Friday, October 10, 2008

பதிவர் சந்திப்பு பதிவு...





பதிவர் சந்திப்பிற்கு பிறகு (நம்மளையும் பதிவர்னு ஏத்துக்கிட்டாய்ங்கப்பா) அவ்வளவாக இணையப்பக்கம் வர முடியவில்லை...ஓரிரு தடவைகள் வந்திருந்தேன் சிலருக்கு பின்னுட்டமும் எழுதி இருந்தேன் அதுவே பதிவெழுதுகிற நேரத்தை விட அதிகமாத்தான் இருக்கு ஆனாலும் நம்ம ஆளுங்க வேகத்துக்கு என்னால பின்னுட்டங்களைக்கூட எழுத முடியலை!! என்ன வேகமா எழுதுறாய்ங்க! ஒரு நாள் வரலைன்னாலே நிறைய துரம் பின்னுக்கு போயிட வேண்டிடுது.அந்த சந்திப்பிற்கு பிறகு எனக்கும் ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு... பல சிரமங்களுக்கு மத்தியில் அன்றய பயணம் நிகழ்ந்திருந்தாலும் இரவு ஒன்றரை மணிக்கு அறைக்கு வந்த பொழுது பல நாட்களுக்கு பிறகு எனக்கு பிடித்த விசயமொன்றை செய்து முடித்த நாளாக இருந்தது அன்றய நாள்...

*
நம்ம தல தமிழ் பிரியன் அண்ணன் என்னை உதைக்காம விட்டது அவரோட பெரிய மனசைக்காட்டிச்சு. அப்புறம் சும்மாவா சில மணி நேரங்கள் எனக்காக பசியோட வெயில்ல காத்துக்கிட்டிருந்தாரு; தல இதோவந்திட்டன்; இதோ வந்திட்டன்னு; சொல்லி சொல்லியே வெறுப்பேத்திட்டேன் ஒரு வழியா மூணு மணிக்கு நான் போய் சேந்தப்போ என்னைப்பாத்ததும் அவருக்கு எம்மேல இருந்த கோபம்லாம் போயிடுச்சுன்னு நினைக்கிறேன் ஏன்னா நான் அந்த அளவுக்கு சின்னப்பையனா இருந்தேன் (சின்ன வயசு, வெள்ளை மனசு யாருக்குத்தான் திட்ட மனம் வரும்) நான் எதிர்பார்த்த முகச்சாயலிலேயே இருந்தார் இதுவரையும் அவருடைய முகத்தை பார்த்ததே இல்லை வேறெங்கும் அனால் பார்த்த உடனேயே தோளோடு சேர்த்துக்கொண்ட நெருக்கம் வாய்த்திருந்தது ஏற்கனவே பல முறை இணையத்துல கூடி கும்மி அடிச்சசிருக்கோம்ல...

அன்னைக்கு அவரை அவ்வளவு நேரம் காக்க வச்சதுக்கு திரும்பவும் ஒரு முறை மன்னிச்சுடுங்க தல...அடுத்த முறை சரியான நேரத்துக்கு வரப்பாக்கிறேன்...

*
எழுத்தாளர் ஜமாலன் அவர்களை சந்திச்சது எனக்கு நம்ப முடியாம இருந்திச்சு கொஞ்ச நேரம் ஆனாலும் முதல் பார்வையியே அடையாளம் கண்டு கொண்டு கை குலுக்கினோம் அவரிடம் நான் கேட்ட ஒரு கேள்வி ஜமாலன் அப்படிங்கிற பெயருக்கு என்ன காரணம் என்ன அர்த்தம் என்பது அதற்கு வெகுசாதாரணமாக அவர் சொன்ன பதில் என்னை இந்தப்பெயரில்தான் இலக்கிய வட்டத்துக்கு தெரியும்கிறதால அந்தப் பெயரில் இருக்கிறேன் அர்த்தம் எல்லாம் பார்த்து வைத்துக்கொண்டதல்ல முன்பொருமுறை கையெழுத்துப்பத்திரிகை ஒன்றை நட்த்தும் பொழுது (மாலன் என்கிற எழுத்தாளர் நட்த்தியது) பின்னர் இவர் அதன் சாயலில் நடத்திய பொழுது ஜமாலன் என்கிற பெயரில் எழுதியதாகவும் அப்படியே அதுவே நிலைத்து விட்டதாகவும் சொன்னார்..
அண்ணன் அனுபவப்பகிர்வுக்கு நன்றி இன்னும் நியைப்பேச இருக்கு உங்களோடு...






*
அண்ணன் கல்ஃப் தமிழன் எழுதுவதில்லை ஒழிய தமிழ திரட்டிகளுக்கு வலைப்பூக்களுக்கு புதிய வாசகரல்ல என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம் அவர் பழையவர் என்று தெரிந்தாலும் இவ்வளவு துரம் பதிவர்களை கவனிக்கிற ஒருவர் என்பது நானும் அறியாதது பரந்த வாசிப்பு அனுபவம் அவருக்கும் இருக்கிறது...அண்ணன் எழுதுங்க படிக்கிறதுக்கு நாங்க இருக்கோம்... பல காலமா கல்ஃப்லயே இருக்கிறதால அந்தப்பெயரை வச்சுக்கிட்டார்ங்கிறது அவர் எத்தனை வருடங்களாக அங்கே இருக்கிறார் என்பதை சொன்னபோது புரிஞ்துகொள்ள முடிந்தது.அண்ணனுக்கு ஜெத்தா(Jeddah)தண்ணி பட்ட பாடு,சந்து பொந்து முட்டு முடுக்கெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கார்...:)


*
பல விசயங்களையும் பேசிக்கொண்டோம் அல்லது நான் அவர்களை பேச விட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்..நேரம் போனது தெரியாமல் உரையாடிக்கொண்டிருந்தோம். என்னை ஜமாலன் நீங்கள் கவிதையெல்லாம் எழுதுவிங்களான்னு கேட்டார் (என்ன இப்படி கேட்டு தர்ம சங்கடத்துல விட்டுட்டிங்களே:) நான் வலைப்பதிவு தொடங்கினதே பின்னூட்டங்களுக்காத்தான் என்று சொல்லி வாசிக்கிறதுதான் நம்ம வேலை முடிஞ்சா சில கருத்துள்ள பின்னூட்டங்கள் அப்படின்னு சொல்லி சமாளித்துக்கொண்டேன்...(உண்மையும் சில நேரங்களில் சமாளிப்புகள் ஆகிவிடுகிறது)

இன்னும் பேசலாம் என்று உரையாடல் போய்கொண்டிருக்கையிலேயே மறுநாள் காலை வேலை இருப்பதானாலும் போக்கு வரத்து பிரச்சனையாலும் நான் புறப்பட வேண்டிய அவசியம் இருப்பதை சொல்லிக்கொண்டு இட்லி,வடை,தோசையோடு விடை பெற்றுக்கொண்டோம். பரவாயில்லை தலதான் கொஞ்சம் துரத்துல இருக்கிறார், ஜமாலன் ஐயாவும், கல்ஃப் தமிழன் அண்ணனும் ஜெத்தாவுக்கு (Jeddah) பக்கத்தில்தான் இருக்கிறார்கள் அடிக்கடி பார்க்கலாம் என்று நினைக்கிறேன்...

பின்குறிப்பு :

1)
நல்லதொரு சந்திப்புக்கு அடி போட்ட அண்ணன் தமிழ் பிரியனுக்கும் தங்களுடைய வேலைகளை தவிர்த்து நேரத்தை ஒதுக்கி எங்களோடு கலந்து கொண்ட ஜமாலன் ஐயாவுக்கும் கல்ஃப் தமிழன் அண்ணனுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்...
(ஆனா இனி அடிக்கடி தொல்லை கொடுப்பேன்)

2)
நேரமின்மையும் சூழ்நிலைகளும் இணைய வசதியும் சதி செய்வதில் நவராத்திரிக்கு ஏதாவது எழுதலாம் என்றால் முடியவில்லை இருந்தும் குறிப்புக்களாக எழுதிய விடயங்கள் முற்றுப்பெறாமல் இருக்கிறது அவை நீங்கள் பொறுமை இழக்கிற அளவுக்கு பெரியதாக இருப்பதனால் அடுத்த வருடம் அல்லது அடுத்தடுத்த பதிவுகளில் அங்கங்கே...


3)

பாவனா படம் எதுக்குன்னு கேக்க மாட்டிங்கன்றது எனக்கு தெரியும்...

மறுபடியும் நன்றி...

28 comments:

கானா பிரபா said...

பதிவர் சந்திப்பை அழகாகத் தந்தீர், என்ன படங்களில் வாற பாட்டுக் கட்டம் மாதிரி பாவனாவா?

சரி சரி ஸ்வாதியைப் போடாம இருந்தீரே அதுவே போதும் ;-)

ஆயில்யன் said...

அழகாய் இருக்கிறது பதிவர் சந்திப்பு தொகுப்பு :)

ஆயில்யன் said...

அண்ணாச்சி இது என்னாது ? ஸ்வாதிக்கு பிறகு லேட்டஸ்டா வருவீங்கன்னு பார்த்தா பின்னோக்க்கி போறீங்க!

அப்ப ராதா படமெல்லாம் வரும்ன்னு சொல்லுங்க :))))))))))))

Thamiz Priyan said...

ஆமா இடையிடையே பாவனா படங்கள் எதற்கு?

Thamiz Priyan said...

எங்க ஊருல சொல்வாங்க... சாண் பிள்ளைன்னாலும் ஆண் பிள்ளைன்னு... அப்படித்தானுங்க நீங்களும்.. :)

கானா பிரபா said...

//தமிழ் பிரியன் said...
ஆமா இடையிடையே பாவனா படங்கள் எதற்கு?//

பாவனா படம் இருந்தா இடை இருக்கத் தானே செய்யும்?

Thamiz Priyan said...

///கானா பிரபா said...

//தமிழ் பிரியன் said...
ஆமா இடையிடையே பாவனா படங்கள் எதற்கு?//

பாவனா படம் இருந்தா இடை இருக்கத் தானே செய்யும்?///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்ப அடுத்த தடவை இடையே இல்லாத படமா போடுப்பா... அண்ணை கேட்டுட்டாகள்

ஆயில்யன் said...

// தமிழ் பிரியன் said...
ஆமா இடையிடையே பாவனா படங்கள் எதற்கு?//

எழுத்துக்கள் எதற்க்குன்னு கேக்கறதுக்கு பதிலா மிஸ்டேக்கா இப்படி கேட்டுப்புட்டாரு போல தமிழ்!

ஆயில்யன் said...

மீ த பத்து

Anonymous said...

தமிழன் தம்பீ இன்னும் கொஞ்சம் படங்களை சேர்த்து இருக்களாம். குறைவா இருக்கே

கானா பிரபா said...

// ஆயில்யன் said...

எழுத்துக்கள் எதற்க்குன்னு கேக்கறதுக்கு பதிலா மிஸ்டேக்கா இப்படி கேட்டுப்புட்டாரு போல தமிழ்!//

;-))

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
///கானா பிரபா said...

//தமிழ் பிரியன் said...
ஆமா இடையிடையே பாவனா படங்கள் எதற்கு?//

பாவனா படம் இருந்தா இடை இருக்கத் தானே செய்யும்?///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்ப அடுத்த தடவை இடையே இல்லாத படமா போடுப்பா... அண்ணை கேட்டுட்டாகள்

October 10, 2008 6:22 PM//


யோவ்....! நீ இப்ப இடையே இல்லாத படம் போடச்சொல்லுவ அப்புறம் உ....... தை படுவீங்கன்னு சொல்லவந்தேன்

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

// தமிழ் பிரியன் said...
ஆமா இடையிடையே பாவனா படங்கள் எதற்கு?//

எழுத்துக்கள் எதற்க்குன்னு கேக்கறதுக்கு பதிலா மிஸ்டேக்கா இப்படி கேட்டுப்புட்டாரு போல தமிழ்!////

அண்ணே நீங்க முன்னேறிட்டீங்க

தமிழன்-கறுப்பி... said...

கானா பிரபா said...
\\
பதிவர் சந்திப்பை அழகாகத் தந்தீர், என்ன படங்களில் வாற பாட்டுக் கட்டம் மாதிரி பாவனாவா?

சரி சரி ஸ்வாதியைப் போடாம இருந்தீரே அதுவே போதும் ;-)
\\

வாங்கோ அண்ணன்..

நவராத்திரி எல்லாம் எப்படி போச்சுது...

அவவுன்ர படம் அடுத்த முறை...:)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
\\
அழகாய் இருக்கிறது பதிவர் சந்திப்பு தொகுப்பு :)
\\

புரிகிறது...

நன்றி...:)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
\\
அண்ணாச்சி இது என்னாது ? ஸ்வாதிக்கு பிறகு லேட்டஸ்டா வருவீங்கன்னு பார்த்தா பின்னோக்க்கி போறீங்க!

அப்ப ராதா படமெல்லாம் வரும்ன்னு சொல்லுங்க :))))))))))))
\\

மறக்க முடியுமா அண்ணாச்சி...:)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\\
ஆமா இடையிடையே பாவனா படங்கள் எதற்கு?
\\

இதுக்காகத்தான்...:)

தமிழன்-கறுப்பி... said...

கானா பிரபா said...
\\
//தமிழ் பிரியன் said...
ஆமா இடையிடையே பாவனா படங்கள் எதற்கு?//

பாவனா படம் இருந்தா இடை இருக்கத் தானே செய்யும்?
\\

அண்ணே!!! :)

நிஜமா நல்லவன் said...

அழகாய் இருக்கிறது பதிவர் சந்திப்பு தொகுப்பு :)

gulf-tamilan said...

:))))))
aahaa time ippathan kidaithatha !!!
nanrii

gulf-tamilan said...

test 123

gulf-tamilan said...

test 321

gulf-tamilan said...

me the 24!!

gulf-tamilan said...

25. ok byeeeeeeeeeeeee

புகழன் said...

பாவனா படங்கள் எல்லாம் சூப்பர்

பதிவை தொடர்ந்து படிப்பதற்கு உதவி செய்தவையே அவைதான்.

Anonymous said...

//பாவனா படம் எதுக்குன்னு கேக்க மாட்டிங்கன்றது எனக்கு தெரியும்...//

நான் கேட்பேன்..

ஜமாலன் said...

என்னாதிது? பதிவர் சந்திப்பா? எப்ப? சொல்லவேயில்ல....

தமிழன்-கறுப்பி... said...

ஜமாலன் said...
\\
என்னாதிது? பதிவர் சந்திப்பா? எப்ப? சொல்லவேயில்ல....
\\

ரொம்ப நன்றி ஜமாலன் சார்...