Friday, February 27, 2009

அனுபவிக்கத்தெரியாத தனிமை...

பிரியங்களற்ற தனிமை இருண்டிருந்த
பின்னிரவொன்றில்...
அறையில் இல்லாதவளுக்காய்
அழுது கொண்டிருந்தது மெழுகுவர்த்தி,
ஜன்னல் திறக்கிற குளிர்காற்றுக்கு தெரிவதில்லை
முத்தங்களற்ற இரவுகளின் நீளம், இல்லையா?
மிக மெல்லிய இசைகளினூடு...
ஒரு உரையாடலை ஆரம்பிக்கலாம் இறுதியல்
அவை உக்கிரமான குற்றச்சாட்டுகளாக மாறிவிடாமலிருக்க;
சிகரெட்டுகளை நிறுத்தி மது நனைத்த உதடுகளில்
சில முத்தங்களை சத்தங்களோடு பரிமாறிக்கொள்ளலாம்
உரையாடல்கள் தீர்ந்து போக
முத்தங்கள் மீதமிருக்கையில் நீ-
உன் சிறகுகளை அணிந்து கொள்ளலாம்,
மறக்காமல் இருப்பதற்காய் மேசையிலிருக்கிற...
பச்சை நிறத்தில் தேதிகள் எழுதப்பட்ட நாட்குறிப்பின்
பக்கங்களுக்கிடையில் உன் மார்புகள் மறைத்த
இறகுகளிலொன்றை விட்டுச்சென்றுவிடு,
இன்னொரு நீளமான இரவில்
உன்னை அழைப்பதற்கு அது உதவக்கூடும்!

உறங்கி விழிக்கையில்
மேஜைமீது பரவியிருந்தது
மீதமிருக்கிற மெழுகு,

உண்மைதான்...
அனுபவிக்கத்தெரியாத தனிமைகள்
மிகக்கொடியவை!


_____________________________________________________________________________

வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறது அலுவலகத்தலிருக்கிற இணைய இணைப்பு, எழுதிய பின்னூட்டங்களை பதிப்பிக்க முடியவில்லை சட்டென்று அறுந்து போகிறது! பின்னூட்டத்தை எழுதி அதனை வெளிடுவதற்குரிய சுட்டியை அழுத்தியதும் இந்தப்பக்கத்தை காட்ட முடியாது என்று கடுப்பேத்திக்கொண்டிருக்கிறது இணைய உலாவி. சென்ற புதன் கிழமைதான் ஆரம்பமாகியிருந்தது இந்த பிரச்சனை! சரி அன்றைக்கு மட்டும்தான் என்று அப்படியே விட்டுவிட்டேன். நேற்று இணையத்திற்கு வரவே முடியவில்லை. இன்று காலையிலிருந்து முயன்று கொண்டிருக்கிறேன் ம்ஹீம்...கூகுளின் கடவுள்(இருக்கிறார்தானே)கண்திறக்கவேயில்லை!

அதனால் கிடைத்த அவகாசத்தில் சில சொற்களை சேமித்து ஒரு பதிவாக்கியிருக்கிறேன் அதற்கான மூல காரணம் இந்த சோகத்தை சொல்வது மட்டுமே பின்னூட்டம் எழுத முடியாத சோகம் என்னைப்போல பின்னூட்டப்பதிவர்களுக்கு தெரியும்.


_____________________________________________________________________

மிக முக்கிய விடயம்:

தமிழ்மண விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விருது பெற்ற அனைவருக்கும், பங்குபற்றிய எல்லா சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள் முக்கியமாய் வாக்களித்த பெருமக்கள் அனைவருக்கும் நன்றிகள்.

தமிழ் மணத்துக்கு கடமைப்பட்டிருக்கிறது வலையுலகம் ஒரு மாதிரி இறுக்கமான சூழ்நிலையிலும் இதனை நிறைவேற்றியதற்காக.


தொடர்ந்து பயணிப்போம்.

20 comments:

புதியவன் said...

//உறங்கி விழிக்கையில்
மேஜைமீது பரவியிருந்தது
மீதமிருக்கிற மெழுகு,//

அருமை...

Poornima Saravana kumar said...

//அனுபவிக்கத்தெரியாத தனிமை...//ஹிருக்கிர்

ஆஹா என்ன ஒரு அழகான தலைப்பு!!!

எனக்கு தனிமைனா ரொம்ப பிடிக்கும்..
சிலசமயங்களில் மட்டும் உங்கள் தலைப்பைப் போல் இருந்திருக்கிரேன்:(

Poornima Saravana kumar said...

//உண்மைதான்...
அனுபவிக்கத்தெரியாத தனிமைகள்
மிகக்கொடியவை!
//

உண்மைதான்!

Poornima Saravana kumar said...

//பிரியங்களற்ற தனிமை இருண்டிருந்த
பின்னிரவொன்றில்... //

வார்த்தைகளை அழகாய் அடுக்கி இருக்கிறீர்:)

Poornima Saravana kumar said...

//பின்னூட்டம் எழுத முடியாத சோகம் என்னைப்போல பின்னூட்டப்பதிவர்களுக்கு தெரியும்.
//

நல்லாவே புரியுதுங்க:((

Unknown said...

கவிதை வெகு அழகு :))

கானா பிரபா said...

//உண்மைதான்...
அனுபவிக்கத்தெரியாத தனிமைகள்
மிகக்கொடியவை!//

ஓமோம் கஷ்டந்தானப்பு, நல்லா இருக்கு கவிதை ரசித்தேன்.

Thamiz Priyan said...

:) இன்ஸ்ட்ரஸ்டிங்!

நிஜமா நல்லவன் said...

/உறங்கி விழிக்கையில்
மேஜைமீது பரவியிருந்தது
மீதமிருக்கிற மெழுகு/


எப்படி தான் தோணுதோ....சான்ஸ் இல்லை...கலக்கிட்டீங்க...

நிஜமா நல்லவன் said...

உங்க ப்ளாக் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு....ஸாரி..:)

நிஜமா நல்லவன் said...

நலமா இருக்கீங்களா?

geevanathy said...

உறங்கி விழிக்கையில்
மேஜைமீது பரவியிருந்தது
மீதமிருக்கிற மெழுகு,

உண்மைதான்...
அனுபவிக்கத்தெரியாத தனிமைகள்
மிகக்கொடியவை!


அருமையான கவிதை வாழ்த்துக்கள் நண்பனே

நிஜமா நல்லவன் said...

/தமிழ் பிரியன் said...

:) இன்ஸ்ட்ரஸ்டிங்!/


அட..தமிழ் இங்கிலிபீசு பேசுது...:)

தமிழ் மதுரம் said...

ஜன்னல் திறக்கிற குளிர்காற்றுக்கு தெரிவதில்லை
முத்தங்களற்ற இரவுகளின் நீளம், இல்லையா? //

இதென்ன அனுபவமா இருக்கே???

தமிழ் மதுரம் said...

அனுபவிக்கத் தெரிந்தவருக்கு அனுவவிக்கத் தெரியாத விடயங்கள் எப்படிக் கவிதையில் தெரியும்??

நல்ல தலைப்பும், நல்ல உள்ளடக்கமும்...
தொடருங்கோ

Divya said...

தலைப்பும் பதிவும் அருமை தமிழன்!

உங்க ப்ளாக் புது டெம்ப்லேட் நல்லா இருக்கு :))

Anonymous said...

//தமிழ் மணத்துக்கு கடமைப்பட்டிருக்கிறது வலையுலகம் ஒரு மாதிரி இறுக்கமான சூழ்நிலையிலும் இதனை நிறைவேற்றியதற்காக.//

மிகச்சரி.

தமிழன்-கறுப்பி... said...

@ நன்றி புதியவன்,

@ பூர்ணிமா
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி பூர்ணிமா புரிஞ்சா சரிதான்..

@ நன்றி ஸ்ரீமதி

@ க-பிரபா

நன்றி அண்ணன்...

@ தமிழ்பிரியன்

நன்றி தல...

@ நிஜமா நல்லவன்

வாங்க பாரதி சார்
பல நாட்களுக்கு பிறகான வருகைக்கு நன்றி, நல்லா இருக்கிறேன்..
நேரம் கிடைக்கிறப்ப கட்டாயம் வாங்க.


@ நன்றி ஜீவராஜ்

@ நன்றி கமல்

@ நன்றி திவ்யா...

@ நன்றி வேலன் அண்ணாச்சி...

MSK / Saravana said...

உண்மைதான்...
அனுபவிக்கத்தெரியாத தனிமைகள்
மிகக்கொடியவை..

Sakthi said...

அட்டகாசம் அருமை