
காதல் கடலாயிற்று!
சென்ற வருடத்தின் முதல் நாள்...
பின் குறிப்பு:
நேற்றே ஆரம்பிக்க வேண்டியது நேரம் சதி செய்ததில் இன்று.அதிலென்ன எப்பொழுது சொற்கள் வசமாகிறதோ அப்பொழுதுதானே அவற்றை சேகரிக்க முடியும்.
சென்ற வருடத்தில் உருவாகிய காதல் வாரமும் அதன் மீதிச்சொற்களும் என்னாயிற்று என்று தெரியவில்லை, இப்பொழுதில் இருக்கிற சொற்களை சேகரிப்பது அவசியமாகிற்று.
picture courtesy- modernartimages.com
Labels:
காதல்...,
தேவதையின் தருணங்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
கவிதைகள் எல்லாமே அருமை...
சென்ற வருடத்தின் காதல் வாரம் இன்னும் அருமை...வாரா வாரம் தொடருங்க :)
என்னடா அண்ணே இன்னும் ஆரம்பிக்கலையேன்னு பாத்தேன்.. :))
கவிதைகள் அட்டகாசம்... வழமைபோல...
ஆனா என்ன... கொஞ்சம், அரைபுள்ளி, கால்புள்ளி, முக்காபுள்ளின்னு எதாவது போட்டா கொஞ்சம் கொழம்பாம இருக்கும் :)))
கலக்கிட்டீர் தம்பிறீஈஈ ;)
காதல் கறுப்பியின் காதல் வாரம் அசத்தலோடு தொடங்குகிறது.
வாழ்த்துக்கள் காதலோடு.
காதல் வாரமா?????? க்கருப்பி வாரமா??? கவிதை ஸூப்பரு...
அப்புறம் மறக்காமை கருப்பி கூட வார... வாராம் வந்துடுங்க...
//கன்னத்து குழிகளில் விழுந்து
உதட்டு படிக்கட்டுகளில் கரையேறி
முத்தக்கடலில் விழுந்திட
காதல் கடலாயிற்று!//
அழகிய வரிகள்...நல்லா இருக்கு தமிழன்...
//கணங்கள் நீடித்தல் என்பது வரம்!//
கலக்குறீங்க தமிழன்.
பேசவே நினைத்ததும்
நினைத்து நினைத்து பேசியதும்
பேசியதை நினைப்பதுமாகவே
கடந்து போகும்
மற்றுமொரு காதல் வாரம்
Divyapriya said...
\\
கவிதைகள் எல்லாமே அருமை...
சென்ற வருடத்தின் காதல் வாரம் இன்னும் அருமை...வாரா வாரம் தொடருங்க :)
\\
நன்றி தொடர் வருகைக்கும் உற்சாகங்களுக்கும்...
ஜி said...
\\
என்னடா அண்ணே இன்னும் ஆரம்பிக்கலையேன்னு பாத்தேன்.. :))
கவிதைகள் அட்டகாசம்... வழமைபோல...
ஆனா என்ன... கொஞ்சம், அரைபுள்ளி, கால்புள்ளி, முக்காபுள்ளின்னு எதாவது போட்டா கொஞ்சம் கொழம்பாம இருக்கும் :)))
\\
வாங்க ஜி ரொம்ப நாளைக்கப்புறம் நம்மபக்கம் வந்திருக்கிறிங்க இரண்டு நாளா, நன்றி..
உண்மையில் எழுதி பதிவிடும் பொழது கவனிக்க மறந்து விடுகிறேன் சரி செய்துடலாம்...
கானா பிரபா said...
\\
கலக்கிட்டீர் தம்பிறீஈஈ ;)
\\
வாங்க அண்ணன் நன்றி...
கவின் said...
\\
காதல் வாரமா?????? க்கருப்பி வாரமா??? கவிதை ஸூப்பரு...
அப்புறம் மறக்காமை கருப்பி கூட வார... வாராம் வந்துடுங்க...
\\
நன்றி கவின்
இனிமேல்தான் கறுப்பியை கண்டுபிடிக்கணும்...
ஹேமா said...
\\
காதல் கறுப்பியின் காதல் வாரம் அசத்தலோடு தொடங்குகிறது.
வாழ்த்துக்கள் காதலோடு.
\\
நன்றி ஹேமா...
// ஜி said...
என்னடா அண்ணே இன்னும் ஆரம்பிக்கலையேன்னு பாத்தேன்.. :))//
அதே..அதே..
//கணங்கள் நீடித்தல் என்பது வரம்!//
அட்டகாசம்.. :)
எல்லாமே அட்டகாசம்.. ஆனா உங்களிடமிருந்து இன்னும்ம்ம்ம் எதிர்பார்க்கிறேன்.. உங்கள் வார்த்தைகளுக்குள் வீழ வேண்டும்.. :)
புதியவன் said...
//கன்னத்து குழிகளில் விழுந்து
உதட்டு படிக்கட்டுகளில் கரையேறி
முத்தக்கடலில் விழுந்திட
காதல் கடலாயிற்று!//
அழகிய வரிகள்...நல்லா இருக்கு தமிழன்...
\\
நன்றி புதியவன்...
வடகரை வேலன் said...
\\
//கணங்கள் நீடித்தல் என்பது வரம்!//
கலக்குறீங்க தமிழன்.
\\
வாங்க வேலன் அண்ணாச்சி :)
உங்களுடைய முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன்...
நன்றி அண்ணன்...
அருண்மொழிவர்மன் said...
\\
பேசவே நினைத்ததும்
நினைத்து நினைத்து பேசியதும்
பேசியதை நினைப்பதுமாகவே
கடந்து போகும்
மற்றுமொரு காதல் வாரம்
\\
அட இது நல்லாருக்கே அருண்...:)
Saravana Kumar MSK said...
// ஜி said...
என்னடா அண்ணே இன்னும் ஆரம்பிக்கலையேன்னு பாத்தேன்.. :))//
அதே..அதே..
\\
கணங்கள் நீடித்தல் என்பது வரம்!//
அட்டகாசம்.. :)
எல்லாமே அட்டகாசம்.. ஆனா உங்களிடமிருந்து இன்னும்ம்ம்ம் எதிர்பார்க்கிறேன்.. உங்கள் வார்த்தைகளுக்குள் வீழ வேண்டும்.. :)
\\
நன்றி சரவணா...
*\\பேசுதல்,
பழகுதல்,
பின் காணாமல் போதல் என்றாகும்
நான் தொலைந்து போக
நீடிக்கிற உன் கணங்களில்!\\*
காத்திருப்பதும் சுகமே, காதலி மனம் மாறாத வரைக்கும்.
தமிழன் கறுப்பி!
வேலனைப் போல என்னுடைய முதல் பின்னூட்டம் இதுதான்.
எனக்கு உங்கள் வலைப்பக்கத்தில் பிடித்த வரி....
பெண்மையிடம் தோற்றவன். அதற்கு என் வாழ்த்துக்கள்.
எழுத்துக்கள் தொடரட்டும்.
Attagasam:))
[sorry ...tamil font illa:(]
அனுபவித்து எழுதியிருக்கீங்க... ரொம்ப நல்லயிருக்கூ...... நானும் மாறி என்னது தமிழும் மாறிட்டுது... கோவிக்காதீங்கோ..
ஹாய் தமிழன்-கறுப்பி,
i noticed lots of ur encouraging comments to one of ur friend திவ்யா for the novel "என்வசம்..... நானில்லை!!!" in her blog space http://manasukulmaththaapu.blogspot.com/2009/03/6.html
actually she stole one of my friend's novel and did slight changes (changed the title, characters name thats it) and posted that as if she is writing that novel& getting credit from u guys. My friend's novel came in the website "http://amutha.wordpress.com/"
Please make ur friend Divya stop steeling others novels & please please dont encourage her for such a kind of things.
thank u so much தமிழன்-கறுப்பி
Post a Comment