பல நாட்களுக்கு முன்னர் தோழி குமித்தா...கேட்டிருந்த தொடர் விளையாட்டுக்கு உடனே பதிவு போட முடியவில்லை. நான் வழமையாக பயன் படுத்துகிற கணினியில் இருந்த பிரச்சனைகளால் இப்பொழுதும் சில பிரச்சனைகள் இருந்தாலும் அதே பழைய கணினியில் வேலை செய்வதால் எனக்குரிய உரிமைகள் அந்த கணினியில் இருப்பதனால் அந்த தொடர் விளையாட்டுக்கான பதிவு இப்பொழுது சாத்தியமாகியிருக்கிறது ...
குமிழ்;அழைப்பிற்கு நன்றி தாமதத்திற்கு மன்னிக்கவும்...
பெரிதாக ஒன்றுமில்லை உங்கள் கணினியில் நீங்கள் தற்பொழுது வைத்திருக்கிற முகப்பு படம் (desktop picture) என்ன இதுதான் அது...
என்னுடைய தெரிவுகள் எப்பவும் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கும். இப்பொழுது சில மாதங்களாய் இருப்பது இதுதான்! இது எனக்கு ரொம்ப பிடித்துப்போன படம் பல பேருடைய பதிவுகளில் இந்தப்படம் வந்திருக்கிறது. நான் எழுதிய வரிகளை இந்தப்படத்தோடு சேர்த்து பதிவொன்றில் போடுவதற்காக செய்திருந்தேன் பின்னர் வரிகளை மட்டும் பதிவாக்கி விட்டு படத்தை கணினி முகப்பில் வைத்திருக்கிறேன்.மற்றபடி அந்தந்த நாட்களுக்கு ஏற்றது போல படங்களை சில நேரங்களில் மாற்றிக்கொள்வேன் தொடர்ச்சியாக இதுதான் இருக்கிறது.
குமித்தா ஒருவரைத்தான் அழைத்திருந்தார் நான் மூன்று பேரை அழைக்கலாம் (வேலை சுலபம்தானே) என்று இருக்கிறேன்...
இந்த தொடருக்கு நான் அழைப்பது...
தல தமிழ் பிரியன் (அந்தப்பொண்ணு படமா இருக்கலாம்...)
நம்ம மங்களூர் சிவா அங்கிள்... (கல்யாணப்படமா இருந்தா பாக்கலாமே...)
கட்டார் கட்டுமான தொழிலதிபர் ஆயில்யன் (என்ன படம் வச்சிருப்பாரு...)
பின் குறிப்பு:
*
நான் அழைத்திருக்கும் மூவரும் தனிப்பட்ட கணினி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அதனால இருக்கிற படத்தோட பதிவைப்போடணும் இல்லைன்னா தெரியும்தானே?!
*
யாராவது ஒருவரையேனும் கட்டாயமா மாட்டிவிடணும்;)
7 comments:
Thanks for doing it thamilan. Your desktop pic is really attractive!
அண்ணே! நம்ம டெஸ்க் டாப் படத்தை உங்க பதிவைப் பார்த்ததும் பிரிண்ட் ஸ்கிரீன் போட்டு வச்சிட்டேன்... போட்டுடலாம்
//பெரிதாக ஒன்றுமில்லை உங்கள் கணினியில் நீங்கள் தற்பொழுது வைத்திருக்கிற முகப்பு படம் (desktop picture) என்ன இதுதான் அது...
//
எனக்கும் ரொம்ப நாளாவே இந்த கான்செப்ட டேக் ஆ போடணும்னு ஒரு ஆசை பட் எப்படி ரெஸ்பான்ஸு இருக்கும் தெரியாம பயந்திருந்தேன் பட் நீங்க - கும்மித்தா (எம்புட்டு அழகான பேரு) செலக்டி கலக்கிட்டீங்க சூப்பரூ!
//கட்டார் கட்டுமான தொழிலதிபர் ஆயில்யன் (என்ன படம் வச்சிருப்பாரு...)
///
அட அசத்திடறேன் பாருங்க :))) (ராங்கா நினைக்காதீங்க ராங்கா பூடும்)
:))
ஆஹா தமிழன் டெஸ்க்டாப்ல படம் முன்ன இருந்திச்சி கண்ணாலத்துக்கப்புறம் இல்லை. கண்ணாலத்துக்கு முன்னாடி வெச்சிருந்த டெஸ்க்டாப் படத்தை எல்லாம் இப்ப பதிவா போட்டா சிக்கல் ஆகீடாது!?!?!?
:)))))))))))))))))
:)
பாவையும் பார்வைப் பொருளோ!, பெண்கள் உன்னிடம் தோற்று விடுவார்கள் போல்!
நல்ல டெக்ஸ்டொப்!
Post a Comment