Thursday, December 18, 2008

எழுதாத குறிப்புகள்...

எழுதுவதற்கு நிறைய இருக்கிறதாய் தெரிகிறது என்ன காரணமோ எழுதவே முடியாமல் இருக்கின்றன நாட்கள்.அழுத்தமாய் இருக்கிற மனது கிடந்து சலிக்கிறது.கம்பி வேலிக்குள் அடுக்கடுக்காய் உட்கார்ந்திருக்கிற போட்டபிள் கபினெட்டுகளில் ஏதோ ஒன்றில் வசிக்கிற உடலுக்கு தெரியுமா அதன் உயிர் பயணங்களையும் புத்தகங்களையும் சுவாசிக்கிறதென்று உடல் அது பாட்டுக்கு கட்டிலோடு தஞ்சம் புகுந்து விடுகிறது, தீர்ந்து போகாத சில பிரச்சனைகளும் அவற்றோடு சேர்ந்து கொள்கிற இன்ன பிறக்களும் தூக்கம் வருகிற பொழுதுகளை குறைக்க சாண்டில்யனின் கடல் புறாவை வாசிக்கிறதற்கான மனோநிலை சற்றும் வரமாட்டேன் என்கிறது...வாசிக்காமல் கிடப்பிலிருக்கிறது அது!

கணையாளியின் கடைசிப்பபக்கங்களை படிப்பதற்காய் வெளியில் எடுக்கவில்லை இன்னமும்...

வலது காலில் மாவு கட்டு போட்டிருக்கிற எனக்கு இடது கால் விரல்களுக்கிடையில் காயம் வந்திருக்கிறது,இடது காலை மட்டுமே பாரம் கொடுத்து பயன் படுத்துகிறதில் காலும் இடுப்பும் வலியாயிருக்கிறது.

சுயவிபரக்கோவைகளில் பொழுது போக்கு என்பதில் வாசித்தலும் பயணித்தலும் என்று எழுதுகிற ஒரு மனது இரண்டரை வருடங்களாய் ஜன்னல் திறக்காத கன்டெய்னர் அறைக்குள் எப்படி அடைகிறது என்பது தமிழ் மணத்துக்கு வெளிச்சம்...!


பதிவு எழுத முடியாது என்பதல்ல...எழுதுகிற மனோநிலநிலை கிடையாது...
எப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதாய் நடிக்க முடிவதில்லை எனக்கு! போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...!


சில பாடல்கள் தருகிற சிலாகிப்புகள் பற்றி பேச வேண்டும் என்பது என் நெடு நாளைய ஆசை ஆனால் என் சோம்பல்களில் அவை தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது ...

அப்படி நான் பேசப்போகிற படல்களில் முதல் பாடல்...
அனேகம் நடிகை சோபனாவுடையதாய் இருக்கலாம் அல்லது ஷாலினியுடையதாய் இருக்கலாம்,இரண்டு பாடல்களும் இடம்பெற்ற திரைப்படம் ஒரே இயக்குனருடையது.

அவை என்ன பாடல்கள் என்பதை சரியாகச்சொன்னால்...முதலில் சொல்லுங்கள் பிறகு பார்க்கலாம்!

பல நாட்களாய் என் ஆரம்ப காலத்து வரிகளை தேடிக்கொண்டிருக்கிறது மனது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை...ஏன் இந்த வலை ஆரம்பித்த நாட்களில் நான் எழுதிய வரிகள் எல்லாம் பல வருடங்களின் முன்னர் நாட்குறிகப்புகளிலும் துண்டு காகிகதங்களிலும் எழுதியவையாகத்தான் இருந்திருக்கின்றன,சில வரிகள் மனதிலேயே கிடந்திருக்கின்னறன
எழுதாமல் புதைய விட்ட வரிகளை என்னை சபித்துக்கொண்டே தேடிக்கொண்டிருக்கிறது மனது...


இருந்தும் அந்த ரம்மியமான மனோநிலை என்பது தொலைந்து போயிருக்கிறது இப்பொழுதிலிருக்கிற ஏகாந்தம் பிடிக்காமல் இல்லை என்றாலும் அந்த மொழிகளை தவிர்ப்பதை விரும்பவில்லை மனது...

09-12-2008.


சேர்துக்கொண்ட குறிப்புகள்:

கடந்த வியாழக்கிழைமையில் இருந்து மீண்டும் வலி ஏற்பட்ட காரணத்தில் வேலைக்கு வர முடியாமல் அறையிலேயெ அடைந்திருந்தேன் சில ஹிந்திப்படங்கள் தமிழ் படங்கள் பாடல்கள் என பார்த்திருக்கிறேன் நா காமராசனின் தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும் என்ற புத்தகம் வாசித்திருக்கிறேன்.தூக்கம் வருவதில்லை என்று சொன்னாலும் கடந்த நாட்களில் நிறையவே துங்கினேன் என்பதுதான் உண்மை...


இன்னும் சில புத்தகங்கள் கிடைத்திருக்கிறது.

கடைசியாய் எழுதியிருந்த பதிவில் இணைப்பதற்காய் படங்களும் பதிவாய் எழுதுவதற்காய் இந்த வரிகளையும் எழுதிவைத்திருந்தேன் அசௌகரியங்களின் மிகுதியில் குழம்பல் நிலமைகளில் பதிவாக்கப்படாமலே கடந்து விட்டது நாட்கள்.


பின்குறிப்புகள்...

//
கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பின்னர் வந்திருக்கிறேன் இணையம் பக்கம் நிறைய விசயங்கள் நிகழ்ந்திருக்கிறது, எவ்வளவோ படிக்க இருக்கிறது.

//
பதிவிடுவதற்காய் எழுதியிருந்த வரிகள் சில அழிந்து போயிருக்கின்றன சில பதிவுகள் இல்லாமல் போயிருக்கின்றன உங்களுக்கு சந்தோசம்தானே.

//
என்னடா ஒரு பின்னூட்டப்பதிவரின் ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லையே என்று யாரேனும் தேடவில்லை போலிருக்கிறது ம்ம்ம் பதிவுலகம் மிகப்பெரியது...

//
இப்பொழுதும் சிறிய வலி மீதமிருப்பினும் இதற்கு மேலும் அடைபட்டிருக்க முடியாததில் கடைமைக்கு வந்திருக்கிறேன்...

36 comments:

சந்தனமுல்லை said...

//என்னடா ஒரு பின்னூட்டப்பதிவரின் ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லையே என்று யாரேனும் தேடவில்லை போலிருக்கிறது ம்ம்ம் பதிவுலகம் மிகப்பெரியது...//

:((

சந்தனமுல்லை said...

//இடது காலை மட்டுமே பாரம் கொடுத்து பயன் படுத்துகிறதில் காலும் இடுப்பும் வலியாயிருக்கிறது.//

விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்!

//எப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதாய் நடிக்க முடிவதில்லை எனக்கு! போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...!//

சொல்ல எதுவும் வார்த்தைகளில்லை என்னிடம்!!

:((

கிரி said...

வாங்க வாங்க!! தமிழன்

//ம்ம்ம் பதிவுலகம் மிகப்பெரியது...//

இதில் நாம் காணாமல் போய்விடுவோம் ...

சரி உங்க கிட்ட மெயில் ஐ டி கேட்டு கேட்டு கொலை வெறி ஆகிட்டு இருக்கேன்..இந்த முறையாவது ஒழுங்கா அனுப்புங்க X-(

அன்புடன் அருணா said...

//இப்பொழுதும் சிறிய வலி மீதமிருப்பினும் இதற்கு மேலும் அடைபட்டிருக்க முடியாததில் கடைமைக்கு வந்திருக்கிறேன்...//

எழுதுபவர்களால் இப்படி அடை பட்டுக் கிடக்க முடியாது....எழுதுங்கள்...எழுதுங்கள்...
அன்புடன் அருணா

ஆயில்யன் said...

//வலது காலில் மாவு கட்டு போட்டிருக்கிற எனக்கு இடது கால் விரல்களுக்கிடையில் காயம் வந்திருக்கிறது///

?????

என்ன பிரச்சனை தம்பி?

விரைவாக குணமடைய இறைபிரார்த்தனை செய்கின்றேன்!

ஆயில்யன் said...

//இப்பொழுதும் சிறிய வலி மீதமிருப்பினும் இதற்கு மேலும் அடைபட்டிருக்க முடியாததில் கடைமைக்கு வந்திருக்கிறேன்///

கடமையோடு சேர்த்து நம் உடைமைகளையும் சரியாக கவனித்துக்கொள்வது நல்லது!

தொடரட்டும் பணி அதை விட முக்கியமானதாய் உடல்நிலை ஒழுங்கு பெற சரியான மருத்துவ சிகிச்சை பெறுங்கள்!

விஜய் ஆனந்த் said...

take care boss....

:-(((...

தமிழன்-கறுப்பி... said...

@சந்தனமுல்லை...

//இடது காலை மட்டுமே பாரம் கொடுத்து பயன் படுத்துகிறதில் காலும் இடுப்பும் வலியாயிருக்கிறது.//

விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்!

//எப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதாய் நடிக்க முடிவதில்லை எனக்கு! போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...!//

சொல்ல எதுவும் வார்த்தைகளில்லை என்னிடம்!!

:((

\\\\\

அன்புக்கு நன்றி ஆச்சி..:)

தமிழன்-கறுப்பி... said...

வாங்க கிரி

நன்றி...

ஆமா நின்னு ஆடணும்ல..:)

தமிழன்-கறுப்பி... said...

நன்றி அருணா...

தமிழன்-கறுப்பி... said...

@ ஆயில்யன்...

நன்றி ஆயில்யன் அண்ணாச்சி..
இப்ப பரவால்லை...

ஆமா உடம்ப பாத்துக்கணும்னு நினைக்கறது ஆனா சரியா அக்கறை எடுத்துக்கறதில்லை...

ரொம்ப நன்றி அண்ணன் அன்புக்கு...

தமிழன்-கறுப்பி... said...

விஜய் ஆனந்த் said...
\\
take care boss....

:-(((...
\\

thanks...

தமிழன்-கறுப்பி... said...

ஆமா யாருமே பாட்டு என்னன்னு சொல்லலையே...

Divya said...

Neenda naatkalukku pin......ungalai blog la parka santhosham tamilan:)

Do take care of ur health.

ஹேமா said...

ஓ...தமிழன் உங்களுக்குச் சுகயீனமா?நீங்கள் எப்போதாவதுதானே வருபவர் என்று நினைத்திருந்தேனே தவிர சுகயீனம் என்று நினைத்திருக்கவில்லை.விரைவில் சுகமடைந்து விடுவீர்கள்.கறுப்பியோடு ஒடிப்பிடித்து விளையாட உங்களை விட்டால் யார்!

Saravana Kumar MSK said...

//என்னடா ஒரு பின்னூட்டப்பதிவரின் ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லையே என்று யாரேனும் தேடவில்லை போலிருக்கிறது ம்ம்ம் பதிவுலகம் மிகப்பெரியது...//

சாரிங்க்னா.. பிசியா இருப்பீங்கன்னு நெனச்சேன்..

//வலது காலில் மாவு கட்டு போட்டிருக்கிற எனக்கு//

என்னாச்சிங்க்னா.. :(
உடம்ப பாத்துக்கோங்க..

Saravana Kumar MSK said...

//போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...!//

ஆமாம்..

Saravana Kumar MSK said...

//அப்படி நான் பேசப்போகிற படல்களில் முதல் பாடல்...
அனேகம் நடிகை சோபனாவுடையதாய் இருக்கலாம் அல்லது ஷாலினியுடையதாய் இருக்கலாம்,இரண்டு பாடல்களும் இடம்பெற்ற திரைப்படம் ஒரே இயக்குனருடையது.//

மணி படமா?? தளபதி, அலைபாயுதே பாடல்களா??

தமிழன்-கறுப்பி... said...

நன்றி திவ்யா அன்புக்கும் அக்கறைக்கும்...

ஹேமா என்ன இது..:)
நன்றி அன்புக்கும் நெருக்கமான பதிலுக்கும்..

தமிழன்-கறுப்பி... said...

பரவாயில்லை சரவணன்,
மனதார்ந்த உங்கள் அன்பே போதும்...

உண்மைதானே தன்னை வெளிப்படுத்தாமல் இருப்பது தவறென்பது என் கருத்து...

தமிழன்-கறுப்பி... said...

\\
மணி படமா?? தளபதி, அலைபாயுதே பாடல்களா??
\\

ஓம் சரவணன் நிறைய நாட்களாக சில பாடல்களை பேச வேண்டும் என்பது என் ஆசை, பேசலாம் என்றிருக்கிறேன் பாடல்கள் நிறைய இருக்கிறது...

காரூரன் said...

என்ன குழப்பம், குணமடைய நாமும் பிரார்த்திக்கின்றோம். மின்னஞ்சல் கேட்டீர்கள் பின்பு தொடர்பு கொள்ளவில்லை.

தமிழன்-கறுப்பி... said...

காரூரன் said...
\\
என்ன குழப்பம், குணமடைய நாமும் பிரார்த்திக்கின்றோம். மின்னஞ்சல் கேட்டீர்கள் பின்பு தொடர்பு கொள்ளவில்லை.
\\

உங்களுடைய மின்னஞ்சலுக்கு இரண்டு மடல் அனுப்பினேன் கிடைக்கவில்லையா அண்ணன்

அன்புக்கு நன்றி அண்ணன்...

தமிழ்நதி said...

நீங்கள் சொல்வது உண்மைதான். நீங்கள் எழுதாமல் விட்டாலும், நாம் இறந்தே போனாலும்கூட ஓரிரண்டு நாட்களுக்கு எங்களைப் பற்றி ஓரிரண்டு பேர் எழுதுவார்கள். பிறகு எல்லாம் வழமைபோல் நடக்கும். வலி தரும் உண்மை இது.

Anonymous said...

என்னடா ஒரு பின்னூட்டப்பதிவரின் ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லையே என்று யாரேனும் தேடவில்லை போலிருக்கிறது ம்ம்ம் பதிவுலகம் மிகப்பெரியது...//

Anonymous said...

வாழ்த்துக்கள்! குண்மடையவுங்கோ

Mathu said...

மீண்டும் வலைபூவிற்கு வந்ததில் மகிழ்ச்சி. கெதியா குணமடைய வாழ்ழ்த்துக்கள்..
Wish u a speedy recovery.

திகழ்மிளிர் said...

உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

எழுதுவதற்கு நிறைய இருக்கிறதாய் தெரிகிறது என்ன காரணமோ எழுதவே முடியாமல் இருக்கின்றன நாட்கள்.அழுத்தமாய் இருக்கிற மனது கிடந்து சலிக்கிறது.கம்பி வேலிக்குள் அடுக்கடுக்காய் உட்கார்ந்திருக்கிற போட்டபிள் கபினெட்டுகளில் ஏதோ ஒன்றில் வசிக்கிற உடலுக்கு தெரியுமா
:))

அமிர்தவர்ஷினி அம்மா said...

வலது காலில் மாவு கட்டு போட்டிருக்கிற எனக்கு இடது கால் விரல்களுக்கிடையில் காயம் வந்திருக்கிறது,இடது காலை மட்டுமே பாரம் கொடுத்து பயன் படுத்துகிறதில் காலும் இடுப்பும் வலியாயிருக்கிறது

சீக்கிரம் குணமடைய ப்ரார்த்திக்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதாய் நடிக்க முடிவதில்லை எனக்கு! போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...!

ம், உண்மைதான்

அமிர்தவர்ஷினி அம்மா said...

எப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதாய் நடிக்க முடிவதில்லை எனக்கு! போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...!

ம், உண்மைதான்

அமிர்தவர்ஷினி அம்மா said...

எப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதாய் நடிக்க முடிவதில்லை எனக்கு! போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...!

ம், உண்மைதான்

அமிர்தவர்ஷினி அம்மா said...

மொத்தத்தில் கவிதை நடையில் ஒரு உரைநடை.

தாமிரா said...

என்ன பிரச்சினைன்னு சொல்லவேயில்லையே.. விரைந்து குணமடைய வாழ்த்துகள்.! (அப்புறம் நானும் ஒரு வாரம் வேலையினால் வலைப்பக்கம் வரவில்லை, யாராவது தேடணுமே.. ம்ஹும்.!)

தங்கராசா ஜீவராஜ் said...

//இடது காலை மட்டுமே பாரம் கொடுத்து பயன் படுத்துகிறதில் காலும் இடுப்பும் வலியாயிருக்கிறது.//

விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்!