Sunday, January 11, 2009

சைக்கிள் நினைவுகளும் தேவதைகளும்!
பள்ளிக்கூட வாழ்ககை என்பது வாழ்வின் அனுபவங்களில் பசுமைகள் நிரம்பிய காலம் கல்லுரி வாழ்க்கை வேறு சுகம் என்றால் பள்ளிக்கூட வாழ்க்கை தனி அற்புதம்!

பெயர் தெரியாத வெள்ளைநிறப்பறவைகள் கூட்டமாய் பறந்து செல்கிறதை பார்த்திருக்கிறீர்களா அவை பச்சைவெளிகளில் தரையிறங்கி வெகு நிதானமாய் நடைபோடுகிற அழகை ரசித்திருக்கிறீர்களா எங்களூர் பள்ளிக்கூட சீருடைகள் வெள்ளை சட்டைகள்தான் பள்ளிக்கு பள்ளி டை மட்டும் மாறுபடும்.வெள்ளை நித்துப்பறவைகளாய் சில கோடி அழகுளின் சாயல்களில் நிறம் நிறமாய் பெண்கள்!(இப்பொழுதெல்லாம் கூட்டமாய் பறக்கிற பறவைகளை காணமுடிவதில்லை.இருக்கிற இடம் அப்படியோ என்னவோ)நான் கலவன் பாடசாலையில் படிக்காதது நான் செய்த துர்ரதிஷ்டம்!அடுக்கடுக்காய் அவள்கள் சைக்கிளிலும் நடந்தும் வருவது - இப்பொழுது நினைக்கையில் ஊவ்ஹ்ஹ்ஹ்...
(இந்த நேரத்தில் சமீராவைப்பார்த்த சூர்யாவை கற்பனை பண்ணிக்கொள்ளவும்) அதுபோல சில மோனரிஸங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் நெஞசில் மெதுவாக தட்டிக்கொள்ளுதலும் தலையை இடது பக்கமாய் திருப்பி இல்லாத காற்றை வெளிவிடுகிறதுமாகிய நிகழ்வு எனக்குள்ளும் நிகழந்திருக்கிறது! அப்படியொரு நிகழ்வு சமீப காலங்களில் நிகழவில்லை என்பது ஏக்கத்துக்குரிய உபரிக்குறிப்பு.


மனது விட்டுச்சொல்லப்போனால் என் பள்ளிக்கூடத் தெருக்களில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நடக்கலாம்...அடச்சே! என்ன வாழ்க்கையிது இப்பொழுது! ஏன் கடந்து போகின்றன நாட்கள் பால்யங்கள் தொலையக்கூடாது தொலைந்தால் ஊரை விட்டுப்போகக்கூடாது!நான் படித்த பள்ளிக்கூடத்துக்கு சகோதர பாடசாலையாக ஒரு பள்ளிக்கூடம் இருந்தது... வடமராட்சியின் பெயர் பெற்ற மகளிர் கல்லுரிகளில் ஒன்று! வடமராட்சி முழுவதிலும் இருந்து படித்த பெண்களை பார்க முடியும். ஒரே எல்லைக்குள் இருந்தாலும் நடுவில் வீதியும் சில கட்டிடங்களும் மட்டுமே பிரித்து வைத்திருந்தது ஆனால் போக்கு வரத்து ஒரே பாதைகளில்தான் நடக்கும் வாழ்வின் மிக அழகிய தெருக்களில் அவை முதலிடத்தில் இருக்கின்றன...

காலையில் ஏழரையிலிருந்து எட்டுமணிவரையும் மத்தியானம் இரண்டு மணியிலிருந்து இரண்டரை வரையும் அந்த தெருக்களின் முக்கியமான வளைவுகள் சில எங்களுடைய சிந்தனைத்தளங்களாய் அமைந்திருக்கும்.

காலையில் அழுத்தி அயர்ன் பண்ணிய வெள்ளைச்சட்டைகளும் இறுக்கிப்பின்னிய இரட்டைஜடைகளுமாய் வரிசை வரிசையாய் பெண்கள்!கோசலா மெத்தைக்கடை சந்தியை கடக்கையில் மணி ஏழு நாற்பத்தொன்றாய் இருக்கும், பிருந்தாவும் சிந்துவும் ஓடக்கரையையும் கொலிஜ் றோட்டையும் இணைக்கிற சந்திக்கு வருகையில் மணி ஏழு முப்பத்தொன்றாய் இருக்கும், நெல்லியடி பிரியாவும் சுகந்தியும் பள்ளிக்கூட வளைவை நெருங்குகையில் மணி ஏழு நாற்பத்தொன்பதாய் இருக்கும் இப்படி அவளவளுக்கென்று தனித்தனியான நேரத்தை வைத்திருந்து நாள் தவறாமல் குறித்த நேரத்துக்கு வருவதில் பெண்களை மிஞ்ச முடியாது.


எனக்கொரு பழக்கம் இப்பொழுதும் இருக்கிறது பெண்களின் முகத்தை கவனமாய் பார்க்கிறேனோ இல்லையோ அவர்கள் பாதங்களை பார்த்து விடுவேன் எனக்கென்னமோ தெரியவில்லை முகம் பார்த்தாலும் திரும்ப அவள் பாதங்களை பார்ப்பது பழக்கமாகியிருந்தது அதுபோல எல்லா கால்களுமே வெள்ளை காலுறைகளில் செதுக்கிவைத்தாற்போல இருந்தாலும்(இந்த சீருடை என்பது எவ்வளவு அழகான விசயம் அதுவும் வெள்ளை நித்தில் சீருடை என்பது ரசனைகளின் உயரிய விசயங்களில் ஒன்று வெள்ளை நிற சீருடைகளுக்கு வேறென்ன காரணங்கள் இருப்பினும் எனக்கென்னவோ இப்படித்தான் தோன்றியது)
அந்த வகையில் பழக்க தோசங்களின் விதிப்படி கால்களை வைத்தே கால்களுக்கு சொந்தக்காரி யாரென்பதை சொல்லிவிடக்கூடிய திறமையை வளர்திருந்தேன்:)


பள்ளிக்கூட நாட்களில் காலைகளில் பெண்களளை கவனிப்பது அல்லது பார்ப்பது ஒரு விதமான உற்சாகம் தருகிகற நிகழ்வு! வழக்கமாய் பார்க்கிற சில முகங்களை பார்க்க முடுடியாமல் போனால் அன்றய பாடங்கள் எதுவும் கவனத்துக்கு வருவதில்லை....
அதுவே அந்த இரண்டிலிருந்து இரண்டரை வரையிலான வெயில் நேரத்து பகல்களின் பசி நேரத்தில் அவள்களை கவனித்தால் அது ஒரு சுவாரஸ்யமான அழகியல் பெண்களை புரிந்து கொள்வதற்கு நான் முயன்ற முதல் படிகள் இந்த நாட்களில் இருந்து ஆரம்பித்திருக்கலாம் என்பது என் எண்ணம்...

காலையில் சொல்லப்படுகிற கதைகளுக்கும் கேட்கப்படுகிற கேள்விகளுக்கும் மதியங்களில் பதில் கிடைக்கலாம் இங்கே பதில் என்பது திட்டுக்களாகவும் அட்வைஸ்களாகவும் வெகு அரிதாய் பதில்களகவும் இருக்கலாம்.அப்படி பதில் சொல்கிறவள்களில் ஒருத்தியாக குந்தவை இருந்தது என்னுடைய ஆச்சரியம் அவள் திமிர் பிடித்தவளென்பதும் மண்டல் கள்ளி என்பதும் பெடியளின் ஒருமித்த வாக்கு மூலமாய் இருந்தது.எனக்கென்னவோ அவள் அமைதியானவளாக இருந்தாள் என்றுதான் உள் மனது சொல்லிக்கொண்டிருந்தது.அவள் மிக ஆர்ப்பாட்டமானவள் என்பதும் அடுத்தவர்களை புரிந்து கொள்வதில் அதிக அக்கறை கொண்டவள் என்பதும் அவளொடு நிகழ்ந்த மிகச்சொற்பமான உரையாடல்களில் இருந்து நான் தெரிந்து கொண்டது...குந்தவையோடு சமீபமாய் சைக்கிளோடுவது புரிதல் நிறைந்த நண்பனொருவனோடு கால் நனைக்கிற அலைகளின் கரையில் நடந்து கொண்டே மனது விட்டுப்பேசுகிற நிகழ்வைப்போன்றது...


பத்தாமாண்டு படித்த துர்க்காவோடு பேசிக்கொண்டு வருவது ரசனைக்குரிய விசயம் அவ்வளவு அழகாய் நாங்கள் இரண்டு பேரும் மட்டுமேயான தெருக்களில் நடப்பதைப்போல அபிநயங்களோடு பேசுவாள்...


ராதா மிக அழகாய் இருக்கிற அவள்...
வெகு சாதரணமாய் சைக்கிளை கையாள்கிறவள்! மிகப்பழகிய குதிரை ஒன்றின் சொந்தக்காரியைப்போல லாவகமான அலட்சியங்களோடு சைக்கிளோடுபவள்.இவளோடு பேசிக்கொண்டு வருகையில் எச்சரிக்கை கட்டாயம் அவசியமாய் இருக்கும் அதற்கு சாலை வளைவுகளை விட அவளுடைய வளைவுகள் காரணமாயிருந்திருக்கலாம்...


இன்னொருத்தி மாதுளா...
சற்றே குண்டாயிருந்தாலும் கவர்ச்சியான தோற்றம் என்பதோடு கிறங்கடிக்கும் விழிகளை விசேடமாக கொண்டிருந்தாள்.அந்த விழிகளுக்காகவே அவளோடு மிகக்கஸ்டப்பட்டு சினேகம் ஏற்படுத்திக்கொண்டேன். இப்பொழுதும் தூக்கம் கலைக்கிற கனவுகளில் அந்த விழிகளுக்கும் பங்கிருக்கிறது. உற்சாகமாய் இருப்பவள் இவளோடு சண்டை எல்லாம் போட்டிருக்கிறேன் சைக்கிளோடுகையில். சைக்கிள் சீற்றை கொஞ்சம் உயர்த்தி வைத்துக்கொண்டு அதிர்வுகளோடு சைக்கிளோடுகிற இவள் அதனால் தடுமாறுகிற பெடியளைப்பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை,அடிக்கடி எழுந்து அமர்வதில் அதிர்வுகளை ஏற்படுத்திப்போகிறவள். யாருமற்ற காலைப்பொழுதொன்றில் மிக வேகமாய் விளையாட்டு பயிற்சிக்கு போய்க்கொண்டிருந்தவளை வழிமறித்து நிப்பாட்டினேன் சைக்கிளின் இரண்டு பக்கமும் கால்களை வைத்து நின்றவளை கொஞ்சமும் எதிர்பார்க்கமால் சட்டென்று இழுத்தணத்தேன்...உதடுகள் விடுபடுகிற தருணத்தில் அவள் காதுகளுக்கருகில் மிக மெதுவாய் சொன்னேன் இனிமேல் இப்படி சைக்கிளோடாதே!


பள்ளிக்கூடத்தின் இறுதி நாட்களில் நான் கூடவே சைக்கிளோடி வந்த இன்னொரு பெண்ணையும் மறக்க முடியாது! மதிவதனா என்பது அவளுடைய பெயர். அவளை அவள் என்று எழுதுவது கொஞ்சம்அதிகம்தானென்றாலும் அவள் அதனைத்தான் விரும்பினாள் என்னை விட நாலு வயதென்றாலும் அவளுக்கு கூட இருக்கலாம் ஆனால் அவளோடு நான் கருத்துக்களின் அடிப்படையில் மிக நெருக்கமாய் இருந்தேன்!எங்கள் ஊரின் பள்ளியொன்றில் கணிதம் படிப்பிக்கிறவளாக இருந்தாள்.

கொஞ்சம் சிரமப்பட்டு சைக்கிளோடுவது போலத்தான் 'சாறி'கட்டியிருப்பாள் ஆனால் வெகு நளினமாய் விளம்பரங்களில் வருகிற பெண்களை போல இருக்கும் அவள் சைக்கிளை கையாள்கிற விதம். ஆளை அடிக்கிற வாசனையோடு வருகிற இவளோடு நிகழ்ந்த கதைகளை இங்கே சொல்லப்போனால் எனக்கு பின்னூட்டங்களில் வசவுகள் வரக்கூடும்!பின் குறிப்புகள் அல்லது பதிவுக்கான காரணங்கள்:

//
சைக்கிள்களையும் பெண்களையும் மறக்க முடியாத ஒரு ஊர் எங்களுடையது யாழ்ப்பாணம் சைக்கிள்களின் நகரம் என்று அங்கு வந்து போன வெளியிடத்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

//
எழுத்திற்குள் கொண்டு வரத்தெரியாத பல நினைவுகள் இருப்பினும் வசப்படுகிற பொழுதுகளில் எழுதி விட வேண்டும.மிக முக்கியமான நினைவுகள் இன்னமும் எழுதப்படவில்லை...


//
பள்ளிக்கூட சட்டையிலிருந்த
உன்னைப்போலிருந்தாள்
நெடு நாட்களுக்கு பிறகு
நேற்றய கனவில் வந்த
ஆதிக்கனவுகளின் தேவதை...!


//

தொடரும்...

23 comments:

ஆயில்யன் said...

//மனது விட்டுச்சொல்லப்போனால் என் பள்ளிக்கூடத் தெருக்களில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நடக்கலாம்...அடச்சே! என்ன வாழ்க்கையிது இப்பொழுது! ஏன் கடந்து போகின்றன நாட்கள் பால்யங்கள் தொலையக்கூடாது தொலைந்தால் ஊரை விட்டுப்போகக்கூடாது!
///

வழிமொழிகிறேன் உங்களின் உள்ளத்து வார்த்தைகளை....!

ஆயில்யன் said...

//பள்ளிக்கூட நாட்களில் காலைகளில் பெண்களளை கவனிப்பது அல்லது பார்ப்பது ஒரு விதமான உற்சாகம் தருகிகற நிகழ்வு!//

:))

தமிழன்-கறுப்பி... said...

வாங்க அண்ணன்...
வழிமொழிவுக்கு நன்றி..:)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
\\
//பள்ளிக்கூட நாட்களில் காலைகளில் பெண்களளை கவனிப்பது அல்லது பார்ப்பது ஒரு விதமான உற்சாகம் தருகிகற நிகழ்வு!//

:))
\\

என்ன சிரிப்பு..:)

ஆயில்யன் said...

//எழுத்திற்குள் கொண்டு வரத்தெரியாத பல நினைவுகள் இருப்பினும் வசப்படுகிற பொழுதுகளில் எழுதி விட வேண்டும.//

கண்டிப்பாக...!

//மிக முக்கியமான நினைவுகள் இன்னமும் எழுதப்படவில்லை...///

மனதில் எழுதப்பட்டிருக்கிறது வெளிப்படும் அல்லது நிகழ்வுகளில் வெளிப்படுத்தப்படும் என நம்புகிறேன்....!

ஆயில்யன் said...

//ஆயில்யன் said...
\\
//பள்ளிக்கூட நாட்களில் காலைகளில் பெண்களளை கவனிப்பது அல்லது பார்ப்பது ஒரு விதமான உற்சாகம் தருகிகற நிகழ்வு!//

:))
\\

என்ன சிரிப்பு..:)///


வெளிப்படுவதைத்தானேய்யா மறுமொழிய முடியும் !

எனக்கு புன்னகை வந்தது! (அந்த நாள் ஞாபகம் வந்தது நண்பனேன்னு வெளிப்படையா எல்லாம் பாட சொல்றீங்களா?)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//எழுத்திற்குள் கொண்டு வரத்தெரியாத பல நினைவுகள் இருப்பினும் வசப்படுகிற பொழுதுகளில் எழுதி விட வேண்டும.//

கண்டிப்பாக...!

//மிக முக்கியமான நினைவுகள் இன்னமும் எழுதப்படவில்லை...///

மனதில் எழுதப்பட்டிருக்கிறது வெளிப்படும் அல்லது நிகழ்வுகளில் வெளிப்படுத்தப்படும் என நம்புகிறேன்....!
\\

இந்தப்பதிவே நீளமாயிடுச்சுன்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்..:)
(நீளம் அதிகமாக அதிகமாக சுவாரஸ்யம் குறையும் ஆனால் இந்தப்பதிவுக்குள்ளேயே பல பதிவுகளை சுருக்கமாக சொல்லி இருக்கிறேன் நிச்சயமாய் இது தொடர் பதிவுதான்)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//ஆயில்யன் said...
\\
//பள்ளிக்கூட நாட்களில் காலைகளில் பெண்களளை கவனிப்பது அல்லது பார்ப்பது ஒரு விதமான உற்சாகம் தருகிகற நிகழ்வு!//

:))
\\

என்ன சிரிப்பு..:)///

வெளிப்படுவதைத்தானேய்யா மறுமொழிய முடியும் !

எனக்கு புன்னகை வந்தது! (அந்த நாள் ஞாபகம் வந்தது நண்பனேன்னு வெளிப்படையா எல்லாம் பாட சொல்றீங்களா?)
\\

அதுவும் சரிதான்...:)

Anonymous said...

ஆஹா அருமையான சைக்கில் சவாரி...........

ஹேமா said...

தமிழன் வாழ்க்கையைத் திரும்பவும் இளமையாக்கும் பள்ளிக்கூட நினைவுகள்.ஏன்தான் இந்த வயது இறக்கை கட்டிப் பறக்கிறதோ என எம்மை நாமே திட்டிக்கொள்ளும் நிலை.அழகான நினைவோடு பதிவில் இருக்க வேண்டிய பதிவுதான்.

தமிழன் ஒண்டு மட்டும் கேக்க வேணும்.அது என்ன பொம்பிளை
களின்ர காலைப் பாக்கிற பழக்கம்.

சாந்தி said...

சயிக்கிள் நினைவுகள் நன்றாகவுள்ளது. பால்யகாலம் எல்லோர் வாழ்விலும் இனிமையான தருணங்கள்.

சாந்தி

Divya said...

சைக்கிள் பயண நினைவுகள் சூப்பரா இருக்கு தமிழன், ரசிக்கும்படியாக எழுதியிருக்கிறீங்க:))

நினைவுகள் தொடரட்டும்......வாழ்த்துக்கள்!!

மெல்போர்ன் கமல் said...

நண்பரே எழுத்து நடை சுப்பர்... அப்படியே யாழ்ப்பாணம் போய் இப்ப ரீயூசன் முடிஞ்சு வாற குட்டிகளை நேரில பார்க்கிற மாதிரி இருக்கு... தொடருங்கோ!

கிரி said...

//நாள் தவறாமல் குறித்த நேரத்துக்கு வருவதில் பெண்களை மிஞ்ச முடியாது. //

நாங்கெல்லாம் ஷார்ப் ..கில்லி மாதிரி ஆன் டைம் ல இருப்போம்

//எச்சரிக்கை கட்டாயம் அவசியமாய் இருக்கும் அதற்கு சாலை வளைவுகளை விட அவளுடைய வளைவுகள் காரணமாயிருந்திருக்கலாம்//

கலக்குறீங்களே

//ஆளை அடிக்கிற வாசனையோடு வருகிற இவளோடு நிகழ்ந்த கதைகளை இங்கே சொல்லப்போனால் எனக்கு பின்னூட்டங்களில் வசவுகள் வரக்கூடும்!//

எனக்கு தனி மின்னஞ்சலில் கூறவும் :-)))

திகழ்மிளிர் said...

பள்ளிக்கூட நினைவுகள்
பசுமையான நினைவுகள்
படங்களும் எண்ணங்களும்
பயணத்தைப்
பின்னோக்கி செல்ல வைத்துவிட்டது நண்பரே

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

PoornimaSaran said...

அது ஒரு அழகிய நிலாக் காலம்!!!

அருண்மொழிவர்மன் said...

எலார் வாழ்விலும் மறக்கமுடியாத தேவதைகள் பற்றிய ஒரு இனிய பதிவு..

நல்ல் பகிர்தல்

இது பற்றி நானும் முபு “அது ஒரு அழகிய நிலாக்காலம்” என்று எழுதி உள்ளேன்

http://solvathellamunmai.blogspot.com/2006/09/blog-post.html

Mathu said...

நல்லா எழுதி இருக்கீங்க...பழைய நினைவுகளை மீட்டி பார்ப்பது ஒரு இனிமையான விடயம் தான்.... :)

SanJaiGan:-Dhi said...

மனுஷன் அனுபவிச்சு ரசிச்சி எழுதி இருக்காருய்யா.. கவிதையாட்டம் இருக்கு படிக்க.. :)

மெல்போர்ன் கமல் said...

தமிழன்-கறுப்பி... said...
1......15//


நண்பா இது என்ன வேலை??? ஏன் இந்த கணக்கெடுப்பு???? புரியவில்லை??

ஹேமா said...

//அவளுக்கு பேசத்தெரிந்திருந்தது மௌனங்களையும்!//

கற்பனையின் கோடியில் அழகாய் கோர்த்தெருத்த வசனம்.

ஹேமா said...

தமிழன்,அச்சோ...அச்சோ அட்டகாசம்.நான் தேவதைகள் எப்படியிருப்பார்கள் என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.நீங்கள் தேவதை பேசுது தூங்குது என்கிறீர்கள்!

ஹேமா said...

சரி...சரி பரவாயில்லை.உங்கள் தேவதை நிறைந்த சந்தோஷங்களோடு நீடூழி வாழ என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.தமிழன் கொஞ்சம் சொல்லிவிடுங்கோ என்ன!