Sunday, October 26, 2008

நான் படம் பார்த்த கதைகள்...

சினிமா என்பதை விட படம் எண்டால் சரியா இருக்கும் எண்டு நினைக்கிறன் இப்ப கூட படம் எண்டால் காணும் சாப்பிடாம இருந்து பாப்பன் ஆனால் முந்தின மாதிரி என்ன படம் எண்டாலும் கிடையாது இப்ப படம் எப்பவும் பாக்கலாம் என்று இருப்பதனால் தெரிவு செய்த படங்கள் மட்டும்தான் பாக்குறது...நான் படம் பாத்த கதைகள் கனக்க இருக்கு!இன்னொரு விசயம் நான் படம் பாத்தா கதையை வசனம் விடாம சொல்லுற ஆள்,எங்கடை ஊரில படம் பாக்கேலாத நிலமை இருந்ததுதான் அந்த நேரத்துலயே நானெல்லாம் முடிந்தவரை படம் பாக்கிற ஆள் அதனால சினமா பற்றி எழுதச்சொன்னால் அந்த நினைவுகள்தான் மனதுக்குள்ள வந்திச்சுது ஆனா இப்ப கொஞ்ச நாளாவே பழைய விசயங்கள் மறந்து போய்க்கொண்டிருப்பதாக் உணர்கிறேன் அதுவும் நல்லதுக்குத்தான்!

நான் நல்லா படம் பாப்பன் அதே நேரம் நல்லா படம் காட்டுவேன்...இனி கேள்விகளுக்கு வருகிறேன்...

*
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் ? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
வயது எப்படியும் ஒரு ஒரு ஏழு வயதிருக்கலாம் அல்லது அதை விட குறைவுதான் சரியாக நினைவில்லை நான் முதல் பார்த்த படமாக இன்னமும் நினைவில் இருப்பது மௌன ராகம்தான் அதுக்கு முந்தியும் படங்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் இப்ப ஞாபகத்துக்கு வராதாம்... இந்தப்படம் பக்கத்து வீட்டிலதான் பாத்தது அப்ப எங்கடை ஊரில எல்லா இடமும் ரிவி கிடையாது படம் பாக்குறதுமில்லை ஆனா எனக்கு என்னமோ படப்பைத்தியம் பிடிச்சிருந்துது அந்த நாளைல அவ்வளவு படங்களை பர்த்து தள்ளி இருக்கிறேன்...ஒரே படத்தையே திரும்பத்திரும் போட்டாலும் பாக்காம விடுவதில்லை அப்பொழுது...

பக்கத்து வீட்டில படம் பாக்கிற படியாலை இவன் எத்தனை தரம் இந்தப்படத்தை பாத்துட்டான் என்னடா விளங்குது இந்தப்படத்துல அப்படி என்று கேட்டவா ஜெயராணி அக்கா ஆனா நான் அப்ப ஒண்டும் சொல்லேல்லை மௌனராகம் படத்துல கார்த்திக் செத்து விழுகிற காட்சியும் மோகன் ரேவதியை படிச்சிருக்கு என்று தனியே சொல்கிற காட்சியும் 'போடா டேய்' 'சும்மா இருடா சோம்பேறி' எண்டு ஒருத்தர் சொல்லுவாரே அதுவும் பல நாட்களாக நினைவிருந்தது...அதற்கு பிறகு திரும்ப தனியா படங்களை பார்க்கிற காலங்களில் இது என்ன படம் எண்டு தேடிப்பிடிச்சு பார்த்தேன் மணிரத்னம் நான் முதலில் ரசித்த ஒருவர்...

அப்ப நான் என்ன உணர்ந்தேன் என்று எனக்கு நினைவிருந்த காட்சிகள் உங்களுக்கு சொல்லக்கூடும் ஆனால் எனக்கு புரியவில்லை அப்பொழுது நான் நினைத்தது சொந்தமா ரீவி டெக் வாங்கி பிடிச்ச படம் எல்லாம பாக்க வேணும் எண்டு.

*
கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
இங்கு வருவதற்கு முன்னர் கொழும்பில் பார்த்த படம்தான் நினைவிருக்கு சினி சிட்டியில் பார்த்த எஸ் ஜே சூர்யா நயன்தாரா நடிச்ச கள்வனின் காதலி என்று நினைக்கிறேன் அதற்கு பிறகு எந்தப்படமும் நினைவில்லை ஆனால் யாழ்ப்பாணத்துல ராஜா மனோகரா அரங்குகளில் படம்பார்த்தது போல வேறெங்கிலும் பார்க்கவில்லை...அது ஒரு தனி சுவாரஸ்யம்! படம் பாக்க அங்கே போவதில்லை தியேட்டரை கலக்குறதுக்குதான் அங்கே போயிருக்கிறேன் நாங்கள் கலக்காமல் விட்டால் வேறொரு செட் கலக்கி கொண்டிருக்கும் அதனால நாங்களும் முடிஞ்சவரை கலக்ககி இருக்கிறோம் தியேட்டரை அதனால படத்தை முழுசா பாக்க வேணும் எண்டால் படம் வந்து சில வாரங்கள் ஆனபின்பு ஒரு நாள் போய் பார்த்துக்கொள்வேன் ...

எனக்குப்பிடித்த சில படங்களை எனக்கு நெருக்கமானவளோடு உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்பது என் ஆசை ஆனால் அந்தப்படங்கள் அரங்கில் வர வேண்டுமே...

*
கடைசியாக அரங்கிலன்றி பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாகப்பார்த்தது ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே...
வசந்த் இயக்கிய இந்தப் படத்தை பற்றி என்ன சொல்ல காதல் சம்பந்தமா இன்னுமொரு படம் படம் பிடிச்சுப்போனதற்கு ஷ்யாம் என் சாயல்கள் உள்ள ஒரு பாத்திரத்தை செய்திருந்ததும் காரணமாக இருக்கலாம்...

படம் பார்த்து உணர்ந்தது எதுவும் இல்லை...!சினேகா அழகான பெண்மை என்பதைத்தவிர!

காதல் அழகான விசயம்...

இன்னொரு படம் உள்ளத்தை அள்ளித்தா...
இந்தப்படத்தைப் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை ரம்பாவுக்காகவே பார்த்த படம் முழு நீள நகைச்சுவை சித்திரம் சுந்தர்.C ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கொடுத்த நகைச்சுவை படங்கள் உள்ளத்தை அள்ளித்தா மற்றும் மேட்டுக்குடி இரண்டும் கைவசம் இருக்கிறது டிவிடியாக மேட்டுக்குடி பார்த்த குறையில் இருக்கிறது...

படம் பார்த்து என்ன உணர்தேன் எண்டால் ரம்பா சின்னப்புள்ளையள் மாதிரித்தான் இப்பவும் இருக்கிறா... ;)
பழனிபாரதி திரும்பவும் எழுதுகிறார் என்று கேள்வி ஆனால் அவர் கொடுத்த ஹிட்ஸ் மறக்க முடியாதவை...
சிற்பி அரபியே இசைகளில் கலந்து கட்டி அடித்தவர் என்பது திரும்பவும் நினைவுக்கு வந்திருக்கிறது...(மேட்டுக்குடியில் இது சாதாரண ரசிகனுக்கே புலப்படும்)

*
உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா...?

தாக்கிய தமிழ் சினிமா நிறைய இருக்கு தாக்கிய என்பதை விட உணர்வுகளில் மாற்றங்களை உண்டு பண்ணிய படங்கள் பல இருக்கு!

துலாபாரம்-இந்தப்படத்தை முதலாவது படமா போட்டு அதற்கு பிறகு மூன்று படங்கள் விடிய விடிய பாத்தும் இந்தப்படம் மட்டும்தான் அடுத்த நாள் முழுக்க கண்ணுக்குள்ள வந்துகொண்டிருந்தது...

அலைகள் ஓய்வதில்லை-
முதன் முதலாய் எனக்குள் காதல் சொன்ன படம்.
காதல் காதல் காதல் நிரம்பிய சின்னச்சின்ன கவிதைகளை இசையோடு சொன்ன படம்...
இந்தப்படத்தை எத்தனை முறை பார்தேன் என்று எனக்கே தெரியாது...
அழகு மேரியை(ராதாவை) இப்பொழுதும் மறக்க முடியவில்லை...
காதல் அழகானது அதன் அலைகள் ஓய்வதில்லை...!

மகாநதி-
இதற்கான காரணம் சொல்லத்தேவையில்லை

குட்டி-
இதற்கான காரணமும் சொல்லத்தேவையில்லை

பருத்திவீரன்-
படம் முழுக்க நிரம்பியிருந்த இயல்பும் படத்தின் முடிவு தந்த ரணமும்..


காதல்-
உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்...
இயல்பாய் ரணம் செய்து போன படம்.சேது-
வார்த்தை தவறி விட்டால் கண்ணம்மா...
எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பார்த்து மனதைப்பிசைந்த படம்...

மொழி-
சில விசயங்களைப்பேசிய படம்...
ஜோதிகாவின் கண்களும் பேசியது!

இவற்றோடு இன்னும் பல படங்கள் இருக்கிறது பார்த்த பல பிறமொழிப்படங்களும் இருக்கிறது பெயர் நினைவுக்கு வரவில்லை.

*
அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
இதைப்பற்றி என்னைக்கேட்டால் சிரிப்புத்தான், ஒரு விதமான மற்றவார்களுக்கு பிடிக்காத புன்னகைதான் பதிலாக இருக்கும் சொல்ல நிறைய இருக்குப்பா...:)


ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
சினிமா தொழில் நுட்பங்களில் ஒளிப்பதிவு கலை இசை அப்படின்னு பல பிடிச்ச துறைகள் இருந்தாலும் என்னுடைய கவலை எல்லாம் உதவி இயக்குனர்கள் மீதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிசப்பட்டு ஒரு படத்தையேனும் எடுத்துவிட வேண்டும் என்று வருகையில் அதற்கு எத்தனை விமர்சனங்கள்!சிந்தனைகளை களவாடப்படுகிறது என்று தெரிந்தே மொளனமாக இருப்பவர்கள்...

*
தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா...
இல்லாமலா ஆரம்ப இலக்கியமே சினிமாதானே...ஆனால் முன்பு வாசித்ததைப்போல கிசுகிசுக்கள் பத்திக்கிச்சு மாதிரியான எல்லாவற்றையும் வாசிப்பதில்லை என்றாலும் புதுப்ட விமர்சனங்களை படம் பார்த்த பிறகு வாசிக்க வேண்டும் என்று எவ்வளவு முயன்றாலும் வாசிக்காமல் இருக்க முடிவதில்லை அநேகமான படங்களுக்கு...

தமிழ் சினிமா என்பதை விட சினிமா பற்றி நிறைய வாசிக்க வேண்டும்.
அறியாத அல்லது மறந்து போன கலைஞர்கள் மற்றும் படங்கள் பற்றி; படங்கள் பார்த்தும் வாசித்தும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது.*
தமிழ் சினிமா இசை....?

பல நேரங்களில் துணையாக இருந்திருக்கிறது எனக்கு புத்தகங்களைப்போலவே!

தமிழ் சினிமா இசை ரொம்பப்பிடிக்கும்- ரொம்பப்பிடித்தது இளைய ராஜாதான்..

வளர்ந்து கொண்டே இருக்கிறது இசை...

*
தமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி படங்களை பார்ப்பதுண்டா ? அதிகம் தாக்கிய படங்கள்?
நிச்சயமா;ஆரம்ப காலத்தில கராத்தே சம்பந்தமான படங்கள் பார்த்ததுண்டு அப்படியே படிப்படியாய் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன் ஆரம்பம் என்னவோ படம் என்ன சொல்கிறது என்று புரியாமல் பார்த்தாலும் பின்னர் ஓரளவுக்கேனும் புரிந்து கொள்கிற முயன்று கொண்டிருக்கிறேன்...

மற்றய இந்திய மொழிப்படங்களின் பரிச்சயம் யாழ்ப்பாணத்தில் இருக்கும்வரை கிட்டவில்லை இந்தி,மற்றும் மலையாளப்படங்களின் பரிச்சயம் சவுதி வந்த பிறகே கிடைத்திருக்கிறது பல மலையாளப்படங்களை பார்திருக்கிறேன் ஆனால் சொல்லிக்கொள்ளும்படி சமீபத்தில் பார்த்தது

ஒரே கடல்-
மலையாள சினிமாவிலிருந்து சில கேள்விகளை கேட்டுப்போன படம்!

நான் ஒரு ஜாக்கிசான் ரசிகன்...
The New police story
கடைசியாக பார்த்த ஜாக்கிசான் படம்

Black(இந்திப்படம்)-
வேலை முடிந்து அறை திரும்பி ஆடைகளை மாற்றக்கூட எழும்பாமல் அமர்ந்து பார்த்த படம் என்ன நடிப்புப்பா

Fire-
தீபா மேத்தாவின் இன்னொரு கேள்வி...

Titanic -
நான் பார்க்க வேண்டும் என்று பார்த்த முதல் ஆங்கிலப்படம்,பிரம்மாண்டமாய் ஒரு காதல்...

இப்பொழுது பார்க்க வேண்டும் என்று நினைத்திருப்பது
தாரே ஜமீன் பர்(இந்தி)
சில மலையாளப்படங்கள்...
this moon is mine (சிங்களப்படம் பெயர் பிழையாய் இருந்தால் திருத்தவும், சொல்லி இருக்கிறேன் வந்து சேர்ந்தால் பார்க்கலாம்)
சிருங்காரம் அரவிந்சாமி கொளதமின்னு பலர் நடிச்ச படம்
சில ஆங்கிலப்படங்கள் (பதிவர்கள் சிபாரிசு)
*
தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இவ்வளவு தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன் இன்னமும் பார்பேன் என்பதே ஒரு தொடர்புதானே...
சந்தர்ப்பம் கிடைத்தால் இலங்கை தமிழ் சினிமா வளர்ச்சி கண்டு கொண்டிருந்தால் அந்தத்துறையில் முடிந்தவரை பங்கெடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது... முடிஞ்சா ஒரு படத்தை இயக்கிடணும்னு இருக்கிறேன் இலங்கைல(அட நம்புங்கப்பா)


தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்னும் திறமைசாலிகள் இருக்கிறார்கள்...
புதிய வரவுகள் இருந்து கொண்டே இருக்கும்!

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு எதுவும் ஆகாது பார்க்க வேண்டிய படங்கள் இருக்கிறது...பார்த்துக்கொள்வேன்,
பிற மொழிப்படங்கள் பார்க்கலாம்.
ஆனால் இந்த நெடுந்தொடர்களில்ன் தொல்லைகள் தாங்க முடியாமல் இருக்கும் என்று நினைக்கிறேன்...


இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த தல தமிழ்பிரியன் இந்த தாமதத்தை பொறுத்துக்கொள்வார் என் நம்புகிறேன் நான் இந்த தொடருக்கு அழைக்கிறது...

ஏற்கனவே எழுதி விட்டார்களோ தெரியாது அவர்கள் எழுதி இருந்தால் இந்தத்தொடரை இதுவரை எழுதாதவர்கள் எழுதலாம்...

சந்திர வதனாக்கா -( இவ சமீபத்தில எழுதின சினிமா சம்பந்தமான பதிவுகளை படிச்சுப்பாருங்கோ)

தோழி நளாயினி... ( நேரமிருக்கோ உங்கடை பதில்கள்தான் கட்டாயம் எண்டில்லை தாமரை அண்ணாவின்ரையாவும் இருக்கலாம்)

அண்ணன் கரூரன்... (அண்ணன் அநேகமாய் சிவாஜி ரசிகராய் இருப்பார் எண்டு நினைக்கிறன்)

இன்னும் யாராவது எழுத இருந்தா எழுதுங்கோப்பா...


பின் குறிப்பு:
1)
தமிழ் மணத்தில் நடந்து கொண்டிருக்கிற கருத்துச்சுதந்திரத்தின் உச்ச பட்ச வெளிப்பாடுகள்,தற்போதைய சூழ்நிலைகள் எழுதுகிற மனோநிலையை சின்னாபின்னமாக்கியிருக்கிறது...

2)
பதிவு எனக்கே திருப்தி இல்லாமல் இருக்கிறது,இன்னும் நிறையப்பேசலாம் போல இருக்கிறது நான் படம்பார்த்த கதைகள், எங்கே போய்விடுவீர்கள் கொஞ்சம் பொறுத்து எழுதலாம் தானே...:)

3)
தீபாவளிக்கு பதிவு போட வேண்டும் என்று இப்பொழுதுதான் யோசித்திருக்கிறன் ஆனால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை...

எல்லோருக்கும்...
தீபாவளி வாழ்த்துக்கள்...

நன்றி...

15 comments:

ஆயில்யன் said...

நல்லா இருக்கு நீங்க படம் பார்த்த கதையும் அதை விவரித்த விதமும் கூட ! :)

ஆயில்யன் said...

//தமிழ் மணத்தில் நடந்து கொண்டிருக்கிற கருத்துச்சுதந்திரத்தின் உச்ச பட்ச வெளிப்பாடுகள்,தற்போதைய சூழ்நிலைகள் எழுதுகிற மனோநிலையை சின்னாபின்னமாக்கியிருக்கிறது...//

உணர்வுகளோடு ஒத்துப்போகின்றேன்!

தமிழ் பிரியன் said...

அண்ணே! நல்லா எழுதி இருக்கீங்க... :)

தமிழ் பிரியன் said...

பதிவு முழுவதும் காதல் பொங்கி வெளியாகி இருக்கின்றது... :)

தமிழ் பிரியன் said...

///எனக்குப்பிடித்த சில படங்களை எனக்கு நெருக்கமானவளோடு உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்பது என் ஆசை ஆனால் அந்தப்படங்கள் அரங்கில் வர வேண்டுமே...////
ஹிஹிஹி.. கல்யாணமானா தான் அதெல்லாம் செய்யனும்.. இல்லைன்னா அடி விழும்.. ;)))

கானா பிரபா said...

//எனக்குப்பிடித்த சில படங்களை எனக்கு நெருக்கமானவளோடு உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்பது என் ஆசை ஆனால் அந்தப்படங்கள் அரங்கில் வர வேண்டுமே...//

முடியல :(

கானா பிரபா said...

கலக்கல் கறுப்பி

காதலில் குழைத்து எழுதியிருக்கிறியள் ;-)

ஆயில்யன் said...

/கானா பிரபா said...
கலக்கல் கறுப்பி

காதலில் குழைத்து எழுதியிருக்கிறியள் ;-)
//

ரிப்பிட்டீக்கிறேன் :))

தமிழன்...(கறுப்பி...) said...

நன்றி ஆயில்யன்...
சில விசயங்களை முடிவுக்கு கொண்டு வருவது சாத்தியமில்லாமலே இருக்கிறது...

தமிழன்...(கறுப்பி...) said...

தமிழ் பிரியன் said...

\\
பதிவு முழுவதும் காதல் பொங்கி வெளியாகி இருக்கின்றது... :)
//

நன்றி தல...

காதலா அண்ணே நான் எழுதினது சினிமா பதிவு ஆனா என்ன செய்யுறது காதல் படங்கள்தான் கனக்க பாத்திருக்கிறேன்...:)

தமிழன்...(கறுப்பி...) said...

தமிழ் பிரியன் said...
///எனக்குப்பிடித்த சில படங்களை எனக்கு நெருக்கமானவளோடு உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்பது என் ஆசை ஆனால் அந்தப்படங்கள் அரங்கில் வர வேண்டுமே...////
ஹிஹிஹி.. கல்யாணமானா தான் அதெல்லாம் செய்யனும்.. இல்லைன்னா அடி விழும்.. ;)))
\\

கல்யாணத்துக்கப்புறம் வீட்டுல இருந்து பாக்கலாம்ணே ஆனா...

தமிழன்...(கறுப்பி...) said...

கானா பிரபா said...
//எனக்குப்பிடித்த சில படங்களை எனக்கு நெருக்கமானவளோடு உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்பது என் ஆசை ஆனால் அந்தப்படங்கள் அரங்கில் வர வேண்டுமே...//

முடியல :(
\\

அண்ணன் இதுல என்ன கஷ்டம் இருக்கு...
ஆனா அவள் அரங்கத்திற்கு வாறதுதான் பெரிய விசயம் எங்கடை ஊர் ஆக்களை தெரியும்தானே...:)

கிரி said...

நல்லா எழுதி இருக்கீங்க.. கொஞ்சம் குசும்பாவும் எழுதி இருக்கீங்க ;-)

தமிழன்...(கறுப்பி...) said...

கிரி said...
\\
நல்லா எழுதி இருக்கீங்க.. கொஞ்சம் குசும்பாவும் எழுதி இருக்கீங்க ;-)
\\

நன்றி கிரி அண்ணே..

இன்னும் பல படங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் சொல்ல முடியாததில் எழுதாமல் விட்டிருக்கிறேன்..
குசும்பா? அது சும்மா...:)

காரூரன் said...

மன்னிக்கோணும், சில வேளைகளில் வேலைப்பழு அதிகரித்து விடுவதால் இணையத்தில் போய் வரமுடியாமல் போகின்றது. நீங்கள் பல கட்டுரைகள் தருபவர் என்பதால், இந்த கட்டுரை கீழே சென்று விட்டது. அழைப்பிற்கு நன்றிகள்.
காதல் தான் இந்தப் பதிவில் மேலோங்கி நிற்கின்றது. நான் ஒரு ஒலிப்பதிவு போட்டிருக்கின்றேன், முழுதாக கேட்டுவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.