Thursday, November 5, 2009

திரும்புகிற பிறழ்வு...




எழுதுவம் எண்டு வெளிக்கிட்டாத்தான் விசர்க்குணங்களும் வரும்போல நம்பிக்கையின்மைகளும் பயமும் சேர்ந்து சாகடிக்கிறது.கெதியில ஒரு வைத்திய ஆலோசனை எடுக்க வேண்டி வரும்போல, சரி அதை விடுவம்... பிறழ்வையும் அனுபவிக்கத்தானே வேணும். நிறைய புத்தகங்கள், நிறைய திரைப்படங்கள் கிடைத்திருக்கிறது.இப்போதைக்கு எழுதாமல் இருக்க அல்லது எழுத விடாமல் செய்வதற்கு அவையே போதுமானவையாயிருக்கிறது.

___________________________________________________________

'யாமம்' படித்து முடித்திருக்கிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் எழுதப்பட்ட மொழி என்பது நெருக்கமான குரலொன்றின் சுதியோடு பழக்கபட்ட பாதையில் அழைத்துப்போகிற வசீகரம் உடையது அவரது இணையம் தவிர்த்து நான் வாசிக்கிற இரண்டாவது புத்தகம் அல்லது முதல் நாவல்.இதற்கு முன்னர் வாசித்தது அயல் சினிமா என்கிற கட்டுரைதொகுப்பு.யாமம் வாசிக்கத்தொடங்கி பல நாட்களாகியும் முதல் சில பக்கங்களை கடப்பதற்கே சந்தர்ப்பம் வாய்க்காமல் இருந்தது. எப்படியும் வாசிப்பதென்ற முடிவில்; அறையில் எல்லோரும் உறங்கிய பிறகு மிக மங்கலான வெளிச்சத்தில் மூன்றாம் யாமம் ஒன்றின் ஆரம்பத்தில் படித்து முடித்திருந்தேன்.இரவு ஆகக்குறைந்த போலித்தனங்களோடிருக்கிறதென்று நம்பிக்கொண்டிருந்தேன்; அது ஆகக்கூடிய ரகசியங்களையும் வைத்திருக்கிறது.

____________________________________________________

(இடைக்காலப்)பாடல்களில் பைத்தியமாயிருக்கிற நண்பனொருவனுக்காக பாடல்களை தரவிறக்கிக்கொண்டிருக்கிறேன் வீடியோ பாடல்கள் முடிந்து டிசம்பருக்குள் அறுநூறு பாடல்கள் mp3 ஆக வேண்டும் என்று கேட்டிருக்கிறான். அவனுடைய தெரிவுகளும் நச்சரிப்புகளும் சலிப்பாக இருந்தாலும், சில நேரங்களில் மனதுக்கு இணக்கமாகவும் இருக்கிறது இந்த - பாடல் தேடுகிற வேலை அவனுக்கான பாடலை தேடுகையில் எனக்கான நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்து விடுகிற சில பாடல்களில் தங்கி விடுகிறது மனம். மனதுக்கு நெருக்கமான பாடல்கள் கொண்டு வருகிற வாசனையும் மயக்கமும் ஒரு பரவசமாகவே இருக்கிறது. நினைவுகள் மீட்டலும், கிளர்வுகளும் என காலத்தை கடத்திக்கொண்டு போய்விடுகிறது. தலை முறைகள் மாறியும் மாறிப்போகாத அந்த ரசனைகளையும் சிந்தனைகளையும் வைத்திருக்கிற சனம்தான் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது வடக்கிலும் கிழக்கிலும்.

(மதி உன்ரை தொல்லை தாங்கேலாதாம்)

__________________________________________________


இணையமும் வலையிலெழுதுதலும் எனக்கு கொடுத்திருப்பது இன்னமும் பிறழந்து போகாதிருக்கிற என்னைத்தான் அல்லது பிறழ்வுகளிலருந்து வெளிவருகிற லாவகங்களைத்தான். பிறழ்வும் திரும்புதலுமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது நாட்கள். வாழ்வின் மீதான திருப்தியினை,காட்டாறென ஓடிக்கொண்டேயிருக்கிற வாழ்வினை நேசிக்கிறது மனது. இந்த செய்து வைத்த விதிகளில் வாழ்தலை சபித்துக்கொண்டிருக்கிற என்னை இன்னமும் தீவிரப்படுத்தியிருக்கிறது கடந்த வாரத்தில் பார்த்த in to the wild திரைப்படம். வெளிக்கிடு இந்த இடத்தை விட்டு என்று பதறிக்கொண்டிருக்கிறது மனம், நிர்ப்பந்தங்களால் வடிவமாக்கப்பட்டிருக்கிற இந்த பிறவியும், முடிவுகளின் பால் இருக்கிற தளர்வுகளும், போதாமையும் இன்னமும் விமானச்சீட்டை வாங்க விடாமல் பண்ணியிருக்கிறது.





______________________________________________________



செத்துப்போடா நாயே என்பது போல விடிய விடிய குடிப்பதற்கான மனோநிலையோடிருக்கிறது இப்போதைய நாட்கள்.சில நேரங்களில் போதை மிகச்சினேகமாய் இருக்கிறது புத்தகங்களைப்போலவே. பகிர்ந்து கொள்ள யாருமில்லாத எல்லாவற்றையும் எனக்குள்ளே வைத்தபடி எப்படி இருப்பேன்? இந்த இரவுக்கான தோழியை கூட என்னால் கண்டுகொள்ள முடியவில்லை!! என்ன உலகம் இது! ஆகக்குறைந்து குடிப்பதற்கான சுதந்திரமோ,சத்தமாய் புலம்புவதற்கான சுதந்திரமோ இல்லாத இந்த '...நாட்டுக்குள்ள' இருந்து கொண்டு இப்படி ஏதாவது எழுத மட்டும்தான் முடிகிறது.


நம்பிக்கைகளின் மீதிருக்கிற பயங்கள்
எப்பொழுதும் தீராமல் இருக்கிறது,
ஏறக்குறைய முழுவதுமாய்
பிறழ்ந்திருக்கிறது மனம்,
திறந்திருக்கிற இயல்புவெளி
ஆடைகளால் மூடப்பட்டிருக்கிறது,
வெறுமனே பேசுகிற வார்த்தைகள்
பிளைத்துக்கொள்ள போதுமானவையாயிருக்கிறது,
பிரிந்துவிட முடியாததில்
அறுந்து விடாமலிருக்கின்றன இல்லாத பிரியங்கள்,
இறந்து போகையில் மீதமிருக்கக்கூடும்
இன்னமும் ஆரம்பிக்கப்படாத வாழ்க்கை!


போங்கோடா... நீங்களும் உங்கடை ஒழுக்கப்பூழலும்!

11 comments:

ஆயில்யன் said...

//நிர்ப்பந்தங்களால் வடிவமாக்கப்பட்டிருக்கிற இந்த பிறவியும், முடிவுகளின் பால் இருக்கிற தளர்வுகளும், போதாமையும் இன்னமும் விமானச்சீட்டை வாங்க விடாமல் பண்ணியிருக்கிறது//

:(

ஆயில்யன் said...

//இரவு ஆகக்குறைந்த போலித்தனங்களோடிருக்கிறதென்று நம்பிக்கொண்டிருந்தேன்; அது ஆகக்கூடிய ரகசியங்களையும் வைத்திருக்கிறது.
//

குட்!

சந்தனமுல்லை said...

/இரவு ஆகக்குறைந்த போலித்தனங்களோடிருக்கிறதென்று நம்பிக்கொண்டிருந்தேன்; அது ஆகக்கூடிய ரகசியங்களையும் வைத்திருக்கிறது./

:-)

சந்தனமுல்லை said...

/செத்துப்போடா நாயே என்பது போல விடிய விடிய குடிப்பதற்கான மனோநிலையோடிருக்கிறது இப்போதைய நாட்கள்./

:((

மங்களூர் சிவா said...

:(
take care of your health. god is great.

ரௌத்ரன் said...

யோவ் கறுப்பி,

புத்தகம் படிச்சு எதாவது எழுதுவீருனு பார்த்தா 'ராத்திரி ரகசியமா' இருக்குனு சொல்றீரு.அவ்ளோ பெரிய புக்குல அவ்ளோதான் சொல்ல இருக்கா :)

சரி படத்த பத்தியாவது எதாவது...அட இதயெல்லாம் வேலமெனக்கெட்டு குடுத்த அந்த நல்லவன் பத்தியாவது...ம்ஹீம்..

:)

Thamira said...

நான் கோட் செய்ய நினைத்த வரிகளை நண்பர்கள் ஏற்கனவே செய்துவிட்டார்கள். கவிதை உணர்வுப்பூர்வமானது. அயலகம் வாழ்பவன் ரசனைக்காரனாகவும் இருப்பது கொடுமையாக இருக்கும் என்பது உங்கள் எழுத்துகளிலிருந்து புரிகிறது. அமைதி பெறுங்கள் கறுப்பி.!

தமிழன்-கறுப்பி... said...

//நன்றி ஆயில்யன்,

//நன்றி தமிழ் பிரியன்,

//நன்றி சந்தனமுல்லை,


@ ரௌத்ரன் புத்தகத்தை பற்றி எழுதுற அளவக்கு நான் இன்னும் வளரல
;)

சரி சரி எனக்கு புத்தகமும், படமும் தந்த நல்லவர் வல்லவர் அண்ணன் ரௌத்ரன் தான் மக்களே..

//
ஹே சிவா மாம்ஸ் நன்றி ஆனா இந்த கடவுளை பாத்து பேசினதுக்கப்பறம்தான் அவர் கிரேட்டா இல்லையான்னு முடிவு பண்ணனும்.
:(

நன்றி தாமிரா (ஆதி) அண்ணே..

-பருத்தியன்- said...

உன்னுடைய அரிதான நிமிடங்களையும் எழுத்துக்களாய் காணும்போது நாம் இயற்கையாகவே நண்பர்களாய் அமைந்ததில் நமது எண்ணங்களும் இலக்குகளும் ஒற்றுமையாய் இருந்ததும் காரணங்களாக அமைவதாகவே தோன்றுகின்றது. வாழ்த்துக்கள் நண்பா... எழுது... எழுது... உனக்காய் மட்டும் எழுது என்று சொல்ல இப்போது எனக்கு மனசில்ல. ஏனெனில்... எனக்காகவும் ...எம்மவர்க்காகவும் நீ தொடரு...!!!

என்றும் உன் நண்பன்...
பருத்தியன்

Unknown said...

into the wild - padam paarthennga. arumai. ippadi oru padam irukkriathey neenga solli thaan theriyum. but, romba negilnthu poitten.

adhulayum andha kadasi vari, ' happiness is only real when shared'

superb and thanks for you.

Ganesh (new

தமிழன்-கறுப்பி... said...

@ பருத்தியன்
நன்றி நண்பா, உன்னோடு நிறைய பேச இருக்கிறது

@ நன்றி கணேஷ் செம படம்ல



எவ்வளவு தாமதமான பதில் - :(