Wednesday, April 16, 2008

போதையில் உளறியது...

*
நேற்றய இரவில்
ஏற்றிய போதையின் தலைவலிக்கு
மாற்றாக இன்றய பகலில்
தேவைப்படுகிற போதை போல
உன் நினைவுகளுக்கும் மருந்தாக
மறுபடியும்
உன் நினைவுகள்...

*
மதவடிப்பனங்காணி
ஒற்றைப்பனைக்கள்ளின் போதை
எதுவுமில்லாமல் போயிற்று
உன்னை முதன்முதலாய்
சேலையில் பார்த்த
நாளில் இருந்து...


*
நாட்டுச்சரக்கு
"நச்"சென்று இருந்தது...
நீ சிரிக்கும் போது குழிகின்ற
கன்னங்களை பார்க்கும் வரை...


*
சொன்னால் கோபப்பட கூடாது
பனஞ்சாராயம் தருகிற
மயக்கமெல்லாம் சாதாரணம்
நீ "இஞ்சயப்பா..." என்று
சினுங்கும்பொழுது...


*
ஊற்றிவைத்த மதுவின் முதல்சொட்டும்
பற்ற வைத்த சிகரெட்டின் கடைசி "தம்மும்"
தருகிற சுகமே
தனி என்று சொல்வதை மறந்திருந்தேன்
உந்தன் முத்தங்களை பருகியதிலிருந்து...


*
"தண்ணி" அடிச்சா கவலை மறந்து
உறங்குவேனென்று நம்பியிருந்தேன்..
உன் மடியில் உறங்குகையில்
உலகையே மறந்து விடுகிறேன்...

19 comments:

புகழன் said...

ஆம் உண்மை.
கள்ளின் போதையை விட காதலின் போதை வீரியமிக்கது.
ஆனா நீங்க உளறியதற்கு காதல் போதை காரணமல்ல. நேற்று அடித்த கச்சடா போதை இன்னும் தனியவில்லை என்பதுதான்.

தமிழன்-கறுப்பி... said...

//ஆம் உண்மை.
கள்ளின் போதையை விட காதலின் போதை வீரியமிக்கது.
ஆனா நீங்க உளறியதற்கு காதல் போதை காரணமல்ல. நேற்று அடித்த கச்சடா போதை இன்னும் தனியவில்லை என்பதுதான்.///

வாங்க புகழன்...

என்ன இப்படி சொல்லிட்டிங்க...

(நன்றி உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...)

புகழன் said...

//தமிழன்... said...
வாங்க புகழன்...

என்ன இப்படி சொல்லிட்டிங்க...

//

கோவிச்சுக்காதீங்க சும்மானாச்சுக்கும் சொன்னேன்.
உண்மையிலேயே கவிதைகள் அழகாக உள்ளது.
யதார்த்த வார்த்தைகளில்
இலக்கண வரம்பில்லா இலக்கியம் உங்கள் இந்தக் கவிதைகளில்...
தொடர்ந்து எழுதுங்கள்
இப்படிக்கு புகழன்

தமிழன்-கறுப்பி... said...

புகழன்...said...

//தமிழன்... said...
வாங்க புகழன்...

என்ன இப்படி சொல்லிட்டிங்க...

//

கோவிச்சுக்காதீங்க சும்மானாச்சுக்கும் சொன்னேன்.
உண்மையிலேயே கவிதைகள் அழகாக உள்ளது.
யதார்த்த வார்த்தைகளில்
இலக்கண வரம்பில்லா இலக்கியம் உங்கள் இந்தக் கவிதைகளில்...
தொடர்ந்து எழுதுங்கள்
இப்படிக்கு புகழன்///

சரி சரி கச்சடா என்ற சொல்லு உங்களுக்கு எப்படி தெரியும்...

புகழன் said...

சத்தியமா கச்சடா என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் தெரியாது.
மோசமான அல்லது நன்றாக இல்லாத என்பதைக் குறிப்பதற்கு எங்க மாமா பயன்படுத்தியதை சிறுவயதில் கேட்ட ஞாபகம்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும். மாற்றிக் கொள்கிறேன்.

தமிழன்-கறுப்பி... said...

///சத்தியமா கச்சடா என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் தெரியாது.
மோசமான அல்லது நன்றாக இல்லாத என்பதைக் குறிப்பதற்கு எங்க மாமா பயன்படுத்தியதை சிறுவயதில் கேட்ட ஞாபகம்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும். மாற்றிக் கொள்கிறேன்.///



சே சே அப்படி ஒன்றும் அவ்வளவு மோசமான வார்த்தை கிடையாது...நீங்க சொன்ன மாதிரிதான்

நன்றி...

My days(Gops) said...

ஆஹா, அருமையா இருக்குங்க உங்க கவிதைகள் எல்லாம்.....

//ஊற்றிவைத்த மதுவின் முதல்சொட்டும்
பற்ற வைத்த சிகரெட்டின் கடைசி "தம்மும்"
தருகிற சுகமே
தனி என்று சொல்வதை மறந்திருந்தேன்
உந்தன் முத்தங்களை பருகியதிலிருந்து...
//

சொட்டோ சொட்டோ னு சொட்டுதுங்க....

தினேஷ் said...

காதல் மயக்கமா...? கவிதை மயக்கமா...? ஒரே மயக்கமாயிருக்கிறது

தினேஷ்

தமிழன்-கறுப்பி... said...

///காதல் மயக்கமா...? கவிதை மயக்கமா...? ஒரே மயக்கமாயிருக்கிறது

தினேஷ்////

:))

நன்றி தினேஷ்...

இறக்குவானை நிர்ஷன் said...

மதுவை விஞ்சியது மாது எனக் காட்டியிருக்கிறீர்கள். பலரது மதுவாழ்க்கைக்கு மாதுவே காரணம் என்பதை ஏன் சுட்ட மறந்தீர்கள்?

கவிதை நன்று.

தமிழன்-கறுப்பி... said...

///மதுவை விஞ்சியது மாது எனக் காட்டியிருக்கிறீர்கள். பலரது மதுவாழ்க்கைக்கு மாதுவே காரணம் என்பதை ஏன் சுட்ட மறந்தீர்கள்?

கவிதை நன்று.///


நிர்ஷன் என்ன இப்படி சொல்கிறீர்கள் பெண்மை அழகான விடயம் அதனை சரியாக புரிந்து கொண்டால்...

மங்களூர் சிவா said...

ஆஹா இது எப்ப போஸ்ட்!??

மங்களூர் சிவா said...

எப்ப எழுதின போஸ்ட்டா இருந்தா என்ன கும்மிட வேண்டியதுதான்!!

மங்களூர் சிவா said...

/
நேற்றய இரவில்
ஏற்றிய போதையின் தலைவலிக்கு
மாற்றாக இன்றய பகலில்
தேவைப்படுகிற போதை போல
/

போதை ஏறிப்போச்சுனா குடம் குடமா பச்ச தண்ணிதான் ஊத்துவாங்க !!

:)))))))

/
உன் நினைவுகளுக்கும் மருந்தாக
மறுபடியும்
உன் நினைவுகள்...
/

இது நல்லா இருக்கு!!

மங்களூர் சிவா said...

/
மதவடிப்பனங்காணி
ஒற்றைப்பனைக்கள்ளின் போதை
எதுவுமில்லாமல் போயிற்று
உன்னை முதன்முதலாய்
சேலையில் பார்த்த
நாளில் இருந்து...
/


நல்ல வேளை சேலை மாற்றும் போது பாத்திருந்தா செத்திருப்ப

:))))))))))))))))))

மங்களூர் சிவா said...

/
நாட்டுச்சரக்கு
"நச்"சென்று இருந்தது...
நீ சிரிக்கும் போது குழிகின்ற
கன்னங்களை பார்க்கும் வரை...
/

சிரிப்பை பாத்ததுக்கப்புறம்
நாட்டு சரக்கு
'சப்'புனு இருக்கோ!?

:))))))))))))

மங்களூர் சிவா said...

/
சொன்னால் கோபப்பட கூடாது
பனஞ்சாராயம் தருகிற
மயக்கமெல்லாம் சாதாரணம்
நீ "இஞ்சயப்பா..." என்று
சினுங்கும்பொழுது...
/

நீ சிரிக்கும் க்ளோரோபாம்
மதி மயக்கும் அனஸ்தீஸியா

:))))))))

மங்களூர் சிவா said...

/
ஊற்றிவைத்த மதுவின் முதல்சொட்டும்
பற்ற வைத்த சிகரெட்டின் கடைசி "தம்மும்"
தருகிற சுகமே
தனி என்று சொல்வதை மறந்திருந்தேன்
உந்தன் முத்தங்களை பருகியதிலிருந்து...
/

அட்ரா அட்ரா அட்ரா சக்கை

:))))

பாத்து பொறுமையா பருகுங்க ஆப்பீசர் மாடு களனி தண்ணி குடிக்கறமாதிரி பருகீடாதீங்க பாப்பா மெரண்டுட போகுது


:))))))))))

மங்களூர் சிவா said...

/
"தண்ணி" அடிச்சா கவலை மறந்து
உறங்குவேனென்று நம்பியிருந்தேன்..
உன் மடியில் உறங்குகையில்
உலகையே மறந்து விடுகிறேன்...
/

பாத்து கோவணத்த யாரும் உருவிகிட்டு போயிட போறாங்க கொஞ்சம் விழிச்சிக்கங்க!!

:)))))