Friday, May 8, 2009

தீராத சொற்களும் நினைவுகளும்...

பெருமெண்ணிக்கையில் புறப்பட்டலைகிற சொற்களும், உள்ளேயிருந்து தெறித்து அலைகிற சொற்களின் திமிறல்களுமென திணறிக்கொண்டிருக்கிறது மூளை. புதிய சொற்களின் அழுத்தம் பெரும் பாடாய் படுத்துகிறது.சொல்லிப் புலம்புவதற்கு யாருமில்லாத பொழுதுகள் மிகக் கொடுமையானதாய் இருக்கிறது...

கலவையான சொற்களும் அதன் அமுக்கங்களும் குலுக்கிவைத்த பியர் போத்தலென பொங்கி நுரைத்துக் கொண்டிருக்க எதை எழுதுவேன்? சிதிறிக்கிடக்கிற சொற்களை அப்படியே எழுதிவிடலாம் என்றால் அவற்றை எங்கே இருந்து தொடங்குவது, எப்படி நிறைவு செய்வது என்று தெரியாமல் ஆக்கிரமிக்கிற சொற்களை அவற்றின் போக்கிலேயே விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

எவ்வளவு தூரம் வாழ முடியுமோ அவ்வளவு தூரம் வாழ்ந்து விடவேண்டும் என்பது என் பிரயத்தனமாக இருக்கிறது பால்யம் முதலே. நான் ஆசைப்பட எதுவும் கிடைக்காது போகிற சோகம் அனுபவித்து பழகியதில் சுகமாய் தெரிகிறது. பழக்கப்பட்ட வலிகள் திடீரென்று இல்லாமல் போனாலும் எதையோ இழந்தது போலத்தான் தேன்றுகிறது இல்லையா? அவளிடம் கூட நான் அடிக்கடி சொல்லி இருப்பேன் சிறு வயது முதலே நான் மிக விரும்பிய விசயங்கள் எதுவும் எனக்கு கிடைப்பதில்லை எனவும் நீ எனக்கு கிடைத்திருக்கிறாய் உன்னை இழந்து போக மாடடேன் என்பதாயும் இழந்தால் என்ன நிகழும் என்பது சொல்ல முடியாதென்றும். இப்பொழுது அவள் என்னோடு இருக்கிறாளா இல்லையா என்பதை பின்பொரு நாளில் பேசிக்கொள்வோம்.

என்னை அடையாளம் காட்டத்தொடங்குகிற சொற்களை அரங்கேறறம் செய்வதில் இருக்கிற குழப்பம் என்னை பிரதிபலிக்கிற சொற்களை வாசிப்பதில் இருப்பதில்லை சொல்லப்போனால் அவற்றை திரும்பத்திரும்ப வாசித்துக்கொள்வேன். நீங்கள் என்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்கான உறுதி நிலைகள் தகர்ந்து கொண்டிருக்கிறது உள்ளேயிருக்கிற சொற்கள் செய்கிற ஆக்கினைகளில்,இந்தப் புலம்பல் என் சொற்களுக்கான திருப்திப் படுத்தலாய் கூட இருக்கலாம்.

படபடப்பாய் இருக்கிற பொழுதுகளை பகிர்வதற்கு வெகு நிதானமாய் தண்ணியடிக்க வேண்டுமென்பதாயும் அது ஒரு புரிதல் நிரம்பிய பெண்ணோடு நிகழ வேண்டும் ஏங்கிக்கொண்டிருக்கிறது. நாட்கள் சொல்லவும் கேட்கவும் மறுதலிக்கவும் விவாதிக்கவும் பின் முத்தங்கள் செய்யவும் என அவளோடு பொழுதுகள் கழியவேண்டும் என்பதாய் இந்த இடத்திலிருந்து வெளியேறி விடு என கதறிக்கொண்டிருக்கிறது மனம்.

மனம் விட்டுச்சொல்லி விடுகிறேன் நிறையப்பேசவும், முழுவதும் பகிரவும் மூச்சுத்திணறக் காதல் செய்வும் கறுப்பு நிற தேவதை ஒருத்தியை தேடிக்கொண்டிருக்கிறேன்பின் குறிப்பு அல்லது எழுதிப்பார்த்த சொற்கள்:

மூளை என்கிற ஒன்றை
செயலிழக்கச்செய்கிற வேகத்தோடு
புறப்பட்டலைந்து கொண்டிருக்கின்ற சொற்களை
கொலை செய்து விடுவதென முடிவெடுத்து
ஒவ்வொன்றாய் அழிக்கத் தொடங்கினேன்
இரத்தமும் சதையுமாய் வெட்டுண்டு
புழுக்களென நெளியத்தொடங்கிற்று
நினைவுப்பெருவெளி
நினைவுகளை அழிக்க வேண்டிய
நிர்ப்பந்தம் வந்துவிட மூளையை
வெளியே எடுத்துவிடலாம் என முடிவெடுத்தேன்.

அறுக்கத்தொடங்குகிற தருவாயில்
சன்மாய் ஒலிக்கிறது குரல்
"நீங்கள் நல்லா இருக்கோணும்... நான் போறன்"

அறுத்துக்கொள்வதை சட்டென்று நிறுத்தி
ஒரே மூச்சில் குடித்து முடித்தேன்
இருபத்தேழாவது குவளையையும்

சுவரோடு சாய்ந்து
கால் மேல் கால் போட்படி
சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டேன்

இப்பொழுது...

கறுப்பு நிறத்தாள்களில்
இரத்த நிறச்சொற்கைள
எழுதிக்கொண்டிருக்கிறேன்!


\\
எழுதிக்கொண்டே இருப்பதற்கு போதுமானதாய் தீராமல் இருக்கின்றன சொற்கள் இருந்தும் எதை எழுத என்று தெரியாமல் திணறுகிறது மனம்.சொற்களை எழுதி விடுவது தான் நல்லது என்பதாய் கற்பிதம் உருவாக்கி வைத்து விட்டபிறகு அதனை மீறுவதென்பது முடியாத காரியமாய் இருக்கிறது.

\\
எல்லாமே அழிந்து போனதாய் இயங்க மறுத்துக்கொண்டிருக்கிறது மூளை இன்னமும் எங்கே இருக்கிறாய் நீ.என்னை எழுத விடு இல்லையேல் வந்து விடு.

10 comments:

தமிழன்-கறுப்பி... said...

முடிஞ்சவரைக்கும் என்னிடம் இருக்கிற சொற்களில் சிலதை கோர்வையாக்கி இருக்கிறேன்...

ஆயில்யன் said...

//மனம் விட்டுச்சொல்லி விடுகிறேன் நிறையப்பேசவும், முழுவதும் பகிரவும் மூச்சுத்திணறக் காதல் செய்வும் கறுப்பு நிற தேவதை ஒருத்தியை தேடிக்கொண்டிருக்கிறேன்
//

வாழ்த்துக்கள் !

தமிழ் பிரியன் said...

:( :)

தமிழன்-கறுப்பி... said...

நன்றி ஆயில்யன் அண்ணே...

தல ஸ்மைலி போடுவது தடை செய்யப்பட்டுள்ளது... :)

சென்ஷி said...

நல்லாயிருக்குது மாப்பி!

//பெருமெண்ணிக்கையில் புறப்பட்டலைகிற சொற்களும், உள்ளேயிருந்து தெறித்து அலைகிற சொற்களின் திமிறல்களுமென திணறிக்கொண்டிருக்கிறது மூளை. புதிய சொற்களின் அழுத்தம் பெரும் பாடாய் படுத்துகிறது.சொல்லிப் புலம்புவதற்கு யாருமில்லாத பொழுதுகள் மிகக் கொடுமையானதாய் இருக்கிறது...//

சேம் ப்ளட் :-((

சென்ஷி said...

//கறுப்பு நிறத்தாள்களில்
இரத்த நிறச்சொற்களை
எழுதிக்கொண்டிருக்கிறேன்!//

நல்ல வார்த்தை லாவகம் :))

தமிழன்-கறுப்பி... said...

//கறுப்பு நிறத்தாள்களில்
இரத்த நிறச்சொற்களை
எழுதிக்கொண்டிருக்கிறேன்!//

நல்ல வார்த்தை லாவகம் :))
\\
நன்றி மாப்பி!

சேம் ப்ளட் :-((
\\

அதே நிலமைதான் இங்கேயும்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

மிகுந்த வேதனையைத் தரும் பதிவு..

ஆதிமூலகிருஷ்ணன் said...

வருக ஒருமுறை.. தொடர்பு கொள்ள விரும்புகிறேன். thaamiraa@gmail.com

மங்களூர் சிவா said...

//மனம் விட்டுச்சொல்லி விடுகிறேன் நிறையப்பேசவும், முழுவதும் பகிரவும் மூச்சுத்திணறக் காதல் செய்வும் கறுப்பு நிற தேவதை ஒருத்தியை தேடிக்கொண்டிருக்கிறேன்
//

வெளுப்பா கிடைச்சாலும் பரவால்ல அஜ்ஜஸ் பண்ணிக்கங்க!

:))))

/
ஆதிமூலகிருஷ்ணன் said...

மிகுந்த வேதனையைத் தரும் பதிவு..
/

ரிப்பீட்டு