Monday, July 6, 2009

ரணகளக்குறிப்புகள் அல்லது கொட்டாவிகள்...!

புனைவு.

இரு
நூற்று
நாற்பத்து
ஏழு
எழுத்துக்களும்,
புதிய சொற்களும்
அல்லது, மிக
பழைய சொற்களும்.


புரிதலின் இல்லாமை

எனக்கும்,
உனக்கும்,
அவர்களுக்கும்,
நிறைய
வித்தியாசங்களிருக்கிறது
ஒரேயொரு
ஒற்றுமை இருக்கிறது.



தலைவர் வருகிறார்


தமிழின தலைவர்..
தமிழக முதல்வர்..
டாக்டர்..
தலைவர்...
நமது தலைவர் தொலைக்காட்சியில்...!



சமாதான இலங்கை.

வடக்கின் வசந்தம்,
அதிகாரப்பகிர்வு,
நாடுகடந்த அரசு,
போடா அரைலூசு
இடைத்தங்கல் முகாமில
இல்லையடா கக்கூசு!



கொட்டாவிகள்

இசம்,
தத்துவம்,
இலக்கியம்,
தலித்தியம்,
பார்ப்பனீயம்,
மார்க்கசியம்,
உலகமயம்,
எல்லாம் பேசும்
உண்ட மயக்கம்!


எழுத்துலகம்

சந்திப்பு,
ஒன்று கூடல்,
கூட்டம்,
பாசறை,
முகவுரை,
பொழிப்புரை,
தொகுப்புரை,
பழிப்புரை.


தெரியாதது

எனக்கு
எல்லாம்
தெரியும்
உனக்கு
எதுவும்
தெரியாது

இருவருக்கும்
வாழ்க்கை
தெரியாது.

இலக்கியம்

தமிழ்,
ஆங்கிலம்,
லத்தீன்,
பிரெஞ்சு,
எல்லலாம் வாசித்திருக்கிறாய்
வாழ்க்கையும்
மனிதர்களும் தவிர.

வாசகன்

செயமோகன்,
சுயமோகி,
இணையம்,
இலக்கிய நோய்கள்,
பதிவுகள்,
பின்னூட்ட குசுக்கள்,
சாரு,
சைக்கோ,
பாட்டு,
பக்கவாத்தியங்கள்,
கூத்தாடிகள்,
நடுவர்கள்,
தமிழ்மணம்,
ஆனந்தவிகடன்,
பிரபலங்கள்,
எல்லோரும் இருக்கிறார்கள்
என்னைத்தவிர.


புதுக்கவிதை

கொண்டையில பூக்காடு
கூடையில கருவாடு
பு--யில மயிர்க்காடு
பொத்தி வச்சு பூப்போடு
நாட்டுல படும் பாடு
நக்கி தின்று புகழ் பாடு
சோத்துக்கு பெரும்பாடு
இலக்கியம் ஒரு கேடு
இது ஒரு புதுக்கவிதை
இதை நீ கவட்டுக்குள் வை.


சின்னத்திரை...

நடன நிகழ்ச்சிகள்
நெடுந்தொடர்கள்
நிறையப்பெண்கள்
நிறையக்கதைகள்
நிறைய விளம்பரங்கள்
திரும்பத்
திரும்பத்
திரும்பத்
திரும்பத்
திரும்ப பெண்கள்,

நேற்று அவள்
இன்றைக்கு இவள்
நாளைக்கு மற்றவள்
மற்றொருநாள் இன்னொருத்தி
இன்னொரு நாள் அவளும் இவளும்

வாரம் முழுவதும் கனவுகள்

வாழ்க சின்னத்திரை,
வாழ்க தமிழ் தொலைக்காட்சி,
ஒழிக குறிகள்.


எழுத மறந்த குறிப்பு:

நாங்களும் இருக்கமுல்ல(நானும் ரவுடிதான்)

எப்பூடி...!

20 comments:

Thamiz Priyan said...

ரணகளமய்யா.. :(

நிஜமா நல்லவன் said...

ரணகளமய்யா.. :(
ரணகளமய்யா.. :(
ரணகளமய்யா.. :(

கானா பிரபா said...

கொன்னுட்டீங்க கருப்பட்டி

நட்புடன் ஜமால் said...

ரணகளமய்யா.. :(
ரணகளமய்யா.. :(
ரணகளமய்யா.. :(

ரணகளமய்யா.. :(
ரணகளமய்யா.. :(
ரணகளமய்யா.. :(

ரணகளமய்யா.. :(
ரணகளமய்யா.. :(
ரணகளமய்யா.. :(

Thamira said...

பொருத்தமான தலைப்பு. உண்மையிலேயே இது ரணகளம் அல்லது கொட்டாவிதான்.

அதுவும் வாசகன் கவிதை.. பிரமாதம்.!

சென்ஷி said...

அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சானே... :)))

கொளுத்தி எடுத்திப்புட்டே கறுப்பி..

எனக்கு ரொம்பப் பிடிச்சதா வரிசைப்படுத்த கஷ்டமாகுது. எல்லாமே ஒண்ணை ஒண்ணு வித்தியாசப்படுத்தி மிஞ்சுது. ஆனாலும் எழுத்துலகமும் வாசகனும் ரொம்ப நெருக்கமா இருக்கறதால சட்டுன்னு ஒட்டிக்குது..

மங்களூர் சிவா said...

சூப்பர்!!!

மங்களூர் சிவா said...

பொருத்தமான தலைப்பு. உண்மையிலேயே இது ரணகளம் அல்லது கொட்டாவிதான்.

மங்களூர் சிவா said...

அதுவும் வாசகன் கவிதை.. பிரமாதம்.!

thamizhparavai said...

பின்னிட்டீங்க...
இவ்வளவு கோபமா...??
ருத்ர தாண்டவம்...

Sanjai Gandhi said...

ஜூப்பரு.. :)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன்-
நன்றி தல

நிஜமா நல்லவன்-
நன்றி அண்ணே...

க-பிரபா-
நன்றி அண்ணன்...

ஜமால்-
நன்றி, என்ன முன்னமாதிரி பாக்க முடியறதில்லை.

ஆதிமூலகிருஷ்ணன்-
நன்றி தாமிரா அண்ணே..

சென்ஷி-
நன்றி மாப்பி.

ம.சிவா-
நன்றி மாம்ஸ்..
நீ இன்னும் மாறவே இல்ல மாம்ஸ.. பின்னூட்டம் போடுற விசயத்துல.

தமிழ்பறவை-
நன்றி,பல நாட்களின் பிறகான வருகைக்கு. கோபம்தான்.

$anjaiGandh!-
நன்றி சஞ்சய் அங்கிள்.

தமிழன்-கறுப்பி... said...

இதே தலைப்புல முன்னாடியும் ஒரு முறை எழுதியிருக்கேன்.

ஒரு விளம்பரந்தான்.

:)

ஹேமா said...

தமிழன்,நிறையவே...சிந்திச்சு நிறையவே எழுதி அசத்துறீங்க.

மோனே தம்பி யாரிட்டையாவது திட்டு வாங்காம இருந்தா சரி.அந்த அம்மாளாச்சிதான் காப்பாத்தவேணும் உங்களை.

வால்பையன் said...

//நாடுகடந்த அரசு,
போடா அரைலூசு
இடைத்தங்கல் முகாமில
இல்லையடா கக்கூசு!//

சூப்பருங்க அந்த கோட்!

பா.ராஜாராம் said...

"இலக்கியம்" ஆகச் சிறந்த இலக்கியம்
கறுப்பி(யாருக்கு வேணும் காதல்)
வாழ்த்துக்கள்!

யாழினி said...

அருமை...

யாத்ரா said...

அனைத்தையும் மிகவும் ரசித்தேன் நண்பா.

தமிழன்-கறுப்பி... said...

@
வாங்கோ ஹேமா, நன்றி!
சும்மா தெரியாதே உப்பிடித்தான் :)
@
நன்றி வால்பையன்,
ம்ம்...:)
முதல் பின்னூட்டம்.
@
நன்றி யாழினி..!
@
நன்றி யாத்ரா...

நேசமித்ரன் said...

சும்மா பிரிச்சு மேயுறீங்க போங்க..!
:)