Friday, October 17, 2008

ஒரு வருடம்...

நானும் என் கற்பனையும் மொழியோடு பயணம் செய்ய தொடங்கிய நாட்களில் இருந்து உலகம் இனிமையானதாய் தோன்றிற்று...வாசகனாய் மட்டும் இருந்த எனக்குள் ஒரு ரசிகனும் இருக்கிறான் என்பதை அடையாளம் கண்டு கொண்ட பொழுதுகளில் எழுதவும், குறிப்புகளாய் பதியவும் தொடங்கியிருந்தேன் இருந்தும் அநேகம் குறிப்புகளை காற்றிலேயே எழுதியிருக்கிறேன் அருகிலிருப்பவரிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்திருக்கிறேன் ஆனால் அந்தச்சொற்களின் பெறுமதி இப்பொழுது மிகப்பெரிதாய் தெரிகிறது...

எழுதாமல் விட்ட வார்த்தைகளை எண்ணி இப்பொழுது என்னை நானே திட்டிக்கொண்டிருக்கிறேன் எதுவாயிருந்தாலும் எழுதி வைத்திருக்கலாம் என்கிற கேள்வி என்னை அடிக்கடி அவஸ்தைப்படுத்துகிறது...எழுதி வைக்ககாமல் போன விசயங்களுக்காக இப்பொழுது நொந்து கொண்டாலும் இப்பொழுதும் நடக்கிற விசயங்களை எழுதிவைப்பவனாக இல்லை என்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை...என் சூழ்நிலையும் சோம்பல்தனமும் இதற்கு முக்கிய காரணம்...

தொடர்ச்சியாக எழுதாமல் போனாலும் எழுத முடிகிறவற்றை எழுதலாம் என்கிற முடிவோடு
நானும் சொற்களை சேகரிக்க ஆரம்பித்ததுதான் என் நினைவின் வெளியில் நான்...
அதற்கு காதல் கறுப்பி என்று பெயர் வைப்பதற்கு காரணம் எல்லாம் இல்லை என்று நான் சொன்னாலும் யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை இருந்தாலும் கறுப்பி என்பது எனக்கு நான் எழுதிக்கொண்ட இன்னொரு பெயர் மட்டுமே அது நான் கவிதைகள் என்று நினைத்து சொல்லிக்கொண்ட சொற்களையும் எழுதிக்கொண்ட வார்ததைகளுக்கும் முடிவில் என்னை வெளிக்காட்டாமல் இருப்பதற்கான பெயராக இருந்தது ஆரம்பம் முதலே...

ஒரு வாசகனாய் மட்டுமே இருந்தாலும் பொதுவாகவே நிறையப்பேசுகிற எனக்கு (அலட்டல், நல்லா பிளேடு போடுவேன்) எழுதவேண்டும் என்கிற தீர்மானங்கள் இருந்தாலும் தீர்மானங்களை செயல்படுத்துவதில் எனக்கிருக்கிற இயல்பான பலவீனங்களால் எழுதாமல் விடுபட்டுப்போன சொற்களும் மனவெளியில் புதைந்து கிடக்கிற சொற்களும் பேசித்தீர்க்கப்படாமலே என்னை அவஸ்தைப்படுத்தியதில் குறிப்புகளாக எழுதலாம் என்கிற முடிவில் நான் எழுத ஆரம்பித்ததற்கு சில வலைப்பூக்களும் சில நண்பர்களும் காரணம்...இருந்தும் இங்கே எழுதியதை விட எனக்குள் எழுதாமல் இருக்கிற நினைவின் அடியில் மறைக்க முயல்கிற சொற்களே அதிகமாய் இருக்கிறது...பலது என் நாட்குறிப்புகளில் இருக்கிறது...

அந்த வகையில் நான் வலைப்பூ ஒன்றை உருவாக்குவதற்கு முதல் அடி போட்டவர் தோழி நளாயினி! வாசகனாய் மட்டுமே இருந்த என்னையும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் (ஆனால் நான் கருத்தெல்லாம் சொன்தில்லை கும்மி மட்டுமே) என்று சொன்னது உயிர் கொண்டு திளைக்கிற பூக்கள் கொண்டு பேசுகிற நளாயினி , ஆரம்பத்தில் என் பார்வைக்கு கிடைத்த வலைப்பூ சந்திரவதானா அக்காவினுடைய காதல் வலைப்பூதான் வலைப்பூ என்று தெரியாமலே வாசித்துக்கொண்டிருந்தேன் அதில் இருந்து மனஓசை மனஓசையிலிருந்து இலங்கை நண்பர்களின் வலைப்பூக்கள் என்று முதலில் வாசித்தது அநேகம் இலங்கை நண்பர்களுடையதுதான் அப்டியே தோழி நளாயினியோடு ஏற்பட்ட நட்பில் நிறையப்பேசியதில் நீங்களும் எழுதலாமே என்றார் எனக்கும் அப்படி ஒரு அவஸ்தை பல நாட்களாய் இருக்கிறது என்று சொன்னேன் அதற்கு பிறகுதான் இதுக்கு பெயர் வலைப்பூ என்று தெரிந்து கொண்டேன்! இதுக்கு பிறகு தமிழ், தமிழ்னு தேடியதில் மதி கந்தசாமியினுடைய தமிழ் புளொக்ஸ் கிடைக்க அங்கிருந்து ஆரம்பமாயிற்று பயணம்...என்ன எழுதுவது என்று தெரியாமல் கணினிக்கு முன்னால் இருந்து கொண்டு மனதில் வருகிற வார்த்தைகளை தட்டச்சி பதிவுகளாக்கி கொண்டிருக்கிறேன் அநேகம் பதிவுகளை எந்தவிதமான குறிப்புகளும் இல்லாமல்தான் எழுதி இருக்கிறேன் நான் அறிமுகம் செய்து கொண்ட என் முதல் பதிவை படித்தாலே தெரியும் எப்படி எழுதுகிறேன் என்பது எழுதும்இதனைத்தான் எழுத வேண்டும் என்று நினைப்பதில்லை ஆனால் எழுதுவோம் என்று வந்து அமர்ந்தால் நிறைய எழுதலாம் போல் இருக்கிற விடயங்கள் தட்டச்சத்தொடங்கினால் திசைமாறி விடுகிறது அல்லது அவற்றை கோர்வையாக்க முடியாமல் இருக்கிறது...


இப்படி குறிப்புகளால் நினைவு செய்ய வந்ததுதான் என்னுடைய உலகம் முதலில் அப்படித்தான் பெயர் வைத்திருந்தேன் அதற்குப்பின்னர் எழுதியதெல்லாம் ஏதோ ஒரு புள்ளியில் சுழல்கிறதாய் தோன்றவே அதற்கு கறுப்பி என்கிற பெயரோடு காதலையும் சேர்த்துக்கொண்டேன்...


அடுத்தது மடத்துவாசல் பிள்ளையாரடி இவருடைய பல பதிவுகளில் என்னை மறந்து போயிருக்கிறேன்...பழைய நினைவுகளை கிளறியதில்! எது எப்படி இருந்தாலும் கடந்து வந்த நாட்கள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நினைத்துப்பார்த்து நிகழ்காலம் திரும்புகையில் கடந்துவிட்டவையும், இழந்து விட்ட பலதும் கண்களை ஈரமாக்குவதில் ஆச்சரியம் ஏதுமில்லையே...பல நினைவுகளை மீட்டுப்பாத்துகொள்ள வசதி செய்ததில் என்னால் அவற்றை சரியாக கோர்வையாக்க முடியாவிட்டாலும் பதிய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது சமீபத்தில் க.பிரபாண்ணாவின் நவராத்திரி பதிவொன்றில் கூட சொல்லி இருப்பேன் இதனை...

ஆரம்பத்தில் நான் பெரும்பாலும் வாசித்தவை மனஓசை, மற்றும் நளாயினி கவிதைகள் தளங்களில் இருந்த இணைப்புகள்தான் அதிலிருந்துதான் மற்றவர்களை கண்டு கொண்டேன் அதனாலேயே பழைய பதிவர்கள் பலரையும் வாசிக்கிற அனுபவம் கிட்டியது ..பல நாட்களாய் வாசித்துக்கொண்டிருந்தாலும் பதியத்தொடங்கி ஒரு வருடம்தான் ஆகிறது அதிலும் பெரிதாக எழுதி விடவில்லை ஆனால் நிறைய நட்பையும் அதிக வாசிப்பையும் பெற்றிருக்கிறேன் அந்த வகையில் வலைப்பூக்களுக்கு நன்றி...

அதற்கு அப்பால் இயல்பாகவே எனக்குள் இருந்த வாசகனும் தனிமையும் நிமிடங்களை மணித்தியாலங்களாக்கி மணித்தியாலங்களை அதிகப்படுத்தி வாசித்துக்கொண்டே இருந்ததில் எழுதுவது தடைப்பட்டுப்போனாலும் பல பேருடைய நட்பை தந்திருக்கிறது அப்படிக்கிடைத்த முதல் நட்பு வட்டம் நம்ம வேடந்தாங்கல் குழு ஆரம்பத்துல பின்னூட்டங்களை பர்த்து சிரிச்சுக்கிட்டிருந்த எனக்கு தள சிபி, குசும்பன், மங்களூர்சிவா, புலி(சிவா)-அவரு இப்ப எழுதறது குறைவு மின்னல்-இப்பொழுது மறுபடியும் இவருடைய பின்னூட்டங்களை பார்க்க முடியுது) அப்படின்னு பல பேரு அடிக்கிற கும்மிய பார்த்து இது சூப்பரா இருக்கேன்னு நினைச்சு ரசிச்சிருக்கேன் அப்புறமா மெல்ல மெல்ல நமக்குள்ள இருந்த ரொம்ப பேசுறவனும் வெளிய வர ஆரம்பிக்க நானும் ஆட்டையில கலந்துகிட்டேன்...ஜோதியில ஐக்கிமாயிட்டேன் அப்படி நான் ஆடினமுதல் கும்மில கொஞ்ச நேரத்துக்கு யாருமே முகத்தை காட்டாம வேற வேற பெயர்கள்ள வந்துட்டிருந்தாங்க அப்புறமா முதல்ல வெளிப்பட்டது சென்ஷி அதுவும் நூறை நெருங்கற சமயம்னு நினைக்கிறேன்...


அப்ப ஆரம்பிச்ச நட்பு இப்ப ரொம்ப நெருங்கிட்டம்ல...


எனக்கு இருக்கிற சொற்ப கணினி அறிவோட ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும் எழுதணும்னு நினைக்கிற பல நூறு விடயங்களில் ஒரு சிலதையேனும் எழுதிக்கொண்டிருக்கிறேன்...இந்த நேரத்துல எனக்கு வலைப்பூவை உருவாக்குவதற்கு உதவி செய்த நளாயினி அக்காவுக்கும் தாமரை அண்ணனுக்கும் இணையம் சம்பந்தமான தொழில் நுட்ப உதவிகளை அப்பப் செய்து தருகிற தமிழ் பிரியன் அண்ணனுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்...(இன்னும் நிறைய உதவிகள் கேட்பேன்)


இப்படி பல நட்புள்ளங்களை தேடித்தந்திருக்கிற வலைப்பூவை ஆரம்பிச்சு ஒரு வருடமாகியிருக்கிறது இன்று...

இனி...

நெஞ்சு நிறைந்த நன்றிகளுடன்...

உங்களுடைய நட்பை எப்பொழுதும் எதிர்பார்க்கும்

அன்பு,

தமிழன்(கறுப்பி...)

16 comments:

Anonymous said...

ஒரு வருடமாச்சா?:)
வாழ்த்துகள்...இன்னும் நிறைய எழுதுங்க..:)

கிரி said...

வாழ்த்துக்கள் தமிழன். தொடர்ந்து கலக்கல் கவிதையாக எழுதுங்கள்.

உங்களுக்கு ஒரு முறை மின்னஞ்சல் செய்து இருதேன் நீங்கள் அதற்க்கு பதில் தரவில்லை, கிடைக்கவில்லையா!

தமிழ் பிரியன் said...

அண்ணே! ஒருவருஷமாச்சா? வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

இப்பதான் பின்நவீனத்துவ நடையில் எழுத தொடங்கி இருக்கீங்க... வாழ்த்துக்கள்! ;))

தமிழன்...(கறுப்பி...) said...

Thooya said...
\
ஒரு வருடமாச்சா?:)
வாழ்த்துகள்...இன்னும் நிறைய எழுதுங்க..:)
\

வாங்க தூயா நன்றி...

முயற்சி பண்ணிடுவோம்...

தமிழன்...(கறுப்பி...) said...

கிரி said...
\\
வாழ்த்துக்கள் தமிழன். தொடர்ந்து கலக்கல் கவிதையாக எழுதுங்கள்.

உங்களுக்கு ஒரு முறை மின்னஞ்சல் செய்து இருதேன் நீங்கள் அதற்க்கு பதில் தரவில்லை, கிடைக்கவில்லையா!
\\

நன்றி கிரியண்ணே...

நான் பதில் அனுப்பினேனே அண்ணன்...சரி திரும்பவும் அனுப்புகிறேன்...

தமிழன்...(கறுப்பி...) said...

தமிழ் பிரியன் said...
\\
அண்ணே! ஒருவருஷமாச்சா? வாழ்த்துக்கள்!
\\

நன்றி தல...:)

தமிழன்...(கறுப்பி...) said...

தமிழ் பிரியன் said...
\\
இப்பதான் பின்நவீனத்துவ நடையில் எழுத தொடங்கி இருக்கீங்க... வாழ்த்துக்கள்! ;))

\\

பின்நவீனத்துவ நடையில்- அப்டின்னா...? ;)

கிரி said...

//நன்றி கிரியண்ணே...

நான் பதில் அனுப்பினேனே அண்ணன்...சரி திரும்பவும் அனுப்புகிறேன்...//

அப்படியா! மன்னிக்கவும் எனக்கு வரவில்லை

கானா பிரபா said...

அதிரடியாய் வந்து வந்த வேகத்திலேயே மறையும் ஈழப்பதிவர்கள் வரிசையில் நீங்கள் இடம்பெறக்கூடாது. இந்த ஒரு வருஷம் போல ஓவ்வொரு வருஷமும் பதிவு வரவேணும். வலைவழி உங்களைப் போன்ற உறவுகளைச் சம்பாதித்தது எனக்குப் பெருமையே.

முதலாம் ஆண்டு அறிமுகக்குறிப்புக்கள் சிறப்பு. உங்கள் பதிவுகளில் அதிகம் என்னை சிலாகிக்க வைத்தது "பாண் பதிவு" ;-)

ஆயில்யன் said...

அண்ணே ஒரு வருடம் ஆகிடுச்சா?

வாழ்த்துக்கள் :))

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
அதிரடியாய் வந்து வந்த வேகத்திலேயே மறையும் ஈழப்பதிவர்கள் வரிசையில் நீங்கள் இடம்பெறக்கூடாது. இந்த ஒரு வருஷம் போல ஓவ்வொரு வருஷமும் பதிவு வரவேணும். வலைவழி உங்களைப் போன்ற உறவுகளைச் சம்பாதித்தது எனக்குப் பெருமையே.
///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் :))

ஆயில்யன் said...

//முதலாம் ஆண்டு அறிமுகக்குறிப்புக்கள் சிறப்பு. உங்கள் பதிவுகளில் அதிகம் என்னை சிலாகிக்க வைத்தது "பாண் பதிவு" ;-)

..

//

இதுக்கும் ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் :))

Saravana Kumar MSK said...

வாழ்த்துக்கள் தமிழன்..

தமிழன்...(கறுப்பி...) said...

@தூயா...

நன்றி Chef...

@கிரி...

நன்றி அண்ணே...

@தமிழ்பிரியன்...

நன்றி தல..:)

@கானா...

நன்றி அண்ணன்... தொடர்ந்தும் முயற்சிக்கிறேன் எழுதாமல் விட்டாலும் வாசிக்காமல் இருக்க மாட்டேன் அதனால கட்டாயமா இருப்பேன்...

@ஆயில்யன்...

நன்றி அண்ணே...:)

@சரவணகுமார்...

நன்றி MSK..

தமிழன்...(கறுப்பி...) said...

எல்லோருக்கும் நன்றி நண்பர்களே...

வாழ்த்துக்களுக்கு நன்றி...!