Saturday, June 6, 2009
பூனைகளுக்கு இல்லாத நிர்பந்தம்...
மின்சாரம் தடைப்பட்ட இரவுப்பொழுதில்
உன்னுடைய நினைவுகள் வருவதற்கு,
ஞாயிற்றுக்கிழமையின் மத்தியானமொன்றில் பெருக்கெடுத்த
வியவர்வையோடு முயங்கிய பொழுதுகள் காரணமாயிருக்கலாம்,
கதவுக்கு வெளியில் ஆயத்தமாகிற பூனைகளை சபிப்பதில்
என்ன நியாயம் இருக்கமுடியும் சொல்
சொல்லிக்கொண்டு பிரிந்து போனபிறகு,
வேகமாய் இயங்கிய சாம்பல் நிறப்பூனை புதியதாய் இருந்தது
இந்த சிகரெட் முடியும்வரை பூனைகள் இயங்கக்கூடும்,
அடுத்த கோடைக்கு இந்தப்பூனைகள் எங்கேயிருக்கக்கூடும்,
பூனைகள் இயங்குதலை நிறுத்தி நீளமாய் சப்பதமிட்டன...
இவள் எழுந்து வெளியே வருவதற்குள் போய்விடவேண்டும்
நான் அறிந்து கொள்ள விரும்பாவிட்டாலும்
அவளுக்கும் பூனைகளை தெரிந்திருக்கலாம்,
கோடையின் கசகசப்புகள்...
வெறுமனே வெளிப்புழுக்கம் மட்டுமல்ல.
picture:gattinapaintings
Labels:
பூனைகள்...
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
கோடையின் கசகசப்புகள்...
வெறுமனே வெளிப்புழுக்கம் மட்டுமல்ல.
உண்மை தாங்க
கோடைகாலங்களில் தான் மனச்சோர்வு
மனபிறழ்தல் எல்லாம் அதிகமாகுதாம்
//கதவுக்கு வெளியில் ஆயத்தமாகிற பூனைகளை சபிப்பதில்
என்ன நியாயம் இருக்கமுடியும் சொல்
சொல்லிக்கொண்டு பிரிந்து போனபிறகு,//
:-))
நல்லா இருக்கு மாப்பி!
நன்று..
அருமையான கவிதை நண்பா !
அருமையான கவிதை நண்பா !
அருமையான கவிதை நண்பா !
நான் அறிந்து கொள்ள விரும்பாவிட்டாலும்
//அடுத்த கோடைக்கு இந்தப்பூனைகள் எங்கேயிருக்கக்கூடும்//
:((
@நன்றி J
@சென்ஷி
நன்றி மாப்பி..
@அய்யனார்
வாங்கோ அய்யனார் சந்தோசமாயிருக்கு..
@ரிஷான்
நன்றி ரிஷான்..அதென்ன முணுதரம்எழுதியிருக்கிறிங்க..
@kavi kilavan
நன்றி கவிகிழவன்
இப்படி எழுதினால் நல்லா இருக்கும் நன்றி..
@ ஆயில்யன்
பூனையைப்பற்றிதான்யா கவலைப்டுறிங்க நன்றி
நல்லா இருக்குங்க:)
கதவுக்கு வெளியில் ஆயத்தமாகிற பூனைகளை சபிப்பதில்
என்ன நியாயம் இருக்கமுடியும் சொல்
சொல்லிக்கொண்டு பிரிந்து போனபிறகு
//
அருமை..
வெற்றிகரமான 50 ஆவது ஃபாலோயர்.
/
எம்.ரிஷான் ஷெரீப் said...
அருமையான கவிதை நண்பா !
/
ஓ கவிதையா அப்ப ரைட்டு நமக்கு இங்கன வேலை இல்லை!
:)))
\\
நல்லா இருக்குங்க:)
அருமை..
\\
நன்றி பூர்ணிமா...
மங்களூர் சிவா said...
வெற்றிகரமான 50 ஆவது ஃபாலோயர்.
\\
:))
வாங்க மாம்ஸ் பாத்திங்களா நீங்கதான் வரணும்னு இருந்திருக்கு ரொம்ப நாளைக்கப்புறம் சந்தோசமா பதிவு அப்புறம் அங்கங்க கும்மின்னு...
நன்றி மாம்ஸ் !
Post a Comment