Friday, June 12, 2009

32 பதில்கள்- எனக்கு பதில் சொல்லத்தெரியாது!



எழுத மறந்த குறிப்பு:
உண்மையில் எனக்கு பதில் சொல்லத்தெரியாது,எனக்குள்ளே இருக்கிற கேள்விகள் போதாதென்று 32 கேள்விகைள அனுப்பி என்னையும் இந்த கேள்விக்கடலில் தத்தளிக்கவைத்த தல தமிழ்பிரியனுக்கு நன்றிகள்.



01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
புனை பெயர் என்பதையும் தாண்டி சின்ன வயதிலிருந்து நெடுநாட்களாய் என்னோடு இருக்கிற பெயர்தான் தமிழ், எனக்குள் இருக்கிற இன்னொரு பரிமாணத்தை அதனோடு சேர்த்திருக்கிறேன் தமிழுக்கும் கறுப்பிக்கும் நெருக்கமான தொடர்பிருக்கிறது.எனக்கு பிடித்தமான பெயர்தான்.

தேவதைகள் கறுப்பு நிறத்தில்தான் இருப்பார்கள் அல்லது நீல நிறத்தில் இருக்கலாம் வெள்ளை நிறத்தில் ஆடைகள்தான் அணிந்திருப்பார்கள்.

கறுப்பி - என்னை ஆக்கிரமித்திருக்கிற தேவதை அல்லது மிக நெருக்கமானதொரு புனைவு இணயத்தில் ஏற்கனவே இன்னொரு கறுப்பி இருப்பதில் தமிழன் என்ற பெயரில் உள்ளே நுழைந்து கொண்டேன் எனக்கு பிடித்த அல்லது எனக்குள் இருக்கிற பெண்மைய(கறுப்பியை) இப்பொழுது பிரகடனப்படுத்தியிருக்கிறேன் நீங்கள் என்னை கறுப்பி என்றே அழைக்கலாம்.


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அழுதது என்று எதைக்கேட்கிறீர்கள் மனம் விட்டு சத்தமாகவா? அல்லது எனையறியாது கண்களில் ஈரம்துளிர்த்து விழுவதையா? வாய்விட்டு அழுததென்றால் சில மாதங்களுக்கு முன்பொரு மிதமான போதையின் இரவில்.

மற்றயது என்றால் அது கடந்த புதன்கிழமை நிகழ்ந்த ஒரு வாசிப்பனுபவம்.அதே புதன்கிழமை இந்த எழுத்தாளரைப்பற்றி சுபவீர பாண்டியன் கூட ஒன்றேசொல் நன்றே சொல் நிகழ்ச்சியில் சொல்லியிருப்பார் அது த.அகிலனைப்பற்றியது! இதைப்பற்றி பின்னர் எழுதுகிறேன்..

அகிலனின் மரணத்தின் வாசனை புத்தகத்தை மூன்றாவுது முறையாக இன்னுமொரு சென்னைவாசியிடம் சொல்லியனுப்பியிருக்கிறேன் இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

அம்மப்பாவின் கையெழுத்தைப்போலிருக்கிற என்னுடைய கையெழுத்து எனக்கு பிடிக்கும் ஆனால் இப்பொழுது பேனை பிடித்து தமிழில் எழுதுகிற சந்தர்ப்பங்கள் குறைவென்பதால் பழைய வடிவத்தை பெறுவது சிரமமானதாகத்தான் இருக்கிறது.

ஆங்கிலம் எழுதத்தெரிந்தால்தானே பிடிக்கும் பிடிக்காதென்பதெல்லாம். :)


4).பிடித்த மதிய உணவு என்ன?

பலது இருக்கு..
மீன் குழம்பும், நெத்தலிப்பொரியலும் கூடவே றால் பொரியலோடும கொஞ்சம் தடிப்பா வச்ச சொதியும் வெள்ளை அல்லது சம்பா அரிசி சோறும் இருந்தால் போதும் ஒரு பிடி பிடிச்சுட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிடலாம்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நான் வேறுயாரேனுமாக இருந்து இப்பொழுது இருக்கிற என்னோடு நட்புவைத்துக் கொள்வேனா என்கிற கருத்துப்படத்தான் இந்தக்கேள்வி ஆரம்பத்தில் இருந்திருக்கிறது ஆக; நிச்சயமாய் எனக்கு என்னை விட்டால் வேறு யார் நல்ல நட்பாக இருக்க முடியும் சொல்லுங்க.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அனுபவிக்க என்றால் கடலோடு கொஞ்சம் பயம் இருக்கிறது அருவியில் குளித்த அனுபவம் அவ்வளவாக இல்லை மழை நிறையப்பிடிக்கும்.குளிப்பதற்கு என்றால் எனக்கு நெருக்கமான குளியலைறதான்; இங்கே நான் பாடுவேன்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அப்படியெல்லாம் கவனிக்கிற ஆள் கிடையாது, முதலில் பார்க்கும் பொழுது தோற்றம்தான் கண்ணுக்கு தெரிந்தாலும் அவர் எப்படி பேசுகிறார் என்பதைத்தான் நான் கவனிப்பதாக இப்பொழுது தோன்றுகிறது.பெண்களாக இருந்தால் பாதங்களை அழுத்தமாக பார்த்து பின்னர் கண்களை ஊடறுப்பேன்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

முதல் பகுதிக்கு- நானொரு போலி என்கிற தெளிவு எனக்கிருக்கு இருப்பது
இரண்டாம் பகுதிக்கு- பதில் சொல்லத்தெரியவில்லை அலட்சியமான வாழ்க்கை,கனவுகள்,பலவீனங்கள், தேவைகள்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

என்ன கேள்வி இது?
அவளை எனக்கு முழுவதுமாகப்பிடிக்கும் - என்ன செய்தாலும் அவளோடு வாழ்வது பிடித்திருக்கிறது.நிர்ப்பந்தங்களுக்காக அவள் போடுகிற நாடகத்தனம் பிடிக்காதது.

குறிப்பு: எனக்கு இன்னமும் கல்யாணமாகவில்லை.


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

இப்போதைக்கு - புரிதல்கள் நிரம்பிய கறுப்பு நிற தேவதை ஒருத்தி.
புரிதல்களும் சமாதானமும்- ஊரில் இல்லாமல் போனதற்காக.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

இது கேள்வி என்கிறீர்களா..?கறுப்பு நிற நீளக்காற்சட்டையும் மஞ்சள் நீல நிற கோடுகளோடான நீளக்கை சட்டையும் அலுவலகத்தில் இருக்கிறேன்.
கொலைவெறி- ஆடைகள் இல்லாமல் உலகின் அதிசிறந்த மதுரசத்தை (வைன்) பருகிக்கொண்டு ஒரு புனைவெழுதவேண்டும் என்பது கனவில் வந்த பூனைகள் கொடுத்த பல நாள் ஆசை.


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

உனக்குள் நானே உருகும் இரவில் - வேறெங்கோ அழைத்துப்போகிற தன்மை கொண்டது இந்தப்பாடல்.இன்றைக்கு இந்தப்பாடல்தான் ஏழாவது முறையாக கேட்டும் பார்த்தும் கொண்டிருக்கிறேன்.(ஜோதிகா இன்னும் கொஞ்ச நாள் நடித்திருக்கலாம் )




சமீபத்தில் ஒலிக்க விட்ட பாடல்கள் என்றால்

அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
மூக்குத்திப்பூமேலே காத்து
பனித்துளி பனித்தளி பனித்துளி
மேற்கே மேற்கே மேற்கேதான்
சின்னப்பொண்ணு சேலை
பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
எங்கெங்கே எங்கெங்கே
மானம் ஒன்றே வாழ்வெனக்கூறி - ஈழத்து எழுச்சி கீதம்
இன்னும் சில இடைக்காலப்பாடல்கள்!


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

இதெல்லாம் கேள்வி- பல நேரங்களில் எது பிடித்த நிறம் என்று முடிவெடுக்கமுடியாமலிருக்கும்.பொதுவாக கறுப்பு,கறுப்பு-வெள்ளை,மனதை கொள்ளை கொள்கிற விசயங்களில் இருக்கிற எந்த நிறமென்றாலும்.கறுப்பு நிறத்தில் எழுதுகிற பேனைகளைத்தான் விரும்பி உபயோகித்திருக்கிறேன்.

14.பிடித்த மணம்?

நிறைய இருக்கிறது- தனி பதிவாக எழுத முயற்சிக்கிறேன்.இப்பொழுது குறிப்புகளாக.

அம்மாவின் வாசனை.
கடவுள் இருக்கிறாரோ இல்லையோ கோவிலில் வருகிற வாசனை
புதுப்புடைவை
அவள் - அவளது- அவளுடைய அருகாமை.
புது,பழைய புத்தகத்தின் வாசனை.
சில பூக்கள்-
தேவதைகள் சூடிய பூக்களும், பூக்கள் சூடிய கூந்தலும்.
என்னுடைய படுக்கையில் இருப்பது(எனக்கிது வாசனைதான்)
அவளுடைய அறை
என்னுடைய வீடு, ஊர்- இது ஊரைப்பிரிந்திருப்பதற்காக மட்டுமல்ல.
பனங்காய் பணியாரம் சுடுகிற வாசனை.
வைன்.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
நான் அழைக்க விரும்பியருக்கிற இவருக்கு இந்த கேள்விகள் சினத்தை வரவழைக்ககூடும் என்றாலும் அவரை அழைக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் தொந்தரவுக்கு மன்னிப்பாராக.முடிவற்ற அன்பின் தேடல் எழுதுகிற முபாரக் அண்னதான். இவருடைய கவிதைகளை வாசித்துப்பாருங்கள்.

அடுத்தது தமிழ்நதி ஏற்கனவே அழைத்திருக்கிற அய்யனார்தான் - இவரை மறுபடியும் அழைக்கிறேன் கிறங்கடிக்கிற எழுத்துக்கு சொந்தக்காரன். மகன் பிறந்திருக்கிற சந்தோசத்தில் இருக்கிற இவரிடம் இருந்து கட்டுடைக்கிற பதில்களை எதிர்பார்க்கலாம்.வாழ்த்துக்கள் அய்யானர் மற்றும் குடும்பத்தினருக்கு.

அடுத்தது நிறைய வாசிக்கிற அருண்மொழிவர்மன் நானும் கனடாக்கு வரலாமெண்டு இருக்கிறன் அண்ணன். இவருடைய நினைவுப்பகிர்வுகளும் சில எதிர்வினைகளும் முன்வைத்தல்களும் கவர்கிறது.நல்ல கவனித்தல் இருக்கிற இவர் வீச்சுள்ள எழுத்துகளில் முன்னேறிக்கொண்டிருப்வர்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
சிறுகதை மற்றும் புகழ் பெற்ற மொக்கைகள்- இவர் பதிவுகளை விட இவரைப்பிடிக்கும் ('தல'க்கு மெல்லிய மனசென்று அவரே சொல்லுகிற இவரது தாடிக்குள் இருப்பது மெய்யாலுமே குழந்தை மனசுதான் நம்பிடுங்க :)


17. பிடித்த விளையாட்டு?
ஊரில் அதிகம் விளையாடியது கிரிக்கெட்தான் என்றாலும் வொலிபோல்தான் பிடித்த விளையாட்டு
நெட்போல் - இது அவளுக்காக.
Tennis, foot ball (பார்ப்பதற்கு)
பேணிப்பந்து - ஒரு காலத்தில் கலக்கினோம்.

18.கண்ணாடி அணிபவரா?
போற போக்கைப்பார்த்தல் கெதியில போடவேண்டி வரும்போலகிடக்கு...

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
எனக்கிருக்கிற மனோ நிலையைப்பொறுத்து அமையும் நான் பார்க்கிற திரைப்படங்கள். பெரும்பாலும் உண்மைத்தன்மைக்கு நெருக்கமாக உணர்வோடு எடுக்கப்பட்ட படங்கள்.

*எந்த மனோ நிலையிலும் விஜயகாந்து படம் பார்க்கப்பிடிப்பதில்லை நரசிம்மா என்கிற ஒன்றை பார்த்தபிறகு.

20.கடைசியாகப் பார்த்த படம்?

Perfume- The story of a murderer.
படம் கலைவடிவம்- பழக்காரியின் மார்புக்குள் பதுங்கிக்கொண்டது அந்த இரவு.
கேட்டுக்கொண்டதை ஏற்று மறக்காமல் வாங்கி வந்து கொடுத்த போல்(paul) என்கிற இங்கிலாந்து நண்பருக்கு நன்றி.


21.பிடித்த பருவ காலம் எது?
கோடையும் கோடைகாலத்து அடைமழை நாட்களும், வெளியே செய்வதற்கு எந்த வேலையுமில்லாதிருந்தால் மழைகாலமும். வசப்படுகிற தருணங்கள் இருந்தால் எந்தக்காலமும் பிடித்துப்போய்விடலாம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

இணையக்கோப்பாக - கொரில்லா மற்றுமொரு முறையாக படிக்கிறேன்.

புத்தகமாக -

தெற்கு பார்த்த வீடு - ஜி.சரவணன் சிறுகதைத்தொகுப்பு.

உலகமயமாக்கலும் மார்க்சியமும்-
கோச்சடையும் க.செ பாலசுப்பிரமணியனும் தொகுத்த கட்டுரைத்தொகுப்பு.(சின்ன புத்தகம்தான் ஆனா ரொம்ப நோகடிக்கிறாங்க படித்து முடிக்காமல் விடுவதில்லை)

நன்றி-எழுத்தாளர் ஜமாலன் புத்தகங்கள் பகிர்தலுக்கு.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இதெல்லாம் ஒரு கேள்வி வேறை வேலை இல்லையாப்பா உங்களுக்கு!! ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்பேன் என்றாவது கேட்டிருக்கலாம்.
நாள் கணக்கெல்லாம் கிடையாது அனால் தோன்றும் பொழுது மாற்றுவேன்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்- எதை சொல்ல எதை தவிர்க்க
கொலுச்சத்தம், பெண்களின்சிணுங்ககல்கள் , ரகசியக்குரல்களும் பின்னிரவு கிசுகிசுப்புகளும், நரம்புகளை அதிரவைக்கிற பறை,இரவின் நிசப்தம்(இதுவும் ஒரு வகை சத்தம்தான் இரவுகளில்) இங்கே சொல்ல விரும்பாத சிலவை,இன்னும் இருக்கிறது.

பிடிக்காதது - தரையில் கிரீச்சிடுகிற ஓசைகள் இயந்திரங்களின் இரைச்சல்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சவுதி அரேபியா

26.உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

தெரியவில்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

புரிதல் இல்லாத மற்றவர்களை மட்டுமே பார்க்கிற சமுதாயம்.இந்தக்கேள்வியும் அதற்கு பதில் சொல்கிற நானும்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சட்டென்று உணர்ச்சி வசப்படுகிற மனது, கட்டுக்கடங்காத உடல், கோபம் இது பெரும்பாலும் நெருக்கமானவர்களிடமே வெளிப்படுகிறது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

என்னுடைய ஊர்(யாழ்ப்பாணம்),அவளுடைய ஊர்.
நயாகரா(கனடா),இந்தியா,எகிப்து,ரோம்,மாலைதீவுகள்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

என்னை திருப்தி செய்கிற நானாக.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

இதெல்லாம் ஒரு கேள்வி?!!
அவளை தொந்தரவு செய்கிற என்னுடைய வேலைகள் அனைத்தும்.முடிந்தால் நான் செய்யக்கூடிய அவளுடைய வேலைகள்.

அவளுக்கு பிடிக்காத எனக்கு தெரிந்த பெண்களுடன் பேசுவது- :))

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

உலகம் போதுமானதாயிருக்கிறது.


உதிரிப்பதில்கள்:

அட போங்கப்பா வயித்தெரிச்லை கிளப்பிக்கிட்டு!!

நல்லா இருங்கப்பா!

41 comments:

மங்களூர் சிவா said...

me the 1st

மங்களூர் சிவா said...

நல்லா இருக்கு பதில்கள்.

மங்களூர் சிவா said...

சீக்கிரம் கல்யாண சாகரத்தில் மூழ்கி மூச்சுத்திணற வாழ்த்துக்கள்.

sahadevan said...

எல்லாம் சரி. சிகரெட் பிடிப்பதை விட்டு விடுங்கள். உடலுக்கு கெடுதல் என்று பாக்கெட்டிலேயே எழுதியிருக்கிறார்கள்.
சகாதேவன்

ஆயில்யன் said...

//தேவதைகள் கறுப்பு நிறத்தில்தான் இருப்பார்கள் ///

உமக்கு!

ஆயில்யன் said...

//நீங்கள் என்னை கறுப்பி என்றே அழைக்கலாம்.///

நாங்கள் நார்மலா அழைக்கிற மாதிரியும் அழைக்கலாமா?

ஆயில்யன் said...

/இப்பொழுது பேனை பிடித்து தமிழில் எழுதுகிற சந்தர்ப்பங்கள் குறைவென்பதால் //

ஏன் தம்பி அதை புடிச்சு எழுதுறீங்க?

ஆயில்யன் said...

//கொஞ்சம் தடிப்பா வச்ச சொதியும்//

யூ மீன் உறைப்பு?

காரம்?

ஆயில்யன் said...

//ஒரு பிடி பிடிச்சுட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிடலாம்...//

அடப்பாவி மல்லாக்கபடுத்து விட்டத்தை பார்த்து தூக்கதெரியாத அப்பாவியா நீங்க?

ஆயில்யன் said...

/எனக்கு நெருக்கமான குளியலைறதான்; இங்கே நான் பாடுவேன்.//

அதானே பார்த்தேன் எங்கயாச்சும் எதாச்சும் டெரரா செய்யணும்ல!

ஆயில்யன் said...

//பெண்களாக இருந்தால் பாதங்களை அழுத்தமாக பார்த்து பின்னர் கண்ணகளை ஊடறுப்பேன்.///

ம்ம் இதுவரைக்கும் இப்படி பார்க்கும்போது யாராச்சும் பெண்கள் நாணமோ.....! அப்படின்னு பாடியிருக்காங்களா?

ஆயில்யன் said...

//என்ன கேள்வி இது?
அவளை எனக்கு முழுவதுமாகப்பிடிக்கும் - என்ன செய்தாலும் அவளோடு வாழ்வது பிடித்திருக்கிறது.நிர்ப்பந்தங்களுக்காக அவள் போடுகிற நாடகத்தனம் பிடிக்காதது.

குறிப்பு: எனக்கு இன்னமும் கல்யாணமாகவில்லை.//

கவிஞர்கள் புரியாத புதிர்ன்னு ச்சும்மாவ சொல்லியிருக்காங்க!

ஆயில்யன் said...

//ஆடைகள் இல்லாமல் உலகின் அதிசிறந்த மதுரசத்தை (வைன்) பருகிக்கொண்டு ஒரு புனைவெழுதவேண்டும் என்பது கனவில் வந்த பூனைகள் கொடுத்த பல நாள் ஆசை.///

அடேய் தம்பி...! உனக்கு பூனைகள் தான் கனவில வராங்களா ! அன்னிக்கு என்னமோ நமீதாவும் மற்றும் இன்னபிற நடிகைகளும் வர்றமாதிரி சொல்லிக்கிட்டிருந்த?

ஆயில்யன் said...

//('தல'க்கு மெல்லிய மனசென்று அவரே சொல்லுகிற இவரது தாடிக்குள் இருப்பது மெய்யாலுமே குழந்தை மனசுதான் நம்பிடுங்க :)//

நான் முழுவதுமாகவே நம்பிவிட்டேன்!

ஆயில்யன் said...

//கட்டுக்கடங்காத உடல்,//

நல்லா திங்க வேண்டியது பின்னே அது பாட்டுக்கு ஒரு பக்கம் வீங்கிக்கிட்டேத்தான் போகும்!

ஆயில்யன் said...

//அவளுடைய ஊர்.
நயாகரா(கனடா)//

ரைட்டு !

ஆயில்யன் said...

//அவளை தொந்தரவு செய்கிற என்னுடைய வேலைகள் அனைத்தும்.முடிந்தால் நான் செய்யக்கூடிய அவளுடைய வேலைகள்.//

கலக்கல் கறுப்பி! :))))

ஆயில்யன் said...

நல்லா இருங்கப்பா!

ரவி said...

super ...........

தமிழ் said...

/
30.எப்படி இருக்கணும்னு ஆசை?

என்னை திருப்தி செய்கிற நானாக./

அருமை

ILA (a) இளா said...

//அவளை தொந்தரவு செய்கிற என்னுடைய வேலைகள் அனைத்தும்.முடிந்தால் நான் செய்யக்கூடிய அவளுடைய வேலைகள்.//

செம செம

Divyapriya said...

பதில்கள் சூப்பர்...ஆனா கொஞ்சம் பெரிய ans sheet போய்டுச்சு...ஆயில்யன் கமெண்ட்ஸ் தான் இன்னும் சூப்பர் :)

கிள்ளிவளவன் said...

மிகவும் நன்று.

நட்புடன் ஜமால் said...

திவ்யப்பிரியா சொன்னதுக்கு ஒரு பெரிய ரிப்பீட்...

Thamiz Priyan said...

தம்பி கலக்கிட்ட.. நன்றிம்மா!

Thamiz Priyan said...

///4).பிடித்த மதிய உணவு என்ன?

பலது இருக்கு..
மீன் குழம்பும், நெத்தலிப்பொரியலும் கூடவே றால் பொரியலோடும கொஞ்சம் தடிப்பா வச்ச சொதியும் வெள்ளை அல்லது சம்பா அரிசி சோறும் இருந்தால் போதும் ஒரு பிடி பிடிச்சுட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிடலாம்.////
அடப்பாவி... சாப்பிட்டு சைக்கிள் எடுத்துக்கிட்டு வெளிக்கி போவீயா? நீயெல்லாம்.. வாயில அசிங்க அசிங்கமா வருது... காலைல மட்டும் வெளிக்கி போனா போதும்ய்யா... ;-))

Thamiz Priyan said...

///மங்களூர் சிவா said...
/
சீக்கிரம் கல்யாண சாகரத்தில் மூழ்கி மூச்சுத்திணற வாழ்த்துக்கள்.///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டே போட்டுக்கிறேன்...
கறுப்பி உன்னை கும்மி எடுப்பத்தை சீக்கிரம் பார்க்க ஆசையா இருக்குய்யா

யாழினி said...

அருமை தமிழன்-கறுப்பி. அழகாக உள்ளது உங்கள் பதில்கள் யாவும்...

அருண்மொழிவர்மன் said...

வணக்கம்

தமிழன் கறுப்பி

என்னை இந்த தொடர் கேள்விக்கு அழைத்ததற்கு நன்றிகள். வரும் திங்களில் எனது பதில்களை பதிவிடுவேன்.

நன்றிகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகான மென்மையான பதில்கள்

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா said...

me the 1st//

நல்லா இருக்கு பதில்கள்.//

சீக்கிரம் கல்யாண சாகரத்தில் மூழ்கி மூச்சுத்திணற வாழ்த்துக்கள்//

நன்றி மாம்ஸ் :))
அதுக்கு இப்ப என்ன அவசரம் ?!

தமிழன்-கறுப்பி... said...

sahadevan said...
எல்லாம் சரி. சிகரெட் பிடிப்பதை விட்டு விடுங்கள். உடலுக்கு கெடுதல் என்று பாக்கெட்டிலேயே எழுதியிருக்கிறார்கள்.
சகாதேவன்
\\

நன்ற சகாதேவன் முயற்சிக்கிறேன்.

யாத்ரா said...

உங்கள் பதில்களை மிகவும் ரசித்தேன் தமிழன்.

நிஜமா நல்லவன் said...

அண்ணே பதில்கள் எவ்ளோ நல்லா இருக்கோ அதே அளவுக்கு ஆயில்ஸ் அண்ணா பின்னூட்டங்களும் நல்லா இருக்கு!

Thamira said...

உங்களை எப்படி அழைப்பது என தெரிந்துகொண்டேன். கறுப்பி.!

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//தேவதைகள் கறுப்பு நிறத்தில்தான் இருப்பார்கள் ///

உமக்கு//

பொதுவாவே தேவதைகள் கறுப்பு நிறம்தான் இருக்கலாம்...
________________________

ஆயில்யன் said...
//நீங்கள் என்னை கறுப்பி என்றே அழைக்கலாம்.///

நாங்கள் நார்மலா அழைக்கிற மாதிரியும் அழைக்கலாமா?
\\
அன்போடு எப்படி அழைத்தாலும் ஏற்றுக்கொள்வேன் தம்பி என்று அழைப்பதில் சந்தேமாசம்தான் அண்ணன்..
____________________

/இப்பொழுது பேனை பிடித்து தமிழில் எழுதுகிற சந்தர்ப்பங்கள் குறைவென்பதால் //

ஏன் தம்பி அதை புடிச்சு எழுதுறீங்க?
\\

பேனை-பேனா :)
_____________________

//கொஞ்சம் தடிப்பா வச்ச சொதியும்//

யூ மீன் உறைப்பு?

காரம்?
\\
இல்லைண்ணே தண்ணியா இல்லாம கொஞ்சம் அடர்தியா கெட்டியா வச்ச சொதி...
_________________________

:))
எல்லோரும் சாப்பிட்டஉடன துங்குறதுன்னுதானெ சொல்லுவாங்க அதனாலதான் அனாலும் ஊரில் இருந்தால் நான் பகல் நித்திரை கொள்வது குறைவு..
__________________________

:))
நான் நல்லா பாடுவேன் அண்ணே கேக்கறிங்களா..

______________________

கவிஞரா யாரு அது!!

____________________

நமீதாவா அது யாரு அண்ணே?!!

___________________

நம்பித்தானே ஆகணும்...

____________________

அவளோட ஊர் கனடாவாக இருக்கலாம்.(அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கணும் அண்ணே)
________________

இதுல என்னண்ணே இருக்கு நான் நினைச்சிருக்கிற வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணம்...
_________________________

நன்றி ஆயில்யன் அண்ணே
நன்றி குருவே!

ஆமா ஆசிரமம் எப்ப திறக்கும் அல்லது சாமி எப்ப மலையேறும்?

:))

இவரு ஒருத்தருக்கு பதில் எழுதறதுக்குள்ள கண்ணைக்கட்டுதே:(

மறுபடியும் நன்றி அண்ணே..!

தமிழன்-கறுப்பி... said...

மக்கள்; கொஞ்சம் நேரமில்லாததால இப்ப பதில் சொல்ல முடியல, பின்னுட்டங்களுக்கும் புரிதல்களுக்கும் நன்றி..
நன்றி..
நன்றி...!

MSK / Saravana said...

கலக்கல் பதில்கள்..

//ஆடைகள் இல்லாமல் உலகின் அதிசிறந்த மதுரசத்தை (வைன்) பருகிக்கொண்டு ஒரு புனைவெழுதவேண்டும் என்பது கனவில் வந்த பூனைகள் கொடுத்த பல நாள் ஆசை.//

என்னமோ போங்க.. :)

//Perfume- The story of a murderer.
படம் கலைவடிவம்- பழக்காரியின் மார்புக்குள் பதுங்கிக்கொண்டது அந்த இரவு.//
கலையின் உச்சம் perfume..

தமிழன்-கறுப்பி... said...

@செந்தழல் ரவி
நன்றி ரவி அண்ணே..

@நன்றி திகழ்மிளிர்
பெரும்பாலும் அந்த திருப்தி கிடைப்பதில்லை..

@நன்றி இளா அண்ணே..

@நன்றி திவ்யப்பரியா..

@நன்றி கிள்ளிவளவன்..

@நன்றி ஜமால்...

@தமிழ் பிரியன்
நன்றி தல...
அட பாவி மனுஷா என்ன ஒரு சந்தோசம் பாருய்யா அடுத்தவன் கஷ்டத்துல..
;))

@ நன்றி யாழினி..

@அருண்மொழிவர்மன்
நன்றி வருகைக்கும் பதிவிட்டமைக்கும்,
நிறைய நன்றிகள் சுதன் அண்ணன்..

@
நன்றி அமித்து அம்மா...

@
நன்றி பாரதி @ நிஜமாநல்லவன்... அடிக்கடி வாங்கண்ணே..

@
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்.. அண்ணே பெயர் நீளமாக இருக்கிறது ஆதிஅங்கிள்னு கூப்பிட்டுகவா?
சுருக்கமா ஈஸியா இருக்கு ;))

@ MSK
நன்றி மச்சி.. :))
"சின்ன அசின்" ரசிகர் மன்ற தலைவர் நீதானா? :))

சுஜிதா. said...

நல்லா இருக்கு பதில்கள்.

முபாரக் said...

இப்ப சந்தோசமா?

http://arasanagari.blogspot.com/2009/06/blog-post.html