Friday, October 19, 2007

நவராத்திரி

எழுத ஆரம்பித்த காலப்பகுதி நவராத்திரி காலம் என்பதால் அதுக்கேற்றமாதிரி ஒரு பதிவை எழுதலாமென்று நினைக்கிறேன்

1) நீ பாவாடை தாவணியிலிருந்து
பட்டுப்புடைவைக்கு மாறிய அந்த
வாணிவிழாவின் நாளில் கட்டிய
மயில் நீல நிற புடைவையின் வாசம்
இன்னும் என் நாசிக்குள் நிறைகிறது…

2) நான் பார்க்கவேண்டும் என்றோ- அல்லது

என்னை பார்க்கவேண்டும் என்றோ
நீ முதன்முதலாய் கட்டிய பட்டுப்புடைவையோடு
என் வீடுவரை வந்துவிட்டுப்போன
நவராத்திரி விழாவிற்குப்பின்னர்
புடைவைகளையும் படித்துப்போயிற்று
உன்னைப்போலவே…

3) நவராத்திரி என்றால்அம்மனே வந்து
தனக்கு மாலை கட்டுவாளா என்ன?
நீ குளித்த ஈரம் காயாமல்
பூக்கள் பட்டு விரல்கள் வலிக்க
மாலை கட்டிக்கொண்டிருக்கையில்
வேறென்ன சொல்வது?

4) ஆயுத பூஜை என்றால்

அவரவர் தங்கள் கருவிகளை பூஜையில்வைக்கவேண்டும்
ஆனால் நீ உன் அழகின்
அத்தனை போர்க்கருவிகளையும்
உந்தன் பட்டுப்புடைவை சகிதம்
என் மீதல்லவா பிரயோகிக்கிறாய்.

நவராத்திரி சம்பந்தமாக பதிவெழுதுகிறேன் என்றுவிட்டு இது என்ன உளறல்களை எழுதியிருக்கிறீர் என்று கோபப்பட வேண்டாம், இன்னும் பல பக்திக்குறிப்புகள் இருக்கு ஆனால் பதியத்தான் நேரமில்லை…அடுத்த பதிவில் எழுதுகிறேன்…

6 comments:

Chandravathanaa said...

ம்.. நல்லாயிருக்கு.

காரூரன் said...

நவராத்திரி என்பதால் அவலைப் பற்றி சொல்ல வருகிறீர்களோ என்று நினைத்தேன். நீங்கள் அவளைப் பற்றி எழுதியுள்ளீர்கள். எதுவென்றாலும் எழுதலாம். யோசியமால் எழுதுங்கோ.
வாழ்த்துக்கள்!.

நவீன் ப்ரகாஷ் said...

//நான்
பார்க்கவேண்டும் என்றோ
அல்லது என்னை
பார்க்கவேண்டும் என்றோ
நீ முதன்முதலாய் கட்டிய பட்டுப்புடைவையோடு
என் வீடுவரை வந்துவிட்டுப்போன
நவராத்திரி
விழாவிற்குப்பின்னர்
புடைவைகளையும்
பிடித்துப்போயிற்று
உன்னைப்போலவே…//

அழகான உணர்வுகள் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் :))) மேலும் தொடர வாழ்த்துக்கள் :))

தமிழன்-கறுப்பி... said...

நன்றி நவீன் அண்ணன்…

Anonymous said...

உங்களுக்கு நல்ல ரசிப்பு தன்மை உண்டு என்பது தெரிகின்றது :)

நளாயினி said...

ஆயுத பூஜை என்றால்
அவரவர் தங்கள் கருவிகளை பூஜையில்வைக்கவேண்டும்
ஆனால் நீ உன் அழகின்
அத்தனை போர்க்கருவிகளையும்
உந்தன் பட்டுப்புடைவை சகிதம்
என் மீதல்லவா பிரயோகிக்கிறாய்.


அட டட டா!