Friday, November 30, 2007

கடிதங்களுக்குப்பதிலாக...1

வந்திருந்தவை...01
நிறைய நாட்களாக கணினியில் இருப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அதுவே எனக்கு ஏதோ தலை முழுக்க பாரமாக இருந்தது ஒரு இயல்பில்லாத தன்மையுடன் உலவிக்கொண்டிருந்தேன் இப்பொழுது எதிர்பாராமல் ஒரு சந்தர்ப்பம் அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரம்தான் வந்து இருந்த உடனேயே எழுதவேண்டும் என்று நினைத்த எல்லாம் ஒரே சமயத்தில் நெற்றிப்பொட்டில் வந்து குவிய நானே குழம்பிப்போனேன் என்ன செய்வதென்று தெரியாமல் மனதில் ஒவ்வொன்றாய் வந்து விழுந்த விடயங்களை எழுதினாலே ஒரு பதிவு நீளத்திற்கு வந்துவிடும்போல இருந்தது சரி அவற்றுள் ஏதாவத ஒன்றைப்பற்றி எழுதலாம் என்றால் முதலில் ஞாபம் வந்தது சமீபத்தில்நான் பார்த்து வியந்த ஒரு கையடக்கத்தொலைபேசியின் குறுந்தகவல் பரிமாறல்தான் அடடா இதில இப்படியெல்லாம்கூட இருக்கா நம்மளுக்கு தெரியாமப்போச்சே என்னுமளவுக்கு தட்டிக்குவித்திருந்தார்கள் எப்படித்தான் இவ்வளவையும் தமிங்கிலீசில் வாசிக்கப்பழகினார்களோ...? அவற்றுள் எனக்கு கிடைத்த அவகாசத்தில் திருட்டுத்தனமாக வாசித்ததில் ஞாபகம் இருப்பவற்றை தமிழில் தர முயன்றிருக்கிறேன் படித்துப்பாருங்கள்
*நாளை விடுமுறை நாளென்பதால்
நான் இன்றய இரவு முழுவதும்
தூங்காமல் உன்னோடு இருக்கிறேன்...
*என் ராஜாவுக்கு
உன் கண்கள் தொடும்
உன் கைகள் தொடும்
உன் சுவாசம் தொடும் தூரத்தில்
காலம் முழுவதும்
கழிக்க வேண்டும்...
*கண்ணா காலைப்பொழுதின் வாழ்த்துக்கள்
என்ன செய்கிறாய்?
நான் குளித்து முடித்து தேநீர் குடிக்கிறேன்
இங்கே நீ இன்னமும் தூங்குகிறாய்
எழுப்பவா? வேண்டாமா...?
*நான் நாளைய பரீட்சை ஒன்றுக்கு
தயாரயகிக்கொண்டிருந்தேன்
கவலைப்படாதே உன்னால் என்னை
காயப்படுத்த முடியாது
அணைப்பதற்கும் அடிப்பதற்கும்
நீதான் வேண்டும்
இனிய இரவுக்கான வாழ்த்துக்களுடன்
விடைபெறுகிறேன்...
(சரி நேரம் முடிந்து விட்டதனால் தற்காலிகமாக பதிவை முடிக்கிறேன் ஆனால் இது இப்பொழுது முடியாது நான் வாசித்ததே ஒரு 15 தகவல் இருக்கும் அதில் நினைவிருப்பவை ஒரு 10 இருக்கும் பார்க்கலாம் திரும்பவும் என் கைக்கு வராமல் போய்விடுமா என்ன...)

5 comments:

தமிழ்நதி said...
This comment has been removed by the author.
தமிழ்நதி said...

உங்கள் அனுபவங்கள் என்று நினைத்தேன். வேறொருவரின் குறுஞ்செய்திகளிலிருந்து உருவியிருக்கிறீர்கள்:) அதைப் பதிவில் போடுவது வேறு...ம்... நடக்கட்டும். உங்கள் நண்பரிடம் ஒருநாளைக்கு போட்டுக்கொடுத்துவிடுகிறேன். இனி கைத்தொலைபேசியை கையிலேதான் வைத்திருக்கவேண்டும் போலிருக்கிறது:) என்றாலும் அடுத்தவர் அந்தரங்கம் என்பது சுவாரசியந்தான்.உடனே பெண்கள் குணம் அது என்று ஆரம்பித்துவிடாதீர்கள்.

தமிழன்-கறுப்பி... said...

என்ன தமிழ்நதி இப்படி சொல்லிட்டிங்க...இந்த பகுதியில் இருக்கிற முழுவதும் படித்தால் தெரியும் அது யாருடையவை என்று...

தமிழன்-கறுப்பி... said...

///இனி கைத்தொலைபேசியை கையிலேதான் வைத்திருக்கவேண்டும் போலிருக்கிறது:) என்றாலும் அடுத்தவர் அந்தரங்கம் என்பது சுவாரசியந்தான்.உடனே பெண்கள் குணம் அது என்று ஆரம்பித்துவிடாதீர்கள்.///


நீங்களே உண்மையை ஒப்புக்கொண்ட பிறகு நான் எதற்கு ...தமிழ்நதி...

தமிழன்-கறுப்பி... said...

மன்னித்துக்கொள்ளுங்கள் தமிழ்நதி தவறுதலாக உங்கள் பின்னூட்டம் அழிக்கப்பட்டுவிட்டது...