Saturday, February 14, 2009

காதல் நாள் - 14-02-2009






காதல் நாளென்கிற என்கிற தலைப்போடு போன வருடம் எழுதிய வரிகளை இந்த வருடம் பார்க்கவே இல்லை, இன்னமும் அதனை வாசிக்கவில்லை இந்த வருடம் கட்டாயம் பதிவு போட்டே ஆகவேண்டும் என்கிற மனோநிலை இல்லாமல் போய்விட்டது...

இருந்தாலும் ஒற்றை வரியிலேனும் ஏதாவது சொல்லியே ஆக வேண்டும் என்று உறுத்திக்கொண்டே இருக்கிறது மனது. வேலை முடிகிற நேரம் வந்துவிட்டது இன்னும் ஏழு நிமிடங்களே இருக்கிறது பணி முடிய.

ஏதாவது எழுதிவிடவேண்டும் என்கிற ஆசையில்...


\\
உதடுகளில்
குவிகிற
சுழிகிற
நெளிகிற
திறக்கிற
மூடுகிற
சிரிக்கிறதென
எத்தனை செய்கிறாய் பேசத்தான்
மாட்டேன் என்கிறாய்!

\\
கொஞ்சம் தயக்கம் நிறையக்காதல் என
சொல்லாமல் போன நொடிகளைனைத்தும்
நிகழ மறுத்ததும் நிகழந்ததுமான அற்புதங்களாய்
நீ என் நாட்குறிப்புகளெங்கும்!


\\
யாருமற்ற வல்லிபுரக்கோவில் வீதிகளில்
சின்னதும் பெரியதுமாய் நிறைய பனைரங்கள்
நம் கதைகளைப்பேசிக்கொண்டு...
நாம் தான் பேசுவதுமில்லை,
யாரிடமும் சொல்வதுமில்லை,
பனைகள் அழிந்து போகலாம்
நினைவுகள்...?



உலகத்தின் அன்பானவர்கள அனைவருக்கும்
காதலர்தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்!

14 comments:

ரவி said...

:))

ரவி said...

me the 1

ரவி said...

no no me the second. becos 1 is smily.

ரவி said...

but actually me the first also

ரவி said...

since i put the smily first, i can not be me the first

ரவி said...

but since i only put the smily, i am the me the first of the first

ரவி said...

happy v.day.

Anonymous said...

யாருமற்ற வல்லிபுரக்கோவில் வீதிகளில்
சின்னதும் பெரியதுமாய் நிறைய பனைரங்கள்
நம் கதைகளைப்பேசிக்கொண்டு...
நாம் தான் பேசுவதுமில்லை,
யாரிடமும் சொல்வதுமில்லை,
பனைகள் அழிந்து போகலாம்
நினைவுகள்...?
/////////////////////
:)

Anonymous said...

உங்களுக்கும்...happy v.day.

Divyapriya said...

//உதடுகளில்
குவிகிற
சுழிகிற
நெளிகிற
திறக்கிற
மூடுகிற
சிரிக்கிறதென
எத்தனை செய்கிறாய் பேசத்தான்
மாட்டேன் என்கிறாய்!//

wowwww!! too good

உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

ஹேமா said...

\
உதடுகளில்
குவிகிற
சுழிகிற
நெளிகிற
திறக்கிற
மூடுகிற
சிரிக்கிறதென
எத்தனை செய்கிறாய் பேசத்தான்
மாட்டேன் என்கிறாய்!//

கொடுத்து வைத்த கறுப்பி.இப்படி ரசிக்க ஒரு காதலன் இருந்துவிட்டால்...மௌனமே மொழியாகி பார்வைக்குள்ளேயே குடும்பம் நடத்திவிடலாமே.
தமிழன்,இனிய காதலர்தின வாழ்த்துக்கள்.உங்கள் கறுப்பிக்கும் சொல்லுங்க.

தமிழ் மதுரம் said...

யாருமற்ற வல்லிபுரக்கோவில் வீதிகளில்
சின்னதும் பெரியதுமாய் நிறைய பனைரங்கள்
நம் கதைகளைப்பேசிக்கொண்டு...
நாம் தான் பேசுவதுமில்லை,
யாரிடமும் சொல்வதுமில்லை,
பனைகள் அழிந்து போகலாம்
நினைவுகள்...?//

ம்...நினைவுகள் அருமை???

தமிழ் மதுரம் said...

ம்...அது சரி யார் அந்தக் கறுப்பி???

MSK / Saravana said...

//உதடுகளில்
குவிகிற
சுழிகிற
நெளிகிற
திறக்கிற
மூடுகிற
சிரிக்கிறதென
எத்தனை செய்கிறாய் பேசத்தான்
மாட்டேன் என்கிறாய்!//

அட்டகாசம் தமிழன்.. தாமதமான வாழ்த்துக்கள்..