தேசம்,
காதல்,
தேகம்
காமம்,
கட்டுடைப்பு,
குடும்பம்,
பாசம்,
பணம்,
பாவம்,
புண்ணியம்,
சமுதாயம்...!
சுழல்கிற கனவுகளில் இப்பொழுதெல்லாம்;
இரவுகளை அடையாளம் காண்பது கடினமாயிருக்கிறது,
பெருந்துயர் நிரம்பியதொரு நாவலுக்கான
அடிப்படையாயிருக்கிற குழப்பங்களில்
திணறிக்கொண்டிருக்கிறது மூளை...
சிதறுவதற்கு முன் எழுதிவிடலாம்
சில கவிதைகளையேனும்!
13 comments:
அழகான கவிதை...கடைசி இரண்டு வரிகள் அருமை....
குழப்பங்கள் பற்றிய வர்ணனை நன்று..
Divyapriya said...
\\
அழகான கவிதை...கடைசி இரண்டு வரிகள் அருமை....
\\
நன்றி திவ்யப்ரியா இதை இன்னும் வீரியத்தோடு சொல்லலாம் போல இருக்கிறது இப்பொழுது...
ஆனால் இப்படி பிறகு எழுதலாம் பிறகு எழுதலாம் என்று விட்டுப்போனவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதில் சொற்களை சேகரித்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறேன்...
பாச மலர் said...
\\
குழப்பங்கள் பற்றிய வர்ணனை நன்று..
\\
நன்றி...
கடைசி இரு வரிகள் கவிதையின் வீர்யத்தை உள்ளடக்கியவை.
முடிவு ஸூப்பரு
அடையாளமில்லாத இரவுகளை நல்லாவே அடையாளாபடுத்தியிருக்கீங்க...
தமிழன் இரவுகள் இப்போவெல்லாம் விடியாமல் நீண்டு இன்னும் இருளாய்.மனம் கனக்கக் குழம்பியிருக்கிறீங்க.குழம்பினாலும் தெளிந்தாலும் நாங்களேதான்.வழியில்லை தமிழன்.
நல்லா இருக்கு
சிதறுவதற்கு முன் எழுதிவிடலாம்
சில கவிதைகளையேனும்!//
அருமையான சொல்லாடல்.... இனியும் சிதற என்ன இருக்கு???
சுழல்கிற கனவுகளில் இப்பொழுதெல்லாம்;
இரவுகளை அடையாளம் காண்பது கடினமாயிருக்கிறது,
அருமை.
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே...
//சுழல்கிற கனவுகளில் இப்பொழுதெல்லாம்;
இரவுகளை அடையாளம் காண்பது கடினமாயிருக்கிறது,
பெருந்துயர் நிரம்பியதொரு நாவலுக்கான
அடிப்படையாயிருக்கிற குழப்பங்களில்
திணறிக்கொண்டிருக்கிறது மூளை...//
அட்டகாசம்ன்னா..
எனக்கும் கொஞ்ச காலம் முன் இப்படிதான் இருந்தது..
Post a Comment