ஒரு பேனை அதன்மூடியை காணவில்லை,
சிகரெட்டுகளின் பெட்டி அதைப்பற்றவைக்கிற சாதனம்,
தலைமாட்டில் இருக்கிற புத்தகங்கள்,
வரிசை மாறியிருக்கிற சிறுகதையொன்றின் பிரதிகள்,
எழுதி குறையிலிருக்கிற கடிதத்தின் தாள்கள்,
கழுவ வேண்டிய நிலையில் எப்பொழுதும் இருக்கிற தலையணை உறையில்
எழுதியிருப்பது இல்லாத அவளுடைய பெயராய் இருக்கலாம்,
கிறுக்கல்களோடு இருக்கிற படுக்கை விரிப்பு
கலைந்து கிடக்கிற போர்வை,
கழற்றிப்போட்ட இரவு உடை,
மூட்டைப்பூச்சிகள் குடியிருக்கிற மெத்தையின் இடுக்குகள்,
மெத்தைக்கடியில் பரவியிருக்கிற...
கோபிகிருஷ்ணன் பேட்டி,
டிசேயின் பின்நவீனம்,
அய்யனாரின் உரையாடிலினி,
எஸ்ராவின் துயர்மிகு பொழுது,
ஷேபாசக்கதியன் தமிழ்,
ஓஷோ சில குறிப்புகள்,
தமிழ்நதியின் அழைத்துக்கொண்டிருக்கிறது வெளி,
அகிலனின் வீடெனப்படுவது யாதெனில்,
எழுதியவர் பெயர் மறந்து போன
ஈழத்தமிழர்களும் இலக்கியப்புடுங்கிகளும்,
அனுப்பப்படாத சில கடிதங்கள்...
கனவில் வருகிற பூனைகள்,
நடு இரவில் அழைக்கிற அரேபியப்பெண்கள்,
படுத்ததும் உறங்கிவிடுகிற நெருக்கம்,
பழக்கப்பட்ட வாசனை என...
ஐந்து பேர் கொண்ட அறைக்குள் இருக்கிற
ஆறாவது உலகம் அது எனக்கானது.
18 comments:
கொப்புரான நல்லாருக்கு...!
ம்ம் நிறைய எழுதுங்க!
நன்றி கலையரசன்...
/ஐந்து பேர் கொண்ட அறைக்குள் இருக்கிற
ஆறாவது உலகம் அது எனக்கானது.//
தனியா பாராட்டறதுக்கு சிரமமா இருக்குதுடா.. அசத்துற!!!
ம்........... நல்லா இருக்கு மச்சான். இன்னும் நிறைய எழுது. இப்ப எழுதுவதை குறைச்சிட்டாய் போல
தம்பி கலக்குற.. எப்படிய்யா இம்புட்டு மூட்டைப் பூச்சிகளோட தூங்கற?/
சரி சரி அந்த நடு இராத்திரி போன்கால்களை இங்க டைவர்ட் பண்ணி விடு.. ;-))
//படுத்ததும் உறங்கிவிடுகிற நெருக்கம்,
பழக்கப்பட்ட வாசனை என...
ஐந்து பேர் கொண்ட அறைக்குள் இருக்கிற
ஆறாவது உலகம் அது எனக்கானது.///
பழக்கப்பட்ட வாசனை
பழக்கப்பட்ட தோழர்கள்
பழக்கப்பட்ட சப்தங்களுக்குள்
அடங்கித்தான் கிடக்கிறது ! உறவுகளை பிரித்த இந்த #%$ வாழ்க்கை :((
அட்டகாசம் தமிழன்.. வெகு அட்டகாசம்.. மிக சிறப்பாய் இருக்கிறது..
வார்த்தைகளினை நன்றாகவே வசப்படுத்துகின்றீகள்!
சொந்த ஊரை விட்டுப் பிரிகின்ற எல்லோருக்கும் நீங்கள் கூறும் ஆறாம் உலகந்தான் எப்போதும் நெருக்கமாகவும் துணையாகவும் இருக்கும் அல்லவா?
தொடர்ந்து எழுத என் அன்பும் வாழ்த்தும்.
நல்லா வந்துருக்கு... வாழ்த்துக்கள்.
ரசித்தேன். வாழ்த்துக்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
@ சென்ஷி...
நன்றி மாப்பி :)
@பனையூரான்
நன்றி, அதற்கான மனோநிலை இல்லாமல் இருந்தது,
@தமிழ் பிரியன்
பழகிடுச்சு தல..
அதுக்கென்ன பண்ணிட்டா போச்சு ;)
@ஆயில்யன்
ஆமாண்ணே...
@MSK
நன்றி, என்ன ஆளையே காணோம்?
@கவின்
நன்றி கவின்
@DJ
வாங்கோ அண்ணன், ம்ம்ம்.. அதுதான் நெருக்கமான துணையாயிருக்கிறது. மற்றபடி பாடல்கள், புத்தகங்கள்....
நன்றி அன்புக்கும் வாழ்த்துக்கும்.
@மாதவராஜ்
நன்றி அண்ணன்...
@அகநாழிகை
நன்றி அண்ணன்...
நமக்கு மட்டுமே சொந்தமான அக உலகை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்..(உங்க பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... )
ரொம்ப நல்லா இருக்கு தமிழன்.
அழகான ஆறாவது உலகம்!
மாப்பி எதோ கஸ்டப்பட்டு எளுதியிருக்க இதில கும்மியடிக்க வேணாம்னு தோணுது ஆனாலும் முடியலடே
/
நடு இரவில் அழைக்கிற அரேபியப்பெண்கள்,
படுத்ததும் உறங்கிவிடுகிற நெருக்கம்,
/
வந்தவொடனேயே தூங்கீருவாளுகளோ???
@ ஆமா தமிழ் பறவை
ரொம்ப நாளாச்சு நன்றி.
@ நன்றி யாத்ரா..
@ நன்றி அருணா..
@ வாங்க சிவா மாம்ஸ் நன்றி..
டோன்ட் வொர்ரி எப்பவுமே கும்மி எலவுட்தான்.. :))
Post a Comment