என்ன கேட்டாலும் சலிக்காமல் செய்து கொடுக்கிற அன்பானவர். அட பாவிகளா நாந்தானா கிடைச்சேன் என்று கேட்டாலும் என் அறுவைகளுக்கெல்லாம் கழுத்தைக்கொடுத்து விட்டு சிரித்தபடி இருக்கிற தல தமிழ்பிரியன் மூலமாக கிடைத்திருந்தது ஒரு சந்தர்ப்பம். ஆனால் அதை எப்படி பயன் படுத்துவதென்று தெரியவில்லை அனேகமாய் எனக்கு தெரிந்த அனைவரும் ஏதோ ஒரு வரிடமிருந்து இந்து பகிர்வை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு புதிதாய் யாரையும் தெரியவில்லை நேரமில்லாததும் என் அடிப்படை இயல்புகளில் ஒன்றான மிகு சோம்பலையும் தவிர்க்க முடியாததில் அதிகம் படிக்கவும் முடிவதில்லை இணையத்தில், அதனால் பல பதிவர்களை தவற விட்டுக்கொண்டிருக்கிறேன்.
பழையவர்களை திரும்ப எழுத அழைப்பதற்காகத்தான் இந்த சந்தர்ப்பத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன் யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத படிக்கு நேரம் சதி செய்திருக்கிறது ஆனால் மனதுக்குள் நிறையப்பேரை நினைத்திருந்தேன்.இதில் முக்கியமான ஒரு பதிவர் அண்ணன் செந்தழல்ரவிதான்.
இது மட்டுமல்ல இளமைக்காலங்கள் என்று ஒரு தொடர் பதிவுக்கும் என்னை அழைத்திருந்தார் அந்த பதிவையும் எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேனேயொழிய எழுதவில்லை( இதை தானேய்யா மூணு மாதமா சொல்லுற). இதை ஒரு சில குறிப்புகள், புகைப்படங்களோடு தரலாம் என நினைத்திருக்கிறேன் ஆனால் புகைப்படங்களும் உறுதியான தகவல்களும் எனக்கின்னும் கிடைக்கவில்லை அவ்வளவுதான் இதுக்கான காரணம்.
முடிந்தவரை ஞானசம்பந்தர் கலைமன்றம் பற்றி முழுமையான ஆவணமாக அதனை எழுத நினைத்திருக்கிறேன் அதனால இந்த இளைமைக்காலங்கள் தொடர் பதிவை எழுதுறதுக்கு எனக்கு பதிலாக நிஜமா நல்லவைனை மேடைக்கு அழைக்கிறேன், அண்ணன் கொசுவத்தி சுத்துறதுல நெம்ப திறமையான ஆள் என்பது அவரது பதிவுகளை படிச்ச ஆக்களுக்கு தெரியும் அழகா feel பண்ணி எழுதுவார்.
பணி நிமித்தம் வேறு இடத்துக்கு மாற்றலாக வேண்டிய காரணம் இருப்பதால் இன்றொடு இணையத்தொடர்புகள் சில நாட்களுக்கு இருக்காதென்று உங்களுக்கெல்லாம் நல்ல செய்தி சொல்லி இருக்கும் தமிழ்பிரியன் படிக்க வேண்டும் என்பதற்காகவே அவசரமாய் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
*நேற்றெழுதிய பதிவு,ஆனா சோகம் என்னன்னா அதை இப்பொழுதுதான் பதிவாக்க முடிந்திருக்கிறது.
சவுதி வாழ்க்கையில் எனக்கிருக்கிற ஒரே வரவு இணையம்தான். இணையம் மூலம்தான் வேறொரு உலகம் எனக்கு கிடைத்திருக்கிறது.முன்னர் இருந்த நிலையிலிருந்து வெகுவாக மாறியிருக்கிறேன் இது பற்றி பின்னர்.ஏற்கனவே இருக்கனிற ஜமாலன்,முபாரக்(இவர்கள் இருவரும் இங்கே இருப்பது எனக்கு கிடைத்த சந்தர்ப்பம், அவர்களுக்கு அமைந்த கொடுமை)மற்றும் gulftamilan ஆகியோரோடு ரௌத்ரனும் அருகே வந்து சேர்ந்திருக்கிறார். இவருக்கு என்னை விட வயது அதிகமிருக்குமென்று நினைத்தேன் பெயர்தான் ரௌத்ரனே ஒழிய மென்மையாய் பெண்களுக்கு மிகப்பிடிக்கிற தோற்றத்தில் கலரும் மீசையுமாய் கலக்கலாய் இருக்கிறார்.
)
Gulftamilan -
பழைய காலம் முதலான வலைப்பூ வாசகர் பல பதிவர்களுக்கு மறந்து போன அவர்கள் பதிவுகளை கூட நினைவில் வைத்திருக்கிற ஒருவர்.
விதண்டாவாதம்:
இவனுக்கெல்லாம் ஒரு பதிவர்ங்கிற அங்கீகாரத்தை கொடுத்தா பதிவே எழுதாம பதிவு போடுறான் பாருய்யா என்று நிறைய குத்துகள் வரும் என்ன செய்வது மக்கள் நேரமின்மை சதி செய்து விட்டது.(எழுத தெரியவில்லை என்பதை வேறெப்படி சொல்ல)
*விருது கொடுத்த அண்ணனுக்கு நன்றிகள்.
8 comments:
நிஜமா நல்லவைனை மேடைக்கு அழைக்கிறேன் அண்ணன் கொசுவத்தி சுத்துறதுல நெம்ப திறமையான ஆள் என்பது அவரது பதிவுகளை படிச்ச ஆக்களுக்கு தெரியும் அழகா feel பண்ணி எழுதுவார்.]]
ஹா ஹா ஹா
-----------------
விருதுக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துகள் தமிழ், பதிவை மிகவும் ரசித்தேன்.
வாழ்த்துகள் தமிழன்..
தம்பி! பதிவைப் படிச்சிட்டேன்.
தமிழன்,கீற்றாகச் சோகம் இழையோடினாலும் சந்தோஷமான விருது.வாழ்த்துக்கள்.இன்னும் எழுதவேணும் நீங்க.
/
பணி நிமித்தம் வேறு இடத்துக்கு மாற்றலாக வேண்டிய காரணம் இருப்பதால் இன்றொடு இணையத்தொடர்புகள் சில நாட்களுக்கு இருக்காதென்று
/
துபாயா? சார்ஜாவா? அபுதாபியா? (வடிவேலு ஸ்டைல்ல படிச்சிக்கப்பா)
வாழ்த்துகள் தம்பி.
பின்னூட்டங்களுக்கு
நன்றி நண்பர்களே.
Post a Comment