நான் கவிதைகளை ரசிக்க ஆரமபித்ததற்கு கவிப்பேரரசு வைரமுத்துவும் ஒரு காரணம் நான் முதலில் வாசித்த அல்லது உணர்ந்த வைரமுத்துவின் புத்தகம் அல்லது உணர்வுகள் “ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்” என்பதுதான் அதுவும் அது என் கைக்கு கிடைத்ததே ஒரு விசேசமான கையிலிருந்துதான் அதனாலோ என்னவோ அன்றிலிருந்து இன்று வரைக்குள்ளும் பல முறை அதனை வாசித்து உணர்ந்து முடித்துவிட்டேன் அதன் அத்தியாயங்களை வரிவரியாக சொல்லக்கூடிய, எந்த பக்கத்தில் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய அளவுக்கு அந்த புத்தகதை வாசித்துவிட்டாலும் ஆண்டுகள் சில கடந்துவிட்டாலும் அதனை நான் முதலில் வாசித்தபொழுது கேட்ட கேள்விக்கு மட்டும் இன்னமும் பதில் கிடைக்கவில்லை…
அந்த புத்தகத்தின் பின் அட்டையில் இருக்கிற வசனம்
ஒவ்வொரு நட்சத்திரமும் சூரியனைவிடப்பெரியது
காதலுக்காக சிந்தப்படும் ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் நட்சத்திரங்களைவிடப்பெரியது…
இதுவரையில் எத்தனை நட்சத்திரங்கள் நான் தூங்காத இரவுகள் முழுவதும் உருண்டிருக்கும் என் கன்னங்களில்…
4 comments:
அவள் யார் இவ்வளவு கொடுத்து வைத்தவள்?,
*\\ oru penmayidam thotravan... \\
இப்படி அறிமுகத்தில் குறிப்பிட்டீர்களே!,
தோற்றீர்களா? ஏமாற்றப் பட்டீர்களா?
மனம் விட்டு எழுதுங்கள், உங்கள் மனதை அறிந்து ஒருத்தி வருவாள்.
அது பெரிய கதை அண்ணன்…
ம்ம்ம் உங்களுக்கு கிடைத்த நல்ல அனுபவங்களும், உணர்வுகளும் மட்டும் நினைவில் இருக்கவும், கசப்பானவை உங்கள் மனதிலிருந்து போகவும் இறைவனை வேண்டிக்கிறேன்..
காதலுக்காக யார் அழுகிறார்களோ அவர்களின் காதல் தான் உண்மைக்காதல்.
Post a Comment