Wednesday, February 11, 2009
காதல் வாரம் - 2
\\
நவராத்திரியின் விரத நாளொன்றில்
மாதாளம் முத்துக்கள் நிரம்பிய தட்டோடு வந்தமர்ந்தவள்
மிகக் கரடுமுரடான மரத்தில இருக்கிற
மிக மென்மையான மாதாளம் பூக்களின் இதழ்களை
மிகப்பிடிக்குமென்றாய்,
செம்மஞ்சள் நிறத்தில்
மஞ்சள் மகரந்தங்களோடிருக்கிற அவற்றை
கன்னனங்களில் உரசுவது பால்யகாலங்களில்
பிடித்தமான விசயம் என்றாய் - இப்பொழுது
பிடிப்பதில்லையா என்றதற்கு
மார்புகளில் முள் குத்திய இருள்கசிகிற
மாலையொன்றிற்கு பிறகு அவை
உனக்கு கிட்டுவதில்லை என
உதடுகளை பிதுக்கினாய்...
ஆடைகளை இழந்த இரவொன்றில்
மாதுளை மகரந்தங்களை உன்
மார்பிலணிந்திருந்தாய் நீ...
\\
ஒதியடி வைரவர் சாட்சிக்கிருக்க
சப்பதமின்றி முத்தமிட்ட பொழுதுகளில்
வீசிய,அரச மரக்காற்றில்
ஆடின பூவரசம் பூக்கள்...
மூடிய விழிகள் திறக்கிற பொழுதில்
பூவரசம் பூக்களை மிகப்பிடிக்குமென்றாய்!
பின்பொருநாளில்...
கூடை நிறையக்கொண்டு வந்த பூக்களில் ஒன்றை
கூந்தலுக்குள் சிறைவைத்த கணங்களில்
உயிர்களை பரிமாறியிருந்தோம்...
கூடை கொள்ளாத பூக்கள் உன்
தேகம் முடியிருந்தது.
பின் குறிப்பு:
\\
பூக்கள் பற்றிய பத்தொன்பது வருட குறிப்புகளில் இருந்து
\\
பூவரசம் பூக்களை சூடிக்கொண்ட தேவதையின் வாசனைகள் என்கிற அறுநூற்றி இருபத்தொரு பக்கங்கள் கொண்ட எழுதப்படாத புத்தகத்தின் நடுப்பக்கங்களில் இருந்து...
\\
ஒற்றைப்பூவரசம் பூவைச்சூடிய கறுப்பியின் சாயல்களில் இருக்கவில்லை வேறெந்த தேவதைகளும்...
picture courtesy - modernartimages.com
Labels:
காதல்...,
தேவதையின் தருணங்கள்...,
பூவரசம்பூ...
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
\\ஒற்றைப்பூவரசம் பூவைச்சூடிய கறுப்பியின் சாயல்களில் இருக்கவில்லை வேறெந்த தேவதைகளும்...\\
நிஜமாவா?????????
வாரவாரம் வந்துடுங்க...
//பின்பொருநாளில்...
கூடை நிறையக்கொண்டு வந்த பூக்களில் ஒன்றை
கூந்தலுக்குள் சிறைவைத்த கணங்களில்
உயிர்களை பரிமாறியிருந்தோம்...
கூடை கொள்ளாத பூக்கள் உன்
தேகம் முடியிருந்தது.//
நல்ல வரிகள்
இந்த காதலர் தினத்துக்கு உங்கள் உபயம்
\\ஒற்றைப்பூவரசம் பூவைச்சூடிய கறுப்பியின் சாயல்களில் இருக்கவில்லை வேறெந்த தேவதைகளும்...\\
:))
varigal anaiththum.....romba,romba nalla irukku tamilan:))
// ஒற்றைப்பூவரசம் பூவைச்சூடிய கறுப்பியின் சாயல்களில் இருக்கவில்லை வேறெந்த தேவதைகளும்...//
சொல்வதற்கு வாத்தைகளே இல்லை :)
ஒவ்வொரு வரியும் அருமை…
கவிதைகள் அழகு. பின்குறிப்புகள் சுவாரசியம்!!
//கூடை நிறையக்கொண்டு வந்த பூக்களில் ஒன்றை
கூந்தலுக்குள் சிறைவைத்த கணங்களில்
உயிர்களை பரிமாறியிருந்தோம்...//
அருமை..
நல்ல கவிதைகளை தந்தமைக்கு நன்றி, தமிழன் - கறுப்பி!!
//ஒற்றைப்பூவரசம் பூவைச்சூடிய கறுப்பியின் சாயல்களில் இருக்கவில்லை வேறெந்த தேவதைகளும்...//
ஆகா....!
//ஒற்றைப்பூவரசம் பூவைச்சூடிய கறுப்பியின் சாயல்களில் இருக்கவில்லை வேறெந்த தேவதைகளும்...//
பாருங்களேன்.ம்ம்ம்ம்....
பொறாமையாவும் இருக்கு எனக்கு.
//பூவரசம் பூக்களை சூடிக்கொண்ட தேவதையின் வாசனைகள் என்கிற அறுநூற்றி இருபத்தொரு பக்கங்கள் கொண்ட எழுதப்படாத புத்தகத்தின் நடுப்பக்கங்களில் இருந்து...//
அப்போ 621 பக்கமும் வெறுசாக் கிடந்தது.அதிலயிருந்து....எடுத்தது.
கொடுத்து வைத்த தமிழனின் கறுப்பி.பூக்களையே ஆடைகளாக்கிக் கொடுக்கிறார்.
முத்தமும்கூட....
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
இது தமிழனின் தளம் தானே.. இல்லை தவறுதலாக அய்யனாரின் தளத்திற்கு வந்து விட்டேனா..
ண்ணா.. கலக்கல்ன்னா..
அழகு..அழகு.. செம அழகு..
Post a Comment