பல முறையான என் அழைப்புகளுக்கு பதில் சொல்லாமல் இருந்த தோழி ஒருத்தியின் பெரியதொரு ஊடலுக்கு பிறகு பேசக்கிடைத்த; எனக்கு பின்னிரவைப்போன்ற காலைப்பொழுதொன்றில்.

என்னடா பிறழ்வு கிறழ்வெண்டு விளங்காத மாதிரி எழுதியிருக்கிறாய்..
நானே விளங்காமத்தான் இருக்கிறன் அதான் உப்பிடி.. :)
நீ சும்மா கனக்க யோசிக்காத அதென்ன படம் into the wild.
அந்தமாரி படம் முடிஞ்சா பார், எனக்கு நெருக்கமான ஒரு மனிசன் கிரிஸ்!உள்ளுக்க இருந்த ஆசைகளை தூண்டி விட்டிருக்கிறான். படம் பாத்த அண்டைக்கு குடிக்கோணும் போலயே இருந்திச்சு.
நீ சொல்லுற படங்கள் எல்லாம் பாத்தா நித்திரை கொள்ளேலாது பாப்பம் try பண்ணுறன்.
உண்மைல என்னடி வாழ்க்கை இது போலித்தனமா செஞ்சு வச்சமாதிரி கொஞ்சம் கூட உண்மை இல்லாத மனிசர்களோடை சீ...
கனக்க யோசிக்கிறா போல இருக்கு ஊருக்கு போயிட்டுவா...
ச்சா அப்படியெண்டில்லை ம்ம்.. ஓமடி ஊருக்கு போனா நல்லதுதான்.. wanna get a break.
ம்ம் போட்டு வா..
போறதுக்கு காசில்லை நீ தந்தா போயிடுவன்..
என்ன செய்யுற காசையெல்லாம்?!
என்னைப்பற்றி தெரியும்தானே காசை சேமிக்கிறதெண்டுறது எனக்கு தெரியாத விசயம்...நாளைக்கெண்டெல்லாம் நான் நினைக்கிறதே கிடையாது.
என்னால முடிஞ்சதை தருவன் கவனமா போட்டு வா.
ம்ம் தேவைப்பட்டா சொல்லுறன் ஏப்ரல்ல போகலாம் எண்டிருக்கிறன்..
போகேக்க சொல்லு.
மம்ம்...நேரமென்னடி கதைக்கிறது பிரச்சனை இல்லையோ?
சாமத்துல கதைக்கிறது பிரச்சினை இல்லாம? சரி சொல்லு!
நீ ஏன் உப்பிடி எழுதுற காதல் கவிதையெல்லாம் எழுத மாட்டியளோ?
எழுதுறதோ? நான் புலம்புறதை "எழுதுற" எண்டு சொல்லி எழுதுறவங்களை கேவலப்படுத்தாத
அச்ச்சச்சோ... தாங்கேலாதாம்...அடக்கம் இருக்கத்தான் வேணும், அதுக்காக உப்பிடியோ...அவனவன் செய்யுற அலம்பல்களைவிட நீ எழுதுறது நல்லாத்தான் இருக்கு.
thanks thanks.. thanks...
சரி சரி...காதல்,கறுப்பி எண்டு ஒண்டையும் காணேல்லை காதல் கவிதை ஒண்டு சொல்லு பாப்பம்..
ஹாஹஹஹாஹாஹ :))
ஏன்டா சிரிக்கிற...
நீ காதல் கவிதை கேக்குற?
ஏன் நான் காதல் கவிதை கேக்கக்கூடாதெண்டு எழுதியிருக்கோ...
காதல்கவிதையை நினைச்சா எனக்கு இயலாச்சமன்தான் ஞாபகத்துக்கு வருது. :)
ஒரே ஆக்கள்தானே நீங்கள்...உங்களை திருத்தேலாது!
காதல் கவிதைகளெல்லாம் தாண்டி கன நாளாயிட்டுது காதல் கவிதைகளை படிச்சா சிரிப்புத்தான் வருது...அதாலதான் பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகளை அப்பிடியே விட்டுட்டன்.
சரி நீ எழுத வேண்டாம் எனக்கு சொல்லு
ம்ம் காதல்,கவிதை..கவிதையாவே வேணுமோ?
பரவால்ல எப்பிடியெண்டாலும் சொல்லு நீ அடிக்குரல்ல சொல்லுறதே ஒரு மாதிரிதான் இருக்கும்..
என்னத்தையடி சொல்லுறது
ஏதாவது சொல்லு கெதியில குட்நைட் சொல்லுறதுக்கு...நேரம் ஒண்டரை.
சரி நீ என்ன செய்து கொண்டிருக்கிற,என்ன கலர் உடுப்பு போட்டிருக்கிற?
டேய் என்னத்துக்கு கேக்குற
சொல்லடி...
காதல்கவிதையை நினைச்சா எனக்கு இயலாச்சமன்தான் ஞாபகத்துக்கு வருது. :)
ஒரே ஆக்கள்தானே நீங்கள்...உங்களை திருத்தேலாது!
காதல் கவிதைகளெல்லாம் தாண்டி கன நாளாயிட்டுது காதல் கவிதைகளை படிச்சா சிரிப்புத்தான் வருது...அதாலதான் பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகளை அப்பிடியே விட்டுட்டன்.
சரி நீ எழுத வேண்டாம் எனக்கு சொல்லு
ம்ம் காதல்,கவிதை..கவிதையாவே வேணுமோ?
பரவால்ல எப்பிடியெண்டாலும் சொல்லு நீ அடிக்குரல்ல சொல்லுறதே ஒரு மாதிரிதான் இருக்கும்..
என்னத்தையடி சொல்லுறது
ஏதாவது சொல்லு கெதியில குட்நைட் சொல்லுறதுக்கு...நேரம் ஒண்டரை.
சரி நீ என்ன செய்து கொண்டிருக்கிற,என்ன கலர் உடுப்பு போட்டிருக்கிற?
டேய் என்னத்துக்கு கேக்குற
சொல்லடி...
"light purple color blouse and white pijama"
என்ன குடும்பி கட்டியிருக்கிறாயோ, அல்லது..?
உதைவிழும் கவிதையும் வேண்டாம் நீயும் வேண்டாம் போடா..
சொல்லெண்டுறன்... எடுத்தவுடன கவிதை சொல்லுறக்கு நானொண்டும் மெட்டுக்கெழுதுற ஆள் இல்லை.
சரி சரி ரெண்டு "hair clip" மட்டும் போட்டிருக்கிறன் சிக்குப்படாம இருக்க..
ம்ம்ம்....
ம்ம்...
என்ன சொல்ல...
ஹாஆ...கதை சொல்லு!
கதையோ...?
உன்னைக்கேட்டன் பார்!!
ஒரு..பாட்டுப்பாடு.
உனக்கென்னத்துக்கடா இந்த றிஸ்க்கெல்லாம்?
சரி பிடிச்ச பாட்டென்ன?
நீ கவிதை சொல்லெண்டா பாட்டுக்கேக்கிற?
பிடிச்ச பாட்டுத்தான் பச்சைக்கிளி முத்துச்சரம் அதுவும் நீ சொன்ன பாட்டுத்தான் போய்கொண்டிருக்கு இந்தா கேள்...
செம பாட்டு என...?
இதை ஏன் இப்ப போட்டன் எண்டிருக்கு
ஏ..னடி?
தாமரை என்னமாதிரி எழுதியிருக்கிறாள்,பாம்பே ஜெயஸ்ரீ என்ன குரலடா அவளுக்கு...
என்ன இருந்தாலும் பெண்மை காதல் சொல்கிற விதமே தனி! தமிழ் சினிமான்ரை சாபவிமோசனங்கள்ள தாமரையும் ஒராள்.
ம்ம்..
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா...
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திக்கைப் பார்த்திடவா...
சிறுகச் சிறுக..உன்னில்... என்னை
தொலைத்த மொழி சொல்லவா..
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா.
ரணமும் தேன் அல்லவா..
ரணமும் தேன் அல்லவா...
ம்ம்...
என்னடா...
ம்ம்...
நான் கட் பண்ணுறன் ok...
கொஞ்சம் பொறடி..!
ம்ம்...
.....
சொல்லு...
ம்ம்....
சட்டென்று வருகிற மழையைப்போல
எந்த விதமான ஆயத்தங்களுமில்லாமல்
இயல்பாய் எதிர்ப்படுகிறாய் நீ
ஒதுங்க இடமில்லாத நெடுஞ்சாலையில்
தனியே அகப்பட்டவனைப்போல
திணறிப்போகிறேன் நான்.
அட! முந்தின கவிதைகள் போல இருக்கு,நல்ல சிம்பிளா..பண்டிதத்தனம் இல்லாம.
அப்ப இப்ப பண்டிதர் மாதிரி எழுதறனோ..
அப்பிடியெண்டில்லை சிலபேர் வேணுமெண்டே திணிக்கிறது வித்தியாசமான சொல்லுகளை..அது ஒட்டுறதே இல்லை..அதான்.
அதான் நானிப்ப புளொக் பக்கமே போறல்லை.
அதுவும் நல்லதுக்குத்தான் ஹா..ஹா..ஹ. ;)
போடி குண்டம்மா!
சரி இன்னொண்டிருக்கு கேக்கிறியோ.. ;)
சொல்லு...
மெல்லிய ஊதா நிற மேலாடையில்
வாசல்களே இல்லை என்றாள்
திறக்க முடியாத மேலாடையின் உள்ளே மிகுந்திருந்து
எனக்கான அவளது ரகசியங்களும் பிரியங்களும்.
உதை விழும் நாயே...!
கவிதை சொல்லெண்டா நக்கல் என உனக்கு..
சரி சரி முடிஞ்சா குட் நைட் சொல்லிட்டு படு...
ஏன் பின்ன உங்களோட உருகி வழிவம் எண்டு நினைச்சியளோ?!
நீங்கள் உருகோணும் எண்டெல்லாம் நாங்கள் கவிதை சொல்லுறேல்லை...சரியோ!!!
சரி சரி கோவிக்காதை...நான் நாளைக்கு எடுக்கிறன்..இப்ப குட்நைட்.
ஓ.கே குட்நைட்.
17 comments:
first?? :))
முதல் கவிதை கொள்ளை அழகு....
ஆனா உரையாடல் எல்லாம் தோழி என்று சொல்லி அதிகமா கடலை வருத்த மாதிரி இருக்குது :)
//படம் பாத்த அண்டைக்கு குடிக்கோணும் போலயே இருந்திச்சு.//
இப்பிடியான படம் பாத்தா குடிக்கோணும் போல இருக்குமோ !
//நீங்கள் உருகோணும் எண்டெல்லாம் நாங்கள் கவிதை சொல்லுறேல்லை...சரியோ!!!//
அது சரி...சரியோ பிழையோ மனசில பட்டதைச் சொல்லிப்போடவேணும் கறுப்பி.
அடுத்தவைக்காக வாழ ஏலாது.
எங்களுக்காகத்தான் எங்கட வாழ்க்கை.
//என்னடா பிறழ்வு கிறழ்வெண்டு விளங்காத மாதிரி எழுதியிருக்கிறாய்..
நானே விளங்காமத்தான் இருக்கிறன் அதான் உப்பிடி.. :)///
அதான் என்கிட்ட கூப்பிட்டு கொடுத்தீயா ராசா!
நல்லா இருங்கடே!!!!
//wanna get a break.//
அப்டின்னா?
//சட்டென்று வருகிற மழையைப்போல
எந்த விதமான ஆயத்தங்களுமில்லாமல்
இயல்பாய் எதிர்ப்படுகிறாய் நீ
ஒதுங்க இடமில்லாத நெடுஞ்சாலையில்
தனியே அகப்பட்டவனைப்போல
திணறிப்போகிறேன் நான்.//
கவிதை மிக அருமை ரசித்தேன்!
எனக்கும் லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சு !
முதல் கவிதை அழகு :))
இரண்டு கவிதைகளும் செம. :)
"சட்டென்று வருகிற மழையைப்போல
எந்த விதமான ஆயத்தங்களுமில்லாமல்
இயல்பாய் எதிர்ப்படுகிறாய் நீ
ஒதுங்க இடமில்லாத நெடுஞ்சாலையில்
தனியே அகப்பட்டவனைப்போல
திணறிப்போகிறேன் நான்."
நல்லாயிருக்கு....
வலி,நிஜம், பிரியம்,ஆற்றாமை,தூரதேசம்,வன்கொடுமை,கால சுழல்,பிணி,தூக்க கலக்கம்,பால்யம்,சிநேகம்,மண்வாசனைப்பிரிவு,மழையின்மை,மழை தேவை,எல்லாவற்றுக்கும் ஆதுரமான தனிமை...
குரல்தான் துணை.குரலே சாஸ்வதம்!
மிக நெகிழ்ந்த ப்ரியம் இது தமிழன் கறுப்பி!
வலி,நிஜம், பிரியம்,ஆற்றாமை
,தூரதேசம்,வன்கொடுமை,கால சுழல்,
பிணி,தூக்க கலக்கம்,பால்யம்,சிநேகம்,
மண்வாசனைப்பிரிவு,மழையின்மை,மழை தேவை,
எல்லாவற்றுக்கும் ஆதுரமான தனிமை...
குரல்தான் துணை.குரலே சாஸ்வதம்!
மிக நெகிழ்ந்த ப்ரியம் இது தமிழன் கறுப்பி!
(கொஞ்சம் பிரிஞ்சு போச்சு பின்னூட்டம்...
அதனால் இதுவும்)
Nice Post
The Lyricist of this song is Rohini!
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி
வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்த பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
அ ஆ.. வால் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
தேனிலவு நான் வாட- ஏன் இந்த சோதனை
வானிலவை நீ கேளு- கூறும் என் வேதனை
எனைத்தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி
சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் தோன்றும் நீ என் மார்பில் தூங்கினால்
வாரங்களும் மாதம் ஆகும் நானும் நீயும் நீங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும் பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ நீ எனைத் தேடினால்
காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக்கூடும்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி
//
ஆமா திவ்யப்பிரியா நீங்கதான் முதல்.. :)
அதுதான் புனைவின் சாத்தியக்கூறு எழுதியிருக்கிறேனே.
//
சில படங்கள் அப்படித்தான் ஹேமா,
எங்கழுக்காகத்தானே வாழ்க்கை.
//
ஆயில்யன்..அண்ணே நீங்க ரொம்ப நல்லவர் அண்ணே.
:)
//அப்படியா...ராஜன்?
//நன்றி ஸ்ரீமதி.
//வாங்க msk நன்றி.
//நன்றி பருத்தியன்.
//நன்றி ராஜாராம், பல வருசமா இந்த குரல்களும் சொற்கழும்தான்(வாசிக்கிறவையும்) இயங்கப்பண்ணுகிறது.
//தகவலுக்க நன்றி அனானி
//திருமறை இந்தப்பாடலை ஏன் இங்கே எழுதியிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை, அனால் எனக்கு நெருக்கமான பாடல்களில் ஒன்று, நன்றி.
கவிதை மிகவும் அருமையான அழகு....
http://niroodai.blogspot.com
கவிதை மிக அருமை ரசித்தேன்!
Post a Comment