Friday, May 15, 2009

மழைக்கு எழுதிய சொற்கள்...





இங்கே எழுதிய சொற்களை இவ்விடத்திலும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அந்த வார்த்தைகளை எழுதுவதற்கு அழைத்த சென்ஷிக்கும், பேசும் கவிதைகளுக்கான ஏற்பாடுகள் செய்கிற நண்பர்களுக்கும் நன்றி.

\\
நேற்று பெய்த மழையில்
இன்னமும் நனைந்து கொண்டிருக்கிறது உயிர்
சொட்டுச்சொட்டாய்
உன் நினைவுகள்...


\\
மூன்று வருடங்களுக்கு பிறகு
நினைவு படுத்தியிருக்கிறது இந்தமழை,
நீ பிரிவறிவித்த மழை நாளின் இரவையும் கூடவே
உன்னோடு கழிந்த விடு முறை நாட்களின்
மழை நேரப் பின்மதியங்களையும்...
மழை எப்பொழுதும்
மழையாகவே இருக்கிறது!


\\
எப்பொழுதாவது ரசிக்கக்கிடைக்கிற
தாழ்வாரத் தூவானங்களில்
தெறித்தலைகிறது
உன் முகம்,
யாருமற்ற பகல்களில்
வருகிற மழையை
நீயும் ரசிக்கிறாயா?


\\
வாசனைகளோடு வந்து
ஜன்னல் நனைக்கிற சாரல்களுக்கு தெரிவதில்லை
நீ இப்பொழுதெல்லாம் அறைக்கு வருவதில்லை என்பதும்
மழைக்கும் உனக்குமான சினேகம்
மறக்கப்பட்டு விட்டதையும்..


\\
வாசனைகளோடு வருகிற மழைக்கு தெரிவதில்லை
நீயற்ற இரவுகளின் நீளம்,
தனியே அருந்துகிற தேநீருக்கு தெரிவதில்லை
முத்தங்களுக்கு பின்னரான தேநீரைப்பற்றி,
அணைத்துக்கொள்கிற உன் தலையணகைள்
தூக்கம் கலைகிற இரவுகளில் கிசுகிசுப்பாய் பேசுவதில்லை,
நீ ஊருக்கு போன நேரத்தில் வருகிற மழைக்கு தெரியாது
போர்வையை சரிசெய்ய நீயில்லாத இரவுகள் பற்றி,

வந்து விடு அல்லது
மழையை கூட்டிப்போய்விடு!

\\
நனைந்து கொண்டே
பேசி வந்த புதன் கிழமை,
ஈரம் காயும்வரை இருந்துவிட்டுப்போன
ஞானசம்பந்தர் நூல்நிலையம்,
நூல் நிலையத்து விகடனில்
வாசித்த மழைக்கவிதை,
தகரக்கூரையில் விழுகிற
துளிச் சப்தங்கங்கள்,
விடைபெறும்வரை பிரியாமலிருந்த
இடது கைகளின் வெப்பம்,
விடைபெறும் தருணத்தில்
நிகழ்ந்த குளிர்விட்ட முத்தம்,

இங்கே எப்பொழுதாவது வருகிற மழை
இவ்வளவும் கொண்டு வருகிறது
உன் கடிதங்களை தவிர!

20 comments:

ஆயில்யன் said...

அழகாய் போட்டி போட்டு கவிதை படைத்திருந்தீர்கள்

நல்லா இருந்துச்சு ! :)))

சென்ஷி said...

:))

தமிழன்-கறுப்பி... said...

\\
நன்றி ஆயில்யன்.

\\
மாப்பி உன்னோட வார்த்தைகள் கலக்கல். சப்போட்டுக்கு வந்து டைப்பண்ணினதை கவிதைன்னு ஏத்துக்கிட்டாங்களே இந்த மக்கள் அதுக்கே நன்றி சொல்லணும்...

Thamira said...

ஒரு ஃபோட்டோவுக்கே இவ்வளவு எடுத்து வுடுறீங்களே பாஸ்.. டேலன்டுதான்.!

Divyapriya said...

wow!!!
சொல்வதற்கு வேறொன்றும் வார்த்தைகள் இல்லை...ஒவ்வொரு வரியும் அருமை...

தமிழ் said...

/\\
நேற்று பெய்த மழையில்
இன்னமும் நனைந்து கொண்டிருக்கிறது உயிர்
சொட்டுச்சொட்டாய்
உன் நினைவுகள்... //

சொல்ல வார்த்தை இல்லை நண்பரே

யாத்ரா said...

கவிதைகள் அருமை தமிழன்.

புதியவன் said...

//நேற்று பெய்த மழையில்
இன்னமும் நனைந்து கொண்டிருக்கிறது உயிர்
சொட்டுச்சொட்டாய்
உன் நினைவுகள்...//

ரொம்ப நல்ல இருக்கு தமிழன்...

பனையூரான் said...

நல்லா இருந்தது.எனக்கும் தெரியும் ஞானசம்பந்தர் கலை மன்றம்.....

Revathyrkrishnan said...

மழையின் சில்லிப்புடன் காதலின் வெம்மை உணரச் செய்யும் வார்த்தைகள்... கவிதைகள் அருமை

Poornima Saravana kumar said...

எனக்கு மழை நேரத்தில் தேநீர் அருந்த ரொம்ப ரொம்ப பிடிக்கும்:))
அது போல் இருந்தது ஒவ்வொன்றும்:))

நனைந்து கொண்டே
பேசி வந்த புதன் கிழமை,
ஈரம் காயும்வரை இருந்துவிட்டுப்போன
ஞானசம்பந்தர் நூல்நிலையம்,
நூல் நிலையத்து விகடனில்
வாசித்த மழைக்கவிதை,
தகரக்கூரையில் விழுகிற
துளிச் சப்தங்கங்கள்,
விடைபெறும்வரை பிரியாமலிருந்த
இடது கைகளின் வெப்பம்,
விடைபெறும் தருணத்தில்
நிகழ்ந்த குளிர்விட்ட முத்தம்,

இங்கே எப்பொழுதாவது வருகிற மழை
இவ்வளவும் கொண்டு வருகிறது
உன் கடிதங்களை தவிர!
//

இதை மட்டும் விரும்பிப் படித்தேன் 3 முறை:)

தமிழன்-கறுப்பி... said...

@ ஆதிமூலகிருஷ்ணன்
ஒரு ஃபோட்டோவுக்கே இவ்வளவு எடுத்து வுடுறீங்களே பாஸ்.. டேலன்டுதான்.!
\\
நன்றி அண்ணே but,
உங்க கிட்டகூட நெருங்க முடியாது!

@ Divyapriya
wow!!!
சொல்வதற்கு வேறொன்றும் வார்த்தைகள் இல்லை...ஒவ்வொரு வரியும் அருமை...
\\

நன்றி திவ்யப்பிரியா

@ திகழ்மிளிர்
/\\
நேற்று பெய்த மழையில்
இன்னமும் நனைந்து கொண்டிருக்கிறது உயிர்
சொட்டுச்சொட்டாய்
உன் நினைவுகள்... //

சொல்ல வார்த்தை இல்லை நண்பரே
\\

நன்றி திகழ்மிளிர்...

தமிழன்-கறுப்பி... said...

yathra said...
கவிதைகள் அருமை தமிழன்.
\\

யாத்ரா...
நேர சொல்லுங்க இதெல்லாம் கவிதையாடான்னு :)

புதியவன் said...
//நேற்று பெய்த மழையில்
இன்னமும் நனைந்து கொண்டிருக்கிறது உயிர்
சொட்டுச்சொட்டாய்
உன் நினைவுகள்...//

ரொம்ப நல்ல இருக்கு தமிழன்...
\\

நன்றி புதியவன்!

தமிழன்-கறுப்பி... said...

பனையூரான் said...
நல்லா இருந்தது.எனக்கும் தெரியும் ஞானசம்பந்தர் கலை மன்றம்.....
\\

:)
பனையூரான் அது எங்க இருக்கு?

நன்றி...!

\\
reena said...
மழையின் சில்லிப்புடன் காதலின் வெம்மை உணரச் செய்யும் வார்த்தைகள்... கவிதைகள் அருமை
\\

நன்றி ரீனா முதல் வருகை என்று நினைக்கிறேன்..

தமிழன்-கறுப்பி... said...

@Poornima Saravana kumar

வாங்க பூர்ணிமா பல நாட்களுக்கு பிறகு நன்றி.. மழை நேர தேநீர் சுகமான அனுபவம்தான்,

எனக்கு தெரிந்த ஒரு சந்தர்ப்பத்தைதான் எழுத முயன்றேன் ஆனா பாருங்க அப்படி ஒரு நுல்நிலையம் இருப்பதாக பனையூரான் சொல்லியிருக்கிறர்:)

நன்றி.

Sakthi said...

அழகான கவிதைகள்...
வார்த்தைகள் நெஞ்சைத் தொடுகின்றன!

தமிழன்-கறுப்பி... said...

நன்றி சக்தி,
நன்றி தமழர்ஸ்...

மங்களூர் சிவா said...

/
இங்கே எப்பொழுதாவது வருகிற மழை
இவ்வளவும் கொண்டு வருகிறது
உன் கடிதங்களை தவிர!
/

:((((

மங்களூர் சிவா said...

அருமை!

புரட்சியாளன் said...

அருமை நண்பா