Tuesday, December 30, 2008

அய்யனார்,வாரணம்ஆயிரம் மற்றும் பாடல்கள்...

எதையாவது வாசித்தே ஆகவேண்டும் என்றிருப்பதனால், இணையத்தில் வாசித்தாலும் சிலவற்றை பிரதி செய்து அறைக்கு எடுத்துச்செல்வது என் பழக்கம் ஆகிற்று அப்படி எடுத்துச்செல்கிற பிரதிகள் பலவகையானதாய் இருக்கும் என் படுக்கையில் ஏதாவது புத்தகமோ அல்லது பேப்பர்களோ எதுவும் இல்லாமல் போனால்தான் அது ஆச்சரியம் எப்பொழுதும் ஏதாவது இருக்கும் ...

அப்படித்தான் காலில் அடிபட்ட அறைக்குள் முடங்கிப்போயிருந்த நாட்களில் ஒன்றின் பின்மதியப்பொழுதில் படுக்கையில் இருந்தபேப்பர்களை வாசிக்கத்தொடங்கினேன்...
அப்படி நான் பிரதி செய்து வாசித்தவற்றுள் முப்பத்தொரு பக்கங்களில் இருந்த டிசே அண்ணனின் "பின்னவீநத்துவம் அல்லது எனக்கு பிடிக்கப்போகும் சனி" தான் பல நாட்களாய் வாசித்த பதிவு,திரும்ப திரும்ப படிச்சாலும் தெளிவாகாமல் இருந்த பதிவுகளில் அதுவும் ஒன்று போதுமடா இந்த பின்நவீனத்துவம் என்றாகி இருந்தது!என்ன கொடுமையடா இதுங்கிற மாதிரி இருக்கும் ஆனா நிறையப்பேசி இருப்பாங்க அந்தப்பதிவிலும் பின்னூட்டங்களிலும்...

அன்றைக்கும் அப்படித்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். "ஊர் 'நியூஸ்' கொண்டு வாங்கோ தம்பி" என்கிறவர்களுக்காக கொண்டு செல்கிற அந்த அறிக்கை இந்த அறிக்கை, அவர் சொன்னது இவர் சொன்னது, போன்றவைகளையும் வாசித்துவிட்டு என்கட்டிலிலேயே விட்டுப்போயிருந்தார்கள் அவற்றை தவிர்த்து...

வாசிப்பதற்கு வேறென்ன இருக்கிறது என்று தேடியபொழுதில் அய்யனாரின் ஜோவும் இருந்தது
என்னுடைய அதிர்ஷ்டம் என்று நினைத்துக்கொண்டே வாசிக்கத்தொடங்கினேன்,
மனதிற்கு நெருக்கமாய் இருக்கிற பதிவர்கள் சிலரில் அய்யனாரும் ஒருவர்!உண்மையில் அய்யனாரிடம் ஏதோ இருக்கிறது அய்யனாரின் பல கவிதைகளில் பல பதிவுகளில் அய்யனார் என்னுடன் ஒத்துப்போவதாக உணர்ந்திருக்கிறேன்.அது போலத்தான் 'ஜோ'வை வாசிக்க வாசிக்க எனக்கும் என்னுடைய இப்போதைய நாட்களின் ரணம் தகிக்கலாயிற்று விடிய விடிய பேசுவதற்கு யாரும் இருக்கமாட்டார்களா என்கிற ஏக்கம் மறுபடி தலை தூக்கியது... இதற்காகவே இரவுப்பணியில் இருந்தேன் கிட்டத்தட்ட பதினொரு மாதங்கள் பேசுவதற்கு யாருமில்லாததில் வாசித்தல் மிக நெருக்கமாயிற்று இப்போது.

வாசிக்கிறவனை எழுத்துக்குள் ஒருவனாக்குகிற அல்லது அந்த நிகழ்வுகளில் பங்கெடுக்கிறவனாக மாற்றுகிற தன்மை அய்யனாரிடம் இருக்கிறது அதற்கு அருடைய அனுபவங்கள் என்னுடைய ரசனைகளில் இருப்பதும் ஒரு காரணமாகலாம்...


என்னய்யா எப்ப பாரு புலம்பிக்கிட்டே இருக்க என்றுதான் என்னை பல பேர் கேட்டிருக்கிறர்கள்;அதுவும் உண்மைதான் சொல்ல முடியாத அல்லது சொற்கள் இல்லாத வலிகளைத்தான் நான் சொல்லிப்பார்க்க முயன்றகொண்டிருக்கிறேன்.காரணமே இல்லாமல் சலிக்கிற மனதை என்ன செய்வது புதைந்து போயிருக்கிற சொற்களை அவற்றின் அமுக்கத்திணறல்களை எப்படி சகிப்பது அதைத்தான் எழுதிப் பழகிக்கொண்டிருக்கிறேன்!புனைவோ நிஜமோ அது அனுபவங்களின் சாயல்களில்தானே இருக்கிறது. என்ன இருந்தாலும் மனித மனம் விசித்திரங்களால் நிரம்பியதுதானே, அதனை கட்டுக்குள் வைப்பதுதானே மிகு பணியாய் இருக்கிறது கட்டவிழ்ந்து விடுகிற மனம் பிறழ்ந்து விடுகிறது அப்படித்தானே...

ஏராளம் சொற்கள் உள்ளேயிருந்தாலும்...
அவை மிகக்குறைவானதாய்தான் வெளிப்படுகின்றன!
இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது... இதைப்பற்றி இன்னொரு நாள் எழுதலாம்!

(நம்பினால் நம்புங்கள் நான் இயல்பில் மிக உற்சாகமானவன்,யாராவது மாட்டினா அவ்ளோதான்)


இதைப்பற்றிய குறிப்பை எழுதாமல் அய்யனாரின் பதிவுகளை படிப்பதில்லை என்றிருந்தேன் இனிமேல்தான் படிக்க வேண்டும்.அய்யனார் உங்களை இன்னொரு கேள்வியும் கேட்க வேண்டும் அய்யனார் என்கிற பெயருக்கான காரணம் என்னஅண்ணன்?அதற்கும் தனிமையின் இசை என்கிற பெயருக்கும் தொடர்பிருக்கிறதாக நான் நினைக்கிறேன்...சொல்ல முடியுமா?

நிறைய எழுதுங்கோ அண்ணன்...






இந்தச்சுடிதார் எனக்கு பிடித்திருக்கிறது!சமீராவுக்கு சுடிதார் நன்றாகவே பொருந்துகிறது!


\\
வாரணம் அயிரம் படத்தை தரமான டிவிடியில் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்...பொறுமையை கடந்து அறையில் முடங்கி இருந்த நேரம் அதனையும் பார்த்தேன் நான் எதிர்பார்த்தததை விட சிடி நன்றாகவே இருந்ததில் பார்த்து முடித்தேன்...

படத்தை பற்றி நிறையப்பேர் நிறைய சொல்லியிருக்கிறதால நான் என்பங்குக்கு படம் எனக்கு பிடிச்சிருக்கு என்பதை மட்டும் சொல்லிக்கொண்டாலும் சமீரா அழகாய் இருக்கிறார். ஆடைத்தெரிவில் சூர்யாவும் சரி சமீராவும் சரி கலக்ககலாய் இருக்கிறார்கள்.காட்சிகளை படமாக்குவதில் கௌதம் திறமை உள்ளவர் என்பது உண்மைதான்.


ஹாய்.. மாலினி..!
நா(ன்) இத சொல்லியே ஆகணும்.
நீ அவ்வளவு அழகு!
இங்க யாரும் இவ்வளவு அழகா...இவ்வளவு அழகை பாத்திருக்கவே மாட்டாங்க, and i'm in love with you.

வசனம் எல்லாம் சரியாயிருக்கா)

இந்த வார்த்தைகளை சூர்யாவோட குரல்லயே சொல்லிப்பார்த்தேன் எனக்கும் குரல் மாற்றுகிற வித்தை வருகிறது! எல்லா நடிகர்களுக்கும் நல்ல குரல் வாய்ப்பதில்லை சூர்யாவுக்கு வாய்த்திருக்கிறது.







\\
அறையில் இருந்த நாட்களில் பகல் முழுவதும் பாடல்களால் நிரம்பியிருந்தது அறை...

சும்மா சொல்வதற்கல்ல பாடல்கள் எங்களுள் எவ்வளவு தூரம் கலந்திருக்கிறது என்பதை அனுபவித்தவர்களுக்கு தெரியும்...

பாடல்கள் தருகிற அனுபவங்களைப்பற்றி பேச வேண்டும் என்பது பல நாள் ஆசை அதற்கான தருணங்கள் இன்னும் கூடவில்லை, புதுவருடத்தில் ஆரம்பிக்கலாம் அந்த அற்புதமான அனுபவங்களை இப்போதைக்கு பாடல்கள் காலத்தை மறக்கச்செய்கின்றன அல்லது வேறொரு காலத்துக்குள் எங்களை அழைத்துப்போகின்றன என்கிற சிறுகுறிப்போடு நிறுத்தி;இது பற்றிப்பேசப்போனால் இந்தப்பதிவின் நீளம் உங்களின் ஏகோபித்தஎரிச்சலை பெறக்கூடும் என்கிற எச்சரிக்கை உணர்வில் நிறுத்தி விடுகிறேன்.

22 comments:

அருண்மொழிவர்மன் said...

//எனக்கும் என்னுடைய இப்போதைய நாட்களின் ரணம் தகிக்கலாயிற்று விடிய விடிய பேசுவதற்கு யாரும் இருக்கமாட்டார்களா என்கிற ஏக்கம் மறுபடி தலை தூக்கியது... இதற்காகவே இரவுப்பணியில் இருந்தேன் கிட்டத்தட்ட பதினொரு மாதங்கள் பேசுவதற்கு யாருமில்லாததில் வாசித்தல் மிக நெருக்கமாயிற்று இப்போது//

தனிமையின் சூனியத்தில் சிக்கி தவித்தபோது நானும் எத்தனையோ முயன்றுவிட்டு இறுதியில் வாசிப்புக் மீண்டு வந்திருக்கிறேன். வாசித்தலால் வரும் சுகானுபவங்களை தனிமை மேம்படுத்தும் என்பஹ்டு என் எண்ணம்

புதியவன் said...

படத்தில் சூர்யாவின் குறும்புகள் ரசிக்கக் கூடியவை...

சமீரா தான் உணர்ந்த காதலை சொல்லும் விதம்
அழகான கவிதை...

அனல்மேலே பனித்துளி பாடல் அருமை...

தமிழ் மதுரம் said...

அனுபவங்களும், சிந்தனைகளும் அருமை....

புதியவன் said...

//ஹாய்.. மாலினி..!
நா(ன்) இத சொல்லியே ஆகணும்.
நீ அவ்வளவு அழகு!
இங்க யாரும் இவ்வளவு அழகா...இவ்வளவு அழகை பாத்திருக்கவே மாட்டாங்க, and i'm in love with you.

வசனம் எல்லாம் சரியாயிருக்கா)//

ரொம்ப சரியா இருக்கு...

ஹேமா said...

தமிழன் சுகம்தானே!காலும் சுகம்
தானே!தமிழன் நிறைய எழுதுங்க.
உங்களுக்குள்ள நிறைய ஊற்
றெடுக்கிற உணர்வுகள் அருமை.

//சொல்ல முடியாத அல்லது சொற்கள் இல்லாத வலிகளைத்தான் நான் சொல்லிப்பார்க்க முயன்று
கொண்டிருக்கிறேன்.ஏராளம் சொற்கள் உள்ளேயிருந்தாலும்... அவை மிகக்
குறைவானதாய்தான் வெளிப்படுகின்றன!//

உண்மையிலும் உண்மை இது.சில சமயங்களில் வெளிப்படுத்த முடியாமல் திணறும் நொடிகள்.
பிரசவத்தைவிட வலியானது.நானும் அனுபவித்திருக்கிறேன்.பாடல்களைப் பற்றிச் சொல்லப்போனால் எந்த
மெல்லிய இசையும் தனிமை கலைக்கும்,மூளையை வேறு எங்கும் செல்ல விடாமல் பிடித்து வைத்திருக்கும் அன்புக்
காத(லி)லன்போல.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழன்.நிறைய நிறைவாய் எழுதுங்க.

Divya said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழன்!!

தமிழ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Ayyanar Viswanath said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழன்...
அய்யனார் என்பதுதான் என் பெயர். காரணம் என் பெற்றோர்களைத்தான் கேட்க வேண்டும் :)
தனிமையின் இசைக்கு பிரத்யேகமான காரணங்களென்று எதுவுமில்லை. தனிமை பயத்தையும் தவிப்பையும் மட்டுமே பலருக்கு ஏற்படுத்தலாம்.எனக்கென்னவோ தனிமையின் குரல் அற்புதமான இசையாகத்தான் தோன்றியது.எனவே தனிமையின் இசை..

அன்பிற்கும் வாசிப்பிற்கும் நன்றி...

இராம்/Raam said...

Good post.. :)

Wish you very happy new year.

காரூரன் said...

தம்பி அசத்திறீங்க,
அப்ப எப்படி "ஒரு பெண்மையிடம் தோற்றவன்" என்று போட்டிருக்கின்றீர்கள்.
கலைஞர் நடையில் சொல்வதானால்,
" புலி மானை வேட்டையாடும் இடம் காட்டில், மான் புலியை வேட்டையாடுமிடம் கட்டில்" என்பார்.
நீங்கள் பெண்மையிடம் தோற்கவில்லை, ஒரு பெண்ணிடம் இருக்கலாம்.

இரசிக்கத் தெரிந்த உன்னை,
பரிசுத்தமாய் ஒருத்தி காதலிக்கும் வரை,
இயற்கையை இரசி.

உன் தோழ்களை தழுவும் வாழ்க்கைத் தோழி வரவும்
உன் எண்ணங்கள் வெற்றி பெற ஒரு அண்ணனின்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

அன்பின் தமிழன்,

இதைப் பார்க்கவும் :)
http://blogintamil.blogspot.com/2009/01/blog-post_03.html

தொடரட்டும் உங்கள் சேவை !

தமிழன்-கறுப்பி... said...

@அருண்மொழி...
உண்மைதான் அருண்மொழி அண்ணன்..

@புதியவன்
படம் நல்லாருந்திச்சு புதியவன் அதனாலதான் பிடிச்சிருக்குன்னு சொல்லி இருக்கிறேன்...

@கமல்..
நன்றி கமல்...

@புதியவன்
நன்றி புதியவன்..

@ஹேமா
நன்றி ஹேமா! உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

@திவ்யா
நன்றி திவ்யா! உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

@திகழ்மிளிர்
நன்றி திகழ்மிளிர்
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

தமிழன்-கறுப்பி... said...

@அய்யனார்...

வாங்க தல...
அய்யனார்தான் உங்க பெயரா...?

ஆமா தனிமை அனேகமான தருணங்களில் இசையாகத்தான் இருந்திருக்கிறது எனக்கும், என்ன சில நேரங்களில் ஆளைத் தின்றுவிடுகிறது....


இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணன்...

தமிழன்-கறுப்பி... said...

@கரூரன்
நன்றி அண்ணன்..:)
உங்களுக்கும் இந்த தம்பியின் வாழ்த்துக்கள்...

@
நன்றி ரிஷான்...

தமிழன்-கறுப்பி... said...

எல்லா நண்பர்களுக்கும்...
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2009 உங்கள் கைகளுக்கள் இருக்கட்டும்...

தமிழன்-கறுப்பி... said...

@ இராம்/Raam...

நன்றி ராம் அண்ணே
உங்களுக்கும்
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

மேவி... said...

அறுசுவை நடராசன் சமையல் மாதிரி இருக்குது உங்க ப்ளோக்.
நிறை குடம் தன்.
இனிய நியூ இயர் விஷேஸ் ....

சந்தனமுல்லை said...

அனல்மேலே பனித்துளி - பிடித்தது!!
மிக அருமையாய் உங்கள் சிந்தனையை எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்!!

MSK / Saravana said...

நல்லா எழுதறீங்க தமிழன்.. :)

//சமீராவுக்கு சுடிதார் நன்றாகவே பொருந்துகிறது!//

சந்தனமுல்லை said...

http://sandanamullai.blogspot.com/2009/01/blog-post_08.html - இப்பதிவில் உங்களுக்கொரு ஆச்சர்யம்!!

தமிழன்-கறுப்பி... said...

சந்தனமுல்லை said...
\\
http://sandanamullai.blogspot.com/2009/01/blog-post_08.html - இப்பதிவில் உங்களுக்கொரு ஆச்சர்யம்!!
\\

எனக்கும் விருதா ரொம்ப நன்றிங்க சிஸ்டர்...:)

Sakthi said...

nice lyrics yaar.....