Tuesday, March 25, 2008

இப்பொழுதெல்லாம்...

இப்பொழுதெல்லாம் அடிக்கடி

கோபப்படுவதாய் சொல்கிறாய்
கோபப் படவும் செய்கிறாய் -இந்த
கோபத்தையெல்லாம் இவ்வளவு தூரம்
வர முன்பு காட்டினாயா

அருகிலிருந்தே அனுபவித்திருப்பேனே
அழகான கோபங்களை

கொஞ்சிக்கொஞ்சியே
கெஞ்சியிருப்பேனே

இப்படியான இன்னுமொரு ஏக்கத்தை
எப்படிக் கொடுக்க முடிகிறது உன்னால்

திருப்பி வைத்த முகத்தின்
இடது கன்னத்து தழும்பில்
அடக்கி வைத்த சிரிப்பின் வரிகள்

கீழ் காதோர மச்சத்தில்
துளிர்க்கின்ற வியர்வை

உம்மென்று உதடு சுழித்து
உர்ரென்று விழித்து
தாழ்கின்ற கண்கள்

வியர்வையோடு பரபரக்கும் கைகளுக்குள் நானாக
சுகமாக கசங்கிப்போகும் கைக்குட்டை

உன் பொய்க்கோபம் தாளாமல்
மேவித்தணிகின்ற மோகனங்கள்

சிரித்து விடத்தயாராய் இருக்கும் கண்களை
கட்டுப்படுத்த போராடும்பொழுது
கூடுகின்ற உன் அழகு

அதற்கு துணையாய் உதடுகளை
கடித்து வைத்திருக்கும் குறும்பு

எத்தனை அழகு உன்னிடம்
நீ கோபப்படுகையில்

போடி...
அழகாகத்தான் கோபப்படுகிறாய் நீ!

4 comments:

நவீன் ப்ரகாஷ் said...

//திருப்பி வைத்த முகத்தின்
இடது கன்னத்து தழும்பில்
அடக்கி வைத்த சிரிப்பின் வரிகள்

கீழ் காதோர மச்சத்தில்
துளிர்க்கின்ற வியர்வை //


தமிழன் :))

மிக மிக நுட்பமாகவும் மிக அழகாகவும் ஆழமான காதலோடும் கோபப்படுவதை ரசித்து எழுதியிருக்கிறீர்கள் !!! மிகவும் ரசித்தேன்... :))))

தமிழன்-கறுப்பி... said...

வாங்க அண்ணன்

நுட்பமா
அந்த நுட்பம் அவள் கொடுத்தது-நான் அதை சொல்பவன் மட்டும்தான்

நன்றி உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்

நிவிஷா..... said...

\\சிரித்து விடத்தயாராய் இருக்கும் கண்களை
கட்டுப்படுத்த போராடும்பொழுது
கூடுகின்ற உன் அழகு

அதற்கு துணையாய் உதடுகளை
கடித்து வைத்திருக்கும் குறும்பு \\

மிக மிக அழகாக ஒரு பெண்ணின் கோபத்தை வர்ணிச்சிருக்கிறீங்க:))

நட்போடு
நிவிஷா.

தமிழன்-கறுப்பி... said...

எல்லாம அவள் செயல் அழகெல்லாம அவளுடையது- நான் அதை பாடுகிறவன் மட்டுமே...


நிவிஷா...
நன்றி உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...