Wednesday, October 31, 2007
காதல் - ஒரேவரியில்…
காதல் - ஒற்றை வரியில் சொல்ல முடியாத விளக்கம்.
காதல் - விளக்கம் சொல்ல முடியாத விடயம.;
காதல் - ஒரு பெயருக்குள் இரண்டு உயிர்கள்.
காதல் - ஒரே உறவுக்குள் உலகத்தை உணர்தல்.
காதல் - பூமிக்கு கிடைத்த வரம.
காதல் - பூக்கள் தருகின்ற சுகம்.
காதல் - ஹோமோசேபியனின் முதல் கவிதை.
காதல் - கூர்ப்பின் முதல் இலக்கியம்.
காதல் - இருக்கிற உயிரிலேயே இன்னுமொரு முறை பிறத்தல்.
காதல் - இன்னொருவரால் உணரவும் நிறைவுசெய்யவும் முடியாத உறவு
காதல் - கேள்விகளுக்காய் காத்திருக்கும் பதில்.
காதல் - இன்னும் இன்னும் என்கிற இரண்டு உயிர்களின் ஒரு புள்ளியிலான தேடல்.
காதல் - எவ்வளவு சொன்னாலும் இன்னமும் சொல்லவும் கேட்கவும் விரும்புகிற உணர்வு…
காதல் என்றால் என்ன என்று தூயா கேட்ட கேள்வி பற்றிய பதிவுக்கு பின்னூட்டம் எழுதலாம் என்று யோசிக்கையில் சடசடவென்று மழையாக மனதில் வந்தவற்றை நானே ஒரு பதிவாக்கி விட்டேன்
(ஒரு பதிவுக்கு வழி செய்த தூயாவுக்கு நன்றி)
Labels:
காதல்...
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
:) ஒரு வார்த்தையில் இத்தனை பதில்களா...நல்ல பதிவு:)
//
vetru kirakaththin ilavarsan... oru penmayidam thotravan... kavithaikalin rasigan... Kathalum Anbum maddume therinthavan...
//
Very interesting..
காதலில் ஒரு டாக்டர் பட்டம் தரலாம் போல இருக்கு. வாழ்வில் அனுபவத்திற்கு நிகர் ஏது? உணர்ந்து எழுதுகிறீர்கள். தோல்விகளும், அவமானங்களும் தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்துபவை.
இந்த பதிவை வாசித்து விமர்சிக்கவும்.
http://akathy.blogspot.com/2007/09/blog-post_16.html
நன்றி அண்ணன் அது வேலை செய்யவிலலையே (ஆனால் நான் ஒரு பின்னூட்டம் எழுதியிருக்கிறேன்)
நன்றிகள் தூயா… வருகைக்கும் கருத்துக்களுக்கும் முக்கியமாக எனக்கான உங்கள் பிரார்த்தனைக்கும்…
அண்ணன் அனுபவமோ என்னவோ காதலைப்பற்றி பேசுகையில் நான் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சி வசப்படுகிறேன் என்பது உண்மையே…
//அண்ணன் அனுபவமோ என்னவோ காதலைப்பற்றி பேசுகையில் நான் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சி வசப்படுகிறேன் என்பது உண்மையே…//
அதனால்தான் பதிவு நன்றாக இருக்கிறது. :-))
காதல் - இருக்கிற உயிரிலேயே இன்னுமொரு முறை பிறத்தல்.
காதல் - இன்னொருவரால் உணரவும் நிறைவுசெய்யவும் முடியாத உறவு
காதல் - கேள்விகளுக்காய் காத்திருக்கும் பதில்.
காதல் - இன்னும் இன்னும் என்கிற இரண்டு உயிர்களின் ஒரு புள்ளியிலான தேடல்.
காதல் - எவ்வளவு சொன்னாலும் இன்னமும் சொல்லவும் கேட்கவும் விரும்புகிற உணர்வு…
உண்மையிலேயே பிரமித்துப்போனேன்.வாசிக்கிறபோது மனசுக்கு இதம் கிடைத்த உணர்வு.
நன்றி நளாயினி நன்றி உங்கள் பதிவுகளைவிடவா என் பதிவு இதமாக இருக்கிறது
நன்றி தர்சன்
அனுபவம் என்பது எனக்கில்லாமல் என்னைச்சூழ நடந்தவைகளாகவும் இருக்கலாமே…
என்ன தங்களின் பதிவுகளை நீண்ட நளாக காணமுடியவில்லை.
நளாயினி நான் உங்களை அழைத்திருந்தேன்
குறை நினைக்காதீர்கள் கணினியில் உட்காருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அத்தோடு பல பிரச்சனைகள் தலைக்குள் இருந்தமையால் எதையுமே சரியாக தொகுக்க முடியவில்லை கொஞ்சம் நெருக்கடி நிலையிலருக்கிறேன் அதனால்தான்- பார்ப்போம் விரைவில் சரி செய்துவிடுகிறேன்
காதலுக்கு இத்தனை அர்த்தங்களா?? வியந்தேன்!!
திவ்யா சொன்னது...
///காதலுக்கு இத்தனை அர்த்தங்களா?? வியந்தேன்!!///
காதல் அர்த்தங்களை கடந்தது திவ்யா இவ்வளவும் மூன்று நிமிடங்களுக்குள் வந்த பதில்கள் மட்டுமே இன்னும் இருக்கிறது...
நன்றி...
Post a Comment